Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கங்கையில் மிதந்து வந்த 108 பிணங்கள் மீட்பு: விசாரணை நடத்த உத்தரவு

Posted: 13 Jan 2015 10:52 PM PST

புனித கங்கை நதியில் ஆழ்த்தப்படும் ஆன்மாக்கள் வீடு பேறு அடையும் என்பது வட மாநில இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் கங்கை நதியில் மூழ்கி தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதுண்டு. சில பகுதிகளில் மரணம்

தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

Posted: 13 Jan 2015 10:08 PM PST

பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் இணையத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில், ''தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்'' என்று மோடி

அக்னி மனிதர்-அவினாஷ் சந்தர் டி.ஆர்.டி.ஓ தலைவர் பதவியிலிருந்து நீக்கம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

Posted: 13 Jan 2015 10:02 PM PST

நாட்டின் ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி மைய தலைவர் அவினாஷ் சந்தரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைய 15 மாத காலம் மீதமுள்ள நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முதன்மை ஏவுகணை

சபரிமலையில் இன்று மகரஜோதி விழா: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

Posted: 13 Jan 2015 08:33 PM PST

பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30–ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கட்டுக்கு அடங்காத அளவில் பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள். பக்தர்கள் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதை

ஒபாமா வருகையின்போது டெல்லி, பெங்களூரில் குண்டு வெடிப்புக்கு சதி: கைதான 4 தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல்

Posted: 13 Jan 2015 08:32 PM PST

பெங்களூரில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய வேட்டையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 4 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு, சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரன் சாமி தரிசனம்

Posted: 13 Jan 2015 08:24 PM PST

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரன் ஆகியோர் நேற்று இரவு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருப்பதிக்கு வந்த அவர்கள், பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினர்.

ஒபாமா தங்கும் ஓட்டல் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா-மின்விளக்கு வசதி குறைபாடு: கவலையில் டெல்லி போலீஸ்

Posted: 13 Jan 2015 08:16 PM PST

இந்தியாவில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 24-ந் தேதி ஒபாமா டெல்லிக்கு வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில்

விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 13 Jan 2015 07:08 PM PST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிக்குழுவை அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க 22 ஆயிரம் முதலீட்டாளர்கள் சம்மதம்: டி.ஜெ.பாண்டியன் பேட்டி

Posted: 13 Jan 2015 07:05 PM PST

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில், கடந்த 3 நாட்களாக 'துடிப்பான குஜராத்-2015' என்ற பெயரிலான உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதன் பயனாய் அங்கு 22 ஆயிரம் முதலீட்டாளர்கள், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு

Posted: 13 Jan 2015 06:42 PM PST

கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகிய இருவரும் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக ஒரு மனு கொடுத்தனர்.

குஜராத்தில் இன்று சர்வதேச காற்றாடி விடும் திருவிழா

Posted: 13 Jan 2015 02:00 PM PST

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை அறுவடை திருவிழாவாக கொண்டாடுவதைப் போல், வட மாநிலங்களிலும் 'மகர சங்கராந்தி' விழாவை அறுவடை திருநாளாக கொண்டாடி வருகிறார். குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் இந்த விழா, ஆண்டுதோறும் காற்றாடி

பாகிஸ்தானுக்கு ராணுவ மந்திரி பாரிக்கர் கடும் எச்சரிக்கை

Posted: 13 Jan 2015 01:08 PM PST

இந்தியாவுடனான சண்டை நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி தந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், உத்தரபிரதேச

தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு

Posted: 13 Jan 2015 11:44 AM PST

டெல்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வடமேற்கு டெல்லியில், சுல்தான்பூர் மஜ்ரா

நிதி ஆயோக் துணைத் தலைவராக பனகரியா பொறுப்பு ஏற்றார்

Posted: 13 Jan 2015 11:09 AM PST

திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பை மத்திய அரசு அண்மையில் உருவாக்கியது. இதன் துணைத் தலைவர் பதவிக்கு பிரபல பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பனகரியா

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து பத்திரிகை விருது

Posted: 13 Jan 2015 10:35 AM PST

இங்கிலாந்து பத்திரிகையான சென்டிரல் பேங்கிங், 2015-ம் ஆண்டுக்கான விருதுகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு சிறந்த கவர்னர் விருது அறிவித்துள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் மாதம் 12-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்

Posted: 13 Jan 2015 09:45 AM PST

சத்தீஸ்கரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள், ஆண் பயிற்சியாளரின் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக டேபிள் டென்னிஸ்

உ.பி.யில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது

Posted: 13 Jan 2015 07:36 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள மலிஹாபாத் பகுதி மற்றும் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் உள்ள டலசாராய் கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் நேற்று விஷச் சாராயம் குடித்ததால் கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் கண் பார்வை மங்கிய நிலையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்

Posted: 13 Jan 2015 07:22 AM PST

சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது.

யமுனை ஆற்றில் பொருட்களை வீசுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 13 Jan 2015 06:11 AM PST

நாட்டின் புனித நதிகளில் ஒன்றான யமுனை ஆற்றில் புனிதப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வீசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த மனநோயாளி வாலிபர் கைது

Posted: 13 Jan 2015 06:09 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 25 வயது வாலிபரை இன்று எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™