மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சாரதா சிட்பண்ட் வழக்கில் ஆஜர்: கபில்சிபல் மீது காங். அதிருப்தி
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது
- தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது: மத்திய சுகாதாரக்குழு ஐதராபாத் வந்தது
- கோழிக்கோட்டில் கேரள மந்திரியை நோக்கி கருப்பு கொடியுடன் பாய்ந்த வாலிபர்
- திருச்சூர் அருகே பஞ்சாயத்து தலைவரின் பேரனை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்
- அமெரிக்க–இந்திய தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஒபாமா–நரேந்திர மோடி பேசுகிறார்கள்
- மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி: காங்கிரஸ் விளக்கம்
- பரிசாக கிடைத்த பொருட்களை ஜெயலலிதாவின் வருமான கணக்கில் சேர்த்தது தவறு: நாகேஸ்வரராவ் வாதம்
- அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு
- அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்: கிரண் பேடிக்கு அன்னா ஹசாரே பதில்
- தேசிய பாரம்பரிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா பதிலடி
- ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு
- ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயருமா?:விலையை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி
- ஒடிசாவின் சம்பல்பூரில் மஞ்சள் காமாலை நோய்க்கு 24 பேர் பலி: அரசு தகவல்
- சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரின் பல்லை பிடுங்கி, மொட்டை அடித்து, மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்திய கும்பல்
- குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வந்த தம்பதியர் யானையிடம் சிக்கி பலி
- பீகார் கலவரத்தின்போது உயிரை பணயம் வைத்து 10 பேரை காப்பாற்றிய விதவைப் பெண்
- கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது: அதிகாரி தகவல்
- ஹசாரே தோளில் சவாரி செய்து அரசியலுக்குள் புகுந்த கிரண் பேடி- கெஜ்ரிவால்: அஜய் மக்கான் காட்டம்
| சாரதா சிட்பண்ட் வழக்கில் ஆஜர்: கபில்சிபல் மீது காங். அதிருப்தி Posted: 21 Jan 2015 09:56 PM PST மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கட்சியின் எம்.பி.க்கள் 2 பேரும், மாநில போக்குவரத்து மந்திரி மதன் மித்ராவும் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது Posted: 21 Jan 2015 09:46 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கூட்டம் குறைந்துள்ளது. புதன்கிழமையான நேற்று காலை முதல் இன்று காலை வரை சுமார் 37 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த செவ்வாய்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் |
| தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது: மத்திய சுகாதாரக்குழு ஐதராபாத் வந்தது Posted: 21 Jan 2015 09:33 PM PST தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். |
| கோழிக்கோட்டில் கேரள மந்திரியை நோக்கி கருப்பு கொடியுடன் பாய்ந்த வாலிபர் Posted: 21 Jan 2015 09:06 PM PST கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள இஞ்சோடி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் இடையே கலை நிகழ்ச்சிகள் தொடர்பான போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல் பரிசு பெறும் பள்ளிக்கு117 பவுன் தங்க கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் ஜெயரா |
| திருச்சூர் அருகே பஞ்சாயத்து தலைவரின் பேரனை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் Posted: 21 Jan 2015 09:00 PM PST கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த ஆரின்புர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ஆன்றனி. இவரது 5 வயது பேரன் நஸ்வின். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி நஸ்வினும் அவரது மூத்த சகோதரரும் பள்ளிக்கு சென்றனர். மாலை 3 மணிக்கு வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். |
| அமெரிக்க–இந்திய தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஒபாமா–நரேந்திர மோடி பேசுகிறார்கள் Posted: 21 Jan 2015 08:25 PM PST இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இதை ஏற்று ஒபாமா வருகிற 25–ந்தேதி டெல்லி வர உள்ளார். அவர் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். |
| மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி: காங்கிரஸ் விளக்கம் Posted: 21 Jan 2015 08:19 PM PST முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005-ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. |
| பரிசாக கிடைத்த பொருட்களை ஜெயலலிதாவின் வருமான கணக்கில் சேர்த்தது தவறு: நாகேஸ்வரராவ் வாதம் Posted: 21 Jan 2015 08:18 PM PST சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த அப்பீல் மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டில் தனி அமர்வு |
| அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு Posted: 21 Jan 2015 08:13 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த ஆண்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூடிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைகிற நிலையில், குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, 24 மணி நேரமும் மின்வசதி, சாலை வசதி கொண்ட வீட்டினை ஒவ்வொரு குடும்பமும் பெற வேண்டும்" என |
| அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்: கிரண் பேடிக்கு அன்னா ஹசாரே பதில் Posted: 21 Jan 2015 07:37 PM PST ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல அன்னா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றிய மற்றொருவர், |
| தேசிய பாரம்பரிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு Posted: 21 Jan 2015 07:10 PM PST இந்தியாவில் உள்ள கலாசார பாரம்பரியம் மிக்க நகரங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், இந்த திட்டத்தை நகர்ப்புற |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா பதிலடி Posted: 21 Jan 2015 02:05 PM PST காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்னியா பகுதி வழியாக நேற்று முன்தினம் மாலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இந்த முயற்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். |
| ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு Posted: 21 Jan 2015 01:34 PM PST 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. |
| ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயருமா?:விலையை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி Posted: 21 Jan 2015 11:09 AM PST ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்துள்ளது. இதனால், சர்க்கரை விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் 28 லட்சம் டன் சர்க்கரை வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில், சர்க்கரை விலை 40 ரூபாய்வரை உயர்ந்து விட்டது. |
| ஒடிசாவின் சம்பல்பூரில் மஞ்சள் காமாலை நோய்க்கு 24 பேர் பலி: அரசு தகவல் Posted: 21 Jan 2015 08:44 AM PST ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் பரவிய மஞ்சள் காமாலை நோய்க்கு 24 பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது. சம்பல்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், நோய் |
| Posted: 21 Jan 2015 08:07 AM PST ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் சூனியக்காரக் குடும்பம் என்ற சந்தேகத்தில் அந்த குடும்பத்தினர் 8 பேரின் பற்களை பிடுங்கி, மொட்டை அடித்து, அவர்களை வற்புறுத்தி மலம் தின்ன வைத்த கிராம மக்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வந்த தம்பதியர் யானையிடம் சிக்கி பலி Posted: 21 Jan 2015 07:54 AM PST குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரை சேர்ந்த ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் அங்குள்ள சிலரை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள பயண ஏற்பாட்டாளர் மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தது. |
| பீகார் கலவரத்தின்போது உயிரை பணயம் வைத்து 10 பேரை காப்பாற்றிய விதவைப் பெண் Posted: 21 Jan 2015 07:40 AM PST பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது 10 பேரின் உயிரை காப்பாற்றிய விதவைப்பெண் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முசாபர்பூர் மாவட்டத்தில் 20 வயது வாலிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை |
| கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது: அதிகாரி தகவல் Posted: 21 Jan 2015 07:26 AM PST விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுவதற்கு முன் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் |
| ஹசாரே தோளில் சவாரி செய்து அரசியலுக்குள் புகுந்த கிரண் பேடி- கெஜ்ரிவால்: அஜய் மக்கான் காட்டம் Posted: 21 Jan 2015 07:25 AM PST அன்னா ஹசாரேவின் போராட்டங்களில் கொடி அசைத்துக் கொண்டிருந்த கிரண் பேடியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது தோளில் சவாரி செய்து அரசியலுக்குள் புகுந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி முதல் மந்திரி வேட்பாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியின் சதார் பஜார் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தனது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |