Tamil Star |
- முதுகுவலி: டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கிளார்க்
- முதல் நாள் ஆட்டம்: 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா
- அனகோண்டாவின் வயிற்றுக்குள் சென்று ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த அதிசய பிறவி
- இளம்பெண் போல் தன்னை காட்டி இணைய குழந்தை வன்முறை வளையத்தை பிடிக்க உதவிய தந்தையின் துணிகரச் செய்கை!
| முதுகுவலி: டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கிளார்க் Posted: 09 Dec 2014 07:00 AM PST
அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் முதுகுவலி காரணமாக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரையில் அவுஸ்திரேலியா அணி 34 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடியபோது, காயத்தினால் அவதியுற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். நாட்பட்ட முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலகினார். சிக்கலின் தீவிரத்தை பொறுத்து, அடுத்து உள்ள டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்வார். இருப்பினும், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல் நாள் ஆட்டம்: 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா Posted: 09 Dec 2014 06:58 AM PST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்ஸும், டேவிட் வார்னரும் களம் இறங்கினர். தொடக்க ஜோடி சரியாக 50 ஓட்டங்கள் குவித்ததும் பிரிந்தது. ரோஜர்ஸ் (9) ஓட்டங்களில் இஷந்த் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வாட்சன் (14) ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் அபாராமாக ஆடி சதம் விளாசி அசத்தினர். மைக்கேள் கிளார்க் 60 ஓட்டங்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது முதுகுவலி காரணமாக வெளியேறினார். இதனிடையே சதம் அடித்து அசத்திய வார்னர் அணியின் ஸ்கோர் 258 ஓட்டங்களாக இருந்த போது 145 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேவி சர்மா பந்தில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மார்ஷ் 41 ஓட்டங்களிலும், லோயான் 3 ஓட்டங்களிலும் பிராட் ஹடீன் ஓட்டம் எதுவுமின்றி வெளியேறினார். அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்தது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் முகம்மது சமி, வரும் ஆரோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கேவி சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனகோண்டாவின் வயிற்றுக்குள் சென்று ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த அதிசய பிறவி Posted: 09 Dec 2014 06:51 AM PST
அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற வாலிபர் புதிதாக வித்தியாசமாக ஏதாவது வீடியோ எடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற புதுமையான நோக்கத்துடன் அனகோண்டாவின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று அதற்குள் சுமார் ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் வெளியே வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூபில் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அமேசான் காட்டை ஒருசிலர் சுயநலத்திற்காக அழித்து வருவதையும், விலங்குகளை வேட்டையாடி கொடுமைப்படுத்துவதையும் எதிர்க்கும் ஈட்டன் லைவ் என்ற நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த வீடியோ டிஸ்கவரி சேனலில் முழுவதுமாக ஒளிபரப்பப்பட உள்ளது. சுமார் இரண்டு மாத காலம் அமேசான் காட்டில் தேடியலைந்து கடைசியாக ஒரு பெண் அனகோண்டாவை பிடித்து, அதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான உடையணிந்து அனகொண்டாவில் வாய் வழியாக பால் ரொசோலி உள்லே சென்றார். அனகோண்டாவின் உடலுக்குள் சென்றாலும் வெளியில் உள்ள தனகு குழுவினர்களுடன் அவர் நவீன கருவிகள் மூலம் தொடர்பில் இருந்தார். சுமார் ஒருமணி நேரம் கழித்து அவர் அனகோண்டாவின் உடலில் இருந்து வெளியே வந்தார். இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 10 ஆம் தேதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளம்பெண் போல் தன்னை காட்டி இணைய குழந்தை வன்முறை வளையத்தை பிடிக்க உதவிய தந்தையின் துணிகரச் செய்கை! Posted: 09 Dec 2014 06:49 AM PST
கனடா- ரொறொன்ரோவை சேர்ந்த தந்தை ஒருவர் 13-வயதிற்குட்பட்ட பெண் போல் தன்னை காட்டிக்கொண்டதால் ஒகையோவை சேர்ந்த ஒரு மனிதன் கைது செய்யப்பட்டு 21-வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ரொறொன்ரோவை சேர்ந்த கிளிவ் வோட் என்பவர் குழந்தை வன்முறை வளையத்தை பிடிக்க யு.எஸ்.அதிகாரிகளிற்கு உதவியுள்ளார். இவரது 12-வயது மகளிற்கு அந்நியன் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மின்அஞ்சலை தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது. இவரது மகளிற்கு "Hey sexy." தளத்திலிருந்து மின்அஞ்சல் ஒன்று வந்துள்ளது. தனது பிள்ளைகளின் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் அனைத்திலும் தனக்கு வழங்கலை தருமாறு அவர்களை கேட்டு கொண்டார். இதனால் மகளிற்கு வந்த மின்னஞ்சல் தந்தையின் கைப்பேசிக்கு முன்னனுப்ப பட்டது. இவர் தனது மகளை அழைத்து யாரோ முறையற்ற செய்திகளை அனுப்புவதால் அவளின் கணக்குகளை தான் கையாளப்போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்தி வருவதற்கு முன்னர் தனது மகள் அரட்டை அறையில் ஒரு அந்நியருடன் தொடர்புகொண்டிருந்ததை கண்டுள்ளார். இதனால் இவர் தன்னை மகளாக காட்டி குறிப்பிட்ட நபருடன் 3-நாட்கள் வரை தொடர்பு கொண்டு அந்நியனின் முழு விபரங்களையும் சேகரித்தார். அந்நியர் 30-வயதுடைய ஒகையோவை சேர்ந்த நிக்கொலஸ் போவஸ் என கண்டுபிடிக்கப்பட்டது. செய்திகள் அனைத்தும் பாலியல் சம்பந்தமானவைகளாக இருந்துள்ளன. அரட்டை பதிவுகள் மின்னஞ்சல்கள் அனைத்தையும் வோட் ரொறொன்ரோ பொலிசாரிடம் கையளித்துள்ளார். போவெஸ் கைது செய்யப்பட்டது மட்டுமன்றி கூட்டு விசாரனை மூலம் இவர் ஒரு குழந்தை ஆபாச வளையத்துடன் தொடர்புடையவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தனது மகளிற்கெதிராக தொடர்புகொண்ட இந்த நபருக்கெதிராக சாட்சி சொல்வதற்கு வோட் ஒகையோவிற்கு அழைக்கப்பட்டார். குற்றத்தை ஒப்புகொண்ட போவெசிற்கு கடந்த வாரம் 21-வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளிற்கு வாய்ப்பளிக்கலாம் அத்துடன் அவர்களை கவனிக்கவும் வேண்டும் என கூறியதோடு இணையத்தளத்தில் உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என வோட் பெற்றோர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் முதுகுவலி காரணமாக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரையில் அவுஸ்திரேலியா அணி 34 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடியபோது, காயத்தினால் அவதியுற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். நாட்பட்ட முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலகினார். சிக்கலின் தீவிரத்தை பொறுத்து, அடுத்து உள்ள டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்வார். இருப்பினும், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்ஸும், டேவிட் வார்னரும் களம் இறங்கினர். தொடக்க ஜோடி சரியாக 50 ஓட்டங்கள் குவித்ததும் பிரிந்தது. ரோஜர்ஸ் (9) ஓட்டங்களில் இஷந்த் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய வாட்சன் (14) ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம், தொடக்க ஆட்டக்காரர் வார்னர் அபாராமாக ஆடி சதம் விளாசி அசத்தினர். மைக்கேள் கிளார்க் 60 ஓட்டங்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த போது முதுகுவலி காரணமாக வெளியேறினார். இதனிடையே சதம் அடித்து அசத்திய வார்னர் அணியின் ஸ்கோர் 258 ஓட்டங்களாக இருந்த போது 145 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேவி சர்மா பந்தில் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மார்ஷ் 41 ஓட்டங்களிலும், லோயான் 3 ஓட்டங்களிலும் பிராட் ஹடீன் ஓட்டம் எதுவுமின்றி வெளியேறினார். அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ஓட்டங்கள் குவித்தது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் முகம்மது சமி, வரும் ஆரோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, கேவி சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற வாலிபர் புதிதாக வித்தியாசமாக ஏதாவது வீடியோ எடுத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற புதுமையான நோக்கத்துடன் அனகோண்டாவின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று அதற்குள் சுமார் ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் வெளியே வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூபில் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அமேசான் காட்டை ஒருசிலர் சுயநலத்திற்காக அழித்து வருவதையும், விலங்குகளை வேட்டையாடி கொடுமைப்படுத்துவதையும் எதிர்க்கும் ஈட்டன் லைவ் என்ற நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த வீடியோ டிஸ்கவரி சேனலில் முழுவதுமாக ஒளிபரப்பப்பட உள்ளது. சுமார் இரண்டு மாத காலம் அமேசான் காட்டில் தேடியலைந்து கடைசியாக ஒரு பெண் அனகோண்டாவை பிடித்து, அதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான உடையணிந்து அனகொண்டாவில் வாய் வழியாக பால் ரொசோலி உள்லே சென்றார். அனகோண்டாவின் உடலுக்குள் சென்றாலும் வெளியில் உள்ள தனகு குழுவினர்களுடன் அவர் நவீன கருவிகள் மூலம் தொடர்பில் இருந்தார். சுமார் ஒருமணி நேரம் கழித்து அவர் அனகோண்டாவின் உடலில் இருந்து வெளியே வந்தார். இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 10 ஆம் தேதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக உள்ளது.