Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சாரதா நிதி நிறுவன ஊழல்: திரிணாமூல் எம்.பி. முகுல் ராய்க்கு சி.பி.ஐ. சம்மன்

Posted: 11 Jan 2015 11:44 PM PST

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

பஞ்சாபில் 62 கிலோ பால் கொடுக்கும் பசு புதிய சாதனை படைத்தது

Posted: 11 Jan 2015 11:39 PM PST

பஞ்சாபில் தேசிய கால்நடை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் அதிக அளவில் பால் கொடுக்கும் ஆடு மற்றும் மாடுகள் பங்கேற்றன. நாடு முழுவதும் இருந்து ஏராளமான கால்நடைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் ஒரு பசுமாடு 62 கிலோ எடையுள்ள பால் கறந்து தேசிய சாதனை படைத்தது. இப்பசு ஹோல்டீன் பிரையின்ஸ் கலப்பினத்தைச்

நாட்டிலேயே முதன் முறையாக இடுக்கி மாவட்டம் முழுவதும் அதிவேக பிராட்-பேண்ட் வசதி

Posted: 11 Jan 2015 09:55 PM PST

நாட்டிலேயே முதன் முறையாக கேரளாவின் மலை மாவட்டமான இடுக்கியில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களும் பிராட்-பேட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று அம்மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் மத்திய

ஆந்திராவில் பெண்ணை காரில் கடத்தி 4 நாள் கற்பழித்த கும்பல்

Posted: 11 Jan 2015 09:48 PM PST

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 42 வயது பெண் ராணி (பெயர்மாற்றம்). இவரை 4 நாள் முன்பு நெல்லூரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றனர். ராணியை 4 நாட்களாக அந்த கும்பல் காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அதோடு ஓடும் காரிலேயே அவரை 4 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

சுனந்தா புஷ்கர் மரணம்: சசிதரூரின் தோழியிடம் விசாரிக்க போலீசார் முடிவு

Posted: 11 Jan 2015 09:15 PM PST

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக டெல்லி போலீசார் கடந்த வாரம் அறிவித்தனர். சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்துக்கு காந்தி பயன்படுத்திய நாற்காலி: ஆந்திர தியாகி அன்பளிப்பாக வழங்கினார்

Posted: 11 Jan 2015 09:13 PM PST

மகாத்மா காந்தி 1938–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்தார். தாழக்குடியை சேர்ந்த ஆர்ய வைசிய பிரமுகர் கோக வரப்பு ராஜாராவ் ஏற்பாடு செய்த சுதந்திர போராட்ட வீரர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

டெல்லியில் பெண் கற்பழித்து கொலை: கழுத்தை நெரித்து-உடலை சிதைத்து கொன்ற கொடூரன் கைது

Posted: 11 Jan 2015 09:08 PM PST

நாட்டின் தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பதி கோவிலில் கம்ப்யூட்டர் தகவல் தொடர்பு பழுது: பக்தர்கள் தவிப்பு

Posted: 11 Jan 2015 08:58 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை 11 மணி அளவில் கம்ப்யூட்டர் தகவல் தொடர்பு பழுதானது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க முடியவில்லை. மேலும் தங்கும் அறையும் ஒதுக்க முடியவில்லை. இதனால் பக்தர்கள் வரிசையில் காத்து

சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது

Posted: 11 Jan 2015 08:54 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 30–ந்தேதி மகரவிளக்கு பூஜை விழா தொடங்கியது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான அய்யப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சி வருகிற 14–ந்தேதி மா

மத்திய பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் வெடிகுண்டு சிக்கியது

Posted: 11 Jan 2015 08:51 PM PST

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரியில் இருந்து டெல்லிக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நேற்றிரவு அந்த ரெயில் சாகர் மாவட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எஸ்–8 பெட்டிக்குள் கேட்பாரற்று கிடந்த ஒரு பை மீது பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் இதுபற்றி டிக்கெட்

கோவில் விழாவில் மிரண்டு ஓடியதால் மயக்க ஊசி போட்ட டாக்டரை மிதித்து கொன்ற யானை

Posted: 11 Jan 2015 08:50 PM PST

கேரள மாநிலம் பத்தனம் திட்டை அருகே வாய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க கோட்டக்கல் பகுதியில் இருந்து தனியார் ஒருவருக்கு சொந்தமான கங்காபிரசாத் என்ற யானை அழைத்து வரப்பட்டது.

ஒபாமா 24–ந்தேதி இந்தியா வருகை: டெல்லியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 11 Jan 2015 08:47 PM PST

இந்திய குடியரசு தினம் வருகிற 26–ந் தேதி நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடு சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடுகிறார்: நாளை திருப்பதி வருகை

Posted: 11 Jan 2015 08:40 PM PST

ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு நாளை (செவ்வாய்க்கிழமை) திருப்பதி, திருமலைக்கு வருகிறார். 14–ந் தேதி தனது சொந்த கிராமத்தில் சிங்கப்பூர் சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுகிறார். திருப்பதி–திருச்சானூர் சாலையில் உள்ள சில்பாராமம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. அதற்கான

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க புதிய திருத்தங்கள்: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

Posted: 11 Jan 2015 07:32 PM PST

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய பண்டக காப்பு கழக அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

மாவோயிஸ்டுகளால் பாதிப்பு: 8 மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை

Posted: 11 Jan 2015 07:08 PM PST

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கார், ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்பட 8 மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நாளை (செவ்வாய்க்கிழமை) ராய்ப்பூரில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் சத்தீஷ்கார், ஜார்கண்ட்

மங்களூர் விமான நிலையத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது

Posted: 11 Jan 2015 07:03 PM PST

இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி என சந்தேகப்படும் நபர் மங்களூர் விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள பட்கல் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

குஜராத் மாநிலத்தில் 4 கிராமங்களை தத்து எடுத்தார் அருண் ஜெட்லி

Posted: 11 Jan 2015 06:49 PM PST

எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்து வளர்ச்சி பணிகளை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே அறிவித்தார். அந்த வகையில் மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி, குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் உள்ள கர்னாலி, பிபலியா, வாடியா, பகலிபுரா

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியகமிட்டி நாளை ஆலோசனை

Posted: 11 Jan 2015 06:48 PM PST

டெல்லியில் நாளை சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில், கட்சியின் மறுசீரமைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

ஊழியர்களின் தவறால் தடம்புரளும் சரக்கு ரெயில்கள்: விசாரணை குழுவின் ஆய்வறிக்கையில் தகவல்

Posted: 11 Jan 2015 06:41 PM PST

சரக்கு ரெயில்கள் தடம்புரள்வது நமது நாட்டில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக உள்ளது. இது குறித்து ரெயில்வே இலாகாவின் விசாரணைக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் சரக்கு ரெயில்கள் தடம்புரண்டது தொடர்பாக அண்மையில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

சுனந்தா கொலை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சசிதரூர்

Posted: 11 Jan 2015 03:46 PM PST

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர் முன்பு மத்திய மந்திரியாக இருந்தபோது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி இரவு அவருடைய மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™