Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷார்ட்ஸ் அணிந்தால் கெட்டவளா ? - கொதித்தெழுந்த கனிகா...!

Posted:

திருமணம் செய்துகொண்டபின் செலக்டிவான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் 'ஆட்டோகிராப்' கனிகா.. நான்கு வயது பையனுக்கு அம்மாவாகிவிட்ட அவருக்கு, கடந்த வருடத்தில் மலையாளத்தில் அவர் நடித்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் நிறைய பாராட்டுகளை வாங்கி தந்தது. ஆனால் சமீபத்தில் அவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் தேவையற்ற ...

அடுத்தடுத்த படங்களுக்காக காத்திருக்கும் பவன்!

Posted:

விலாசம் படத்தின் மூலம் தனக்கு ஒரு விலாசம் கிடைக்கும் என எதிர்பார்த்த பவனுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது. இருந்தாலும் தனது முயற்சியை விடாமல் இருக்கிறார். அடுத்தபடியாக அவர் நடித்து உள்ள காலகட்டம் படம் ரிலீஸாக இருக்கிறது. இதனை எதிர்நோக்கி உள்ளார் பவன். இதை தொடர்ந்து கள்வர்கள் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படங்களின் ...

12 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி!

Posted:

திமுக., தலைவர் கருணாநிதியின் பேரன்களில் அருள்நிதியும் ஒருவர். வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து மௌனகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் வம்சம், மௌனகுரு தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து சினிமாவில் தனக்கு ஒரு நிலையான இடத்தை பிடிக்க முயற்சித்து கொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் ...

மீண்டும் ஹீரோ ஆசையில் கனல் கண்ணன்

Posted:

பைட்மாஸ்டர் கனல்கண்ணன் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார். கடைசியாக நடித்த படம் சங்கரன் கோவில் இது சரியாக போகவில்லை. பிறகு சண்டை பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார். தற்போது நாயகன் ஆசை மீண்டும் வந்துவிட்டது. நடிப்புக்கான கதை கேட்டு முடித்து படவேலைகளில் மும்முரமாக ...

மகேஷ்பாபுவுக்கு வெற்றி தருமா 'டு' செண்டிமெண்ட்..?

Posted:

மகேஷ்பாபு நடித்த ஒக்கடு, அத்தடு, சைனிக்கூடு, தூக்குடு, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு என 'டுவில் முடியும் படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனவைதான். இது மகேஷ்பாபுவிற்கு எதேச்சையாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் கடந்த வருடம் இந்த சென்டிமென்ட்டில் வெளியான 'ஆகடு' மட்டும் அட்டர் பிளாப் ஆகி மகேஷ்பாபுவின் டைட்டில் சென்டிமென்ட்டை ...

ஜூனியர் என்.டி.ஆரின் டென்ஷனை குறைக்க வரும் 'டெம்பர்'..?

Posted:

தெலுங்கு திரையுலகில் கோலோச்சிய என்.டி.ராமாராவின் குடும்பத்திலிருந்து நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு பிறகு மிகப்பெரிய அளவிற்கு பெயர் பெற்றது பேரன் ஜூனியர் என்.டி.ஆர் மட்டுமே. இவரது அதிரடியான நடனமும், அதிவேகமான வசன உச்சரிப்பும் இவரை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக்கியது. விஜய் முதல் விஜயகாந்த் வரை இவரது படங்களை வாங்கி ரீமேக் ...

ரஜினி, அரசியலுக்கு வருவது உறுதி - லிங்கா தயாரிப்பாளர் பேட்டி!

Posted:

'லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் 'லிங்கா' படத்தை வேண்டுமென்றே, திட்டமிட்டு சதி செய்து தோல்வியடையச் செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் ...

மீண்டும் இணையும் விஷால் - சுந்தர் .சி

Posted:

விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் வெளிவந்த 'ஆம்பள' திரைப்படம் 'ஐ' படத்துடன் போட்டி போட்டாலும் நல்ல வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றியை பத்திரிகையாளர்களுடன் நேற்று 'ஆம்பள' குழுவினர் பகிர்ந்து கொண்டனர். படத்தின் பெயருக்கேற்றபடி நேற்றைய நிகழ்ச்சியில் வெறும் நடிகர்கள் மட்டுமே இருந்தனர். ...

காதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்!

Posted:

விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம். இதில் சண்முக பாண்டியனுடன் மிஸ் இண்டியா நேகா, சுப்ரா அய்யப்பா நடிக்கிறார்கள். தேவயானி, ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சுரேந்திரன் இயக்குகிறார். விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார்.

படத்தின் பணிகள் பெரும்பாலான பணிகள் ...

ரீமேக் படங்களில் ஜோதிகா நடிக்கவில்லை: தயாரிப்பு நிறுவனம் மறுப்பு

Posted:

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான 6 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ. இது மலையாளப் படத்தின் ரீமேக். தமிழில் இன்னும் பெயர் வைக்கவில்லை. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே இயக்குகிறார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி ...

மீண்டும் காமெடி படம் இயக்குகிறார் எழில்: உதவியாளர் படையுடன் மாமல்லபுரத்தில் முகாம்

Posted:

இயக்குனர் எழில், துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற காதல் செண்டிமெண்ட் படங்களை இயக்கியவர். அவர் பாணி படங்களுக்கு மவுசு குறைந்ததும் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி காமெடி படம் இயக்கலாமே என்று களத்தில் இறங்கி மனம் கொத்தி பறவை, தேசிங்கு ரஜா, வெள்ளக்காரதுரை படங்களை ...

ஏ.ஆர்.ரகுமானை காப்பி அடிக்கும் கார்த்திகேய மூர்த்தி

Posted:

மதுமிதா இயக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படத்தின் மூலம் இசை அமைப்பாளராகி இருக்கிறார் கார்த்திகேய மூர்த்தி. சில ஆல்பங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் இது. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா வேளச்சேரி லக்ஸ் திரையரங்கு வளாகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ...

நட்சத்திர ஓட்டல் அதிபர் மகள் திருமணம்: ரஜினி வாழ்த்து

Posted:

பிரசிடெண்ட் குரூப் ஓட்டல் நிறுவனங்களின் தலைவர் அபூபக்கர், ஹமீதா பானு தம்பதிகளின் மகள் அஸ்லினா யாஷ்மினுக்கும், மலேசிய தொழிலதிபர் மகன் முகமது இம்ரானுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சிகள் அத்தனையிலும் கலந்து கொண்டு வாழ்த்திச் சென்றார்.
இந்த திருமண ...

விமர்சகன் படம் எடுக்க கூடாதா? கேபிள் சங்கர் கேள்வி

Posted:

இணையதளங்களில் தமிழ் திரைப்படங்களை கடுமையாக விமர்சித்து வந்த கேபிள் சங்கர் தற்போது தொட்டால் தொடரும் என்ற படத்தை இயக்கி உள்ளார். வருகிற 23ந் தேதி வெளிவருகிறது. பல படங்களை கடுமையாக விமர்சனம் செய்த கேபிள் சங்கர் எப்படி படம் எடுத்திருக்கிறார் என்று பார்க்கலாம். இசை விமர்சகர்களால் கச்சேரி செய்ய முடியாததைப்போல சினிமா விமர்சகர்களால் ...

தணிக்கை குழு உறுப்பினர்களாக எஸ்.வி.சேகர், ஜீவிதா நியமனம்

Posted:

மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவர் லீசா சாம்சன் மற்றும் 9 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். தணிக்கை குழு விவகாரங்களில் அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு, மத்திய தணிக்கை குழுவின் புதிய தலைவராக பிரபல தயாரிப்பாளர் பசுலாஜ் நிஹாணியை ...

தொட்டால் தொடரும் படத்தின் இயக்குநருடன் நேர்காணல்

Posted:

பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில
கேள்விகளைக் கேட்டோம்.

வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா ...

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் தல - 'ஸ்டண்ட்' சில்வா

Posted:

மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாய் தல படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் 'ஸ்டண்ட்' சில்வா மாஸ்டர். அப்படி என்னதான் உங்க கெமிஸ்ட்ரி என்று கேட்க அதிரடியாய் ஃபோன் செய்தால், காதல் ததும்ப ஒரு மெலோடி பாடல் ரிங்டோனாய் நம்மை வருடுகிறது. நொடி பொழுதில் நம்பர் மாறி உள்ளதா என்று பார்க்க. 'Hello!' சொல்லுங்க , ...

என்னை அறிந்தால் : ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படம் பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவிருந்தது. பொங்கலுக்கு சில நாட்களே இருந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. என்னை அறிந்தால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவுறாததினால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக தயாரிப்பாளர் ...

உலகம் சுற்றும் வாலிபன் விஷால்!

Posted:

பொங்கலுக்கு வெளியிட தயார்நிலையில் இருந்த கொம்பன், காக்கிசட்டை, அனேகன் உட்பட பல படங்கள் ஐ படத்தின் ரிலீஸுக்கு பயந்து பின்வாங்கி பதுங்கிக்கொண்டன.
ஆம்பள என்ற தலைப்புக்கு ஏற்ப ஐ படத்தைக் கண்டு அஞ்சாமல் களத்தில் இறங்கியது விஷாலின் ஆம்பள படம். விஷாலின் தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசாக ஆம்பள படம் வர்த்தக ...

டார்லிங் ரிசல்ட் தந்த உற்சாகம்

Posted:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த பென்சில் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குப்பிறகு அவர் நடிக்க ஒப்பந்தமான டார்லிங் படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்துவிட்டது. டார்லிங் படம் வெற்றிப்படமில்லை..அதே சமயம் தோல்விப்படமும் இல்லை என்று சொல்லுமளவுக்கு படத்தை வாங்கியவர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™