மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரசார போஸ்டர்களில் கிரண் பேடி படம் நீக்கம்: கெஜ்ரிவாலை எதிர்த்து அமித்ஷா நேரடி பிரசாரத்தில் குதித்தார்
- டெல்லி தேர்தலில் தோற்றால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற செல்வேன்: கிரண் பேடி
- மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு-சுத்தமான குடிநீர்: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வாக்குறுதி
- இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை ஒடிசாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது: சோதனை முயற்சி வெற்றி
- திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக 2 லட்டுகள் வழங்க நடவடிக்கை: தேவஸ்தானம் ஆலோசனை
- ப.சிதம்பரம் பதவி விலக வற்புறுத்தல்: இளங்கோவன் கருத்துக்கு சோனியா கண்டனம்
- டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம் ரெய்டு: 5000 மது பாட்டில்கள் பறிமுதல்
- மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
- நீதிபதியை தரக்குறைவாக பேசிய விவகாரம்: மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவருக்கு 4 வார சிறை
- சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல்
- ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை: காங். தலைவர்கள் திட்டவட்டம்
- கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?
- பா.ஜனதாவில் சேரப்போவதாக ஜெயபிரதா தகவல்
- பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி
- ஆழ்ந்த வலியை உணர்கிறேன்: பதவி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் பேட்டி
- காந்தி நினைவு நாளையொட்டி சர்வமத பிரார்த்தனை: துணை ஜனாதிபதி- பிரதமர் பங்கேற்றனர்
- பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை
- ஓட்டுக்கு பணம் வாங்க சொன்ன கெஜ்ரிவால் மீதான வழக்கு வரும் 2-ம்தேதி விசாரணை
- சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்
- போலீஸ் வளாகத்தில் 100 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு: இருநபர் விசாரணைக்கு உத்தரவு
| Posted: 30 Jan 2015 11:31 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல் – மந்திரி வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்டார். முன்பு இவர் அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார். கெஜ்ரிவால் கட்சி தொடங்கிய போது அதற்கு அன்னா ஹசாரேயும், கிரண்பேடியும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த தேர்தலில் கிரண்பேடி |
| டெல்லி தேர்தலில் தோற்றால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற செல்வேன்: கிரண் பேடி Posted: 30 Jan 2015 10:09 PM PST டெல்லி தேர்தலில் பிரசாரம் செய்துவரும் வரும் கிரண் பேடி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டியில் தேர்தலில் தோற்றால் ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பேச சென்று விடுவேன் என்று தெரிவித்தார். மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அன்னா ஹசாரேவுடனான உறவு பற்றிய கேள்விக்கு "அவர் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை அற்றவர். இந்த விஷயத்தில் நான் அவரை ஏற்க மறுக்கிறேன். சுதந்திரமானவர்களை மட்டுமே தேர்தலில் தேர்ந்தெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. |
| மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு-சுத்தமான குடிநீர்: டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வாக்குறுதி Posted: 30 Jan 2015 10:08 PM PST டெல்லி சட்டசபைக்கு வருகிற 7–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி உருவாகி உள்ளது. கடந்த தேர்தலில் அதிக இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றினாலும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை. இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சியே முதலிடம் வகிக்கும், 5 சதவீத |
| இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை ஒடிசாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது: சோதனை முயற்சி வெற்றி Posted: 30 Jan 2015 08:58 PM PST அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது முறையாக சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது முதன் முறையாக கேனிஸ்டர் மூலம் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சாலையிலும் இருந்தும் கூட இந்த ரக ஏவுகணை மூலம் எதிரிகளின் இலக்கை தாக்கமுடியும். மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவினாஷ் சந்தரின் |
| திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக 2 லட்டுகள் வழங்க நடவடிக்கை: தேவஸ்தானம் ஆலோசனை Posted: 30 Jan 2015 08:55 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மானிய விலையில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சேவா டிக்கெட்டுகள், ரூ.300 டிக்கட் விரைவு தரிசனம், ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தலா 2 லட்டு வீதம் இலவசமாக வழங்கி வருகிறது. இதுதவிர கோவிலுக்கு வெளியே கூடுதல் லட்டு கவுண்டரை ஏற்படுத்தி |
| ப.சிதம்பரம் பதவி விலக வற்புறுத்தல்: இளங்கோவன் கருத்துக்கு சோனியா கண்டனம் Posted: 30 Jan 2015 08:51 PM PST முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் நேற்று காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டினார். அவருக்கு உடனடியாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் விலகியதால் காங்கிரசுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்றார். |
| டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம் ரெய்டு: 5000 மது பாட்டில்கள் பறிமுதல் Posted: 30 Jan 2015 07:54 PM PST டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் கமிஷனும் தனது கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான நரேஷ் பல்யானின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆம் |
| மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு Posted: 30 Jan 2015 07:08 PM PST ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் வாக்குறுதி அளித்தப்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவில்லை. நிலம் கையகப்படுத்துதல் திருத்த சட்டம் -2013 தொடர்பான அவசர சட்டம் விவசாயிகள் ந |
| நீதிபதியை தரக்குறைவாக பேசிய விவகாரம்: மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவருக்கு 4 வார சிறை Posted: 30 Jan 2015 06:28 PM PST கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் எம்.வி.ஜெயராஜன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், சாலையோர பொதுக்கூட்டங்களுக்கு கோர்ட்டு தடை விதித்தது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். |
| சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல் Posted: 30 Jan 2015 04:24 PM PST சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி, டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிணமாக கிடந்தார். |
| ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை: காங். தலைவர்கள் திட்டவட்டம் Posted: 30 Jan 2015 03:46 PM PST ராகுல் காந்தி மீதான ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தான் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்தபோது, தனது துறையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலையீடு |
| கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா? Posted: 30 Jan 2015 03:18 PM PST கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. |
| பா.ஜனதாவில் சேரப்போவதாக ஜெயபிரதா தகவல் Posted: 30 Jan 2015 02:10 PM PST பா.ஜனதாவில் இணைவது குறித்து பேசி வருவதாக முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயபிரதா தெரிவித்து உள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 70 படங்களில் நடித்து உள்ளார். கடந்த 1990-களில் அரசியலில் நுழைந்த அவர், முதலில் தெலுங்குதேசத்திலும் பின்னர் சமாஜ்வாடி கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரதா, கடந்த 2010-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். |
| பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி Posted: 30 Jan 2015 09:42 AM PST குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை பிரதமர் மோடி செல்லமாக அழைத்து காதை திருகிய படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி |
| ஆழ்ந்த வலியை உணர்கிறேன்: பதவி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் பேட்டி Posted: 30 Jan 2015 08:10 AM PST பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், கடந்த 39 ஆண்டுகளாக ஆற்றிய தனது சேவைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக ஊடகங்களில் விதைக்கப்படும் செய்திகள் தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாகவும், ஆழ்ந்த வலியை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டு, |
| காந்தி நினைவு நாளையொட்டி சர்வமத பிரார்த்தனை: துணை ஜனாதிபதி- பிரதமர் பங்கேற்றனர் Posted: 30 Jan 2015 06:50 AM PST தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று மாலை சர்வமத பிரார்த்தனையும், மலராஞ்சலியும், மவுன அஞ்சலியும் நடத்தப்பட்டது. துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்ட இந்த பிரார்த்தனை கூட்டத்தில் டெல்லியில் உள்ள மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளியை |
| பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை Posted: 30 Jan 2015 06:27 AM PST பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தனது 15 வயது மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தைக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு தனது தாய்வழி பாட்டி வீட்டில் தங்கச் சென்ற அந்த சிறுமிக்கு அங்குள்ள ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டதை அவரது தந்தை பிரகாஷ் யாதவ் என்பவர் அறிந்தார். அவளை தனது சொந்த கிராமத்துக்கு உடனடியாக அழைத்துவந்த அவர், பெற்ற மகள் என்றும் |
| ஓட்டுக்கு பணம் வாங்க சொன்ன கெஜ்ரிவால் மீதான வழக்கு வரும் 2-ம்தேதி விசாரணை Posted: 30 Jan 2015 05:33 AM PST டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு பொடுவதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதம் 2-ம்தேதி நடைபெறவுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த பேச்சு இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரச்சார கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து அருண் குமார் என்பவர் கெஜ்ரிவால் மீது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். |
| சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல் Posted: 30 Jan 2015 05:03 AM PST ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இறுதியாண்டு படித்துவரும் 17 வயது மாணவி தனது வீட்டின் எதிரில் வசிக்கும் சுரேஷ் என்ற 22 வயது வாலிபரை காதலித்து வந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த வாலிபரை தங்களது மகள் காதலிப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த அவளது பெற்றோர், பூஜை செய்யப்போவதாக கடந்த 17-ம்தேதி அவளை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றனர். |
| போலீஸ் வளாகத்தில் 100 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு: இருநபர் விசாரணைக்கு உத்தரவு Posted: 30 Jan 2015 04:48 AM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் நகரில் உள்ள போலீஸ் வளாகத்தில் சுமார் நூறு எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸ் ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வந்த அந்த கட்டிடத்தில் உள்ள சவக்கிடங்கில் சாக்கு மூட்டைகளில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இந்த எலும்புக்கூடுகள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |