Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்திய போர்க்கப்பல் சுகன்யா இலங்கை சென்றது

Posted: 09 Dec 2014 10:51 PM PST

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் சுகன்யா இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு சென்றுள்ளது. நல்லெண்ண விஷயமாக சென்ற இக்கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது. 'சுகன்யா' போர்க்கப்பல் 1890 டன் எடை கொண்டது. 101.1. மீட்டர் நீளமுள்ள இக்கப்பலில் 165 வீரர்கள் உள்ளனர். இக்கப்பலில் கமாண்டராக

திருப்பதியில் தமிழக கட்சிகள் ஆர்ப்பாட்டம்: கருப்புக்கொடி காட்டிய 600 பேர் கைது

Posted: 09 Dec 2014 10:44 PM PST

இலங்கை அதிபர் ராஜபக்சே 3–வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். ராஜபக்சேவின் திருப்பதி வருகைக்கு ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம்

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா நோய் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

Posted: 09 Dec 2014 10:20 PM PST

மலேரியா நோய் 'ஏடிஸ்' கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

ஆண் விபசாரி வேலை தருவதாக 500 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஆந்திராவில் 3 பேர் கைது

Posted: 09 Dec 2014 09:42 PM PST

ஐதராபாத்தில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு ஆண் விபசாரிகள் தேவை என்றும், ரூ.10 ஆயிரம் கட்டி முன்பதிவு செய்தால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், இன்டர்நெட்டில் துக்காராம் என்பவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு போன் நம்பரும் இடம் பெற்றிருந்தது. கடந்த 1 ஆண்டாக பல நம்பர்களை மாற்றி மாற்றி கொடுத்து துக்காராம் விளம்பரம் செய்திருந்தார். இந்த நிலையில் சுமார் 500 பேர் துக்காராமிடம்

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை

Posted: 09 Dec 2014 09:05 PM PST

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ''பாரத ரத்னா விருது''. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்

பா.ஜனதா ஆட்சி மீது மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: ராகுல்காந்தி ஆவேசம்

Posted: 09 Dec 2014 08:38 PM PST

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தினார். இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்தார். அங்கு புத்தரிகண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம்

Posted: 09 Dec 2014 08:33 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வழியாக திருமலைக்கு வந்தார்.

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்

Posted: 09 Dec 2014 08:17 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி கடந்த 17–ந்தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று சபரிமலையில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரிசையில் காத்திரு

பகவத் கீதை தேசிய புனித நூல்: சுஷ்மா சுவராஜ் கருத்துக்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு

Posted: 09 Dec 2014 07:45 PM PST

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்துக்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய கம்யூனிஸ்டு

டெல்லியில் காரில் இளம்பெண் கற்பழிப்பு: குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை- ராஜ்நாத் சிங்

Posted: 09 Dec 2014 07:26 PM PST

டெல்லியில் கடந்த 5-ந் தேதி இளம்பெண் ஒருவர் கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மோடி பற்றி அவதூறு பேச்சு: திரிணாமுல் காங். எம்பி மீது கண்டன தீர்மானம் - வெங்கையா நாயுடு

Posted: 09 Dec 2014 07:21 PM PST

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ப.ஜனதா எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா பேசும்போது, "மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் அண்மையில், கட்சி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மிகவும் அவமரியாதை செய்யும் விதத்தில்

சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஆட்சேப கருத்துக்காக கைது செய்வது சரியல்ல: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

Posted: 09 Dec 2014 06:59 PM PST

சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்து தெரிவிக்கிறவர்களை, மாநில அரசுகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றன. இதற்கு தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் பிரிவு 66-ஏ வழி வகுக்கிறது. இப்படி கருத்து உரிமைக்கு எதிராக உள்ள சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடுத்துள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் இணையவழி டாக்சி சேவையை நிறுத்த உத்தரவு

Posted: 09 Dec 2014 03:09 PM PST

அமெரிக்காவைச் சேர்ந்த இணையவழி டாக்சி புக்கிங் சேவை நிறுவனமான உபேரில் பணியாற்றிய கார் டிரைவர், டெல்லியில் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லி மேல்-சபையில், இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்,

ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்ட ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் சஸ்பென்ட்

Posted: 09 Dec 2014 07:07 AM PST

டெல்லியில் இருந்து ஹரித்துவார் செல்லும் முசூரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தெற்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 5-ம் தேதி பயணம் செய்தார். அப்போது, பெண்கள் பெட்டிக்கு பாதுகாவலாக வந்த ஒரு ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். இதனையடுத்து, டெல்லி ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.பி.எப். காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

மாணவிகளை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமை ஆசிரியர் கைது

Posted: 09 Dec 2014 06:36 AM PST

சத்தீஸ்கர் மாநிலம், உர்லா மாவட்டத்தில் உள்ள சரோரா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சமீபத்தில் வேலையில் சேர்ந்த அரவிந்த் திவாரி(36), இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி வருகிறார். வகுப்பு நேரத்தில் அநாகரீகமான முறையிலும், பாலியல் வக்கிரத்துடனும்

முற்றிலும் பெண்களின் பங்களிப்பில் புதிய டி.வி.சேனல்: விரைவில் கேரளாவில் துவக்கம்

Posted: 09 Dec 2014 06:23 AM PST

கேரள மாநிலத்தில் மகளிர் இடையே நிலவி வரும் வறுமை நிலையை ஒழிக்கும் முயற்சியாக 'குடும்பஸ்ரீ' என்ற மகளிர் சுய உதவிக்குழு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சேர்ந்த பல பெண்கள் இன்று பொருளாதார நிலையிலும், சமூக ரீதியாகவும் பெரும் மேம்பாடும், தன்னிறைவும் அடைந்துள்ளனர். இந்நிலையில், முற்றிலும் மகளிரின் பங்களிப்பு மற்றும் நிர்வாகத்தில் இயங்கும் புதிய டி.வி.சேனல் ஒன்றை விரைவில் தொடங்க

3-ம் கட்ட தேர்தல்: காஷ்மீரில் 58 சதவீதம்- ஜார்க்கண்டில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு

Posted: 09 Dec 2014 05:24 AM PST

ஜம்மு- காஷ்மீரில் கடந்த இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவானது. ஆனால், இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு- காஷ்மீர் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே, இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்ட தேர்தல் 16 தொகுதிளுக்கு நடைபெற்றது.

சிறையில் இருந்து தப்பியோடிய 2 விசாரணைக் கைதிகள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

Posted: 09 Dec 2014 05:21 AM PST

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் சாய்பாஸா சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள 53 கைதிகளை உள்ளூர் கோர்ட்டில் இன்று ஆஜர்ப்படுத்திய சிறைக் காவலர்கள், மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர். சிறை வாசலில் இவர்களை கணக்கெடுத்து உள்ளே அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

உ.பி.யில் உறைப்பனி, குளிருக்கு 16 பேர் பலி

Posted: 09 Dec 2014 05:02 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. கம்பளம் விரித்ததுபோல் உறைந்திருக்கும் பனியினால் விமானம், ரெயில் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உறைப்பனியின் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் பாரபங்கி மாவட்டத்தில் 5 பேரும், பதேபூர் மாவட்டத்தில் 3 பேரும், பஸ்ட்டி மாவட்டத்தில் 3 பேரும்,

திருப்பதி வந்தார் ராஜபக்சே: தமிழக ஊடகங்களுக்கு ஆந்திர போலீசார் அனுமதி மறுப்பு

Posted: 09 Dec 2014 04:49 AM PST

ரேணிகுண்டா, டிச. 9– மூன்றாவது முறையாகவும் அரியணை ஏறும் ஆசையில் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சே திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி வந்தடைந்தார். இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணியளவில் ரேணிகுண்டா வந்து இறங்கிய அவருக்கு ஆந்திர மாநில போலீசார்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™