மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோட்சேக்கு சிலை வைக்க முயற்சி: மீரட் நகரில் போலீஸ் தடை உத்தரவு
- இன்று தியாகிகள் தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி– பிரதமர் மோடி அஞ்சலி
- மக்கள் வரிப்பணத்தில் இருந்து மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட்–சூட் அணியலாமா?: ராகுல்காந்தி கண்டனம்
- ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்
- கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகி வெட்டி கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தில் ஒரு நாள் வி.ஐ.பி.தரிசனம் ரத்து
- திருப்பதி சுவேத பவனில் திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
- அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன?: பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் முடிவு
- ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- ஐதராபாத்தில் போலீசார் ரெய்டு: 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
- வெளியுறவு செயலாளர் பதவியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பிய சுஜாதா சிங்
- ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை
- டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடபோவதில்லை: கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்ப பா.ஜனதா முடிவு
- ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை: ரெயில்வே மந்திரி
- கெயில் எரிவாயு குழாய் விவகாரம்: மரங்களை வெட்ட அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
- வெளியுறவுத்துறை செயலாளர் பதவி: சுஜாதா சிங் நீக்கம் விவகாரத்தில் சர்ச்சை
- மகாத்மா காந்தி பற்றிய முதல் ஆவணப்படம் இன்று திரையிடப்படுகிறது
- பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர்: மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி
- தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய இலவச ஹெல்ப்லைன் சேவை: விரைவில் அறிமுகம்
- திருப்பதியை சேர்ந்த டாக்டரின் தாயாருக்கு பன்றி காய்ச்சல்: சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
| கோட்சேக்கு சிலை வைக்க முயற்சி: மீரட் நகரில் போலீஸ் தடை உத்தரவு Posted: 29 Jan 2015 11:16 PM PST மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30–ந்தேதி கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கிடையே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேக்கு சிலை வைக்கப் போவதாக இந்து மகா சபை அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. |
| இன்று தியாகிகள் தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி– பிரதமர் மோடி அஞ்சலி Posted: 29 Jan 2015 10:39 PM PST நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். |
| மக்கள் வரிப்பணத்தில் இருந்து மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட்–சூட் அணியலாமா?: ராகுல்காந்தி கண்டனம் Posted: 29 Jan 2015 09:32 PM PST டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி டெல்லி சாஸ்திரி பார்க்கில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:– சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தன் பெயர் பொறித்த கோட்–சூட் அணிந்திருந்தார். அதன் விலை ரூ.10 லட்சம். மக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் |
| ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல் Posted: 29 Jan 2015 09:24 PM PST ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். |
| கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகி வெட்டி கொலை: 7 பேர் கும்பல் வெறிச்செயல் Posted: 29 Jan 2015 09:24 PM PST கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த மாராரி குளத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 45). இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆலப்புழா மண்டல செயலாளராக இருந்தார். இவரது மனைவி இந்திரா இறந்து விட்டார். மகன் ராகுல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வேணுகோபால் மாராரி குளத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 2013–ம் ஆண்டு இப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்டு பிரமுகர் சந்திரலால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேணுகோபால் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தில் ஒரு நாள் வி.ஐ.பி.தரிசனம் ரத்து Posted: 29 Jan 2015 09:00 PM PST திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்த விவரம் வருமாறு:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று முன்தினம் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 13 ஆயிரம் பக்தர்கள் நடந்து வந்து தரிசனம் செய் |
| திருப்பதி சுவேத பவனில் திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் Posted: 29 Jan 2015 08:49 PM PST திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசுகையில், தேவஸ்தானத்துக்கு சொந்தமான பல்வேறு கோவில்களில் |
| அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன?: பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் முடிவு Posted: 29 Jan 2015 07:21 PM PST இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிவில் அணுசக்தி உடன்பாடு, 2005-ம் ஆண்டு, ஜூலை 18-ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்சுக்கும் இடையே வாஷிங்டனில் கையெழுத்தானது. |
| ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு Posted: 29 Jan 2015 07:15 PM PST டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், 'ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை |
| ஐதராபாத்தில் போலீசார் ரெய்டு: 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு Posted: 29 Jan 2015 07:09 PM PST தெலுங்கானா மாநிலம் பழைய ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் பீகாரை சேர்ந்த 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதில் சில குழந்தைகள் 8 வயதுக்கும் குறைவானவர்கள். அங்குள்ள வளையல் தயாரிப்பு தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்த இவர்கள் அனைவரையும் போலீசார் நேற்று மீட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் |
| வெளியுறவு செயலாளர் பதவியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பிய சுஜாதா சிங் Posted: 29 Jan 2015 06:13 PM PST வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த சுஜாதா சிங், பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. |
| ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை Posted: 29 Jan 2015 04:17 PM PST சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது. |
| Posted: 29 Jan 2015 03:36 PM PST டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ள பா.ஜனதா, கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்பப்போவதாக கூறி உள்ளது. விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் என ஆம் ஆத்மி பதிலடி தந்துள்ளது. |
| ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை: ரெயில்வே மந்திரி Posted: 29 Jan 2015 03:06 PM PST பெங்களூருவில் புதிய ரெயில்களின் சேவையை தொடங்கி வைத்த பிறகு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரெயில்வே |
| கெயில் எரிவாயு குழாய் விவகாரம்: மரங்களை வெட்ட அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Posted: 29 Jan 2015 02:33 PM PST மத்திய அரசின் கெயில் நிறுவனம், கேரளா-கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| வெளியுறவுத்துறை செயலாளர் பதவி: சுஜாதா சிங் நீக்கம் விவகாரத்தில் சர்ச்சை Posted: 29 Jan 2015 01:32 PM PST வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சுஜாதா சிங்கை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஜெய்சங்கரை புதிய வெளியுறவுத்துறை செயலாளராக மத்திய அரசு நியமித்து உள்ளது. அவர் நேற்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஜெய்சங்கர் இதுவரை அமெரிக்காவில் இந்திய தூதராக பணியாற்றி வந்தார். சுஜாதா சிங் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. |
| மகாத்மா காந்தி பற்றிய முதல் ஆவணப்படம் இன்று திரையிடப்படுகிறது Posted: 29 Jan 2015 11:46 AM PST மகாத்மா காந்தியின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை பற்றிய முதல் ஆவணப்படம் இன்று தேசிய காந்தி மியூசியத்தில் திரையிடப்படுகிறது. மேலும், சர்வோதயா டிரஸ்ட்டிலும், இண்டர்நேஷனல் சென்டரிலும் இன்று மாலை 5 மணிக்கு திரையிடப்படுகிறது. |
| பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர்: மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி Posted: 29 Jan 2015 10:33 AM PST வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் முனிந்திர நாத் ராயும் ஒருவர். அவர், மென்மையான இதயம் கொண்ட துணிச்சலான அதிகாரி என்று பெயர் பெற்றவர். |
| தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய இலவச ஹெல்ப்லைன் சேவை: விரைவில் அறிமுகம் Posted: 29 Jan 2015 04:12 AM PST தேசிய அளவிலான புதிய ஹெல்ப்லைன் சேவையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைவில் அறிமுகம் செய்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தொடர்புடைய இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் விரைவில் 1033 என்ற |
| திருப்பதியை சேர்ந்த டாக்டரின் தாயாருக்கு பன்றி காய்ச்சல்: சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை Posted: 29 Jan 2015 03:56 AM PST ஆந்திராவில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்பதியிலும் பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பதியில் ரேணிகுண்டா சாலையில் ஒரு தனியார் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் அருகில் உள்ள காலனியில் வசித்து வரும் டாக்டரின் குடும்பத்தினர் கடந்த வாரம் பத்ராச்சலம் சென்றனர். அதன்பின் அவர்கள் திருப்பதிக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் டாக்டரின் தாயாருக்கு (70 வயது நிரம்பியவர்) திடீரென உடல்நல குறைவு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |