மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சந்திரபாபுநாயுடு அரசுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி 2 நாள் யாத்திரை
- நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம்
- சாரதா சிட்பண்ட் மோசடி: நடிகர் மிதுன் சக்கரவர்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை
- டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல்: விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு-மத்திய அரசு முடிவு
- கேரளா–தமிழக எல்லையில் ரகசிய காமிராவில் பதிவான மாவோயிஸ்டுகள் புகைப்படம்
- கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டி: பார்வையாளர்களை கவர்ந்த வண்ணமிகு கலை நிகழ்ச்சி
- இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராகுல் காந்தியிடம் ப.சிதம்பரம் புகார்
- டெல்லி சட்டசபை தேர்தல்: இளங்கோவன்–குஷ்பு பிரசாரம்
- வேறொரு சமூக வாலிபருடன் காதல்: மாணவியை கவுரவக் கொலை செய்த பெற்றோர்
- தலைமை செயலகத்தில் வாஸ்து தோஷம்: ரூ.150 கோடியில் புதிய தலைமை செயலகம்-சந்திரசேகர் ராவ் முடிவு
- அன்னா ஹசாரேயை பயன்படுத்தியே கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தார்: உமாபாரதி குற்றச்சாட்டு
- தனது தவறுகளை மறைப்பதற்காக ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரஸ் ஊழல் புகார் கூறுகிறது: வெங்கையா நாயுடு தாக்கு
- மோடி மனைவி பற்றிய செய்தி ஒளிபரப்பு: தூர்தர்ஷன் அதிகாரி இடமாற்றம்
- பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை தாருங்கள்: டெல்லியில் பிரதமர் மோடி பிரசாரம்
- நான்கு நாள் பயணமாக சீனா சென்றார் சுஷ்மா
- ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரே சமயத்தில் 1.25 கோடி ரூபாய் நன்கொடை குவிந்தது
- ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்
- மின் கோபுரம் சாய்ந்து விழுந்து 5 தொழிலாளிகள் பரிதாப பலி
- சாரதா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி கைது
- ஆபாச விமர்சனம்: ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது கிரண் பேடி போலீசில் புகார் அளித்தார்
| சந்திரபாபுநாயுடு அரசுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி 2 நாள் யாத்திரை Posted: 31 Jan 2015 10:38 PM PST ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகளின் முழு கடனும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அதேபோல மகளிர் சுய உதவிக்குழு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அறிவித்தப்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை என குற்றம் சாட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி இதுகுறித்து விவசாயிகளை சந்தித்து பேச 2 நாள் யாத்திரை |
| நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம் Posted: 31 Jan 2015 10:14 PM PST பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத நபர் |
| சாரதா சிட்பண்ட் மோசடி: நடிகர் மிதுன் சக்கரவர்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை Posted: 31 Jan 2015 10:11 PM PST மேற்கு வங்காளத்தில் நடந்த பல ஆயிரம் கோடி சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிக்கி தவிக்கிறது. அந்த கட்சியின் 2 எம்.பி.க்களும், ஒரு மந்திரியும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரசில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு |
| Posted: 31 Jan 2015 09:54 PM PST கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி (அப்போது பிரதமராக இருந்தார்) அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லியில் சீக்கிய இனத்தவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். |
| கேரளா–தமிழக எல்லையில் ரகசிய காமிராவில் பதிவான மாவோயிஸ்டுகள் புகைப்படம் Posted: 31 Jan 2015 09:49 PM PST கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டுப்பகுதிகளில் பதுங்கி உள்ள இந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீரென்று நகர்ப்புறங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் பாலக்காடு, வயநாடு, கண்ணூர், கொச்சி ஆகிய இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். |
| கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டி: பார்வையாளர்களை கவர்ந்த வண்ணமிகு கலை நிகழ்ச்சி Posted: 31 Jan 2015 09:07 PM PST கேரளாவில் 35–வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மத்திய மந்திரி வெங்கையாநாயுடு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். |
| இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராகுல் காந்தியிடம் ப.சிதம்பரம் புகார் Posted: 31 Jan 2015 09:04 PM PST முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் கூறினார். அவருக்கு பதில் அளித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் |
| டெல்லி சட்டசபை தேர்தல்: இளங்கோவன்–குஷ்பு பிரசாரம் Posted: 31 Jan 2015 08:20 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக இன்று காலை 6.40 மணிக்கு இருவரும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். |
| வேறொரு சமூக வாலிபருடன் காதல்: மாணவியை கவுரவக் கொலை செய்த பெற்றோர் Posted: 31 Jan 2015 08:19 PM PST ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே பூரகமானுமிட்டா அருகே கடந்த மாதம் 25–ந்தேதி ஒரு இளம்பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தோர் பெத்தபஞ்சாணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். அவருக்கு சுமார் 16, 17 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். |
| தலைமை செயலகத்தில் வாஸ்து தோஷம்: ரூ.150 கோடியில் புதிய தலைமை செயலகம்-சந்திரசேகர் ராவ் முடிவு Posted: 31 Jan 2015 08:17 PM PST தெலுங்கானா முதல்வராக உள்ள கே.சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் மாலை 8 மணி நேர மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். அதன் பின் பேசிய அவர், மாநிலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். |
| அன்னா ஹசாரேயை பயன்படுத்தியே கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தார்: உமாபாரதி குற்றச்சாட்டு Posted: 31 Jan 2015 05:59 PM PST டெல்லியில் 49 நாட்கள் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி அதன் பிறகு பொறுப்புகளை விட்டு ஓடிவிட்டது. இன்னொரு முறை ஆட்சியமைக்கும் தகுதி அந்த கட்சிக்கு கிடையாது என மத்திய மந்திரி உமாபாரதி பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி ராஜேந்திர நகர் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:- வாக்காளர்களே, ஆம் ஆத்மிக்கு கருணையை மட்டுமே காட்டுங்கள்! வாக்குகளை கொடுத்து விடா |
| Posted: 31 Jan 2015 01:16 PM PST தனது தவறுகளை மறைப்பதற்காக ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரஸ் ஊழல் புகார் கூறுகிறது என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அப்போது, தான் |
| மோடி மனைவி பற்றிய செய்தி ஒளிபரப்பு: தூர்தர்ஷன் அதிகாரி இடமாற்றம் Posted: 31 Jan 2015 12:04 PM PST பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மனைவி யசோதாபென்னும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யசோதபென் மனுதாக்கல் செய்து இருந்தார். இதுபற்றிய செய்தியை கிர்னாரில் உள்ள தூர்தர்ஷனின் |
| பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை தாருங்கள்: டெல்லியில் பிரதமர் மோடி பிரசாரம் Posted: 31 Jan 2015 11:18 AM PST டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார். பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். |
| நான்கு நாள் பயணமாக சீனா சென்றார் சுஷ்மா Posted: 31 Jan 2015 09:49 AM PST மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக இன்று சீனா சென்றார். பீஜிங் விமான நிலையத்தில் அவரை சீனாவின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். சீன அதிபர் ஜின்பிங், வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை சந்தித்து |
| ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரே சமயத்தில் 1.25 கோடி ரூபாய் நன்கொடை குவிந்தது Posted: 31 Jan 2015 09:06 AM PST டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின்னர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியது. இன்று நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அக்கட்சிக்கு 1.25 கோடி ரூபாய் நன்கொடை குவிந்துள்ளது. ஒரே சமயத்தில் கிடைத்த அதிகபட்ச வசூல் இது என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. |
| Posted: 31 Jan 2015 08:28 AM PST சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் துருக்கி வரை சென்ற 19 வயது இளம்பெண் மனம் மாறி இந்தியாவுக்கே திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்த அந்த இளம்பெண், தன்னோடு ஒரே வீட்டில் வசிக்கும் மற்றொரு பெண்ணால் மூளைச்சலவை செய்யப்பட்டு, துருக்கி நாட்டுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் முடிவு செய்தார். |
| மின் கோபுரம் சாய்ந்து விழுந்து 5 தொழிலாளிகள் பரிதாப பலி Posted: 31 Jan 2015 07:23 AM PST அசாம் மாநிலத்தின் பஸ்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மின்சார கோபுரம் சாய்ந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பலியாகினர். சவுதர் விதா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த கோபுரம் சாய்ந்து விழுந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார், இது தவிர மேலும் 6 பேர் படுகாயம் அடைந்ததாக |
| சாரதா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி கைது Posted: 31 Jan 2015 06:38 AM PST சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து சுமார் 2,500 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன அதிபர்கள், இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்த பல அரசியல் |
| ஆபாச விமர்சனம்: ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது கிரண் பேடி போலீசில் புகார் அளித்தார் Posted: 31 Jan 2015 06:30 AM PST டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது தன்னைப் பற்றி ஆபாசமாக விமர்சித்துப் பேசிய ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது கிரண் பேடி இன்று டெல்லி போலீசில் புகார் அளித்தார். கிரண் பேடியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள குமார் விஷ்வாஸ், ''நான் ஆபாசமாக பேசியதற்கு ஆதாரமான வீடியோவை கிரண் பேடி வெளியிட்டால் அரசியலை விட்டே வெளியேற தயார். டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு கூற ஏதும் இல்லாததால் இதைப்போன்ற போலி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |