மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 70 சதவீத இந்தியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை-இந்திய சுகாதார கூட்டமைப்பு தகவல்
- டெல்லி பா.ஜனதா முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி: கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டி
- அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: சந்திரபாபு நாயுடு கருத்துக்கு தலைவர்கள் கண்டனம்
- திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை
- தெலுங்கானாவில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலி
- களியக்காவிளை அருகே கார் டிரைவரை வெட்டிக் கொன்ற பிளஸ்–2 மாணவர்கள்
- தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது
- கேரள நகைக்கடை அதிபர் வீட்டில் 77 பவுன் தங்க நகை திருட்டு
- கருப்பு பண பதுக்கல் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டம்
- நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக தகவல்
- தொழிலை விட்டு வெளியேற முயன்ற பெண் கொலை: கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
- அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைப்போம்: மம்தாவுக்கு அமித் ஷா சவால்
- மின்னணு ஆளுமைத் திறனில் முதல் இடம்: சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தேசிய விருது
- கிரண் பேடிக்கு தலாய் லாமா புகழாரம்
- இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியது
- அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம்
- மும்பை அருகே ரெயில் மோதி 4 பெண்கள் பரிதாப சாவு
- ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
- கிரண் பேடிக்கு புது தலைவலி: டெல்லி பா.ஜனதா தலைவரை முதல் மந்திரி வேட்பாளராக்க போர்க்கொடி
| 70 சதவீத இந்தியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை-இந்திய சுகாதார கூட்டமைப்பு தகவல் Posted: 20 Jan 2015 10:30 PM PST இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு மருத்துவக்காப்பீடு இல்லையென இந்திய சுகாதார கூட்டமைப்பான நேட்ஹெல்த் அறிவித்துள்ளது. இந்திய சுகாதார கூட்டமைப்பின் இரண்டாவது ஆண்டு மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு ஆண்டுக்கான மருத்துவத்துறை குறித்த 'ஆரோக்கிய பாரத் 2015' என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. |
| டெல்லி பா.ஜனதா முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி: கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டி Posted: 20 Jan 2015 09:49 PM PST டெல்லி சட்டசபைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 7–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து பா.ஜனதா கடுமையாக மோதுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதா முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியை களத்தில் இறக்கி உள்ளது. இவர் ஏற்கனவே கெஜ்ரிவாலுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியின்போது |
| அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: சந்திரபாபு நாயுடு கருத்துக்கு தலைவர்கள் கண்டனம் Posted: 20 Jan 2015 09:40 PM PST என்.டி.ராமராவ் நினைவு நாளை யொட்டி கடந்த 18–ந்தேதி ஆந்திரா முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு 18 கி.மீ. தூரம் பாத யாத்திரை சென்று கிராம மக்களை சந்தித்தார். பின்னர் கிராம மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ''ஆந்திராவில் வயதானவர்களே அதிகம் உள்ளனர். இளைஞர்கள் குறைவாகத்தான் உள்ளனர். |
| திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை Posted: 20 Jan 2015 09:29 PM PST ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், ராமாபல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சவுமியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சவுமியா நேற்று காலை திருப்பதியில் உள்ள அரசு பிரசவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதியம் 12 மணியளவில் அவருக்கு |
| தெலுங்கானாவில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலி Posted: 20 Jan 2015 09:20 PM PST தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. பின்னர் படிப்படியாக தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியது. |
| களியக்காவிளை அருகே கார் டிரைவரை வெட்டிக் கொன்ற பிளஸ்–2 மாணவர்கள் Posted: 20 Jan 2015 08:35 PM PST களியக்காவிளை அருகே உள்ள பூவாரைச் சேர்ந்தவர் சமீர் (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பியவர். சமீபகாலமாக சமீர் சொந்த ஊரில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். |
| தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது Posted: 20 Jan 2015 08:30 PM PST கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவேஷ் குமாருக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் தலைமையிலான போலீசார் அங்காடிப்புரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். |
| கேரள நகைக்கடை அதிபர் வீட்டில் 77 பவுன் தங்க நகை திருட்டு Posted: 20 Jan 2015 08:21 PM PST கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மது. தொழில் அதிபர். இவர் வீட்டுக்கு அருகில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று மது தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் |
| கருப்பு பண பதுக்கல் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 20 Jan 2015 07:20 PM PST கருப்பு பண பதுக்கல் பற்றிய விசாரணையை விரைவாக முடிக்குமாறு சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுவர உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். |
| டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டம் Posted: 20 Jan 2015 07:09 PM PST டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சதீஷ் உபாத்யாய்க்கு, தேர்தலில் போட்டியிட 'டிக்கெட்' வழங்காததை கண்டித்து, அதிருப்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு |
| நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக தகவல் Posted: 20 Jan 2015 01:36 PM PST நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தனது பதவிக்காலத்தில், நிலக்கரி இலாகாவையும் சில ஆண்டுகள் கவனித்து வந்ததால், நிலக்கரி சுரங்க |
| தொழிலை விட்டு வெளியேற முயன்ற பெண் கொலை: கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் Posted: 20 Jan 2015 08:42 AM PST ஆசியாவிலேயே விபசாரத்துக்கு பிரபலமான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் பாலியல் தொழிலை விட்டு வெளியேற முயன்ற சத்தி தாஸ் என்ற 24 வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். |
| அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைப்போம்: மம்தாவுக்கு அமித் ஷா சவால் Posted: 20 Jan 2015 08:39 AM PST மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் 7 மாத பணிகளை பட்டியலிட்ட பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க தனது கட்சி வந்துகொண்டிருப்பதாக கூறி மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| மின்னணு ஆளுமைத் திறனில் முதல் இடம்: சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தேசிய விருது Posted: 20 Jan 2015 08:36 AM PST கணினி மயமாக்கப்பட்ட மின்னணு ஆளுமைத் திறனில் சத்தீஸ்கர் புரிந்துள்ள சாதனையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கிவரும் தங்க விருது அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் புவியியல் துறை தொடர்பான தகவல்களை மின்னணு மயமாக்கியதற்காகவும், மின்னணு ஆளுமையில் 'ஜி.ஐ.எஸ்.' தொழில்நுட்பத்தை முன்னோடியாக புகுத்தியமைக்காகவும் சத்தீஸ்கருக்கு |
| கிரண் பேடிக்கு தலாய் லாமா புகழாரம் Posted: 20 Jan 2015 08:07 AM PST திபெத்திய புத்த மத பிரிவின் தலைவர் தலாய் லாமா, இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது டெல்லியின் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவருமான கிரண் பேடியை இன்று புகழ்ந்து பேசியுள்ளார். |
| இந்திய மாம்பழ இறக்குமதி மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியது Posted: 20 Jan 2015 07:56 AM PST இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் இன்று நீக்கியது. சுவையான பலவகை மாம்பழங்களுக்கு புகழ்பெற்ற இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு |
| அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம் Posted: 20 Jan 2015 06:52 AM PST மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கெகுகேடா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ரூபினா பீயை இன்று பிரசவத்திற்காக போபாலில் உள்ள அரசு சுல்தானியா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். |
| மும்பை அருகே ரெயில் மோதி 4 பெண்கள் பரிதாப சாவு Posted: 20 Jan 2015 06:43 AM PST மராட்டிய மாநிலம் தானே பகுதியில் உள்ள அசாங்கன் ரெயில் நிலையத்தில் இன்று மாலை சுமார் 3 மணியளவில் ஒரு ரெயிலில் இருந்து இறங்கிய பெண்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, வேறு ஒரு மார்க்கத்தில் இருந்து மும்பை நோக்கி சென்ற கோடான் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. |
| ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு Posted: 20 Jan 2015 06:38 AM PST கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் |
| கிரண் பேடிக்கு புது தலைவலி: டெல்லி பா.ஜனதா தலைவரை முதல் மந்திரி வேட்பாளராக்க போர்க்கொடி Posted: 20 Jan 2015 06:26 AM PST டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ முதல் மந்திரி வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், டெல்லி பிரதேச பா.ஜனதா தலைவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என சில அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி தூக்க துவங்கியுள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |