மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2 மணி நேரம் நடந்த அணிவகுப்பு: ஒபாமா ஆர்வம்
- சென்னை ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனுக்கு அசோகசக்கரா விருது: ஜனாதிபதியிடம் இருந்து மனைவி பெற்றுக்கொண்டார்
- உயிர் நீத்த வீரர்களுக்கு மோடி மரியாதை
- குஜராத் பாரம்பரிய தலைப்பாகை அணிந்த மோடி
- அசாமில் 2 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு
- மோடியின் குர்தா உடையை அணிய ஒபாமா விருப்பம்
- திருப்பதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்: தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு
- டெல்லியில் குடியரசு தினவிழா: ஜனாதிபதி கொடியேற்றினார்- ராணுவ அணிவகுப்பை ஒபாமா பார்வையிட்டார்
- குடியரசு தின விழாவில் மாவோயிஸ்ட் போராட்டம்?- கருப்பு தொப்பி அணிந்தவர்களை சோதனை செய்ய உத்தரவு
- டெல்லியில் மழை-பனிப்பொழிவு: குடியரசு தின விழாவில் விமானப்படை சாகசம் ரத்து?
- விவாதங்கள் இல்லாமல் சட்டங்களை இயற்றுவது பாராளுமன்றத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்: பிரணாப்முகர்ஜி
- மதிய விருந்தின் போது ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள்
- கொலை வழக்கில் கைதான இத்தாலி சுற்றுலா பயணிகள் 2 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது உள்ளே நுழைந்த நாய்
- தமிழக சிறைத்துறை அதிகாரிகள் 5 பேருக்கு ஜனாதிபதி விருது: மத்திய அரசு அறிவிப்பு
- ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை
- டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பை ஒபாமா பார்வையிடுகிறார்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் அறிவித்த முறையை பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
- ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ராஜினாமா செய்யவில்லை: பவானி சிங் பேட்டி
| 2 மணி நேரம் நடந்த அணிவகுப்பு: ஒபாமா ஆர்வம் Posted: 25 Jan 2015 11:12 PM PST டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு காலை 10 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. 12 மணிக்கு அணி வகுப்பு நிறைவு பெற்றது. 2 மணி நேரம் ஒபாமா மேடையில் அமர்ந்து அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அவருக்கு அணி வகுப்பின் முக்கியத்துவம் பற்றியும், ஒவ்வொரு மாநில கலாசாரத்தையும் விளக்கும் கலை நிகழ்ச்சிகள் பற்றியும் மோடி |
| Posted: 25 Jan 2015 11:11 PM PST ராணுவத்தில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு குடியரசு தின விழாவில் மிக உயரிய விருதான அசோக சக்கரா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அசோக சக்கரா விருதுக்கு சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வதராஜன், மற்றும் நாயக் நீரஜ்குமார் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. |
| உயிர் நீத்த வீரர்களுக்கு மோடி மரியாதை Posted: 25 Jan 2015 09:39 PM PST டெல்லி இந்தியா கேட்டில் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடமான அமர்ஜோதி ஜவான் உள்ளது. குடியரசு தின அணி வகுப்பு தொடங்கும் முன் பிரதமர் மோடி அங்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். |
| குஜராத் பாரம்பரிய தலைப்பாகை அணிந்த மோடி Posted: 25 Jan 2015 09:36 PM PST பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் வித்தியாசமான உடை அணிந்து அனைவரது கவனத்தை ஈர்ப்பது வழக்கம். நேற்று காவி கலரில் குர்தா பைஜா, தோளில் சிவப்பு துண்டு அணிந்து ஒபாமாவை வரவேற்றார். பின்னர் கோட்– சூட் அணிந்து ஒபாமாவுடன் கலக்கினார். இன்று அவர் குஜராத் மாநில பாரம்பரியப்படி கதர் தலைப்பாகை அணிந்து வந்தார். ராஜபாதை வந்து இறங்கிய ஒபாமாவை அதே தலைப்பாகையுடன் |
| அசாமில் 2 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு Posted: 25 Jan 2015 09:35 PM PST இன்று நாட்டின் 66–வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் டின்சுக்யா மாவட்டத்தில் டிக்போயி நகரில் தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்தன. |
| மோடியின் குர்தா உடையை அணிய ஒபாமா விருப்பம் Posted: 25 Jan 2015 09:24 PM PST குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி மரபுகளை மீறி ஒபாமாவை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். கட்டி தழுவியும், கைக்குலுக்கியும் அவரை அன்புடன் வர வேற்றார். |
| திருப்பதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்: தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு Posted: 25 Jan 2015 09:13 PM PST திருப்பதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதியில் கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெங்கட்ரமணா போட்டியிட்டு வெற்றி |
| டெல்லியில் குடியரசு தினவிழா: ஜனாதிபதி கொடியேற்றினார்- ராணுவ அணிவகுப்பை ஒபாமா பார்வையிட்டார் Posted: 25 Jan 2015 09:00 PM PST நாட்டின் 66–வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக நேற்று டெல்லி வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை 9.30 மணிக்கு குடியரசு தின விழா தொடங்கியது. 9.45 |
| குடியரசு தின விழாவில் மாவோயிஸ்ட் போராட்டம்?- கருப்பு தொப்பி அணிந்தவர்களை சோதனை செய்ய உத்தரவு Posted: 25 Jan 2015 08:50 PM PST குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்து மாவோயிஸ்ட் அமைப்பினர் போராட்டம் நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 66–வது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று |
| டெல்லியில் மழை-பனிப்பொழிவு: குடியரசு தின விழாவில் விமானப்படை சாகசம் ரத்து? Posted: 25 Jan 2015 08:00 PM PST இந்தியாவின் 66–வது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொள்கிறார். |
| Posted: 25 Jan 2015 07:35 PM PST தேவையான ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் இன்றி சட்டங்களை நிறைவேற்றுவது பாராளுமன்றத்தின் பங்களிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின விழா உரையில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தெரிவித்து உள்ளார். |
| மதிய விருந்தின் போது ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் Posted: 25 Jan 2015 07:16 PM PST டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நேற்று நடந்த மதிய விருந்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு காஷ்மீர் மற்றும் வங்காள உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சைவம் மற்றும் அசைவம் கலந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் 'நத்ரு கே கூலர்' (தாமரைத் |
| கொலை வழக்கில் கைதான இத்தாலி சுற்றுலா பயணிகள் 2 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 25 Jan 2015 07:06 PM PST இத்தாலிய சுற்றுலா பயணிகளான தோம்சோ புருனோ(வயது32), எலிசா பிட்டா போன்(42) மற்றும் பிரான்சிஸ்கோ ஆகியோர் லண்டனில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்தனர். அவர்களில் பிரான்சிஸ்கோ அதே ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். |
| ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது உள்ளே நுழைந்த நாய் Posted: 25 Jan 2015 06:27 PM PST ஒபாமாவின் வருகையை யொட்டி, டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகை வளாகத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அந்த வளாகத்துக்குள் திடீரென்று தெரு நாய் ஒன்று நுழைந்தது. |
| தமிழக சிறைத்துறை அதிகாரிகள் 5 பேருக்கு ஜனாதிபதி விருது: மத்திய அரசு அறிவிப்பு Posted: 25 Jan 2015 06:18 PM PST ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி சிறந்த சேவை ஆற்றியதற்காக நாடு முழுவதும் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை Posted: 25 Jan 2015 05:54 PM PST டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பை ஒபாமா பார்வையிடுகிறார் Posted: 25 Jan 2015 04:14 PM PST அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று(திங்கட்கிழமை) அவர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டெல்லி ராஜபாதையில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் கண்கவர் அணிவகுப்பையும், விமான சாகச காட்சிகளையும் |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் அறிவித்த முறையை பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி Posted: 25 Jan 2015 03:33 PM PST தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்காக, 'எளிய பதிவு, எளிய திருத்தம்' என்ற திட்டத்தை இந்த ஆண்டின் கருப்பொருளாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி |
| ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் Posted: 25 Jan 2015 03:06 PM PST டெல்லி வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திரமோடியும் அங்குள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார் கள். பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ராஜினாமா செய்யவில்லை: பவானி சிங் பேட்டி Posted: 25 Jan 2015 01:01 PM PST சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரிப்பதற்கு என்று பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த 5-ந் தேதி முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |