Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோடையில் எகிறும் 15 ஆயிரம் மெகாவாட் மின் தேவை சமாளிக்குமா தமிழக மின் வாரியம்?

Posted:

வரும் கோடைக்காலத்தில், தமிழகத்தின் மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அனல் மின் நிலையங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதால், மின் தேவையை, மின் வாரியம் பூர்த்தி செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையில், மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை காட்டிலும், அதிகம். இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, 2008ல், மின் தடை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, குடியிருப்புக்கு, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு மணி நேரம்; மற்ற இடங்களில், நான்கு மணி நேரம் ...

ரயில்வே துறையுடன் கைகோர்க்குமா தமிழக அரசு?

Posted:

ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, ரயில்வே துறையின் சிறப்பு திட்டத்தில், பிற மாநிலங்களை போல், தமிழகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ரயில்வே துறையில், பெரும்பாலான திட்டங்களை கொண்டு வர, போதிய நிதி இல்லை. 26 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் ரயில்வே இயங்கி வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. மேலும், ஆய்வு செய்யப்பட்ட, 700 திட்டங்களின் நிலையை, ரயில்வே வாரியம், கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில், சாத்தியப்படாத பெரும்பாலான திட்டங்கள் ஒதுக்கப்பட்டன. ...

'ஆவணங்களை அழித்தாலும் சாட்சியம் இருக்கிறது' என்கிறார் மதிவாணன்

Posted:

''அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு, உடந்தையாக இருந்து செயல்பட்டது, துறை அதிகாரிகள் தான்; அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் கூறினார்.இது தொடர்பாக, அவர் கூறியதாவது: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அமைச்சர் என்ற முறையில், சென்னை, போட் கிளப்பில் உள்ள தயாநிதி வீட்டுக்கு, தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது. அந்த இணைப்பில் தான், நவீன ...

சுஷ்மா, சுஜாதாவை கவர்ந்த வெளிநாட்டு புடவைகள்

Posted:

புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தின்போது தங்களுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட புடவைகளை, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவும், வெளியுறவு துறை செயலர் சுஜாதா சிங்கும், தாங்களே வைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போர் வீரர் சிலை: பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, அவர்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் குறித்த தகவல்களை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு சென்ற போது ...

ரயில்வே அமைச்சக ஆலோசகராகிறார் 'மாஜி' சி.ஏ.ஜி., அதிகாரி வினோத் ராய்

Posted:

புதுடில்லி: முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய், ரயில்வே அமைச்சகத்தில், கவுரவ ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (சி.ஏ.ஜி.,) வினோத் ராய் பணியாற்றிய போது, ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற மெகா ஊழல்கள் அம்பலமாகின. இவர், தணிக்கை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், தற்போது, ரயில்வே அமைச்சகத்தில் கவுரவ ஆலோசகராக பணியாற்ற உள்ளார். அதனால், கொள்முதல், நிதி, முடிவெடுத்தல் மற்றும் செயல்படுத்துதல் உட்பட, ரயில்வே துறையின் அனைத்து செயல்பாடுகளிலும், அவர் ...

போதிய வருவாய் இல்லாததால் ஆந்திர மாநில கஜானா காலி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லை

Posted:

ஐதராபாத்: மாநில பிரிப்பிற்கு பின், போதிய வருவாய் கிடைக்காததால், ஆந்திர மாநில அரசு, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 5.7 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி முற்றியுள்ளதால், மத்திய அரசின் உதவியை, முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாடியுள்ளார்.'ஆந்திர மாநிலத்தில் இருந்து, தெலுங்கானா பகுதியை பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என, தெலுங்கானாவில் வசிக்கும் மக்கள், நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஒப்புதல்:
இதையடுத்து, முந் தைய காங்., ...

நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊழல் எதிர்ப்பு விதிமுறை கட்டாயம்

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு பெறும் நிறுவனங்கள், ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நிபந்தனை: வரும் பிப்ரவரி மாதம், 46 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதற்கான நிபந்தனை மற்றும் விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நிலக்கரி துறை இணை செயலரும், சுரங்க ஏல பொறுப்பாளருமான விவேக் பரத்வாஜ் கூறியதாவது: அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தில் ...

'ஜன் தன்' திட்ட வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: இலக்கை மிஞ்சிய வங்கிகளுக்கு மோடி பாராட்டு

Posted:

புதுடில்லி: 'பாமரருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும்' என்ற நோக்கத்தில், பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட, 'பிரதம மந்திரி ஜன் தன்' திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளின் தலைவர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதம்: 'அனைத்து வீடுகளுக்கும், வங்கி கணக்கு இருக்க வேண்டும்' என்ற நோக்கத்தில், நாளைக்குள் (ஜன., 26), 10 கோடி வங்கி கணக்குகள் துவக்க வேண்டும் என, இலக்கு ...

அன்னிய நிதியுதவி பெறும் 188 தொண்டு நிறுவனங்களுக்கு தடை?

Posted:

புதுடில்லி: 'நாட்டில் செயல்படும், 188 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், வெளிநாடு களில் இருந்து பெறும் நிதியுதவியை முறைகேடாக பயன்படுத்துகின்றன' என்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது. அதனால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, புலனாய்வு நிறுவனமான ஐ.பி., சமீபத்தில் அனுப்பிய அறிக்கை: வெளிநாட்டு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்களில், 188க்கும் மேற்பட்டவை, அன்னிய நன்கொடை ஒழுங்கு முறை சட்டத்தை மீறியுள்ளன. இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளுடன், சில ...

காஷ்மீரில் அரசு அமைக்க பி.டி.பி., - பா.ஜ., தீவிரம்

Posted:

ஜம்மு: ''ஜம்மு - காஷ்மீரில், கூட்டணி அரசு அமைப்பது குறித்து, பா.ஜ.,வுடன் மேலோட்டமான பேச்சு நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வது உட்பட, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் ஜனநாயக கட்சியான - பி.டி.பி.,யின் தலைவர் முப்தி முகமது சயீது தெரிவித்துள்ளார்.மேலோட்டமாக...: ஜம்முவில் அவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், கூட்டணி அரசு அமைப்பது குறித்து, பா.ஜ., தலைவர்களுடன் மேலோட்டமான, அதாவது, ...

தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்: குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஒபாமா இன்று வருகை

Posted:

புதுடில்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையொட்டி, தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாஜ்மஹாலை காணச் செல்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த அவரின் ஆக்ரா பயணம், பாதுகாப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, ஆண்டுதோறும், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி, நாளை நடக்கவுள்ள குடியரசு தினவிழாவில் ...

காங்கிரஸ் அடுத்த தலைவர் யார்? சோனியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி

Posted:

காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு பின், அதன் தலைமை குறித்த விவாதமும், விமர்சனமும் எழத் துவங்கி உள்ளன. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பேசப்படும் கருத்துக்களால், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம்: சரிவில் இருந்து கட்சியை மீட்டெடுக்க, வலுவான ஒரு தலைமை அவசியம் என்ற கருத்து, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த தேசிய கட்சியில், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அடுத்த தலைமைக்கு உரியவராக, ராகுலை தயார்படுத்தி வந்த சோனியாவுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு ...

உணவு கழகத்தை மாற்றியமைக்கும் முடிவை கைவிட கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை:'இந்திய உணவு கழகத்தை மாற்றியமைத்து, உணவு பாதுகாப்பு சட்டப்படி, 40 சதவீத மக்களுக்கே, மானிய விலையில், உணவு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியட்டுள்ள அறிக்கை:முன்னாள் உணவுத் துறை அமைச்சர், சாந்தகுமார் அறிக்கைப்படி, இந்திய உணவு கழகத்தை மாற்றி அமைத்து, 67 சதவீத மக்களுக்கு அளிக்கப்படும், உணவு பாதுகாப்பை, 40 சதவீதமாகக் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உரம், பெட்ரோலிய மானியத்தை குறைத்தது போல், உணவு மானிய அளவை வெகுவாகக் குறைக்கலாம் என, மத்திய அரசு நினைக்கிறது. இதனால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™