Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை: நிதி நெருக்கடியில் திணறும் சந்திரபாபு நாயுடு அரசு

Posted: 19 Jan 2015 11:27 PM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால் அரசுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் அரசின் கஜானா காலியாகி விட்டது. கடும் நிதி நெருக்கடியில்

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி: பிரதமர் மோடியுடன் முப்தி முகமது சயீத் சந்திப்பு

Posted: 19 Jan 2015 10:15 PM PST

காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் இன்று தெண்டுல்கர் பங்கேற்ற பிரமாண்ட மாரத்தான் ஓட்டம்

Posted: 19 Jan 2015 09:32 PM PST

திருவனந்தபுரத்தில் வருகிற 31–ந்தேதி தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது. அடுத்த மாதம் 14–ந்தேதி வரை இந்த போட்டிகள் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு போட்டியை பிரபலப்படுத்த தெண்டுல்கரை விசேஷ தூதுவராக கேரள அரசு நியமனம் செய்துள்ளது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியையொட்டி இன்று பிரமாண்டமான மாரத்தான் ஓட்டப்போட்டிக்கும்

நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?: கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் அழைப்பு

Posted: 19 Jan 2015 09:12 PM PST

நாட்டின் தலைநகரான டெல்லியில் வரும் பிப்ரவரி 7-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு மீண்டும் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், ஒரு பக்கம் டெல்லி

கேரளாவில் அரசு அலுவலகங்களில் சிகரெட் பிடித்தால் சஸ்பெண்டு: உம்மன்சாண்டி நடவடிக்கை

Posted: 19 Jan 2015 08:49 PM PST

கேரளாவில் தான் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க முதன் முதலில் தடை விதிக்கப்பட்டது. அதேபோல அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்கவும் தடை உள்ளது. ஆனாலும் அரசு அலுவலகங்களுக்கு சிலர் மது அருந்தி விட்டு வருவதாகவும், புகைப்பிடிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு

Posted: 19 Jan 2015 08:46 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசித்திப் பெற்ற மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம் கடந்த 14–ந்தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் களபாபிஷேகம் மற்றும் படி பூஜை

மெஹர் தரார் எப்படி அறிமுகமானார்? துபாயில் அவருடன் நீங்கள் தங்கியிருந்தீர்களா?: தரூரிடம் போலீஸ் கேள்வி

Posted: 19 Jan 2015 08:07 PM PST

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு, டெல்லி போலீசார் தரூருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்: இங்கிலாந்து எச்சரிக்கை

Posted: 19 Jan 2015 07:28 PM PST

தீவிரவாதத்தை தடுப்பது குறித்த இந்திய-இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம், லண்டனில் நடைபெற்றது. அதில், இந்திய அதிகாரிகளும், இங்கிலாந்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில், இங்கிலாந்தில், பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பான லஸ்கர்-

பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு கேரள அரசு விருது

Posted: 19 Jan 2015 07:24 PM PST

பரதநாட்டிய கலைக்கு ஆற்றிய சேவைக்காக பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு கேரள அரசின் சுற்றுலா துறை 'நிஷாகாந்தி புரஸ்காரம்' விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. இந்த விருது ரூ.1½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.

எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jan 2015 07:10 PM PST

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலில் இடம்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய திருவிழா சடங்கு குறித்த பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதைத்தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் தன்னுடைய நாவலை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நீடிக்க தடை இல்லை

Posted: 19 Jan 2015 07:09 PM PST

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக தடை விதிக்கப்பட்ட விலங்குகளில் காளையை நீக்க நடவடிக்கை: மத்திய மந்திரி தகவல்

Posted: 19 Jan 2015 06:55 PM PST

டெல்லி பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் மீதான தடையை

5 சதவீத இறக்குமதி வரி ரத்து: யூரியா மீதான விலை கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு திட்டம்

Posted: 19 Jan 2015 06:50 PM PST

யூரியா மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கவும், 5 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் யூரியா விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்: வெளியுறவு மந்திரியுடனான சந்திப்புக்கு பின் தகவல்

Posted: 19 Jan 2015 06:38 PM PST

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீரா சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு வருமாறு அவர் விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி

Posted: 19 Jan 2015 04:06 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின்

அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜனாதிபதி கண்டிப்பு

Posted: 19 Jan 2015 02:57 PM PST

அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மத்திய அரசை எச்சரித்துள்ளார். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டெல்லி மேல்-சபையில் பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளின்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

Posted: 19 Jan 2015 02:45 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

ஒபாமாவை பாதுகாக்க அமெரிக்க வீரர்கள்: அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது

Posted: 19 Jan 2015 01:27 PM PST

குடியரசு தின அணிவகுப்பில், ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க ரகசிய

பி.சி.சி.ஐ. அதிகாரிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இல்லை: மும்பை போலீஸ் தகவல்

Posted: 19 Jan 2015 08:47 AM PST

ஐபிஎல் சூதாட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது பிசிசிஐ உயர் அதிகாரிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அணிகளின் உரிமையாளர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர் நரேஷ் மக்கானி புகார்

ஓட்டுக்கு பணம் வாங்குங்கள்: கெஜ்ரிவாலின் சர்ச்சை பேச்சு வீடியோ தேர்தல் கமிஷனிடம் ஒப்படைப்பு

Posted: 19 Jan 2015 08:12 AM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்று அனுப்பியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, உத்தம்நகர் சட்டசபை தொகுதியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™