மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கு தேசம் கட்சியில் சேர திட்டமா?: நடிகை ஜெயப்பிரதா பேட்டி
- மோடியின் தூய்மை இந்தியா திட்டம் பிரசார தூதராக பவன்கல்யாண், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நியமனம்
- இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8–ந்தேதி ஓட்டுப்பதிவு
- தீவிரவாதி ஹபீஸ்சயீது இந்திய எல்லை அருகே முகாம்: காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: 4 மணி நேரத்தில் தரிசனம்
- சந்திரபாபுநாயுடு தொகுதி குடிநீருக்காக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம்: ஆய்வு பணி தொடங்கியது
- கொல்கத்தாவில் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது
- கோழிக்கோடு அருகே தண்டவாளத்தில் இரும்பு குழாயை போட்டு ரெயிலை கவிழ்க்க சதி
- கடற்கரையில் முத்தப்போராட்டத்தை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் முத்தமிட்ட ஜோடிகள்
- தீவிரவாதிகளின் படகு தகர்ப்பு விவகாரம்: காங்கிரஸ் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
- ராஜஸ்தானில் ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடு ரத்து: மாநில அரசு நடவடிக்கை
- டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம்: மோடி 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
- காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க சோனியா நடவடிக்கை: மார்ச் மாதம் செயல்திட்டம் வகுக்க முடிவு
- சிறுமி கற்பழிப்புக்கு அரசு பொறுப்பு அல்ல: உத்தரபிரதேச பெண் மந்திரி பேச்சால் சர்ச்சை
- வாக்காளர்களுக்கு தேசிய அளவிலான மையம்: தேர்தல் ஆணையம் முடிவு
- காஷ்மீரில் ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜனதா இன்று முக்கிய ஆலோசனை
- பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் 243 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம்
- பாகிஸ்தானுக்கு பலத்த பாடம் கற்பிக்க வேண்டும்: காஷ்மீர் எல்லையோர மக்கள் வலியுறுத்தல்
- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் எம்.பி. மகன் தற்கொலை
- கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன?: உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி
| தெலுங்கு தேசம் கட்சியில் சேர திட்டமா?: நடிகை ஜெயப்பிரதா பேட்டி Posted: 04 Jan 2015 10:58 PM PST பிரபல நடிகை ஜெயப்பிரதா முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தார். சமாஜ்வாடி கட்சியில் இருந்து அமர்சிங் வெளியேற்றப்பட்டபோது அவருடன் நடிகை ஜெயப்பிரதாவும் வெளியேறினார். பின்னர் அவர் தேசிய அரசியலில் இருந்து விலகி ஆந்திர மாநில அரசியலுக்கு திரும்பினார். நடிகை ஜெயப்பிரதா திருப்பதி வந்து ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ''புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும் சேர்ந்து வந்ததால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அன்றைய தினம் வழிபட முடியவில்லை. தற்போது கூட்டம் குறைந்ததால் ஏழு |
| மோடியின் தூய்மை இந்தியா திட்டம் பிரசார தூதராக பவன்கல்யாண், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நியமனம் Posted: 04 Jan 2015 10:55 PM PST பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த அக்டோபர் 2–ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பிரசார தூதராக ஒவ்வொரு மாநிலத்தில் பல துறைகளை சேர்ந்த பிரபலங்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். |
| இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8–ந்தேதி ஓட்டுப்பதிவு Posted: 04 Jan 2015 10:34 PM PST இலங்கையில் வருகிற 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். |
| தீவிரவாதி ஹபீஸ்சயீது இந்திய எல்லை அருகே முகாம்: காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 04 Jan 2015 10:24 PM PST பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் இயங்கும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான லஷ்கர் – இ– தொய்பாவை வழி நடத்துபவர்களில் முக்கியமானவன் ஹபீஸ்சயீது. இவனது தூண்டுதலால் இந்தியாவில் பல தடவை நாசவேலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப் போவதாக இவன் சில மாதங்களுக்கு முன்பு சபதம் செய்தான். எனவே இவனது நடவடிக்கைகளை |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: 4 மணி நேரத்தில் தரிசனம் Posted: 04 Jan 2015 10:15 PM PST கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் திருப்பதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும் வந்ததால் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 2 லட்சம் பக்தர்கள் திரிசனத்துக்கு காத்து இருந்தனர். மறுநாள் துவாதசி தினம் என்பதால் அன்றும் கூட்டம் அலை மோதியது. |
| சந்திரபாபுநாயுடு தொகுதி குடிநீருக்காக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம்: ஆய்வு பணி தொடங்கியது Posted: 04 Jan 2015 09:37 PM PST ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது குப்பம் தொகுதி. இது முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி ஆகும். குப்பம் தொகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட |
| கொல்கத்தாவில் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது Posted: 04 Jan 2015 09:02 PM PST கொல்கத்தாவில் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் சிறப்பு அதிரடிப்படையால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த மர்ம அழைப்பால் கொல்கத்தாவின் சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும், மர்ம நபரைக் கண்டுபிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். |
| கோழிக்கோடு அருகே தண்டவாளத்தில் இரும்பு குழாயை போட்டு ரெயிலை கவிழ்க்க சதி Posted: 04 Jan 2015 08:41 PM PST கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் ரெயில் நிலையம் உள்ளது. நேற்று பகல் 2.45 மணி அளவில் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மங்களாபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கொல்லறிபாறை என்ற இடத்தில் அந்த |
| கடற்கரையில் முத்தப்போராட்டத்தை தடுத்ததால் போலீஸ் நிலையத்தில் முத்தமிட்ட ஜோடிகள் Posted: 04 Jan 2015 08:33 PM PST கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது இளம்ஜோடிகள் கட்டிப் பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நமது கலாச்சாரத்திற்கு எதிராக பொது இடத்தில் இளம்ஜோடிகள் முத்தமிட்டு கொண்டதை கண்டித்து அந்த நட்சத்திர ஓட்டல் சூறையாடப்பட்டது. |
| தீவிரவாதிகளின் படகு தகர்ப்பு விவகாரம்: காங்கிரஸ் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் Posted: 04 Jan 2015 07:31 PM PST மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக படகில் வந்த 10 தீவிரவாதிகள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தினர். இதில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். |
| ராஜஸ்தானில் ராபர்ட் வதேராவுக்கான நில ஒதுக்கீடு ரத்து: மாநில அரசு நடவடிக்கை Posted: 04 Jan 2015 07:31 PM PST ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது (2010-ம் ஆண்டு), கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 374.44 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் சுமார் 2½ ஏக்கர் ஆகும்.) நிலம் வாங்கினார். இந்த நிலத்தை அவர் |
| டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம்: மோடி 31-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் Posted: 04 Jan 2015 07:22 PM PST கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைப்பதற்கு தேசிய கமிட்டி பரிந்துரை |
| காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க சோனியா நடவடிக்கை: மார்ச் மாதம் செயல்திட்டம் வகுக்க முடிவு Posted: 04 Jan 2015 06:38 PM PST நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் படுதோல்வியை சந்தித்தது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அந்த கட்சியால் பெற முடியவில்லை. வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து மராட்டியம், அரியானா, |
| சிறுமி கற்பழிப்புக்கு அரசு பொறுப்பு அல்ல: உத்தரபிரதேச பெண் மந்திரி பேச்சால் சர்ச்சை Posted: 04 Jan 2015 03:19 PM PST சிறுமி கற்பழிப்புக்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல, சமூகம்தான் பொறுப்பு என உத்தரபிரதேச பெண் மந்திரி கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம், பதான் மாவட்டத்தில் ஒரு சிறுமியை வீர்பால்சிங் யாதவ், அவினிஷ் யாதவ் என்னும் 2 போலீஸ்காரர்கள் கற்பழித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் |
| வாக்காளர்களுக்கு தேசிய அளவிலான மையம்: தேர்தல் ஆணையம் முடிவு Posted: 04 Jan 2015 02:31 PM PST வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய அளவிலான மையம் ஒன்றை தேர்தல் மையம் அமைக்க உள்ளது. அதன்படி, வாக்காளர் குறித்த தகவல்களை சேர்த்துவைப்பதற்காகவும், பல்வேறு சேவைகளுக்காகவும் தேசிய அளவிலான தகவல் மையம் ஒன்றை உருவாக்க முடிவு |
| காஷ்மீரில் ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜனதா இன்று முக்கிய ஆலோசனை Posted: 04 Jan 2015 01:23 PM PST காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து பா.ஜனதா கட்சி டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்கள், பா.ஜனதா 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 என வெற்றி பெற்றதால், |
| பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் 243 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் Posted: 04 Jan 2015 09:34 AM PST ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் 'சம்பர்க் பேரணி' மூலம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணம் பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் மாநில தலைநகரில் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைமை அலுவலகத்தில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் |
| பாகிஸ்தானுக்கு பலத்த பாடம் கற்பிக்க வேண்டும்: காஷ்மீர் எல்லையோர மக்கள் வலியுறுத்தல் Posted: 04 Jan 2015 08:12 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படைகளுக்கு விரைவில் 'பலத்த பாடம்' கற்பிக்க வேண்டும் என்று எல்லையோரம் வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| துப்பாக்கியால் சுட்டு முன்னாள் எம்.பி. மகன் தற்கொலை Posted: 04 Jan 2015 07:39 AM PST ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகன் ஐதாராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| கோட்சேவுக்கு கோயில் கட்டுவது தொடர்பாக பிரதமரின் நிலைப்பாடு என்ன?: உ.பி. நவ்நிர்மான் சேனா கேள்வி Posted: 04 Jan 2015 07:19 AM PST கோட்சேவுக்கு கோயில் கட்டும் முடிவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற 'மகாபஞ்சாயத்து' இன்று நடைபெற்றது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உ.பி.மாநிலம், மீரட் மாவட்டம் பிரம்மபுரி பகுதியில் சிலை அமைக்கப்படும். அந்த சிலை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |