மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்
- கர்நாடகாவில் நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு
- ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே மாதத்தில் 27 பேர் பலி: 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
- ஒபாமா வருகையால் குதிரைக்கு புல் கிடைக்காமல் அவதிப்பட்ட போலீசார்
- ஜம்மு–காஷ்மீர் மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்.வேட்பாளர் குலாம் நபிக்கு உமர் அப்துல்லா கட்சி ஆதரவு
- பிரதமர் மோடி 31–ந்தேதி டெல்லியில் பிரசாரம்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களம் காணும் நிதிஷ்குமார்
- மோடி அணிந்திருந்த சூட் ரூ.10 லட்சம் செலவில் தயாரானதா?: வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
- தெலுங்கு கங்கை திட்டத்தில் ஆந்திராவுக்கு தமிழகம் ரூ.573 கோடி கடன் பாக்கி: அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- திருப்பதியில் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள்
- ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலி
- நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: எனக்கு எதிராக அரசியல் சதி - மானி பேட்டி
- கேரள சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன் திடீர் மரணம்
- கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது
- ஒபாமா வருகை இந்தியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: மோகன்லால் பேட்டி
- அரவிந்தர் ஆசிரமம் மீதான வழக்கு: மார்ச் 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி
- சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது: ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம் நிறைவு
- நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன்சிங் வாக்குமூலத்துடன் சி.பி.ஐ. அறிக்கை கோர்ட்டில் தாக்கல்
- மந்திரி கே.எம்.மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் முழு அடைப்பு
- பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி
| ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன் Posted: 27 Jan 2015 11:19 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:– 1. இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த அணுசக்தி ஒப்பந்த தடை நீக்கம். 2. இந்திய அணுசக்தி துறையில் கம்பெனிகளின் எளிதான முதலீடு. |
| கர்நாடகாவில் நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு Posted: 27 Jan 2015 11:00 PM PST கர்நாடக காங்கிரஸ் மந்திரி சபையில் நடிகர் அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கும் முதல் – மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில் அர்காவதி லே–அவுட் குடியிருப்பு பகுதி கட்டுவதற்காக அரசு ஆணையின் பேரில் நிலத்தை விடுவித்து நிலமுறைகேடு செய்ததாக முதல் மந்திரி சித்தராமையா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. |
| Posted: 27 Jan 2015 10:40 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காயச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 பேர் பலியானதால் அம்மாநில அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கடும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. நேற்று மாலை |
| ஒபாமா வருகையால் குதிரைக்கு புல் கிடைக்காமல் அவதிப்பட்ட போலீசார் Posted: 27 Jan 2015 10:36 PM PST குடியரசு தினவிழாவில் பங்கேற்க டெல்லி வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலையும் பார்வையிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உத்தரப் பிரசேத மலைப்பகுதி அம்பேத்கார் அகாடாமியில் உள்ள 75–க்கும் அதிகமான |
| ஜம்மு–காஷ்மீர் மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்.வேட்பாளர் குலாம் நபிக்கு உமர் அப்துல்லா கட்சி ஆதரவு Posted: 27 Jan 2015 09:59 PM PST ஜம்மு–காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதாவும் அதிக இடங்களைப் பிடித்தன. எந்த கட்சியும் தனிபெரும்பான்மை பெறாததால் அங்கு ஆட்சி அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட முன்னாள் மத்திய காங்கிரஸ் மந்திரி குலாம்நபி ஆசாத் உள்பட 4 மேல்சபை எம்.பி.க்கள் பதவிக்காலம் அடுத்த மாதம் |
| பிரதமர் மோடி 31–ந்தேதி டெல்லியில் பிரசாரம்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களம் காணும் நிதிஷ்குமார் Posted: 27 Jan 2015 09:58 PM PST 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்ட சபைக்கு பிப்ரவரி 7–ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்கிறார். அவர் தனது பிரசாரத்தை வருகிற 31–ந்தேதி தொடங்குகிறார். |
| மோடி அணிந்திருந்த சூட் ரூ.10 லட்சம் செலவில் தயாரானதா?: வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு Posted: 27 Jan 2015 09:48 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தபோது, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ''பந்த் கலா'' எனும் கருப்பு நிறத்தினாலான கோட்–சூட் அணிந்திருந்தார். |
| தெலுங்கு கங்கை திட்டத்தில் ஆந்திராவுக்கு தமிழகம் ரூ.573 கோடி கடன் பாக்கி: அதிகாரிகள் பேச்சுவார்த்தை Posted: 27 Jan 2015 09:27 PM PST தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நிர்வாக செயல்பாடுகளுக்காக இதுவரை ஆந்திராவுக்கு தமிழக அரசு ரூ.573 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாக ஆந்திரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த |
| திருப்பதியில் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் Posted: 27 Jan 2015 09:25 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது ரத சப்தமி விழா நடைபெற்றது. ரத சப்தமி விழாவின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் திருப்பதியில் 38 ஆயிரத்து 173 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். |
| ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலி Posted: 27 Jan 2015 08:48 PM PST ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஜிம்ஸ் ஆஸ்பத்திரி, உஸ்மானியாக ஆஸ்பத்திரிகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். |
| நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: எனக்கு எதிராக அரசியல் சதி - மானி பேட்டி Posted: 27 Jan 2015 08:47 PM PST கேரளாவில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குள் கேரளாவில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். அதற்கேற்ப மதுபார்களை மூடுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது. இந்த நிலையில் மூடப்பட்ட மதுபார்களை மீண்டும் திறக்க மதுபார் உரிமையாள |
| கேரள சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன் திடீர் மரணம் Posted: 27 Jan 2015 08:46 PM PST கேரள சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தை சேர்ந்த இவருக்கு வயது 72. கடந்த சில வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19–ந்தேதி |
| கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது Posted: 27 Jan 2015 08:31 PM PST கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஸ்ரீஜா (40). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி |
| ஒபாமா வருகை இந்தியாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: மோகன்லால் பேட்டி Posted: 27 Jan 2015 08:28 PM PST பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் தேசப்பற்று, தேச ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ராணுவ அதிகாரி வேடங்களிலும் நடித்து இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார். இதை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ அணி வகுப்புகள், ராணுவம் சம்பந்தமான பயிற்சிகளிலும் அவர் அடிக்கடி பங்கேற்பது வழக்கம். நேற்று முன்தினம் டெ |
| அரவிந்தர் ஆசிரமம் மீதான வழக்கு: மார்ச் 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 27 Jan 2015 07:26 PM PST புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீதான வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் இருதரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர். மறுவிசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். புதுச்சேரி நகரில் உள்ள அரவிந்தர் ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் மீது பாலியல் தொல்லை மற்றும் நிர்வாக சீர்கேடுகள் நடப்பதாக கூறியும், |
| கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி Posted: 27 Jan 2015 07:13 PM PST டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். |
| சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது: ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம் நிறைவு Posted: 27 Jan 2015 06:52 PM PST ''சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது'' என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் குமார் இறுதி வாதத்தில் எடுத்துரைத்தார். இத்துடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதம் நிறைவடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட 4 |
| நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன்சிங் வாக்குமூலத்துடன் சி.பி.ஐ. அறிக்கை கோர்ட்டில் தாக்கல் Posted: 27 Jan 2015 04:14 PM PST கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், சில ஆண்டுகள் நிலக்கரி துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, 2005-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் தாலபிரா-2 என்ற நிலக்கரி சுரங்கம், ண்டால்கோ |
| மந்திரி கே.எம்.மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் முழு அடைப்பு Posted: 27 Jan 2015 01:33 PM PST கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில், கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம்.மாணி நிதித்துறை மந்திரியாக உள்ளார். இவர் மீது கேரள பார் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயல் தலைவர் பிஜூ ரமேஷ், பார் ஓட்டல்களுக்கு உரிமம் வழங்க ரூ.3 கோடியே 10 |
| பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி Posted: 27 Jan 2015 11:20 AM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |