Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லிங்கா படம் உருவாக காரணமான ரஜினி தான் பிரச்னையையும் தீர்த்து வைக்க வேண்டும் *வினியோகஸ்தர்கள் வலியுறுத்தல்

Posted:

லிங்கா படம் உருவாக காரணமான நடிகர் ரஜினி தான், பிரச்னையயும் தீர்த்து வைக்க வேண்டும் என, வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த்- அனுஷ்கா - சோனாக் ஷி சின்கா நடித்த, லிங்கா படம், டிச.,12ம் தேதி தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தை வாங்கிய தமிழக வினியோகஸ்தர்கள், எதிர்பார்த்தபடி வசூல் இல்லாததால், பல கோடி ரூபாய் நஷ்டத்தை ...

பாகிஸ்தானிலும் வசூல் சாதனை நிகழ்த்திய பிகே

Posted:

பாலிவுட்டில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ள அமீர் கானின், பிகே திரைப்படம், பாகிஸ்தானிலும், வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிகே. இந்த படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருந்தது. படத்தை தடை செய்ய வேண்டுமென்று யோகா ...

ருத்ரமாதேவி படத்தில் ஆண்வேடத்தில் அனுஷ்கா

Posted:

இளையராஜா இசையில், குணசேகரின் இயக்கத்தி்ல் உருவாகி வரும் ருத்ரமாதேவி படத்தின் சிலகாட்சிகளில் அனுஷ்கா, ஆண்வேடத்தில் நடித்துள்ளார்.
ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு குணசேகர், இப்படத்தை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ருத்ரமாதேவி கேரக்டரில், அனுஷ்கா நடிக்கிறார். ...

சினிமா எடுக்க கதையே கிடைத்து விடுகிறது !தலைப்பு கிடைப்பதில்லை! : தயாரிப்பாளர் வருத்தம்

Posted:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் டார்லிங். இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேம கதாசித்ரம் படத்தின் ரீமேக்.

ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், அல்லுஅரவிந்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.பொங்கலுக்கு ...

வரி ஏய்ப்பு செய்தாரா ஏ.ஆர்.ரகுமான்?

Posted:

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகைக்கு உரிய வரி செலுத்தாமல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக , வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில், முன்னணியில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசை அமைத்து வருகிறார். ...

சென்னையில் மோனிகா திருமணம் எளிமையாக நடைபெற்றது

Posted:

நடிகை மோனிகாவின் திருமணம், சென்னையில் இஸ்லாமிய முறைப்படி, இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தில், இரு வீட்டார்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அழகி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. ஈரோட்டைச் சேர்ந்தவர். அதன் பின் பல படங்களில் நடித்த மோனிகா, கடைசியாக நடித்த படம் நதிகள் நனைவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு ...

சொல்லத்தான் நினைக்கிறேன் -ரசிகன் குரல்

Posted:

தமிழ் சினிமாவின் தலைமகனுக்கு, நம்பிக்கைகள் பொய்யாகிவிடும் தருணங்களில் வாழ்க்கை ஒரு நொடி நின்று விடுகிறது - இப்படியான ஒரு தருணம்தான், உங்கள் மரணம்! வனவாசத்தால் சரிந்தான் தசரதன்; கைலாசத்தால் சரிந்தாரோ எங்கள் கே.பி.,?
வேலை முடிந்த வேளையில் நாடகம் நடத்திய தங்களை, 'தெய்வத்தாய்' மூலமாக சினிமாவிற்கு தந்தது நாடக உலகம். பிரான்ஸின் ...

கனவுலக கலைஞன் - உதவி இயக்குனர் விகடகவி

Posted:

'போராட்டம் இல்லையெனில், முன்னேற்றம் என்பதே இல்லை' என்பதற்கு, இவரின் வாழ்க்கை சிறந்த உதாரணம். வெறும் நான்கு, ஐந்து ஆண்டுகால போராட்டம் அல்ல; 'திரைத்துறையில் என் முத்திரையைப் பதித்தே தீருவேன்' என்று, 20 ஆண்டுகால போராட்டம்! ''நிச்சயமாக, இந்த போராட்டத்தின் முடிவு வெற்றிதான்!''என்று, தன்னம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் ...

லிங்காவை கொலை செய்து விட்டார்கள்: தயாரிப்பாளர் கண்ணீர்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் அவரது பிறந்த நாளில் வெளிவந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 40 கோடி நஷ்டம் அதனை ரஜினி திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் சென்னையில் நேற்று (ஜன 10) உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்டேஷ். சிசு கொலை செய்வதுபோல ...

திரையுலக நண்பர்களுக்கு நன்றி விருந்து கொடுக்கிறார் த்ரிஷா

Posted:

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் கனவு கன்னியாக இருந்த த்ரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இருவரும் முன்பே மோதிரம் மாற்றி திருமணத்தை உறுதி செய்து கொண்டாலும், முறைப்படியான நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23ந் தேதி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதில் இருவீட்டாரும், நெருங்கிய ...

கோபாலா கோபாலா படத்துக்கு எதிராக ஆந்திராவில் தொடர் வன்முறை

Posted:

இந்தியில் வெளியாகி ஹிட்டான ஓ மை காட் படத்தை தெலுங்கில் கோபாலா கோபாலா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் வெங்கடேஷ், பவன் கல்யாண், ஸ்ரேயா நடித்துள்ளனர். கிஷோர் குமார் பரதர்ஷனி இயக்கி உள்ளார். சுரேஷ் பாபு தயாரித்துள்ளார். கடந்த 10ந் தேதி ரிலீசானது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்ப்பும் ...

மனைவியுடன் டூயட் பாடி ஆடிய ஜி.வி.பிரகாஷ்

Posted:

நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த வீரா, ரெஜினா நடிக்கும் படம் ராஜதந்திரம். ஏ.ஜி.அமித் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படம் இரண்டு கதைகளை கொண்டது. ஒன்று நிஜ காதல் கதை, இன்னொன்று படத்தில் வரும் கற்பனை காதல் கதை. அதாவது ரீல் லவ் ஸ்டோரி, ரியல் லவ் ஸ்டோரி.
இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தி ஒரு புரோமோ பாடல் ஒன்றை தயார் ...

லிங்கா பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது: வேந்தன் மூவீஸ் டி.சிவா ஒப்புதல்

Posted:

லிங்கா பிரச்சினை குறித்து வேந்தன் மூவீஸ் பொறுப்பாளர் டி.சிவா கூறியதாவது: லிங்கா படத்தை வாங்கியதில் வேந்தன் மூவீஸ் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. எங்களிடம் படம் வாங்கிய விநியோகஸ்தர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். புதிதாக இந்த துறைக்கு வந்த நெல்லை விநியோகஸ்தர், மன்னன் பிலிம்ஸ் மன்னன் போன்றவர்கள் பெரும் நஷ்டத்தை ...

தமிழ் மற்றும் தெலுங்கில் பிகே..

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள பிகே படம், விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகே படத்தில் ஏலியன் கேரக்டரில் நடித்த அமீர்கான் வேடத்தில், தமிழில், விஜய்யும், தெலுங்கில் பவன் கல்யாணும் நடிக்க உள்ளதாக ...

உத்டா பஞ்சாப் படத்திலிருந்து விலகிய ஆயுஷ்மான்

Posted:

கரீனா கபூர் நடிக்கும் உத்டா பஞ்சாப் படத்திலிருந்து, ஆயுஷ்மான் குரானா விலகியுள்ளார். கரீனா கபூருடன் இணைந்து இப்படத்தில் நடிக்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கூறிவந்த ஆயுஷ்மான் குரானா, கால்ஷீட் பிரச்னை காரணமாக, அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக ஆயுஷ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தோல்வியை மறக்க முடியாது : பிபாஷா

Posted:

ஹம்ஷாகல்ஸ் படத்தின் தோல்வியை எளிதில் மறக்க முடியாது என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கூறியுள்ளார். இந்த படத்தின் தோல்வியால், டைரக்டர் சஜித் கானுக்கும், சயீப் அலி கானிற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு, சிலநாட்கள் அவர்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், பிபாஷா பங்கேற்காததே, ...

காஸ்டியூம் டிசைனர் ஆன ஜாக்குலின்

Posted:

ராய் படத்தில் நடித்துள்ள ஜாக்குலின் பெர்னான்டஸ், அப்படத்தில் அவர் அணியும் ஆடைக்கு டிசைனராகவும் உள்ளார். ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், ஆயிஷா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கு, ஒயிட் சார்ட்சும், ப்ளூ டாப்சும் இருந்தால், சிறப்பாக இருக்கும் என்று ஜாக்குலின் நினைத்தார். தனது எணணத்தை, டைரக்டர் விக்கி ...

ஷமிதாப் படம் பார்க்க ஆவலாக உள்ளது : ஐஸ்வர்யா ராய் பச்சன்

Posted:

பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன் - தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படத்தின் டிரைலர் பார்த்தேன். டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. டிரைலரை பார்த்தாலே, படம் பார்க்கும் ஆசை வந்து விடுவதாக, பாலிவுட் நடிகையும், அமிதாப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார். டிரைலரிலேயே, படக்குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிவதாக, ...

ஜோதிகா படம் முடிந்ததும் மீண்டும் 'மும்பை போலீஸ்' கூட்டணி..!

Posted:

கடந்த 2௦13ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான 'மும்பை போலீஸ்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் ராஸ்கல் மோசஸ் என்கிற ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக அசத்திய பிருத்விராஜை கேரள ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டையும் தான். ரோஸன் ஆண்ட்ரூஸ் இயக்கிய ...

சச்சினுடன் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பாரா காவ்யா மாதவன்..!

Posted:

கேரளாவில் 35வது தேசிய விளையாட்டுக்களை பற்றிய செய்திகளை பரப்பும் விதமாக 'ரன் கேரளா ரன்' என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். வரும் ஜனவரி-2௦ஆம் தேதி இந்த 'ரன் கேரளா ரன்' சார்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கான தீம் பாடல் அடங்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™