Tamil News | Online Tamil News |
- பா.ஜ., வேட்பாளர் மீது புகார் கொடுத்த காங்., - அ.தி.மு.க சொதப்பல்:குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால் தேர்தல் அதிகாரி கோபம்
- ரயில் அமைச்சரை சந்திக்க தமிழக எம்.பி.,க்களுக்கு ஆர்வமில்லை: ஆண்டு பல ஆகியும் ஆமை வேகத்தில் திட்டங்கள்
- யோகாவில் உலக சாதனை படைக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி விருப்பம்
- எங்களுக்கு எந்த நாடும் எதிரியில்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு
- குடியரசு தின வாகன அணிவகுப்பில், இருந்ததை தான் காட்டியுள்ளோம்; மறைக்கவில்லை விளம்பர சர்ச்சைக்கு அமைச்சர் பதில்
- ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முடிவு
- அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கேள்விகேட்போம்: ஓப்பந்தத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் சொல்கிறது
- அத்தியாவசிய அடிப்படை மருந்து பொருட்களும் சீனாவிலிருந்து மருந்துகளும் இறக்குமதி
- ரயிலில் இனி சினிமா பார்க்கலாம் : ரயில்வே அமைச்சகத்தின் புது திட்டம்
- உ.பி., முதல்வர் ஏட்டிக்கு போட்டி! என்.ஆர்.ஐ., மாநாட்டை கூட்டுகிறார்
| Posted: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் மீது, புகார் கொடுத்த காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.,வினர் அது தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ளாமல் சொதப்பினர். இதனால், வேட்பு மனு ஏற்கப்பட்டதோடு, புகார் கொடுத்த கட்சியின் மீது, தேர்தல் அலுவலர்கள் கடும் கோபம் அடைந்தனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை அடைந்ததால், அவர் போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த மாதம், 13ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் முடிந்து, நேற்று பரிசீலனை நாளாகவும் ... |
| Posted: தங்கள் மாநிலங்களுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் வேண்டும் என கோரி, பல மாநில எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழக எம்.பி.,க்கள் இதுவரையிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 23ல் துவங்கி, மார்ச் 20 வரை நடைபெறவுள்ளது. இதில், பிப்ரவரி 26ல், ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் சுரேஷ் பிரபு, தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டுக்கு, டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே தயாரிப்பு பணிகள் ... |
| யோகாவில் உலக சாதனை படைக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி விருப்பம் Posted: புதுடில்லி:தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.,), யோகாவில் உலக சாதனை படைக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, என்.சி.சி., மாணவர்களிடையே அவர் மேலும் கூறியதாவது:வரும் ஜூன் 21ம் தேதியை, 'சர்வதேச யோகா தினம்' என, ஐ.நா., சபை அறிவித்துள்ளது; இது, மிகவும் பெருமைக்குரிய விஷயம். யோகாவின் பிறப்பிடமான இந்தியாவில், அதை சிறப்பான முறையில் உலகிற்கு எடுத்துரைப்பது நம் கடமை. எனவே, யோகா கலையில் பழைய சாதனையை முறியடிக்கும் வகையில், தேசிய மாணவர் படையினர், வரும் ஜூன் 21ம் தேதியன்று, அதிகளவில் திரண்டு யோகா செய்து, புதிய உலக ... |
| எங்களுக்கு எந்த நாடும் எதிரியில்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு Posted: கான்பூர்:''சீனாவுடன், அனைத்து பிரச்னைகளையும் பேசித் தீர்க்க தயாராக உள்ளோம். பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளுடன், நெருங்கிய நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் கூறினார். |
| Posted: மும்பை:குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடைபெற்ற அரசு துறைகளின் வாகன அணிவகுப்பில், தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் இடம்பெற்ற வாகனத்தில் வரையப்பட்டிருந்த படத்தில், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தின் முதல் பக்கம் காட்டப்பட்டிருந்தது. அதில், 'செக்யூலர், சோசலிஸ்ட்' ஆகிய வார்த்தைகள் இல்லை. இதைப் பார்த்த எதிர்க்கட்சிகள், 'நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின், முகவுரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை, பா.ஜ., அரசு நீக்கவிட்டது' என, கண்டனம் தெரிவித்தன.ஆனால் 1976ல், அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, அந்த இரு வார்த்தை களும், புதிதாக ... |
| ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முடிவு Posted: புதுடில்லி:ஒரு மெகா ஹெர்ட்ஸ், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு, அடிப்படை விலையாக, 3,705 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை நேற்று நிர்ணயித்துள்ளது. 3ஜி மற்றும் பிற அலைவரிசைகளை ஏலம் விடுவதன் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் திரட்டவும் அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 3ஜி அலைக்கற்றையின், 1 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு, அடிப்படை விலையாக, 3,705 கோடி ரூபாயை அமைச்சரவை நிர்ணயம் செய்தது. இது, 2,100 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் ஆக இருக்கும்.அது போல, 800, 900, 1,800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் அலை வரிசைகளை மார்ச் 4ல் ஏலமிட, ஏற்கனவே முடிவு ... |
| Posted: புதுடில்லி: 'அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை செயல்படுத்த, பா.ஜ., அரசு முன்வந்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்போம்; பார்லிமென்டில் கேள்விகள் எழுப்புவோம்' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.காங்., தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட அணு ஒப்பந்தத்தை செயல்படுத்த, இப்போதைய, மோடி தலைமையிலான பா.ஜ., அரசு முன்வந்துள்ளது.அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்த பா.ஜ., இப்போது ஒப்பந்தத்தை செயல்படுத்த உறுதி தெரிவித்துள்ளது ஏன் என, பார்லிமென்டில் கேள்வி எழுப்ப காங்., தயாராகி வருகிறது.''அடுத்த மாதம் துவங்கும் ... |
| அத்தியாவசிய அடிப்படை மருந்து பொருட்களும் சீனாவிலிருந்து மருந்துகளும் இறக்குமதி Posted: புதுடில்லி: மக்களின் சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அத்தியாவசிய, அடிப்படை மருந்து பொருட்களும், அங்கிருந்து தான், கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தொழில்வளம் நிறைந்த அந்த நாட்டின் தயாரிப்புகள், உலகச் சந்தைகளை நிரப்பி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளை விட, விலை மிகக்குறைவாக இருப்பதால், ... |
| ரயிலில் இனி சினிமா பார்க்கலாம் : ரயில்வே அமைச்சகத்தின் புது திட்டம் Posted: புதுடில்லி:ரயில் பயணிகள், இனி, சினிமா பார்த்தும், பாடல்களை கேட்டும், உற்சாகமாக பொழுது போக்கலாம். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான, 'ஈராஸ்' உடன் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 'ரயில்களில் நீண்ட துாரம் பயணம் செய்வோர், பொழுது போக்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்' என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில ராஜதானி ரயில்களில் பாடல்கள், இசை ஒலிபரப்பப்பட்டது. பின், படிப்படியாக அந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, 'பிராட் பாண்ட்' தொலை தொடர்புவசதி மூலம், ரயில் பயணிகள் பொழுது ... |
| உ.பி., முதல்வர் ஏட்டிக்கு போட்டி! என்.ஆர்.ஐ., மாநாட்டை கூட்டுகிறார் Posted: லக்னோ: வெளிநாடு வாழ் இந்தியர்களை கவுரவிக்கும் விதமாகவும், வெளிநாட்டினர் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், ஆமதாபாத் நகரில் மத்திய அரசு நடத்திய, 'பிரவாசி பாரதிய திவஸ்' நிகழ்ச்சிக்கு போட்டியாக, உத்தர பிரதேசத்திலும் அது போன்ற நிகழ்ச்சியை நடத்த, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.இம்மாத துவக்கத்தில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற பிரவாசி நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த, 'உ.பி., அழைக்கிறது' என்ற போஸ்டர்களும், முதல்வர் அகிலேஷின் படங்களும் அகற்றப்பட்டன. இதனால் கோபம் கொண்ட முதல்வர் அகிலேஷ், ஆமதாபாத்தில் நடைபெற்றது போன்ற ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 29,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |