மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதி போட்டியில் செரினா வெற்றி-இறுதிப்போட்டியில் ஷரபோவாவுடன் மோதுகிறார்
- லாலு பிரசாத்–நிதீஷ்குமார் இடையே திடீர் பிளவு: தேர்தலை தனித்தனியாக சந்திக்க முடிவு?
- நாட்டின் புதிய வெளியுறவு துறை செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றார்
- ரூ.50000 கோடி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டம்: ஜப்பானுக்கு விருப்பமுள்ளதா என இந்தியா கேள்வி
- கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது
- இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி மணமகன் சாவு
- திருப்பதி கோவிலில் இன்று முதல் வியாழக்கிழமை இரவு வி.ஐ.பி. தரிசனம் ரத்து
- கேரளாவில் மதுபார் ஊழலில் மேலும் 4 காங். மந்திரிகளுக்கு தொடர்பு
- பாலக்காடு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து பஸ் டிரைவர்–2 மகள்கள் பலி
- நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்
- அரசியல் அமைப்பு சட்டத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தையை நீக்க வேண்டும்: சிவசேனா கருத்தால் புதிய சர்ச்சை
- அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு
- கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: காங். மேலிட தலைவர் பதில்
- மாநில நிதி மந்திரி மீதான லஞ்சப்புகார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கேரள ஐகோர்ட்டு மறுப்பு
- கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி
- அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்
- டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை? கருத்துக்கணிப்பில் தகவல்
- பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை செல்கிறார்
- ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா - பிடிபி கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு
- திருப்பதியின் பாதுகாப்பை அதிகரிக்க சி.சி.டி.வி. கேமராக்கள்-புதிய போக்குவரத்து சிக்னல்கள்
| ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதி போட்டியில் செரினா வெற்றி-இறுதிப்போட்டியில் ஷரபோவாவுடன் மோதுகிறார் Posted: 28 Jan 2015 10:22 PM PST ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். மகளிர் ஒற்றையருக்கான தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ், தனது சக நாட்டவரான மேடிசன் கீசை |
| லாலு பிரசாத்–நிதீஷ்குமார் இடையே திடீர் பிளவு: தேர்தலை தனித்தனியாக சந்திக்க முடிவு? Posted: 28 Jan 2015 10:12 PM PST பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது பீகாரில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. சட்டசபை தேர்தலிலும் வென்று, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வை முறியடிக்க லாலு பிரசாத், நிதீஷ்குமார் ஒன்று சேர்ந்தனர். அரசியலில் எதிரிகளாக இருந்த அவர்களின் ராஷ்டீரிய ஜனதா தளமும், |
| நாட்டின் புதிய வெளியுறவு துறை செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றார் Posted: 28 Jan 2015 09:50 PM PST நாட்டின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றார். 60 வயதான இவர் 1977 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரி ஆவார். 2 வருடங்கள் அமெரிக்க தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ள இவர் சீனா, ஜப்பான் மற்றும் செக் குடியரசிற்கும் தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். |
| ரூ.50000 கோடி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டம்: ஜப்பானுக்கு விருப்பமுள்ளதா என இந்தியா கேள்வி Posted: 28 Jan 2015 08:47 PM PST இந்தியாவில் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தில் ஆர்வம் உள்ளதா என சின்சோ அபே தலைமையிலான ஜப்பானிய அரசிடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆயுத ஏற்றுமதி செய்வதில் ஜப்பானுக்கு இருந்த தடை சமீபத்தில் |
| கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது Posted: 28 Jan 2015 08:45 PM PST உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்த 8 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வருகிற பிப்ரவரி 8–ந்தேதி மீரட்டில் காதலர்கள் தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் 8 தம்பதிக்கும் மாநில அரசு சார்பில் த |
| இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி மணமகன் சாவு Posted: 28 Jan 2015 08:43 PM PST ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளி மண்டலம் கொண்டாமாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. இவருடைய மகன் மது (வயது 28), மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று |
| திருப்பதி கோவிலில் இன்று முதல் வியாழக்கிழமை இரவு வி.ஐ.பி. தரிசனம் ரத்து Posted: 28 Jan 2015 08:25 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வியாழக்கிழமை தோறும் இரவு பூ அங்கி சேவை முடிந்ததும் விஐபி பிரேக் தரிசனம் நடைபெறுவது உண்டு. வியாழக்கிழமை இரவு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மறுநாள் காலையிலும் வி.ஐ.பி. தரிசனத்துக்கு வருகிறார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வியாழக்கிழமை இரவு நடக்கும் வி.ஐ.பி. தரிசனத்தை |
| கேரளாவில் மதுபார் ஊழலில் மேலும் 4 காங். மந்திரிகளுக்கு தொடர்பு Posted: 28 Jan 2015 08:23 PM PST கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மதுபார்களை மூட நடவடிக்கை எடுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட மதுபார் உரிமையாளர்கள் பார்களை திறக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை திறக்க ஏற்பாடு செய்வதாக கூறி நிதி மந்திரி மானி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. |
| பாலக்காடு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து பஸ் டிரைவர்–2 மகள்கள் பலி Posted: 28 Jan 2015 08:20 PM PST கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பள்ளன் சாலையை சேர்ந்தவர் பாபு (வயது 44). அரசு பஸ் டிரைவரான இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், அஜித் என்ற மகனும், அபிதா (5), அக்ஷயா (2) என்ற மகள்களும் உள்ளனர். நேற்று காலை பிரமிளாவும், அஜித்தும் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் 2 மகள்களுடன் பாபு இருந்தார். அப்போது திடீரென்று அவரது வீட்டில் இருந்து குண்டு வெடித்ததுபோல பயங்கரம் சத்தம் கேட்டது. மேலும் அவரது வீடும் |
| நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள் Posted: 28 Jan 2015 08:02 PM PST குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 28 Jan 2015 07:20 PM PST குடியரசு தின விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 42-வது திருத்தசட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இருந்த முகவுரை இடம்பெற்றிருந்தது. அதில், 'மதசார்பற்ற', 'சமதர்மம்' என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் இருந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி |
| அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு Posted: 28 Jan 2015 07:00 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிகமாக திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறது. |
| கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: காங். மேலிட தலைவர் பதில் Posted: 28 Jan 2015 06:52 PM PST காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்ததாக கூறி, முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நோட்டீசு அனுப்பினார். ஆனால், தன்னிடம் விளக்கம் கேட்க அகில இந்திய காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கை |
| மாநில நிதி மந்திரி மீதான லஞ்சப்புகார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கேரள ஐகோர்ட்டு மறுப்பு Posted: 28 Jan 2015 06:34 PM PST கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் கே.எம்.மாணி நிதி மந்திரியாக உள்ளார். கேரள காங்கிரஸ் (மாணி பிரிவு) தலைவரான இவர், கேரள மதுபான பார் ஓட்டல்களுக்கு உரிமம் வழங்குவதற்காக ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. |
| கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி Posted: 28 Jan 2015 06:30 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் |
| அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம் Posted: 28 Jan 2015 04:16 PM PST மத்திய வெளியுறத்துறை செயலாளர் சுஜாதா சிங் ராஜினமா செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை |
| டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை? கருத்துக்கணிப்பில் தகவல் Posted: 28 Jan 2015 03:12 PM PST டெல்லி சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாததால், பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அலை பற்றி 'ஏபிபி நியூஸ்- |
| பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை செல்கிறார் Posted: 28 Jan 2015 02:34 PM PST இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். |
| ஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா - பிடிபி கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு Posted: 28 Jan 2015 10:42 AM PST காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே தொங்கு சட்டசபை ஏற்பட்டது. இங்கு எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்கண்டில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி, இங்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2–வது பெரிய கட்சியாக வந்துள்ளது. |
| திருப்பதியின் பாதுகாப்பை அதிகரிக்க சி.சி.டி.வி. கேமராக்கள்-புதிய போக்குவரத்து சிக்னல்கள் Posted: 28 Jan 2015 08:45 AM PST திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக திருப்பதியை உருவாக்கும் வகையில் நகரம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |