Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"உன் லவ்வரை ஏன்டி கழட்டிவிட்டுட்டே?''

Posted: 19 Jan 2015 09:37 AM PST

- "உன் லவ்வரை ஏன்டி கழட்டிவிட்டுட்டே?'' - "உன்னையே லவ் பண்ணுவேன்னு சொல்றாண்டி'' - பீ.ஆர்.பூஜாரமேஷ், சென்னை-28. - ------------------------------------- - "ஏன்டா, நீ நஸ்ரியாவையா காதலிக்கிறே?'' - "அட என்னடா நீ! நான் காதலிக்கிறவ நர்ஸ்டா'' - பால.கோவிந்தராஜ், மதுரை. - --------------------------------------- - "நூறு ரூபாய்க்கு ஆறு ஆப்பிள்தானா? கொஞ்சம் குறைச்சுக் கொடுங்க'' ""சரி... அஞ்சு ஆப்பிளா எடுத்துக்கிடுங்க'' - எஸ்.ராமச்சந்திரன், சென்னை-49. - ---------------------------------------- - "மன்னர் ...

இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!

Posted: 19 Jan 2015 09:35 AM PST

கடந்த ஒருவருடமாக எனது உறவினர் மகனுக்காக..இரவு... பகல் என்று தீவிரமாக தமிழ் மேட்ரிமோனியல் பதிந்து வைத்து கொங்கு வேளாளர் சமூகத்தில் பதிந்துள்ள பெண்களின் விபரங்களை நான் இணையம் மற்றும் கொங்கு செய்தி மடலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..இதுவரை எனது சகலன் மகனின் விபரத்தை 2337 முறை பெண்களின் பெற்றோரால் பார்க்கப்பட்டுள்ளது. நான் இதுவரை 753 பெண்களின் விபரங்களை மேட்ரி மோனியலில் பார்த்துள்ளேன். அதில் 57% சதமான பெண்கள் பொறியியல்(பி.ஈ & எம்.ஈ) பட்டதாரிகள், மென்பொருள் வல்லுனர்களாக வேலை பார்க்கின்றனர். ...

க்ரிஷ்ணம்மாவை பிறந்த நாளில் வாழ்த்தலாம் வாங்க

Posted: 19 Jan 2015 09:22 AM PST

க்ரிஷ்ணம்மாவை பிறந்த நாளில் வாழ்த்தலாம் வாங்க -20 ஜனவரி 5 இலக்க பதிவுகள் 4 இலக்க மதிப்பீடுகள் 3 இலக்க வருடங்கள் வாழ்ந்து 2 இலக்க செல்வங்கள் பெற்று 1 இலக்க VIP ஆக ,இன்பமுடன் சிறப்புடன் வாழ அன்பு வாழ்த்துக்கள் ரமணியன்

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 19 Jan 2015 08:52 AM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 19 Jan 2015 05:29 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(335)

Posted: 19 Jan 2015 05:16 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Posted: 19 Jan 2015 04:51 AM PST

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. ஆர்மர் பிளேட்டிங் எனப்படும் அதன் வெளிப்புற கவசம் 8 இஞ்ச் தடிமனானது. காரினுள் வெடிகுண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் தயராக இருக்கும். இந்த ...

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

Posted: 19 Jan 2015 04:12 AM PST

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .(#1115680/17-1-2015) வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் , எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் , உலகம் எப்படி இருக்கும் ? மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .? சிறிது யோசிப்போமே ! 1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது . வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ...

’ அ ழை ப் பு ‘

Posted: 19 Jan 2015 03:14 AM PST

இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் ...

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Posted: 19 Jan 2015 02:43 AM PST

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரம். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்தது சரிதான் என்று மத்திய மந்திரி மேனகா காந்தி கூறினார். மேனகா காந்தியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேனகா காந்தி கூறிய கருத்து பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– தமிழ்நாட்டில் பொங்கல் விழாவில் தமிழர்கள் நடத்தும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி என்பது காளைகளை வதைக்கும் விழாவாக இல்லாமல் முரட்டுக்காளையை ...

நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!

Posted: 19 Jan 2015 02:20 AM PST

புதுடில்லி:முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு பேசும் போது,உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை ...

சௌதிஅரேபியாவில் பனி பொழிவு !

Posted: 19 Jan 2015 01:39 AM PST



சௌதிஅரேபியாவில் பனி பொழிவு !

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகப் படங்களை இயக்கிய பெண் இயக்குநர்!

Posted: 19 Jan 2015 01:28 AM PST

- இந்தியாவிலேயே அதிகப் படங்கள் இயக்கிய பெண் இயக்குநர் - விஜயநிர்மலா. இயக்கிய படங்கள் 35. - உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடுகள் -சவுதி அரேபியா, பூட்டான். - அதிகப் படங்களைத் தயாரித்து உலக சாதனை படைத்த தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு. தயாரித்த படங்கள் - 130. - மிகக் குறுகிய காலக் கட்டத்திற்குள் 100 படங்களில் நடித்த நடிகர் - சிவாஜி கணேசன். காலம் : 1952 முதல் 1964. - திரைப்படங்களுக்கு தணிக்கையில்லாத நாடு - பிரான்ஸ். - மிகக் குறைந்த வயதில் ஆஸ்கர் விருது பெற்றவர் - ஷெர்லி ...

வீணாகும் உணவுப்பொருட்கள் !

Posted: 19 Jan 2015 01:17 AM PST

உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஒருபுறம் பசி, பட்டினி இறப்புகள் அதிகரித்து கொண்டிருக்க, மற்றொரு புறம் உணவுப்பொருட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். வீணாகும் உணவுப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் உணவுப்பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கும். 30 % உணவு தானியங்கள் வீண்: தொழில்வளம் பெருகிய நாடுகளில் நுகர்வு ...

அ ஞ் ச லை - சிறுகதை

Posted: 19 Jan 2015 01:17 AM PST

அந்தச்சேரிப்பகுதி குடிசை ஒன்றின் வாசலில், மிகவும் ஊர்ந்து சென்று நின்றதில் புத்தம் புதிய, அந்த தக்காளி நிற மாருதி கார், மேலும் கூடுதல் அழகாக இருப்பது போலத்தோன்றமளித்தது. காலைவேளைக்கதிரவனின் ஒளி, டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பட்டுப்பிரதிபலித்தது. சேரியில் சைக்கிளின் பழைய டயர்களை ஒரு சிறிய குச்சியால் தட்டி வண்டியாக ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் காரைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருசிலர் அந்தக்காரை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். அவர்களின் புழுதி படிந்த ...

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

Posted: 19 Jan 2015 12:58 AM PST

- "பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க பணம் கொடுக்க வந்தால் அதை மறுக்காமல், ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தில்லியின் உத்தம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நரேஷ் பலியான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ...

முதிர் கன்னிகள்-முதிர் காளையர்கள்.

Posted: 19 Jan 2015 12:55 AM PST

அன்புடையீர் வணக்கம்.       முதிர் கன்னிகளையும், காளையர்களையும் உருவாக்கும் பஞ்சாங்க ஜோதிடர்கள்...                    [b] இரண்டு நாள் முன்பு எனது உறவினருடன் அவருடைய மகனுக்காக அவரின் குடும்ப ஜோதிடரிடம் திருமணப்பொருத்தம் பார்க்க சென்றிருந்தேன்..பேச்சு வாக்கில்.. உங்களைப்போன்ற ஜோதிடர்களால்தான்.. தமிழ் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் ஆவதே காலதாமதம் ஆகிறது. அதிலும் குறிப்பாக ராகு-கேது, செவ்வாய் தோசம்  என்ற ஒன்றைக்கூறுகிறீர்கள்..  செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ...

பெற்ற கடன் அடைக்கும் பிள்ளைகள்..!

Posted: 19 Jan 2015 12:51 AM PST

என்…னா ..ங்க….! எ…ன்…ன ..ங்க .. எனக்கு வலி கண்டு போச்சு..பளீர் பளீர்ன்னு…காலெல்லாம் இழுக்குது. முதுகுல என்னவோ சுளீர்னு நெளிஞ்சு மேலுக்கு ஏறுது. இடுப்பு வெட்டி வெட்டி வலிக்குதுங்க…எ..ன …க் க் க் ..கு…எனக்கு ரொம்ப பயம்…மா இருக்குதுங்க. சீக்கிரமா வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்க….யம்மாவ் ….வலி தாங்கலியே…கயிற்றுக் கட்டிலில் ஒருக்களித்து படுத்த வள்ளி, கண்ணீர் வழியும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு பிரசவ வேதனையில் துடிகிறாள். இன்னாடி இது….நேரங்கெட்ட நேரத்துல உன்னோட ரோதனை..இந்த நேரத்துல உன்னிய தூக்கிகிட்டு ...

மறக்க மனம் கூடுதில்லையே !

Posted: 19 Jan 2015 12:09 AM PST

மெரினா கடற்கரை. நானும் என் மனைவியும் கடற்கரையில் காத்திருக்கிறோம். கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன. இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ. தூரத்தில் மிகப்பெரிய கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு, ஒரு பெண்ணும் அவளின் தந்தையும் இறங்கி ...

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Posted: 18 Jan 2015 11:13 PM PST

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) பத்திரம் பதியலாம்! ஜனவரி 13,2015 நல்லதையே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்தும், ராகு மாதம் முழுமையும் நற்பலனை கொடுப்பர். செவ்வாய் பிப்.10 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜன. 23ல் 11-ம் இடத்திற்கு வருவது நல்லதே. இப்போது புதன் 10ம் இடத்தில் இருப்பதால், பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொருள் சேரும். ஜன. 28ல், 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். ...

ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் வரலாற்று சாதனை

Posted: 18 Jan 2015 11:04 PM PST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் குறைந்த பந்தில் சதமும், அரை சதமும் அடித்து சாதனை படைத்தார். 31 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 பவுண்டரி, 16 சிக்சர் அடங்கும். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் (2014 ஜனவரி) வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்தில் (4 பவுண்டரி, 12 சிக்சர்) சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதே போல் 16 பந்தில் அரை சதம் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தும் டி வில்லியர்ஸ் சாதனை படைத்தார். இதற்கு முன்பு ஜெயசூர்யா (இலங்கை) 1996–ம் அண்டு ...

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 18 Jan 2015 09:16 PM PST

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்ட உறுமீன்!

Posted: 18 Jan 2015 05:07 PM PST

- ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன். இதில் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் புகழ் கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்க முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். சக்திவேல் பெருமாள்சாமி இதனை இயக்கியுள்ளார். அச்சு இசையமைக்க இந்தப் படத்துக்கு ரவிந்திரநாத்குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய ...

மூன்று மொழிகளில் வெளியாகும் ஓகே கண்மணி?

Posted: 18 Jan 2015 05:00 PM PST

- 'கடல்' படத்துக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் 'ஓகே கண்மணி'. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கனிகா, ரம்யா உள்பட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வழக்கம்போல் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் எத்தனையோ காதல் கதையை ...

மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட்டாக விஜய்?

Posted: 18 Jan 2015 04:27 PM PST

- விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் 'புலி' படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிரார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். இவர்களுடன் முன்னாள கனவுக் கன்னி ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப், தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் முதன் முறையாக சரித்திர பின்னனிக் கொண்ட கதையில் நடிக்கிறார். அதுவும் மாறுபட்ட இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்தப் படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ...

பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளம்: ஒருவர் கைது

Posted: 18 Jan 2015 04:00 PM PST

பிரதமர் அலுவலகப் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கியதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறியதாவது: போலி இணையதளத்தை கொல்கத்தாவில் இருந்து நிர்வகித்து வந்த சுதீப்டா பானர்ஜி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளத்தின் மூலம், பல்வேறு திட்டங்களுக்கு அரசிடம் கடனுதவி பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் பெற்று, அவர்களை சுதீப்டா பானர்ஜி ஏமாற்றியுள்ளார் என்பதும், இந்த பணிக்காக அவர், மேற்கு வங்க மாநிலம், ஹெüராவில் 17 பணியாளர்களைக் ...

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பாச்சல் ஏரி

Posted: 18 Jan 2015 03:54 PM PST

- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால், பாச்சல் ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போலக் காட்சியளிக்கிறது. பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பாச்சல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், பறவைகள் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் நீண்ட மூக்குடன் கூடிய வெள்ளை நிற நாரை, கொக்கு போன்ற பறவைகள் கடந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™