Tamil News | Online Tamil News |
- சுகாதாரமற்ற பள்ளி கழிப்பறைகள்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை
- கெஜ்ரிவாலுக்கு கிரண் பேடி 'நோட்டீஸ்'
- அடுத்த 20 ஆண்டுகளில் கூடுதலாக 455 ஜிகாவாட் மின்சாரம் தேவை
- மன்மோகன் வாக்குமூலம் மூடி முத்திரை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு
- ஸ்ரீரங்கத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய திட்டம்: செக் வைக்கிறது தேர்தல் ஆணையம்
- கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு கடிவாளம்: அரசு புதிய சட்டத்தை அமல்படுத்துகிறது
- அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பதில் பெண் அமைச்சர்கள் தான் 'பெஸ்ட்!'
- என் மகள்களுக்கு இந்திய கலாசாரத்தை கூறுவேன்: வானொலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் உறுதி
- 'ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தேவை': ஒபாமா
- என்.எஸ்.ஜி., அமைப்பில் இந்தியாவை சேர்க்க சீனா எதிர்ப்பு: தர விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கண்டிப்பு
- கோர்ட் நேரத்தை வீணடிக்கின்றீர்கள்: ஜெ., வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு
- காங்கிரஸ் மேலிடம் கைவிரித்ததால் தி.மு.க., அப்செட்: சிதம்பரம் தடையால் கருணாநிதி கனவு தகர்ந்தது
- துறைமுகங்களில் நடமாடும் 'ஸ்கேனர்': அமெரிக்கா நிபந்தனை; இந்தியா ஏற்பு
- வரி ஏய்ப்போரை விடமாட்டேன்: அருண் ஜெட்லி சூளுரை
| சுகாதாரமற்ற பள்ளி கழிப்பறைகள்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை Posted: புதுடில்லி: 'பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம்' என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா பந்த் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: பள்ளிகளில் எவ்வித அடிப்படை வசதி களும் இன்றி பெயரளவிலான கழிப்பறைகள் இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது. ... |
| கெஜ்ரிவாலுக்கு கிரண் பேடி 'நோட்டீஸ்' Posted: புதுடில்லி: விளம்பர, 'போஸ்டரில்' அனுமதியின்றி படத்தை பயன்படுத்தியது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பா.ஜ.,வின் டில்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.அடுத்த மாதம் 7ம் தேதி டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில், ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில், 'டில்லி மக்கள் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்?' என்ற வாசகத்துடன், கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி ஆகியோர் படங்கள் ... |
| அடுத்த 20 ஆண்டுகளில் கூடுதலாக 455 ஜிகாவாட் மின்சாரம் தேவை Posted: மும்பை: வரும் 2034ம் ஆண்டிற்குள், இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவையை சமாளிக்க, கூடுதலாக, 455 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என, 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்' (பி.டபிள்யூ.சி.,) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஆண்டுகளில் மின் தேவையை ஈடுகட்ட, நிலக்கரி அல்லாத இதர வழிமுறைகளை பின்பற்றி மின் உற்பத்தி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. மின் துறையில், டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தானியக்க முறையில் தகவல்களை திரட்டுவதன் மூலம், கணிசமாக செலவுகளை குறைக்கலாம். ... |
| மன்மோகன் வாக்குமூலம் மூடி முத்திரை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு Posted: புதுடில்லி: தொழிலதிபர் குமாரமங் கலம் பிர்லாவும் மற்றும் சிலரும் தொடர்புடைய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கையை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று சி.பி.ஐ., தாக்கல் செய்தது.ஹிண்டால்கோ: கடந்த, 2005ம் ஆண்டு, குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், ஊழல் நிகழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், 'வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், முடித்து வைக்க வேண்டும்' என, ... |
| ஸ்ரீரங்கத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய திட்டம்: செக் வைக்கிறது தேர்தல் ஆணையம் Posted: சென்னை: 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், வாக்காளர்கள் பணம் பெறுவதை தடுக்கவும், புதிய திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில், தேர்தல் விதிகளை மீறியதாக, 533 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் இருந்த, 10 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தனியார் சுவர்களில் இடம் பெற்றிருந்த, 490 விளம்பரங்கள், இரண்டு போஸ்டர்கள், 12 பேனர்கள், 19 கொடிகள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது ... |
| கர்நாடகாவில் ஆடம்பர திருமணங்களுக்கு கடிவாளம்: அரசு புதிய சட்டத்தை அமல்படுத்துகிறது Posted: பெங்களூரு: ஆடம்பர திருமணங்களுக்கு கடிவாளம் போட, கர்நாடக அரசு, புதிய சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.காங்., அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற்றும் ஆடம்பர திருமணங்களை தடை செய்யும் மசோதாக்களை அமல்படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ்விரு மசோதாக்களையும் பரிசீலிக்கும்படி, சட்டக் கமிஷனிடம், அரசு கேட்டு கொண்டது. |
| அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பதில் பெண் அமைச்சர்கள் தான் 'பெஸ்ட்!' Posted: புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில், ஒருமுறை கூட தவறாமல் வருகை தந்தவர்கள் என்ற பெருமையை, பா.ஜ.,வை சேர்ந்த பெண் அமைச்சர்களான, ஸ்மிருதி இரானி மற்றும் உமா பாரதி பெற்றுள்ளனர். |
| என் மகள்களுக்கு இந்திய கலாசாரத்தை கூறுவேன்: வானொலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் உறுதி Posted: புதுடில்லி: ''என் மகள்களுக்கு இந்தியாவின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தை விளக்கமாக கூறுவேன்,'' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும், கூட்டாக நிகழ்த்திய உரை, வானொலியில் நேற்றுஒலிபரப்பானது. பிரதமர் மோடி பேசியதாவது: ஏற்கனவே பல முறை வானொலி மூலம் நான் உரை நிகழ்த்தியிருந்தாலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து பேசும் இந்த உரை, மிகவும் சிறப்பு மிக்கது. 'பராக் ஒபாமா' என்றால், 'கடவுளால்ஆசிர்வதிக்கப்பட்டவர்' எனப் பொருள். அதிபர் ஒபாமா தன் மகள்களை மிகச் சிறந்த முறையில் வளர்த்து வருகிறார். இது, நம் நாட்டு ... |
| 'ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தேவை': ஒபாமா Posted: புதுடில்லி: ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட வேண்டும்என, அமெரிக்க அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.வேலைவாய்ப்பு: அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று நாள் பயணமாக, கடந்த, 25ம் தேதி இந்தியா வந்தார். டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற, குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், நேற்று டில்லி சிரிபோர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, அமெரிக்க ஆதரவு ... |
| Posted: புதுடில்லி: 'அணு எரிபொருட்கள் சப்ளை நாடுகள் அமைப்பான என்.எஸ்.ஜி.,யில், இந்தியாவை சேர்க்கக் கூடாது. தீவிரமான பரிசீலனைக்கு பின், தர விதிமுறைகளை இந்தியா பூர்த்தி செய்த பின்னரே சேர்க்க வேண்டும்' என, சீனா தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள அணு உலைகளுக்கு தேவையான, யுரேனியம் போன்ற எரிபொருட்களை சப்ளை செய்யும் நாடுகள், ஓர் அமைப்பாக செயல்படுகின்றன. 'நியூக்ளியர் சப்ளையர் குரூப் - என்.எஸ்.ஜி.,' என அழைக்கப்படும் இந்த அமைப்பில், இந்தியா சேரவும், உறுப்பினராகவும், அமெரிக்கா ஆதரவு அளிக்கும்' என, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி ... |
| கோர்ட் நேரத்தை வீணடிக்கின்றீர்கள்: ஜெ., வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு Posted: பெங்களூரு: "தேவையற்ற வாதங்களை, நீதிமன்றத்தில் வாதிட வேண்டாம். 65 ஆயிரம் பக்கம் கொண்ட, சொத்து குவிப்பு வழக்கு விபரங்களை, நான் படிக்க வேண்டுமா? நான், கேட்பதை நீங்கள் தருவதில்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கின்றீர்கள்," என்று ஜெயலலிதா வக்கீல் குமாரை, நீதிபதி குமாரசாமி கண்டித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, 14 வது நாளான நேற்றும் தொடர்ந்தது.ஜெ., வக்கீல் குமார்:ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் வீட்டுக்கு, மாதத்துக்கு, 16 லட்சத்து,15 ஆயிரம் ரூபாய் செலவானதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ... |
| காங்கிரஸ் மேலிடம் கைவிரித்ததால் தி.மு.க., அப்செட்: சிதம்பரம் தடையால் கருணாநிதி கனவு தகர்ந்தது Posted: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், ஆதரவு தர மறுத்து, காங்கிரஸ் மேலிடம், 'டாட்டா' காட்டியதால், தி.மு.க., தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆதரவை பெற, தி.மு.க., மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், காங்கிரஸ் ஆதரவை எப்படியாவது பெற்று விடவேண்டும் என, தி.மு.க., தரப்பு கடைசி வரை முயற்சித்தது. இதற்காக, டில்லி காங்கிரஸ் தலைமையிடம், தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும்; தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம், தி.மு.க., அமைப் புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவனும் பேச்சு நடத்தினர்.இந்தத் தகவல் தெரிந்ததும், ... |
| துறைமுகங்களில் நடமாடும் 'ஸ்கேனர்': அமெரிக்கா நிபந்தனை; இந்தியா ஏற்பு Posted: புதுடில்லி: 'இந்திய துறைமுகங்களில், சரக்கு பெட்டகங்களை, 100 சதவீத கதிரியக்க சோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என்ற, அமெரிக்காவின் நிபந்தனையை, மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த துவங்கியுள்ளது.இந்தியாவிலிருந்து சரக்கு பெட்டகங்கள் மூலம் ஆயுதங்கள், கதிரியக்க பொருட்கள் போன்றவை, அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க, மேற்கண்ட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான, 6.20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பரஸ்பர வர்த்தகத்தை, அடுத்த, 10 ஆண்டுகளில், 31 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இதையொட்டியும், உள்நாட்டு பாதுகாப்பை கருதியும், ... |
| வரி ஏய்ப்போரை விடமாட்டேன்: அருண் ஜெட்லி சூளுரை Posted: புதுடில்லி: "வரி ஏய்ப்பு செய்வோர், வரி செலுத்தாதவர்களை தப்பிக்க விடமாட்டேன்," என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; அவர்களை தப்பிக்க விடமாட்டோம்; அதே சமயம், வரி செலுத்துவோரிடம் எதார்த்தமான, அறிவார்ந்த அணுகுமுறை தேவை. முதலீடுகளுக்கு உகந்த, வரி நிர்வாக நடைமுறையை அமல்படுத்த, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தித் துறை மந்தநிலையால், வருவாய் குறைந்துள்ள போதிலும், அத்துறை மீண்டு வரும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |