Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகத்தில் போக்குவரத்து கழகம்: சீர்கேடுகளை களைய தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Posted:

மதுரை: தமிழக அரசு போக்குவரத்து கழகம் நிர்வாக சீர்கேடால் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சலுகைகள், பணப்பலன் கிடைக்காமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். மண்டல அளவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வகித்தால் மட்டுமே விடிவு பிறக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உட்பட 11 மண்டலங்களாக போக்குவரத்து கழகம் பிரிக்கப்பட்டுள்ளன.எம்.டி. சம்பளம் ரூ.1.16 லட்சம்: மண்டலம் ஒன்றுக்கு நிர்வாக இயக்குனர், மூன்று பொது மேலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் மாத ...

ராஜாத்தி, கனிமொழிக்கு பத்து ரூபாய்: பொங்கல் நாளில் கருணாநிதி தாராளம்

Posted:

பொங்கல் நாளான நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அந்தக் கட்சியின் நிர்வாகிகளும், குடும்பத்தினரும் சந்தித்து பொங்கல் வாழ்த்துக் கூறினர். அனைவருக்கும் தலா, 10 ரூபாய் வழங்கினார் கருணாநிதி.பொங்கல் விழாவை ஒட்டி, சென்னை கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீடுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீடு, அண்ணா அறிவாலயம் போன்றவை வண்ண விளக்குகளாலும், வாழை மரம் மற்றும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கருணாநிதியை சந்திக்க, அவரின் கோபாலபுரம் வீட்டிற்கு காலையில் இருந்தே தொண்டர்கள் நிறைய அளவில் திரண்டனர். தன்னை சந்தித்த ...

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு தொழில் துறையினர் பாராட்டு: வாகனங்கள், வீட்டு கடன்களுக்கான வட்டி குறையும்

Posted:

மும்பை: யாரும் எதிர்பாராத வகையில், வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி வீதத்தை, ரிசர்வ் வங்கி, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைக்கு, தொழில் துறையினரும், வங்கியாளர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளது, உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணங்களால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான, 'ரெப்போ' வட்டி வீதம், 8.0 சதவீதத்தில் இருந்து, 7.75 சதவீதமாக ...

நல்ல நிர்வாகத்திற்கு தடையாக இருப்பது எது: ஆய்வு நடத்த பிரதமர் மோடி அரசு திட்டம்

Posted:

புதுடில்லி: நல்ல அரசு நிர்வாகத்தை அமல்படுத்துவதில் உள்ள முட்டுக் கட்டைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளில் பின்பற்றப்படும் சிறப்பான நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரபலமான நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட உள்ளது.இதுதொடர்பாக, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நல்ல அரசு நிர்வாகத்தை அமல்படுத்துவதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், அதில் பல குறைபாடுகள் மற்றும் முட்டுக் கட்டைகள் உள்ளன. அந்த முட்டுக் கட்டைகள் என்ன என்பதை கண்டறியவும், அவற்றை தீர்க்க, ...

ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் முடக்கம்: 'நிதி இல்லை' என அமைச்சர் கைவிரிப்பு

Posted:

புதுடில்லி: ''போதிய நிதி இல்லாததால், ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் உள்ளன,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.அடுத்த மாத இறு தியில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ரயில்வே அமைச்சருமான சுரேஷ் பிரபு, தொழில் துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பா.ஜ., செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி, நீதிபதி முட்கல், நடிகர் மனோஜ் திவாரி உள்ளிட்டோருடன், சுரேஷ் பிரபு நேற்று ஆலோசனை ...

சுதந்திரா கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராஜபக் ஷே

Posted:

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக் ஷே, இலங்கை சுதந்திரா கட்சி (எஸ்.எல்.எப்.பி.,) தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார்.புதிய தலைவராக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், எஸ்.எல்.எப்.பி., பொதுச் செயலராகவும், ராஜபக் ஷே அரசில் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். கடந்த ஆண்டு நவம்பரில், இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள், ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகினார் சிறிசேன. இதையடுத்து, அவரை பொதுச் செயலர் பதவியில் இருந்து ராஜபக் ஷே நீக்கினார். ஆனாலும், கட்சியில் அதிருப்தி தலைவராக செயல்பட்ட சிறிசேன, ...

பா.ஜ.,வில் சேர்ந்தார் கிரண்பேடி: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டி?

Posted:

புதுடில்லி: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, அமித் ஷா முன்னிலையில், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கிரண் பேடி, 2013ம் ஆண்டு, டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பேச்சு அடிபட்டது. அப்படி இணைந்தால், அவர் பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தன் முதல்வர் வேட்பாளராக ...

சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,: அனைத்து பூத்களிலும் உறுப்பினர்கள் நியமனம்

Posted:

பா.ஜ., 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அ.தி.மு.க., சத்தமின்றி சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஒவ்வொரு பூத்திலும், 90 வாக்காளர்களுக்கு ஒரு கமிட்டி உறுப்பினர் என்ற வகையில், நிர்வாகிகள் நியமனம் நடக்கிறது.தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு மாற்றாக உருவெடுக்க பா.ஜ., மும்முரம் காட்டி வருகிறது. கால அவகாசம் கொடுத்தால், பா.ஜ., சாதித்து விடும் என அ.தி.மு.க., எண்ணுகிறது. எனவே விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தயாராகிவருகிறது. இதற்கு தயாராகும் படி, நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தர ...

வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜ.,வில் குழப்பம்: காங்கிரஸ் வேட்பாளர் குஷ்பு?

Posted:

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில், தமிழக பா.ஜ.,வில் குழப்பம் நீடிக்கிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதனால், அவர் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் இழந்தார். இதையடுத்து, காலியான ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, ...

பதவியேற்காத எம்.எல்.ஏ.க்கள் : -காஷ்மீரில் ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிக்க முடியுமா?

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கவில்லை. இந்த சூழ்நிலையில் அம்மாநிலத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு பிப். 7-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில அரசியல் வரலாற்றில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நான்குமுனைப்போட்டி நிலவியது.இதில் பா.ஜ,, பி.டி.பி., தேசியமாநாட்டு கட்சி, காங். என தனித்தனியாக போட்டியிட்டன. மொத்தம் 87 எம்.எல்.ஏ.க்களில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™