Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த சிக்கல் தீர்ந்தது: ஒபாமா - மோடி நேரடி பேச்சில் சுமுக முடிவு

Posted:

புதுடில்லி: பத்தாண்டுகளுக்கு முன் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அணுசக்தி ஒப்பந்தம் நேற்று சுமுக முடிவுக்கு வந்தது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே டில்லியில் நேற்று நடைபெற்ற பேச்சில் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முடிவானது. இதையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக நீடித்த சிக்கல் தீர்ந்தது.இந்தியாவுக்கு அணுசக்தி ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் இந்திய அணு உலைகளுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக 2005ல் அமெரிக்கா - ...

5 ஆண்டுகளில் 30 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க மோடி அதிரடி

Posted:

புதுடில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 30 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.நாட்டு மக்கள் வேலைவாய்ப்புகளை எளிதாக பெறும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு, பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பெயரளவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அதிரடி மாற்றம்:
தற்போது, மத்தியில், பிரதமர் ...

ஜனார்த்தன ரெட்டி பதுக்கிய ரூ.40 ஆயிரம் கோடியை முடியாமல், சி.பி.ஐ., திணறல்

Posted:

பெங்களுரு:கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, 40 மாத சிறைவாசத்திற்கு பின் விடுதலையானாலும், அவர் வெளி நாட்டில் பதுக்கியுள்ள, 40 ஆயிரம் கோடி ரூபாயை மீட்க முடியாமல், சி.பி.ஐ., திணறி வருகிறது.கர்நாடகாவில், சுரங்க முறைகேடுகளில் சிக்கி, 2011 செப்டம்பர் முதல் சிறையில் இருந்த, ஜனார்த்தன ரெட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 23ம் தேதி, ஜாமினில் வெளிவந்தார். இவர், கனிமவளங்களை சுரண்டி சேர்த்த, 40 முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய், சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட தீவுகளில் உள்ள வங்கிகளில், டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகக் ...

உற்சாக வரவேற்பில் உருகிய ஒபாமா

Posted:

உடை நாகரிகம்:விமான நிலையத்தில், அதிபர் ஒபாமாவை வரவேற்ற பிரதமர் மோடி, குர்தா - பைஜாமாவுடன் காட்சியளித்தார். சந்தன நிறத்திலான குர்தாவின் மேல், அவர் அணிந்திருந்த சிவப்பு நிற அங்கவஸ்திரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அதிபர் ஒபாமா வழக்கமான கோட் - சூட் அணிந்திருந்தார். அதிபரின் மனைவி மிச்சேல், நியூயார்க்கில் வசிக்கும், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவை பூர்வீகமாகக் கொண்ட, பிபு மகாபத்ரா வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, அவரின் உடை நாகரிகம் குறித்து, பிரபல பத்திரிகைகள் பாராட்டி செய்தி வெளியிட்டன. இந்நிலையில், மோடியின் உடை ...

தி.மு.க.,வில் புதிதாக ஐந்து அமைப்புகள் அதிருப்தியாளர்களுக்காக கருணாநிதி திட்டம்

Posted:

தி.மு.க.,வில், அதிருப்தியாக இருக்கும் பலரை சமாளிக்க, புதிதாக ஐந்து துணை அமைப்புகளை துவக்க, கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டமிட்டு உள்ளார்.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் மூலம், 63 மாவட்ட செயலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.அதனால், ஸ்டாலின் அணிக்கு எதிராக இருக்கும் பலர், அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முற்பட்டுள்ளார். சிலர், பா.ஜ.,வுக்கு தாவவும் திட்டமிட்டு உள்ளனர். அனைத்து மாவட்ட தி.மு.க.,விலும் இந்த நிலைமை உள்ளது.அதனால், ...

'நான் ராஜினாமா செய்யவில்லை': அரசு வழக்கறிஞர் பவானி சிங் உறுதி

Posted:

பெங்களூரு : ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணையிலிருந்து, நான் ராஜினாமா செய்யவில்லை,'' என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்து உள்ளார்.ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டார். விசாரணையின் ஆரம்பத்திலேயே, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில், 'பவானி சிங் ஆஜராகக் கூடாது' என, மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. ...

ஆதரவு தெரிவிக்காமல் விஜயகாந்த் மவுனத்தால் குழப்பத்தில் பா.ஜ., தலைவர்கள்

Posted:

'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெளிப்படையான ஆதரவை, தே.மு.தி.க., அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.பா.ஜ., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., கழன்றுவிட்டது. கூட்டணியில் இருந்து வெளியேறியதாக, பா.ம.க., இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், கூட்டணியில் இல்லாததைப் போல, அக்கட்சியின் செயல்பாடு அமைந்துள்ளது.தற்போது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - -தி.மு.க.,விற்கு போட்டியாக, பா.ஜ.,வும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதேநேரத்தில், முதலில் தேர்தலில் போட்டியிட முயற்சித்த தே.மு.தி.க., தலைமையும், தற்போது, பா.ஜ.,வுக்கு மறைமுக ஆதரவை ...

ரேஷன் சர்க்கரை, பருப்பு வினியோகத்தில் முறைகேடு

Posted:

'ரேஷன் கடைகளில், சர்க்கரை மற்றும் பருப்பு வினியோகத்தில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, அவற்றை, 'பாக்கெட்டில்' அடைத்து வழங்க வேண்டும்' என, பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கும்; சர்க்கரை இரண்டு கிலோ, கிலோ, 13.50 ரூபாய் என்ற விலையிலும் வழங்கப்படுகிறது. பருப்பு வகைகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், சர்க்கரையை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்கிறது. ரேஷன் கடைகளில் இவற்றை ...

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு: அத்வானிக்கு பத்ம விபூஷண் விருது

Posted:

புதுடில்லி : மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதுகளான, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு, பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல், நேற்று வெளியானது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட, ஒன்பது பேருக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான, பத்ம விபூஷணும், 20 பேருக்கு பத்ம பூஷணும்; 75 பேருக்கு, பத்ம ஸ்ரீ விருதும் ...

மேஜர் முகுந்த் வரதராஜன் உட்பட 2 பேருக்கு அசோக சக்ரா விருது

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் போரிட்டு, வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உட்பட, இரண்டு ராணுவ வீரர் களுக்கு, 'அசோக சக்ரா' விருது, இன்று வழங்கப்படுகிறது.ராணுவத்தில் வீர தீர செயல்கள் செய்தவர்களுக்காக, அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்தாண்டு ஏப்ரலில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் போரிட்டு வீர மரணம் அடைந்தார், மேஜர் முகுந்த் வரதராஜன். தான், இறப்பதற்கு முன், இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். சென்னை, ...

மெஹ்தி மீதான வழக்குக்கு ஆதாரம்: போலீஸ் விசாரணையில் உறுதி

Posted:

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, 'ஷமி விட்னெஸ்' என்ற டுவிட்டர் கணக்கை இயக்கியதாக, மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் மீது வழக்கு பதிவு செய்ய தேவையான ஆதாரங்கள் உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக, டுவிட்டர் கணக்கை இயக்கியதாக மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதியன்று, பெங்களூரு, கங்கமனகுடி போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக, 'ஷமி விட்னெஸ்' என்ற பெயரில், டுவிட்டர் கணக்கை இயக்கி வந்தது தெரியவந்தது. இவரை கைது செய்தபோது கணக்கை, 17 ஆயிரம் பேர் பின் ...

பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் : ஜனாதிபதி குடியரசுதின உரை

Posted:

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடூர கற்பழிப்பு சம்பவங்கள், கொலைகள், மானபங்கப்படுத்துதல், கடத்தல் மற்றும் வரதட்சணை சாவுகள் ஆகியவை சொந்த வீட்டில் கூட பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு 'டிவி' மூலம் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில், அன்னை இந்தியா, சொந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத சூழ்நிலையை பார்க்கும்போது வேதனையை தருகிறது.பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடூர கற்பழிப்பு சம்பவங்கள், கொலைகள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™