Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சொத்து குவிப்பு வழக்கு: போயஸ்கார்டன், திராட்சை தோட்டம் மதிப்பை அதிகமாக காட்டி உள்ளனர்-ஜெயலலிதா வக்கீல் வாதம்

Posted: 18 Jan 2015 11:11 PM PST

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.

ஏழைகளுக்கு எப்போது தான் நல்ல காலம் பிறக்கும்: மெக் டொனால்ட்ஸ் சர்ச்சையில் சிவசேனா கருத்து

Posted: 18 Jan 2015 11:11 PM PST

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான 'மெக் டொனல்ட்ஸ்' துரித உணவகத்திலிருந்து தெருவோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தையை வெளியே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'ஏழைகளுக்கு எப்போது தான் நல்ல காலம் பிறக்கும்' என்று மகாராஷ்டிராவை ஆளும் பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கேள்வியெழுப்பியுள்ளது.

மக்கள் தொகை மெஜாரிட்டி ஆக இந்து பெண்கள் 10 குழந்தைகள் பெற வேண்டும்: சாமியார் வலியுறுத்தல்

Posted: 18 Jan 2015 10:44 PM PST

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சமீபத்தில் விழாவில் பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாமியார் ஒருவர் இந்து பெண்கள் தலா 10 குழந்தைகள்

49 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்று கேரள மக்கள் சாதனை

Posted: 18 Jan 2015 10:44 PM PST

கேரளாவில் 49 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார். இதனால் இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.

கல்கி பகவான் பக்தரின் ஆசிரமம் சூறை-தீவைப்பு: நக்சலைட்டுகள் தாக்குதல்

Posted: 18 Jan 2015 10:25 PM PST

விசாகப்பட்டினம் அருகே மாருகுலா மண்டலத்தில் உள்ள விரம், சுருமதி கிராமம் அருகே மலை மேலே கல்கி பகவானின் பக்தர் சிம்மா சலம் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த நக்சலைட்டுகள் சுமார் 500 பேர் கத்தி, கம்பு, கேடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திடீர் என ஆசிரமத்திற்குள்

ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணம் முழு விவரம்

Posted: 18 Jan 2015 09:52 PM PST

இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 3 நாள் பயணமாக டெல்லி வர உள்ளார். அவரது 3 நாள் சுற்றுப்பயணத்தில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்ற

கேரளாவில் மீண்டும் 27 பேர் இந்து மதம் திரும்பினர்: விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு

Posted: 18 Jan 2015 09:29 PM PST

நாடு முழுவதும் இந்து மதத்திற்கு திரும்ப விரும்புபவர்களை மீண்டும் சேர்க்க விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். 'கர் வாபசி' என்ற திட்டத்தின் மூலம் இந்த பணி நடந்து வருகிறது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு திரும்புபவர்களை யாகம் நடத்தி இந்துவாக சேர்த்து வருகிறார்கள்.

ஆந்திராவின் ஜனத்தொகையை பெருக்குங்கள்: சந்திரபாபு நாயுடு பேச்சு

Posted: 18 Jan 2015 09:12 PM PST

ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த என்.டி.ராமராவ் 18–வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள என்.டி.ராமராவ் நினைவிடத்தில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆந்திராவில் 2 வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் பலி: ஒரே நாளில் 8 பேர் அனுமதி

Posted: 18 Jan 2015 08:43 PM PST

ஆந்திராவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான 2 வார காலத்தில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் பலியானார்கள். இவர்களில் 7 பேர் காந்தி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை

காளஹஸ்தி அருகே எருது விடும் போட்டியில் மாடுகள் மிதித்து விவசாயி சாவு

Posted: 18 Jan 2015 08:42 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள புலிச்சேர்லா மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி கிராமத்தில் கடந்த 16–ந் தேதி எருது விடும் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்கும் எருதுகள் ஓடுவதை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வழிநெடுக

ரேணிகுண்டா அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

Posted: 18 Jan 2015 08:38 PM PST

ரேணிகுண்டா அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 2 பிணங்கள் கிடப்பதாக ரேணிகுண்டா ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரமணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

உளவு அதிகாரி இடமாற்றம்: இந்தியா மறுப்பு

Posted: 18 Jan 2015 08:05 PM PST

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய உதவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கொழும்பிலிருந்த இந்திய உளவு அதிகாரி, இட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகாரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் எரித்து கொலை: 14 பேர் கைது

Posted: 18 Jan 2015 07:28 PM PST

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே சிறுபான்மை மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் 25 குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததுடன், மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றது. அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள பகில்வாரா கிராமத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் மீது பழிவாங்கும்

பலதடவை டெலிபோன் செய்தும் அன்னா ஹசாரேவுடன் பேச முடியவில்லை: கிரண் பேடி

Posted: 18 Jan 2015 07:14 PM PST

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் செயல்பட்டு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி, சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால், அன்னா ஹசாரே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசாரம்: மோடி 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Posted: 18 Jan 2015 07:00 PM PST

பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி 22-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து உள்ளது. அதன்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் என்ற

டெல்லியில் துப்பாக்கி குண்டுகளுடன் 3 பேர் கைது

Posted: 18 Jan 2015 06:59 PM PST

இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில், ஆயிரத்து இருபது துப்பாக்கி

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை: இலங்கை மந்திரி-சுஷ்மா சுவராஜ் சந்திப்பில் ஆலோசனை

Posted: 18 Jan 2015 06:54 PM PST

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்றார். அங்கு அவரது தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா பற்றிய நூல் வெளியீடு

Posted: 18 Jan 2015 06:31 PM PST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மரோ, 'தி ரெட் சாரி' என்ற ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். சோனியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவரது நண்பர்கள் மற்றும் பழகியவர்களுடன் சேகரித்த தகவல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது.

திரிபுராவில் சிறுமியை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை சிறையில் அடைப்பு

Posted: 18 Jan 2015 06:23 PM PST

திரிபுரா மாநிலம் புதியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபுல்உசேன் (வயது 32). இவரது மகள் ருக்ஷனா (9). மகள் மீது வெறுப்பு அடைந்த அபுல்உசேன், கடந்த 2 நாட்களுக்குமுன்பு சிறுமியின் கை, கால்களை கட்டி வீட்டின் பின்புறம் பெரிய அளவில் குழி தோண்டி உயிருடன் புதைக்க முயன்றார்.

ஆந்திராவில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பாதயாத்திரை

Posted: 18 Jan 2015 03:02 PM PST

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபுநாயுடு நேற்று 18 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™