Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுது தே.மு.தி.க., : அடுத்தடுத்து புறக்கணிப்பால் அதிருப்தியில் விஜயகாந்த்

Posted:

பலத்தை நிரூபிக்கவும், பா.ஜ.,விற்கு பாடம் புகட்டவும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் அடுத்தடுத்த புறக்கணிப்பால், அதிருப்தி அடைந்த விஜயகாந்த், இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகுவது, கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியின் போதும், தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்த, பல சட்டசபை இடைத்தேர்தல்களை, தே.மு.தி.க., சந்தித்துள்ளது. இதன் மூலம், தன் ஓட்டு வங்கியையும் அக்கட்சி நிரூபித்துள்ளது. லோக்சபா தேர்தலின் ...

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் இனி படகுகள் ஓடும்: 101 நதிகளில் நீர்வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்1

Posted:

புதுடில்லி: ''நாட்டில், 101 நதிகள் நீர் வழிப்பாதைகளாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மாற்றப்படும்,'' என அறிவித்துள்ள மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ''சென்னையில், பக்கிம்ஹாம் கால்வாயில், சோழிங்கநல்லுார் - கலப்பாக்கம் நீர் வழிப்பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது,'' என்ற தகவலையும் தெரிவித்தார்.இது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:குறைந்த செலவிலான போக்குவரத்திற்கு, நீர் வழிப் போக்குவரத்து மிகச் சிறந்தது. தரையில், சாலை வழியாக போக்குவரத்திற்கு, 1 கி.மீ.,க்கு 1.50 ரூபாய் ...

கேட்கப்பட்ட தகவலை வழங்க மறுத்தது ஏன்? சோனியாவுக்கு தகவல் கமிஷனர் 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்ட தகவலை வழங்க மறுத்தது ஏன் என, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, தலைமை தகவல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தகவல் ஆர்வலர், ஆர்.கே.ஜெயின் என்பவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், காங்கிரஸ் செயல்பாடு குறித்து சில தகவல்களை கேட்டிருந்தார். அவர் கேட்ட தகவல்களை, காங்கிரஸ் கட்சி தர மறுத்ததால், அவர் டில்லி ஐகோர்ட்டை நாடினார். மத்திய தகவல் கமிஷனுக்கு, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'ஆறு மாதங்களுக்குள், சோனியாவிடம் இருந்து தகவல் பெற நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என ...

கிரண் பேடி முதல்வர் வேட்பாளரா? பா.ஜ.,வில் எழுந்தது போர்க்குரல்

Posted:

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நியமிப்பதற்கு, பா.ஜ.,வில் உள்ள ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டில்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், 7ல் நடக்கிறது. கடந்த தேர்தலில் தவறவிட்ட வெற்றி வாய்ப்பை, இந்த தேர்தலில் பிடித்து விடும் நோக்கத்துடன், பா.ஜ., களத்தில் இறங்கியுள்ளது.

தங்கள் பக்கம்:இந்த முறை, பா.ஜ.,வுக்கு வலு சேர்க்கும் வகையில், அன்னா ஹசாரேயுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடியை, பா.ஜ., தலைவர்கள், தங்கள் பக்கம் ...

தீபாவளியை சிறப்பிக்கும் அஞ்சல் தலை: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பாரா?

Posted:

நியூயார்க்: இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு, நியூயார்க் செனட் உறுப்பினர் கரோலின் மலோனி கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்ள விவரம்:அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அப்போது, அதிபர் என்ற முறையில், நீங்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைக்கிறீர்கள். கிறிஸ்துமஸ், ஈத் பெருநாள் போன்ற விடுமுறை தினங்களுக்கு, சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது போன்று, இந்தியர்களின் பாரம்பரிய கலாசார ...

ராஜபக் ஷே தோல்விக்கு காரணம் 'ரா' உளவாளி?

Posted:

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் செயல்பட்டு வரும், இந்திய உளவு அமைப்பான, 'ரா'வின் ரகசிய உளவாளி ஒருவர் தான், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேயின் தேர்தல் தோல்விக்கு வழி வகுத்தவர்; அவர் தான் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, ராஜபக் ஷேவுக்கு எதிராக அணி சேர்த்தார் என, இலங்கை தகவல்கள் கூறுகின்றன. கடந்த டிசம்பரில் , அந்த அதிகாரி, இந்தியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் எனவும், கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.பெயர் குறிப்பிடப்படாத அந்த இந்திய உளவாளியின் செயல்பாடுகள் குறித்து, கடந்த நவம்பரில், இலங்கை சென்றிருந்த இந்திய, தேசிய பாதுகாப்பு ...

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த கருணாநிதி வலியுறுத்தல்

Posted:

சென்னை: 'கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு, 3,500 ரூபாயாக, தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 2013 -- 14ல் அறிவித்த கரும்பு விலையான, 2,650 ரூபாயையே, 2014- - 15ம் ஆண்டுக்கும், அ.தி.மு.க., அரசு அறிவித்து உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு, 2013 - -14ல் வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை, 200 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை. கரும்பு விலையை, மத்திய அரசு உயர்த்தி வரும் வேளையில், அதற்கான மாநில அரசின் பரிந்துரை விலை குறைக்கப்பட்டு வருகிறது. கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு, 3,500 ரூபாயாக, தமிழக அரசு நிர்ணயிக்க ...

அமைச்சர் பின்னணியில் 150 ஆண்டு கால பழமையான கட்டடத்தை அபகரிக்க முயற்சி? புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

Posted:

சென்னை சென்ட்ரல், மெமோரியல் அரங்கை ஒட்டி, 150 ஆண்டுகள் பழமையான இலவச படிப்பக கட்டடத்தை, சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள, பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க, பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற கட்டடங்கள் தனியார் வசம் இருந்தாலும், அதை அவர்கள் இடித்து மாற்றி அமைப்பதாக இருந்தாலும், சி.எம்.டி.ஏ.,வின் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாப்பு குழுவின் அனுமதி பெற வேண்டியது ...

'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்.,க்கு 'பாரத ரத்னா' விருது வழங்க கோரிக்கை

Posted:

திருச்சி:'தலைசிறந்த பத்திரிகை யாளரும், தேச பக்தருமான, 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, அவர் பிறந்த இடத்தில், நினைவு மண்டபமும், அவரது சேவையைப் பாராட்டி, நினைவுகூரும் வகையில், மத்திய அரசு, 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்' எனவும், திருச்சியில் நடந்த, அகில பாரத பிராமணர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருச்சி, ஸ்ரீரங்கம் சிருங்கேரி திருமண மண்டபத்தில், அகில பாரத பிராமணர் சங்கத்தின், முதலாவது மாநாடு, நேற்று நடந்தது. சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் நடராஜ அய்யர் முன்னிலை வகித்தார்.தேசிய துணைத் தலைவர் ரமேஷ் ...

திபெத் அகதிகளுக்கு குடியுரிமை: தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை

Posted:

புதுடில்லி:இந்தியாவில் வாழும் திபெத் அகதிகள், வரும் டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. வாக்காளர் அடையாள அட்டை பெறுவதன் மூலம் திபெத் அகதிகள், இந்திய குடியுரிமை பெறுவார்கள். ஆனால், இதற்கு திபெத் அகதிகள் இடையே பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, திபெத் அகதிகள் குழுவின் தேசிய அமைப்பாளர் என்.கே. திரிக்கா ''சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலையாகும் நாளுக்காக, அகதிகளாக இங்கு வாழ்கிறோம். இந்திய குடியுரிமை பெற்றால், இந்த அடிப்படை நோக்கமே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™