Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காஷ்மீரில் ஆட்சி: பாஜகவிடம் வாக்குறுதி கோரும் பிடிபி

Posted: 18 Jan 2015 12:58 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக, சில முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சில வாக்குறுதிகளைக் கோரியுள்ளது.

"காஷ்மீரில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி'

Posted: 18 Jan 2015 12:58 PM PST

ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, அதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மத நல்லிணத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார்.

மும்பை அருகே போலீஸாருடன் லாரி ஓட்டுநர்கள் மோதல்

Posted: 18 Jan 2015 12:58 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையை அடுத்துள்ள ராய்கட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம் அருகே போலீஸாருக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது.

"இந்தியப் பயணத்தை ஒபாமா என்றென்றும் நினைவில் வைப்பதை உறுதிப்படுத்துவோம்'

Posted: 18 Jan 2015 12:58 PM PST

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்தியப் பயணத்தை என்றென்றும் நினைவில் வைத்திருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது

Posted: 18 Jan 2015 12:24 PM PST

பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கியதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தில்லி பேரவைத் தேர்தலை எளிதாகக் கருத வேண்டாம்: அமித் ஷா

Posted: 18 Jan 2015 12:23 PM PST

""தில்லி சட்டப் பேரவைக்கு நடைபெற உள்ள தேர்தல், நமக்கு பரீட்சை போன்றதாகும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாடு பிடிப்பதில் தகராறு: இளைஞரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 12:21 PM PST

கந்தர்வகோட்டையில் மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இரு பிரிவினரிடையே மோதல்: 80 பேர் மீது வழக்கு

Posted: 18 Jan 2015 12:21 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 80 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

60 பேரை கடத்திச் சென்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள்

Posted: 18 Jan 2015 12:21 PM PST

வடக்கு கேமரூனில் உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்த 60 பேரை, "போகோ ஹராம்' பயங்கரவாத அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

Posted: 18 Jan 2015 12:21 PM PST

சட்டவிரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

டீ கடைக்குள் கார் புகுந்ததில் 5 பேர் காயம்

Posted: 18 Jan 2015 12:20 PM PST

திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை காவல்சரகம் கிழக்கு கடற்கரை சாலையில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து கொண்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தர

அஞ்சல் நிலைய அலுவலர் மீது கையாடல் வழக்கு

Posted: 18 Jan 2015 12:20 PM PST

அரியலூர் அருகேயுள்ள மேல எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகதேவன், இவர் அருகில் உள்ள இலந்தைக்கூடம் கிராம கிளை அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அஞ்சல் அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தும் பணத்தை கையாடல் செய்ததாக

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 12:20 PM PST

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஏ. சகாயராஜ். இவரிடம் சனிக்கிழமை இரவு சிலர் வந்து இலவசமாக மதுபானம் கேட்டனராம். ஆனால் அவர்

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 18 Jan 2015 12:19 PM PST

ஜயங்கொண்டத்தில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி ஜயங்கொண்டம் அரசு

பொங்கல் விளையாட்டு போட்டியில் மோதல்: நடவடிக்கை எடுக்க கோரி மறியல் முயற்சி

Posted: 18 Jan 2015 12:19 PM PST

திருச்சி அரியமங்கலம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி-தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இருபிரிவினரிடையே மோதல்: 80 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 18 Jan 2015 12:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 80 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

புதுக்கோட்டையில் நல உதவிகள் வழங்கும் பணி பாதிக்காது

Posted: 18 Jan 2015 12:18 PM PST

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலைத் தொகுதியைத் தவிர்த்து பிற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் எதுவும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 12:18 PM PST

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கொடுக்க மறுத்த ஊழியரைத் தாக்கிய 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மாடு பிடிப்பதில் தகராறு: இளைஞரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 12:18 PM PST

கந்தர்வகோட்டையில் மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி

Posted: 18 Jan 2015 12:18 PM PST

புதுக்கோட்டை எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக மாநில அளவில் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது படைப்புகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடி அருகேபொங்கல் வைப்பதில் தகராறு: 40 பேர் மீது வழக்கு

Posted: 18 Jan 2015 12:17 PM PST

ஆலங்குடி அருகே வடகாட்டில் பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 40 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பெரம்பலூரில் இன்று சிப்பாய் பொதுப்பணிக்கான ஆள் தேர்வு

Posted: 18 Jan 2015 12:17 PM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிப்பாய் பொதுப்பணிக்கான ஆள்கள் தேர்வு முகாம் திங்கள்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம்

Posted: 18 Jan 2015 12:16 PM PST

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, மக்கள் அவரவர் பணிபுரியும் ஊர்களுக்கு செல்ல குழுமியதால், திருச்சியில் பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நிறைந்திருந்தது.

வேதாரண்யத்தில் பொங்கல் விழா

Posted: 18 Jan 2015 12:16 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பெரியார் படிப்பகம், பெரியார் மா.மீ. அறக்கட்டளை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை

Posted: 18 Jan 2015 12:16 PM PST

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 2 கோடியே 83 லட்சத்தில் நூறு படுக்கைகள் கொண்ட கூடுதல் புதிய மருத்துவமனைக் கட்டடம் மற்றும் தேமங்கலம் ஊராட்சியில் ரூ. 50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்

மக்கள் நலனை கருத்தில் கொண்டே நலத்திட்டங்கள்

Posted: 18 Jan 2015 12:15 PM PST

அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

திறன் அறிந்து சொல்லுக...

Posted: 18 Jan 2015 12:15 PM PST

ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சுக்கலையும் ஒன்று. மற்றக் கலைகளைக் கற்றுக்கொள்கிறோமோ இல்லையோ இந்தக் கலையைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வசப்பபடும்.

பெரிதினும் பெரிது கேட்போம்!

Posted: 18 Jan 2015 12:14 PM PST

மகாகவி பாரதிக்கு "பாரத ரத்னா' விருது கிடைக்க வலியுறுத்துவேன்' என்று உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்திருக்கிறார். பாரதி மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி செலுத்துவோம்.

தடை நீங்க வேண்டும்!

Posted: 18 Jan 2015 12:13 PM PST

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கவில்லையே என்று தமிழகத்தின் பல ஊர்களிலும் சோகம் பொங்கி வழியும் வேளையில், ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: காங்கிரஸ் போட்டியா? இளங்கோவன் பதில்

Posted: 18 Jan 2015 12:06 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

Posted: 18 Jan 2015 12:06 PM PST

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தமாகா போட்டியிடாது: ஜி.கே.வாசன்

Posted: 18 Jan 2015 12:05 PM PST

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமாகா போட்டியிடப் போவதில்லை என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

இன்று பாஜக தேர்தல் குழுக் கூட்டம்: தில்லி, ஸ்ரீரங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு?

Posted: 18 Jan 2015 12:04 PM PST

பாஜகவின் தேர்தல் குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை (ஜனவரி 19) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

Posted: 18 Jan 2015 12:02 PM PST

"பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க பணம் கொடுக்க வந்தால் அதை மறுக்காமல், ஏற்றுக் கொள்ளுங்கள்.

மும்பை, சென்னை உயர் நீதிமன்றங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டம்

Posted: 18 Jan 2015 12:00 PM PST

சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி, அவை அமைந்துள்ள நகரங்களுக்கு ஏற்றவாறு பெயரிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, மத்திய அரசு இந்த இரு உயர் நீதிமன்றங்களின் பெயர்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காக ஹசாரேயை பயன்படுத்தவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி பதில்

Posted: 18 Jan 2015 11:59 AM PST

"எனது அரசியல் லாபத்திற்காக அண்ணா ஹசாரேயை நான் யன்படுத்திவில்லை' என்று பாஜகவில் அண்மையில் இணைந்த கிரண் பேடி தெரிவித்தார்.

புதிய ரயில் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

Posted: 18 Jan 2015 11:58 AM PST

தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தெரிவித்தார்.

இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு: வியத்நாம் விருப்பம்

Posted: 18 Jan 2015 11:46 AM PST

இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக வியத்நாம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் ஹரிஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா மறைவு

Posted: 18 Jan 2015 11:45 AM PST

உத்தர பிரதேச மாநில பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இது குறித்து அந்த மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் கூறியதாவது:

நாகாலாந்து சிறுமிக்கு தேசிய வீரதீர விருது

Posted: 18 Jan 2015 11:44 AM PST

ஆற்றில் தவறிவிழுந்த தனது பாட்டியைக் காப்பாற்றிய நாகாலாந்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தேசிய வீரதீர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய தனியார்மய திட்டத்தைக் கைவிடாவிடில் வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

Posted: 18 Jan 2015 11:42 AM PST

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிடாத பட்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்திய விமான நிலைய ஊழியர்கள் சங்கம் (ஏ.ஏ.இ.யூ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி

Posted: 18 Jan 2015 11:42 AM PST

"நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted: 18 Jan 2015 11:41 AM PST

இந்தியாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் செய்யும் வேளையில், எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிகார்: அமில வீச்சில் 5 பேர் காயம்

Posted: 18 Jan 2015 11:38 AM PST

பிகார் மாநிலம், மாதேபுராவில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெண் அமிலத்தை வீசியதில் 5 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிப்பது கடினம்: தேவெ கெளடா

Posted: 18 Jan 2015 11:37 AM PST

கர்நாடக முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிப்பது கடினம் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசியத் தலைவருமான தேவெ கெளடா கூறினார்.

திருவாரூரில் தேசிய இளையோர் தின விழா

Posted: 18 Jan 2015 11:37 AM PST

திருவாரூரில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா தேசிய இளையோர் தின விழாவாக அண்மையில் கொண்டாடப்பட்டது.

சீர்காழியில் கோலப் போட்டி

Posted: 18 Jan 2015 11:36 AM PST

சீர்காழியில் காணும் பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜனவரி 20 மின் தடை

Posted: 18 Jan 2015 11:36 AM PST

கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்துக்குள்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, வல்லம் மற்றும் நச்சலூர் ஆகிய 5 துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில், மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின்சாரம் இருக்காது.

85 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:36 AM PST

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதற்கட்டமாக 85,347 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

காவலர்களுக்கான பொது மருத்துவ முகாம்

Posted: 18 Jan 2015 11:35 AM PST

கரூரில் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவசப் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த ஏற்பாடு'

Posted: 18 Jan 2015 11:35 AM PST

பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

குளித்தலையில் போலீயோ சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:35 AM PST

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,713 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

அதிமுக, திமுக சார்பில் மொபெட் பந்தயங்கள்

Posted: 18 Jan 2015 11:34 AM PST

கரூர் அருகே வாங்கலில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொபெட் பந்தயத்தில் வாங்கலைச் சேர்ந்த சங்கர் முதல் பரிசை வென்றார்.

கரூரில் ஆண்டிப்பண்டாரத்தார் சமூக நலப் பேரவைக் கூட்டம்

Posted: 18 Jan 2015 11:34 AM PST

கரூரில் ஆண்டிப்பண்டாரத்தார் சமூக நல பேரவைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.சு. இளமாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கௌரவ ஆலோசகர் கி.

புன்னம் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள்

Posted: 18 Jan 2015 11:34 AM PST

புன்னம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த தின விழாவில் அதிமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

தர்ஹாக்களை சீரமைக்க நடவடிக்கை தேவை

Posted: 18 Jan 2015 11:34 AM PST

தமிழகத்தில் பழுதடைந்துள்ள தர்ஹாக்களை சீரமைத்துத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மதுபானம் விற்ற 12 பேர் கைது

Posted: 18 Jan 2015 11:33 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுபானம் விற்ற 12 பேரை போலீஸார் கைது செய்தனர். மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையப் போலீஸார் சனிக்கிழமை மாவட்டம் முழு

ஜயங்கொண்டத்தில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

Posted: 18 Jan 2015 11:33 AM PST

ஜயங்கொண்டத்தில் தமிழக முதல்வரின் மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அண்மையில் அமைக்கப்பட்டது.

ஜயங்கொண்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2015 11:33 AM PST

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் நகராட்சியில் இலவச போலியோ சொட்டுமருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாரத் தலைமை மருத்துவர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் முன்னிலை வகித்தார். நகர்மன்றத் தலைவர் மீன

அரியலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2015 11:32 AM PST

அரியலூரில் போலியோ சொட்டு மருந்து முகாமினை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க சிறப்புச் சலுகை

Posted: 18 Jan 2015 11:32 AM PST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது வேலைவாய்ப்பினை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2011, 2012 மற்றும் 2013 ஆம்

அரியலூரில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 11:32 AM PST

அரியலூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

குளத்தில் சிறுவன் சடலம்: போலீஸார் விசாரணை

Posted: 18 Jan 2015 11:32 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்த கொடியரசு மகன் மோகன்ராஜ்(16). இவர் சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மருதூர் அருகே உள்ள குளத்தில் உடலி

பெரம்பலூரில் சாலை மறியல்

Posted: 18 Jan 2015 11:31 AM PST

அரசு போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் 48 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:31 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் 48,500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

Posted: 18 Jan 2015 11:31 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) நடைபெறுகிறது.

ஜனவரி 20 மின் தடை

Posted: 18 Jan 2015 11:30 AM PST

மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் விநியோகம் இருக்காது.

பாஜகவின் முகம் நரேந்திர மோடி: கிரண் பேடி புகழாரம்

Posted: 18 Jan 2015 11:30 AM PST

பாஜகவின் முகமாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக கிரண் பேடி தெரிவித்தார்.

பெரம்பலூரில் இன்று சிப்பாய் பொதுப்பணிக்கான ஆள் தேர்வு

Posted: 18 Jan 2015 11:30 AM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிப்பாய் பொதுப்பணிக்கான ஆள்கள் தேர்வு முகாம் திங்கள்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் சாவு

Posted: 18 Jan 2015 11:30 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் சனி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1.47 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:30 AM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 1.47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளதாக

பிகார்: ஜேடியூ, ஆர்ஜேடியை முறியடிக்க பாஜக கூட்டணி திட்டம் வகுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் குஷ்வாஹா

Posted: 18 Jan 2015 11:29 AM PST

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியை முறியடிப்பதற்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா வலியுறுத்தினார்.

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 11:29 AM PST

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கொடுக்க மறுத்த ஊழியரைத் தாக்கிய 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

7 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள்: ராஜ்நாத் சிங்

Posted: 18 Jan 2015 11:29 AM PST

விரைவில் 6 முதல் 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அன்னவாசலில் கபடி போட்டி

Posted: 18 Jan 2015 11:29 AM PST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் பொங்கல் விழாவையொட்டி கபடி போட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

ஜெஜெ கல்லூரியில் "நாக்' குழுவினர் ஆய்வு

Posted: 18 Jan 2015 11:28 AM PST

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) தேசிய தரக் கட்டுப்பாட்டு தர நிர்ணய குழுவினர் (நாக்) அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

கைக்குறிச்சி கல்லூரியில் திருவள்ளுவர் தின விழா போட்டி

Posted: 18 Jan 2015 11:28 AM PST

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

தென் மாநில அறிவியல் கண்காட்சி:புதுகை அரசுப் பள்ளி ஆசிரியர் சிறப்பிடம்

Posted: 18 Jan 2015 11:28 AM PST

தென்மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சிறப்பிடம் பிடித்தார்.

தோப்புக்கொல்லை விநாயகர் கோயிலில் மண்டல அபிஷேகம்

Posted: 18 Jan 2015 11:28 AM PST

புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் விநாயகர் கோயிலில் 48 ஆம் நாள் மண்டாலபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிகாரில் 5 மாவோயிஸ்டுகள் கைது

Posted: 18 Jan 2015 11:28 AM PST

பிகாரில் ஞாயிற்றுக்கிழமை 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் நல உதவிகள் வழங்கும் பணி பாதிக்காது

Posted: 18 Jan 2015 11:27 AM PST

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலைத் தொகுதியைத் தவிர்த்து பிற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் பண

வடகாட்டில் பொங்கல் வைப்பதில் தகராறு: 40 பேர் மீது வழக்கு

Posted: 18 Jan 2015 11:27 AM PST

ஆலங்குடி அருகே வடகாட்டில் பொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 40 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

எந்த முறையற்ற செயலிலும் ஈடுபட்டதில்லை: முகுல் ராய்

Posted: 18 Jan 2015 11:27 AM PST

அரசியலிலும், தமது சொந்த வாழ்விலும் எந்த முறையற்ற செயலிலும் ஈடுபட்டதில்லை என, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் ராய் கூறினார்.

மாடு பிடிப்பதில் தகராறு: இளைஞரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 11:26 AM PST

கந்தர்வகோட்டையில் மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி

Posted: 18 Jan 2015 11:26 AM PST

புதுக்கோட்டை எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக மாநில அளவில் நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது படைப்புகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2015 11:26 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

குடந்தையில் 13 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:26 AM PST

கும்பகோணத்தில் நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமில், நகரப் பகுதியில் 13 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ. 65 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

Posted: 18 Jan 2015 11:25 AM PST

சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு தமிழக அரசு ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை செயல்படுத்த திமுக வலியுறுத்தல்

Posted: 18 Jan 2015 11:25 AM PST

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இருவரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு

Posted: 18 Jan 2015 11:25 AM PST

சட்டவிரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

லோக்பால், சிவிசி, சிஐசி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் நியமனம்: மத்திய அரசு

Posted: 18 Jan 2015 11:24 AM PST

லோக்பால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ஆகியவற்றுக்கு உரிய நேரத்தில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இளைஞர் பஜனை சமாஜத்தின் 42-வது ஆண்டு நாம சங்கீர்த்தனம்

Posted: 18 Jan 2015 11:24 AM PST

கும்பகோணத்தில் இளைஞர் பஜனை சமாஜத்தின் 42-வது ஆண்டு நாம சங்கீர்த்தனம் திங்கள்கிழமை (ஜன. 19) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

"மக்கள் நலனை கருத்தில் கொண்டே நலத்திட்டங்கள்

Posted: 18 Jan 2015 11:24 AM PST

அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

"நாகையில் சாலை விபத்துகளில் 283 பேர் உயிரிழந்துள்ளனர்

Posted: 18 Jan 2015 11:24 AM PST

நாகப்பட்டினத்தில் 2014-ம் ஆண்டில் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 283 என்று சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 18 Jan 2015 11:24 AM PST

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,22,278 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு

நீடாமங்கலத்தில்போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 18 Jan 2015 11:23 AM PST

நீடாமங்கலம் வட்டாரத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 18 Jan 2015 11:23 AM PST

காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சூதாட்டம்: 4 பேர் கைது

Posted: 18 Jan 2015 11:23 AM PST

நாகப்பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். நாகை நகரில் போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினம், மருந்து கொத்தலை சாலை பகுதியில் அதே பகுதி காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன்

திருவாரூர் மாவட்டத்தில்ஜன. 22, 23-ல் பிரசார இயக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted: 18 Jan 2015 11:23 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் வரும் 22,23-ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.

ஒபாமா வருகையின் போது 7 அடுக்குப் பாதுகாப்பு

Posted: 18 Jan 2015 11:22 AM PST

தில்லியில் இம்மாதம் 26ஆம் தேதி குடியரசுத் தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதால், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் 7 அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™