Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாரூக் உடன் கஜோலை நடிக்க வைக்க முயற்சிக்கும் ரோகித்!

Posted:

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டியும், ஷாரூக்கானும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கின்றனர். இப்படத்தில் ஷாரூக்கான் உடன் வருண் தவானும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வௌியான நிலையில், இப்போது இப்படத்தில் கஜோலையும் நடிக்க வைக்க ரோகித் ஷெட்டி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ...

அக்ஷ்ய் குமாரின் பேபி படத்தை மோடி பார்ப்பாரா..?!

Posted:

நீரஜ் பாண்டே இயக்கத்தில், அக்ஷ்ய் குமார் நடித்துள்ள படம் பேபி. இப்படத்தில் அக்ஷ்ய் உடன் ராணா டகுபதி, டாப்சி, அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையமாக வைத்து பேபி படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இந்தவாரம் பேபி படம் வௌியாக இருக்கிறது. ...

அடிதடிக்கு மாறும் சித்தார்த்

Posted:

நடிகர் சித்தார்க்கு மென்மையான பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதாம். அதனால் தான் ஜிகர்தண்டா படத்தில் தன் தோற்றத்தை மாற்றலாம், அதிலும் வில்லத்தனம் இருக்கனும் என்று அந்த படத்தில் நடித்தாராம். ஆனால் ஜிகர்தண்டாவில் பெயர் எல்லாம் பாபி சிம்ஹாவிற்கு சென்று விட்டது. இதை முறியடிக்கும் விதமாக அதே வில்லத்தனம் பொருந்திய மதுரை ...

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்காதது ஏன்.?!

Posted:

சின்ன பசங்க கதை என்றால் மூளையை போட்டு கசக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுபவர் இயக்குனர் பாண்டிராஜ். தற்போது சிறுவர்களை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துள்ளார். படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்துள்ளது. இதற்கு முன்பு ஜோதிகாவை நடிக்க வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார். அது முடியாமல் போனது. காரணம் ஜோ மலையாள படம் ஒன்றை ...

மீண்டும் இணைகிறது தேசிங்கு ராஜா டீம்!

Posted:

ஒரு படத்தில் இயக்குனருக்கும் நடிகருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போய் விட்டால் மறுபடியும் அவர்கள் இணைவது கோலிவுட் பழக்கங்களில் ஒன்று. அந்த வகை காமெடி என்கிற பெயரில் விமலும் எழிலும் இணைந்த படம் தேசிங்குராஜா. இந்த படம் சுமராக பேசப்பட்டது. தற்போது மீண்டும் தேசிங்குராஜா டிம் இணைகிறார்கள். இதில் பஸ்ட் காஃபி அடிப்படையில் தயாரிப்பு ...

நடனத்தில் மல்லுகட்டும் சண்முகபாண்டியன்!

Posted:

கேப்டன் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்துக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து வருகிறார். மூன்று நாளில் முடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சியை 5 நாள் ஆகியும் முடிக்க முடியாமல் மாஸ்டர் திணறுகிறாராம். அந்தளவுக்கு நடனத்தில் சகாப்தம் செய்கிறார் ...

கௌதம் கார்த்தியின் உடனிருப்பவர்கள் தரும் பில்டப்!

Posted:

கார்த்தி மகன் கௌதம் கைவசம் பெரியளவில் படங்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் சில இயக்குனர்கள் கதை சொல்ல சென்றால் அவருடன் இருப்பவர்கள், கௌதமிற்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு படங்கள் புக்காகி உள்ளது என்று பீலா விடுகிறாராம். பாவம் வளர்ந்து வரும் பையன் வாழ்க்கையை இப்படி ஏடாகூடா பார்ட்டிகள் ஏன் தான் ...

தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்...! ஆச்சரியம்... ஆனால், உண்மை...!!

Posted:

பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஒரு மாற்றத்திற்கு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்ட சில முக்கியமான படங்களின் டிரைலர்கள் யு டியுபில் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்போம். பொங்கலை முன்னிட்டு கமல்ஹாசனின் உத்தம வில்லன், ...

'லிங்கா' பிரச்சனை...எங்கே போகிறது...?

Posted:

'லிங்கா' படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் உருவான பிரச்னை அடுத்து வேறு திசையை நோக்கி பயணிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் 'லிங்கா' படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பிரச்னை திட்டமிட்ட அரசியல் செய்தி என்று ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி மீண்டும் சர்ச்சையைக் ...

கத்ரீனாவுடன் நடிப்பேன் - ராணா நம்பிக்கை

Posted:

தென்னிந்திய நடிகரான ராணா டகுபதி, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலம். தென்னிந்தியாவில் நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் நடிகை பிபாஷா போன்றோர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். தற்போது அக்ஷ்ய் குமாருடன் பேபி என்ற படத்தில் நடித்துள்ளார். அக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள பேபி படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். இப்படம், ஜன. 23ம் தேதி வௌியாக இருக்கிறது. ...

காதலியை கரம் பிடிக்கிறார் நடிகர் மனோஜ்

Posted:

90களில் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்து கொண்டிருந்தவர் நடிகர் மோகன் பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரான இவரின் மகன் மனோஜ்க்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இவர் தமிழில் என்னை தெரியுமா என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக அடிப்பட்டு வந்த மனோஜின் திருமணம் தற்போது உறுதி ...

பிப்ரவரி முதல் வாரத்தில் ஆந்திராவில் கலக்கப்போகும் பிசாசி

Posted:

பேய் படங்கள் என்றாலே அது எந்த மொழியாக இருந்தாலும் கவலைப்படமாட்டான் ரசிகன், மொழி புரியாவிட்டாலும் தன்னை பீதிக்குள்ளாக்கும் படங்களை ரசித்து ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பேய் படங்கள் என்றாலே அது 4 பேரை கொலை செஞ்சிட்டு ஐந்தாவது ஒரு மெயின் வில்லனை கொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்த ...

ஜான்-வருண்-ஜாக்குலின் டிஸ்யூம்!

Posted:

தலைப்பை பார்த்துவிட்டு மூன்று பேரும் சண்டை போட போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க இருக்கும் படத்திற்கு தான் இப்படி பெயர் வைத்துள்ளனர். டெஸி பாய்ஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இயக்குநர் ரோகித் தவான், அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு டிஸ்யூம் என்று பெயர் ...

ஆல் இஸ் வெல்லில் அசின் நடிப்பது உறுதி

Posted:

தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டுக்கும் சென்றார். அந்தப்படம் ஹிட் அடையவே பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்பு குறைய பின்தங்கினார். இந்நிலையில் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் அசின் நடிக்க இருந்தார். இப்படம் ஆரம்பமாக இருந்த நிலையில், அசினின் உடல் எடை ...

அவன் நானில்லை என்கிறார் பஹத் பாசில்..!

Posted:

டைட்டிலை படித்ததுமே நம்ம ஊர் ஜீவன் மாதிரி ஏதாவது தப்பை பண்ணிவிட்டு (படத்தில் தான்) அவரைப்போலவே 'நான் அவனில்லை' என சமாளிக்கிறாரோ என நினைத்து விடாதீர்கள்.. பஹத் பாசில் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் பெயர் 'ஆயாள் ஞானல்ல', அதாவது 'அவன் நானில்லை'. இந்தப்படத்தில் தொழிலதிபராக நடிக்கிறார் பஹத் பாசில்.

அதுமட்டுமல்ல, ...

சாய்பாபாவாக மாறுகிறார் திலீப்..!

Posted:

மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதலிடத்தில் நிற்பவர் திலீப். சாந்துப்பொட்டு, குஞ்சுக்கூனன், சவுன்ட் தோமா என விதவிதமான கெட்டப்புகளில் நடித்தவர், இப்போது வெள்ளித்திரையில் புதியதொரு அவதாரம் எடுப்பதற்கு தயாராகிவிட்டார். தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடிராமகிருஷ்ணா, சாய்பாபாவை ...

லிங்குசாமி வழியில் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

லிங்குசாமியைப் பார்த்து ஏ.ஆர்.முருகதாசும் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ளே படத்தை தற்போது தயாரித்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் ஆதாமின் ஆப்பிள் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படம் இன்னும் டேக் ஆப் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு படத்தை ...

உதயநிதியுடன் செக்ஸி போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!

Posted:

இன்றைய தேதியில் கைவசம் அதிகப்படங்கள் வைத்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா? உதயநிதி ஸ்டாலின்தான். அவரே தயாரிப்பாளர் என்றாலும் அடுத்து நடிக்க வேண்டிய படங்களை முன்னதாகவே திட்டமிட்டு வரிசையாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது கதிர்வேலன் படத்தை அடுத்து நண்பேன்டா படத்தில் நடித்து முடித்துவிட்ட உதயநிதி ஸ்டாலின் அப்படத்தை ஏப்ரலில் ...

வஸந்தின் புதிய படம் தண்ணீர்

Posted:

மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு பிறகு இயக்குனர் வஸந்த் இயக்கும் படம் தண்ணீர். க்ராஸ் வோர்ல்ட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது வஸந்த சித்திரம் மூலமாக தயாரிக்கிறார். சாந்தினி சசஷா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கர்நாட இசைப் பாடகியும், திரைப்பட பாடகியுமான சுதா ரகுநாதன் முதன் முறையாக இசை அமைப்பாளராக ...

35வது பிறந்த நாள்: திருவண்ணாமலையில் சந்தானம் அன்னதாம்

Posted:

நடிகர் சந்தானத்திற்கு நேற்று (ஜன 21) 35வது பிறந்த நாள். இதை அவர் எளிமையாக கொண்டாடினார். திருவண்ணாமலை சென்ற அவர் அண்ணாமலையாரை தரிசித்தார். சன்னிதிகளில் நெய்விளக்கேற்றி வழிபட்டார். பின்னர் அவர் அதிகாலையில் கிரிவலம் சென்றார். அவர் கிரிவலம் செல்லும் செய்தி கிடைத்து பொதுமக்கள் கூட்டம் சேரவே வேறு வழியில்லாமல் ஆட்டோவை வரவழைத்து அதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™