Tamil News | Online Tamil News |
- நிதி நெருக்கடியை சமாளிக்க முன்னதாகவே வரி வசூல்: மாநிலம் முழுவதும் வணிகர்களை மிரட்டும் அதிகாரிகள்
- தொடர் தோல்விகளால் காங்கிரசின் கஜானா காலி: தலைவர்களின் விமான பயணத்திற்கு தடை; அலவன்ஸ் கட்
- சி.ஆர்.பி.எப்., வீரர் துயரங்கள்சொல்லி மாளாது!
- 'இந்தியாவில் முதலீடு ரொம்ப ஈஸி!': ஆமதாபாத் முதலீட்டாளர் மாநாட்டில் மோடி
- தொழிற்சாலைகள் மூடலில் தமிழகம் முன்னிலை
- வழக்கு விசாரணையகளில் இருந்து தப்பிக்க ராஜபக்சே வெளிநாட்டுக்கு ஓட்டமா?
- மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு ஸ்டாலின் 'எஸ்கேப்': பதவி உயர்வு ஏமாற்றம்; கருணாநிதியிடம் மனக்கசப்பு
- சென்னையில் தனியார் பேருந்து கனவு நனவாகுமா?
- கிரானைட் கற்களுக்காக 7.5 ஏக்கர் கண்மாய் அழிப்பு: சகாயம் விசாரணையில் 'திடுக்'
- விளைநிலங்களை சுற்றி தேன்கூடு, மிளகாய் பயிர் வேலி:யானைகளிடம் இருந்து தப்பிக்க மத்திய அரசு யோசனை
- மத மாற்றத்தை தடை செய்ய புது சட்டமா?மத்திய அமைச்சர் குஷ்வஹா போர்க்கொடி
| நிதி நெருக்கடியை சமாளிக்க முன்னதாகவே வரி வசூல்: மாநிலம் முழுவதும் வணிகர்களை மிரட்டும் அதிகாரிகள் Posted: வருவாய் இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நிலைமையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், வணிகர்களிடம் முன்கூட்டியே வரி வசூலிக்க உத்தரவிட்டு உள்ளது. அதனால், வணிகவரித் துறை அதிகாரிகள், வணிகர்களிடம் கெஞ்சியும், மிரட்டியும் வசூலித்து வருகின்றனர்.தமிழக அரசின், 2014 - 15 பட்ஜெட்படி, பல்வேறு வகைகளில் வருவாய், 1,27,389 கோடி ரூபாய். இதில், வணிகவரி, முத்திரைத்தாள் - பத்திரப்பதிவு கட்டணம், மோட்டார் வாகன வரி, ஆயத்தீர்வை வரி என்ற வகையில், வரி வருவாய், 91,835 கோடி ரூபாய் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.டிசம்பர் வரை, 56 சதவீத அளவிற்கு தான், வரி வசூல் ... |
| தொடர் தோல்விகளால் காங்கிரசின் கஜானா காலி: தலைவர்களின் விமான பயணத்திற்கு தடை; அலவன்ஸ் கட் Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மாநில சட்டசபைத் தேர்தல்களிலும், தொடர் தோல்வியை தழுவி வரும், காங்கிரசின் கஜானா வேகமாக காலியாகி வருகிறது. அதன் எதிரொலியாக, கட்சித் தலைவர்களின் விமானப் பயணங்களுக்கு தடை, பெட்ரோல் அலவன்ஸ் கட், தினசரி செலவினங்களுக்கான படித்தொகை குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளை காங்., மேலிடம் எடுத்திருக்கிறது.கடந்த 2004 முதல் 2014 வரை, தொடர்ந்து 10 ஆண்டுகள், மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்., கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு, லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கூட, பெற முடியாத பரிதாப நிலைக்கு ... |
| சி.ஆர்.பி.எப்., வீரர் துயரங்கள்சொல்லி மாளாது! Posted: புதுடில்லி : 'சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு உள்ள பணிச்சுமை காரணமாக, அவர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சமூகத்துடன் இணைந்து வாழ முடியாமல் அவர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.'மன அளவிலும், சமூக அளவிலும் பல இழப்புகளை சந்திக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் இந்தப் படையில் சேருவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது' என, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சி.ஆர்.பி.எப்., வீரர்களின் வாழ்க்கை, எதிர்காலம் குறித்து பலநூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:*பயங்கரவாதிகள், ... |
| 'இந்தியாவில் முதலீடு ரொம்ப ஈஸி!': ஆமதாபாத் முதலீட்டாளர் மாநாட்டில் மோடி Posted: ஆமதாபாத் : ''இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்ய வாருங்கள் என, உலக நாடுகளின் தொழில் துறையினரையும், முதலீட்டாளர்களையும் அழைக்கிறோம். நேர்மையான வரி முறை, ஸ்திரமான தொழில் சூழ்நிலை, வெளிப்படையான நிர்வாகம், தொழில்கள் துவங்க மிக எளிதான நிலை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.குஜராத்தின் ஆமதாபாத் நகரில், 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரில், முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. அதில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஐக்கிய நாடுகள் பொதுச்செயலர் பான் கீ மூன், உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் உட்பட உலகம் ... |
| தொழிற்சாலைகள் மூடலில் தமிழகம் முன்னிலை Posted: புதுடில்லி : பொருளாதார நெருக்கடி காரணமாக, பல்வேறு தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டதால், கடந்த 2012-13ம் ஆண்டில், இந்தியா முழுவதிலும், 4 லட்சம் பேர் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக, தொழிற்சாலை வருடாந்திர தற்காலிக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைப்பு சார்ந்த ஒட்டு மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியாக இருந்த நிலையில், தற்போது, 96 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, உணவு, ஜவுளி, ஆயத்த ஆடைகள், உலோகம், கனிமம் ஆகிய ஐந்து துறைகளில் மட்டும் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தயாரிப்பு துறை முடங்கி போனது, நேரடி ... |
| வழக்கு விசாரணையகளில் இருந்து தப்பிக்க ராஜபக்சே வெளிநாட்டுக்கு ஓட்டமா? Posted: கொழும்பு:'சிறிசேன அரசு ஆட்சி அமைப்பதை தடுக்க, ராஜபக்சே செய்த சதி குறித்து விசாரிக்கப்படும்' என, இலங்கையின் புதிய அரசு அறிவித்து உள்ளது. சிறிசேன அரசின் செய்தி தொடர்பாளர், மங்கள சமரவீரா கூறியதாவது:புதிய அரசு அமைவதை தடுக்கும் நோக்குடன், ராஜபக்சே, சதிச் செயல் மற்றும் கலகத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்த விசாரணை தான், சிறிசேன அரசின் முதல் உத்தரவாக இருக்கும். தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜபக்சே, இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயன்று உள்ளார். ராணுவத்தை குவிக்கவும், உத்தரவிட்டு உள்ளார். ஆனால் அதற்கு, ராணுவ தலைமை தளபதி தயா ரத்னநாயகேவும், ... |
| மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு ஸ்டாலின் 'எஸ்கேப்': பதவி உயர்வு ஏமாற்றம்; கருணாநிதியிடம் மனக்கசப்பு Posted: பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது கோபம் அடைந்துள்ள ஸ்டாலின், யாரிடமும் சொல்லாமல், தன் பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். இது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேண்டுகோள் கடந்த, 9ம் தேதி, தி.மு.க., தலைமையகமான, சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக, 'பொதுச்செயலர் பதவியில் இருக்கும் அன்பழகன், அப்பதவியில் இருந்து விலக வேண்டும்' என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அந்தப் பொறுப்பை ஸ்டாலினுக்கு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், அப்படியொரு ... |
| சென்னையில் தனியார் பேருந்து கனவு நனவாகுமா? Posted: சரியான நேரத்திற்கு வந்து செல்வது; இனிமையான பயணத்தை தருவது என, தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளின் சேவை சிறப்பாக உள்ளது.சென்னை, மதுரை, நாகர்கோவில், நீலகிரியை தவிர்த்து, தஞ்சை, கோவை, சேலம், திருச்சி என, தமிழகத்தின் மூலை, முடுக்கில் எல்லாம், 4,700 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வருவாய் இல்லாத வழித்தடம் என, அரசு போக்குவரத்து கழகங்கள் ஒதுக்கும் வழித்தடங்களில் கூட பேருந்துகளை இயக்கி, சேவையுடன் வருவாயை ஈட்டி காட்டுகின்றன பல தனியார் பேருந்து நிறுவனங்கள்.தமிழகத்தில் பேருந்து சேவை இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தனியார் பேருந்து சேவை ... |
| கிரானைட் கற்களுக்காக 7.5 ஏக்கர் கண்மாய் அழிப்பு: சகாயம் விசாரணையில் 'திடுக்' Posted: மதுரை : மதுரை மாவட்டம் கீழையூரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதற்காக பாசன வசதிக்கு பயன்பட்ட 7.5 ஏக்கர் கண்மாய் அழிக்கப்பட்டது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஐகோர்ட் உத்தரவுபடி மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரித்து வருகிறார். நான்காம் கட்ட விசாரணையின் மூன்றாவது நாளாக கீழையூர், ரங்கசாமிபுரம், கீழவளவு பகுதி குவாரிகளில் நேற்று ஆய்வு செய்தார். குளத்தை காணோம் :கீழையூர் மேலப்பட்டி குவாரியில் ஆய்வு செய்தபோது பாசனத்திற்கு பயன்பட்ட குளத்தை கல், மண் போட்டு மூடி விட்டதாக அப்பகுதி மக்கள் ... |
| விளைநிலங்களை சுற்றி தேன்கூடு, மிளகாய் பயிர் வேலி:யானைகளிடம் இருந்து தப்பிக்க மத்திய அரசு யோசனை Posted: புதுடில்லி:'மலைகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில், காட்டு யானைகளின் தாக்குதலைத் தடுக்க, விளை நிலங்களை சுற்றி, மிளகாய் பயிர்களை நட வேண்டும்; தேன் கூடுகளை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடும் பாதிப்பு:தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட, தென் மாநிலங்கள் மற்றும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற வட மாநிலங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலைகள் மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில், ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகும் நேரங்களில், காட்டு ... |
| மத மாற்றத்தை தடை செய்ய புது சட்டமா?மத்திய அமைச்சர் குஷ்வஹா போர்க்கொடி Posted: புதுடில்லி:''மத மாற்றத்தை தடைசெய்ய, புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களே போதும்,'' என, மத்திய இணையமைச்சர், உபேந்திர குஷ்வஹா தெரிவித்துள்ளார்.பீகாரைச் சேர்ந்த இவர்,ராஷ்டிரிய லோக் சமதா கட்சியில் இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்து, எம்.பி.,யாக தேர்வானார்.கெட்ட பெயர்:சங் பரிவார் அமைப்புகள், மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என சில முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 12,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |