Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஏர் ஏசியா விமான விபத்து: 30 பேரின் உடல் கண்டெடுப்பு

Posted:

ஜகார்தா: ஏர் ஏசியா விமான விபத்தில் இறந்த, 30 பேரின் உடல்களை, மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.இந்தோனேஷியா சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம், ஜாவா கடற்பகுதியில் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. பல நாடுகளின் உதவியுடன், இதில், பயணம் செய்த, 162 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீட்புக் குழுவினர், 30 பேரின் உடல்களை கைப்பற்றிஉள்ளனர். இதில், ஐந்து பேரின் உடல்கள் விமான இருக்கையில், 'சீட் பெல்ட்' அணிந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன உபகரணங்கள் மூலம், 5 சதுர ...

ஆட்சி வேறு, அரசியல் வேறு என்பது நிரூபணம்: மம்தாவுடன் ஒரே மேடையில் அருண் ஜெட்லி

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று, அம்மாநில தலைநகர் கோல்கட்டாவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, திரிணமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என, பா.ஜ., திட்டமிட்டு செயல்படுகிறது. அதை அறிந்து கொண்ட, ஆளும் திரிண முல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.,வை கடுமையாக சாடி வருகிறார். இதனால், இரு ...

பணம் குவிந்தது எப்படி? மெஹ்தி 'திடுக்' தகவல்

Posted:

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவாளர் மெஹ்தியிடம் விசாரணை முடிந்ததை அடுத்து, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு, 'டுவிட்டர்' மூலம் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கைதான பயங்கரவாதி, மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாசை, முதலில், 5 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்தனர். விசாரணை முடியாததால், மீண்டும், 15 நாள், கஸ்டடியில் வைத்து, போலீசார் விசாரித்தனர். விசாரணை காலம் முடிந்ததால், மீண்டும் மெஹ்தி, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின்போது, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதை, மெஹ்தி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இவரது வங்கி ...

'தெரிந்த பேய்க்கு வாக்களியுங்கள்': தோல்வி பயத்தில் பிதற்றும் ராஜபக் ஷே

Posted:

கொழும்பு: 'தெரியாத தேவதையை (மைத்ரிபாலா ஸ்ரீசேனா) விட, தெரிந்த பேய்க்கு (எனக்கு) வாக்களியுங் கள்' என, இலங்கை அதிபர் ராஜபக் ஷே, தமிழர் வாழும் பகுதியில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல், வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. இதில், மூன்றாவது முறையாக ராஜபக் ஷே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபாலா ஸ்ரீசேனா போட்டியிடுகிறார். ராஜபக் ஷே அரசில் சுகாதார அமைச்சராக இருந்த இவரை தொடர்ந்து, பல அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். நேற்று, முன்னாள் சுற்றுலா துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி எம்.பி.,யுமான, ...

ஜெ., பிரேமலதா, தமிழிசையை போல் கனிமொழியை பிரதானப்படுத்த கருணாநிதி தீவிர ஆலோசனை

Posted:

அ.தி.மு.க.,வுக்கு ஜெயலலிதா, தே.மு.தி.க.,வுக்கு பிரேமலதா, பா.ஜ.,வுக்கு தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற பெண்கள் இருந்து, கட்சியை மகளிர் மத்தியில் கொண்டு போவது போல, தி.மு.க.,வில் கனிமொழியை பிரதானப்படுத்தி, கட்சியை மகளிர் மத்தியில் வேகமாக எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கோரிக்கை: இதற்காக, தி.மு.க., வில் இருக்கும் மகளிர் அணிக்கு, கனிமொழியை மாநில செயலர் ஆக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியினர் கோரிக்கை வைக்க, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம், அவர் ஆலோசனை ...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை 5ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted:

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, வரும் 5ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை, நீதிபதி குமாரசுவாமி விசாரிப்பார் என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை, நேற்று துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி குமாரசுவாமி, திடீரென ...

அவசர சட்டத்திற்கு அவசரம் காட்டுவது ஏன்? ஜனாதிபதி கேள்வி

Posted:

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'இந்த விவகாரத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்க, அரசு அவசரம் காட்டுவது ஏன்?' என, கேள்வி எழுப்பியுள்ளார். எனினும், அரசிடம் இருந்து விளக்கம் எதையும் அவர் கேட்கவில்லை.தொழிற்சாலைகள், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மிகப் பெரிய திட்டங்கள், ராணுவ திட்டங்கள் போன்றவற்றிற்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை, கடந்த புதன் கிழமை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார். அது தொடர்பான, மத்திய அமைச்சரவை கூட்டத்தின் பரிந்துரையை ஆராய்ந்த அவர், 'இந்த விவகாரம் ...

நிலக்கரி சுரங்கம் தோண்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

Posted:

ராய்ப்பூர்: மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி சப்ளையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, முடக்கப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் ஏலத்தில் விட மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது.இந்நிலையில், சுரங்கங்கள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றிணைந்து, சுரங்கம் செயல்பட அனுமதிக்க முடியாது என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதுகுறித்து, மத்திய அரசின் துறைகள், மாநில அரசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால், மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது. நிலக்கரி ...

பிரதமர் மோடி கண்டிப்புக்கு பின் மத மாற்ற நடவடிக்கைகளுக்கு 'தடா?'

Posted:

புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராஜேஸ்வர் சிங்கின் மத மாற்ற முயற்சிகளால், மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்களிடம், பிரதமர் மோடி புகார் கூறியதை அடுத்து, அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு, தடை விதித்த ஆர்.எஸ்.எஸ்., அவரை, 'நீண்ட விடுமுறை'யில் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உ.பி.,யின் ஆக்ரா நகரில், முஸ்லிம்கள் சிலரை, இந்து மதத்திற்கு மாற்றிய விவகாரம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, அலிகார் நகரிலும், 2,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை அவர், இந்து மதத்திற்கு மாற்றப் போவதாக தகவல்கள் ...

மீண்டும் ஒரு மும்பை தாக்குதல் போன்ற கொடூரம் தவிர்ப்பு: படகை சுற்றிவளைத்ததும் பயங்கரவாதிகள் தற்கொலை

Posted:

புதுடில்லி:பாகிஸ்தானில் இருந்து மீன்பிடி படகில், பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் பயணித்த பயங்கரவாதிகள், மும்பையில் நடத்தியது போன்ற ஒரு பயங்கர தாக்குதலை, குஜராத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது, சரியான நேரத்தில் தவிர்க்கப்பட்டது. கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள், அந்த படகை சுற்றிவளைத்ததும், படகிலிருந்த பயங்கரவாதிகள், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, படகை மூழ்கடித்தனர்.அண்டை நாடான பாகிஸ்தானின், கராச்சி நகரின், கேடி பந்தர் என்ற இடத்திலிருந்து, மீன்பிடி படகு ஒன்று, கடந்த 31ம் தேதி நள்ளிரவில், அரபிக்கடலில் பயணித்தது. அந்த படகில், நான்குக்கும் ...

தமிழக பட்ஜெட்டில் ரூ.20,000 கோடி துண்டு விழுகிறது: கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது அரசு?

Posted:

வருவாயை மேம்படுத்த அக்கறை காட்டாததால், நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதால், மாநிலத்தின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.ஆனால், இந்த நிதி இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. சமீபத்தில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.தமிழக அரசின், 2014 - 15 பட்ஜெட் படி, *பல்வேறு வகைகளில் வருவாய், 1,27,389 கோடி ரூபாய். *வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ...

இந்தியா பதிலடியில் பாடம் கற்காத பாகிஸ்தான்: எல்லையில் தொடர்ந்து அட்டகாசம்

Posted:

ஜம்மு: இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நேற்று இரவும் பாக்., படையினர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள, இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில், கடந்த சில நாட்களாக பாக்., படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 'பாக்., படையினரின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்' என, இந்திய எல்லை பாதுகாப்புப் படையினருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதால், அவர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும், பாக்., படையினரின் கொட்டம் அடங்கவில்லை. 'ஜம்மு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™