Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லி தேர்தல் பிரசாரம்: மோடியின் சாதனை வீடியோ ரதம்- பா.ஜனதா திட்டம்

Posted: 03 Jan 2015 11:44 PM PST

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிக்கான வேட்பாளரை ஏற்கனவே அறிவித்து விட்டது. இதே போல காங்கிரஸ் கட்சியும் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு

சபரிமலையில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் அய்யப்ப பக்தர்கள்

Posted: 03 Jan 2015 11:43 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் பிரசித்தி பெற்றவையாகும். மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. வருகிற 14–ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது.

ராஜபக்சேவை ஆதரித்து பிரசாரம்: சல்மான்கான் வீட்டின் முன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Jan 2015 11:17 PM PST

பாலிவுட் நடிகரான சல்மான்கான் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார். அவருடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மலப்புரம் மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்து வாலிபர் பலி: 4 பேர் படுகாயம்

Posted: 03 Jan 2015 11:15 PM PST

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் முல்லைக் கொடி என்ற இடத்தில் சாத்தான் தோடு வாய்க்கால் உள்ளது. இதன்மேல் உள்ள பாலத்தை புதுப்பித்து கட்டும் பணியை கேரள அரசின் பொதுப் பணித்துறை மேற்கொண்டு வருகிறது. நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங். அலுவலகம் மீது குண்டு வீச்சு: 6 பேர் காயம்

Posted: 03 Jan 2015 11:12 PM PST

மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூர் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது மர்ம நபர்கள் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். குண்டு வீச்சில் அங்கிருந்த ஊழியர்கள் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குஜராத் கடலில் படகு தீவைத்து மூழ்கடிப்பு: பாக். ராணுவத்துடன் தீவிரவாதிகள் உரையாடல்

Posted: 03 Jan 2015 10:23 PM PST

குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த படகு தீவைத்து மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 31–ந்தேதி இரவில் குஜராத் மாநிலம் போர் பந்தரில் இருந்து 356 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய உளவுத் துறையைச் சேர்ந்த தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி

நடமாடும் 6டி திரையரங்குகள்: பிப்ரவரியில் டெல்லியில் தொடக்கம்

Posted: 03 Jan 2015 10:19 PM PST

நாட்டின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் முதல் 6டி திரையரங்குகள் நகரின் மூன்று முக்கிய இடங்களில் செயல்படுமென்று மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்தது. முதற்கட்டமாக டெல்லியின் முக்கிய பகுதிகளான கன்னாட் ப்ளேஸ் மற்றும் சரோஜினி நகர் ஆகிய இரண்டு இடங்களில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. 18 முதல் 20 இருக்கைகள் கொண்ட இந்த நடமாடும் திரையரங்கம்

டெல்லி-காபூல் ஏர் இந்தியா விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதியா?: உளவுத்துறை கடும் எச்சரிக்கை

Posted: 03 Jan 2015 10:16 PM PST

கொல்கத்தாவில் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக நேற்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழக பெண்கள் 2 பேர் குழந்தைகளுடன் ரெயிலில் கடத்தல்: வாலிபர்கள் கைது

Posted: 03 Jan 2015 10:12 PM PST

திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் தம்பானூரில் உள்ள சில லாட்ஜுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பெயர் கரண் சாகான் (வயது 28), கிருஷ்ணராய் (29), வங்காளதேசம் ஜெய்பால் புரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்

Posted: 03 Jan 2015 09:39 PM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் இரு கண்களும் தோண்டப்பட்ட 35 வயது நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். அங்குள்ள அயோத்யா ரெயில் நிலையத்திற்கருகே உள்ள சாலையில் நேற்றிரவு முகமெங்கும் ரத்தம் வழிந்த நிலையில் அந்த நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். சுயநினைவிழந்து காணப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

காஷ்மீரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க அமித்ஷா விருப்பம்

Posted: 03 Jan 2015 08:22 PM PST

காஷ்மீரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க விரும்புவதாக அமித்ஷா கூறினார். ஆனால், கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் பயனுள்ள முடிவு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல்: விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு

Posted: 03 Jan 2015 08:15 PM PST

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததால் கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 5.40 மணிக்கு தொலைபேசி மூலம் பெங்காலி மொழியில்

சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அடைத்து வைத்து 20 நாட்கள் கற்பழிப்பு: 3 வாலிபர்கள் கைது

Posted: 03 Jan 2015 07:35 PM PST

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர். ஆனால் அவர்கள் ஜப்பானிய பெண்ணை ஏமாற்றி பதேபூர்

வாரணாசியில் முக்கியமான பகுதிகளை படம் பிடித்தவர் கைது

Posted: 03 Jan 2015 07:34 PM PST

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பல்வேறு முக்கியமான பகுதிகளை கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் படம் பிடித்து வந்தார். மேலும் தனது காரில் 3 அதிநவீன கேமராக்களை பொருத்தி வாரணாசியை சுற்றி சுற்றி வந்து படம் பிடித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டங்களுக்கான வருகையில் சாதனை படைத்த தமிழக எம்.பி.க்கள்

Posted: 03 Jan 2015 07:33 PM PST

நாட்டில் பொது தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைந்த பிறகு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டங்களுக்கு அதிக அளவில் வருகை தந்து தமிழக எம்.பி.க்கள் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு பாராளுமன்றம் கூட்டப்பட்ட மூன்று அமர்வுகளிலும் தமிழகத்தின் 39 எம்.பி.க்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்கள் 94

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: கர்நாடக ஐகோர்ட்டில் க.அன்பழகன் மனு தாக்கல்

Posted: 03 Jan 2015 06:27 PM PST

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்குமாறு க.அன்பழகன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Posted: 03 Jan 2015 03:56 PM PST

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் பாலகோபால். இவர் அமெரிக்காவில் கியாஸ் நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது கியாஸ் நிலையத்துக்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொள்ளையர்கள் சென்றனர். இந்த கொள்ளை முயற்சியை

இஸ்ரோ இடைக்கால தலைவராக சைலேஷ் நாயக் நியமனம்

Posted: 03 Jan 2015 11:05 AM PST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அதன் புதிய இடைக்கால தலைவராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி சைலேஷ் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ('இஸ்ரோ') தலைவராக கடந்த 2009-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் கே.ராதாகிருஷ்ணன். கேரள

மும்பையில் கோவில் திருவிழாவில் மதம்பிடித்த யானை மிதித்து பெண் பலி

Posted: 03 Jan 2015 08:21 AM PST

மும்பையில் 3 லட்ச மக்கள் கூடியிருந்த கோவில் திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்து வெறித்தனமாக தாக்கியது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மும்பயைில் உள்ள சதாரா மாவட்டத்தின் பாலி என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் மிகவும் பிரபலமான கண்டோபா திருவிழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். அந்த ஊர்வலத்தில் யானை கலந்து கொண்டது. அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்து வெளித்தனமாக அங்குமிங்குமாக ஓடியது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் யானையிடம்

மகாராஷ்டிராவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகள் பாதிப்பு

Posted: 03 Jan 2015 07:45 AM PST

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவடத்தில் உள்ள கர்மலா என்ற இடத்தில் சத்ரபதி சிவாஜி என்ற பள்ளி இயங்கு வருகிறது. இங்கு இன்று மதியம் 11 மணி அளவில் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பபட்டது. அதில் 20 பேர் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™