Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மண்டேலா வாழ்விலிருந்து பாடம் கற்க வேண்டியது இந்நாட்டு ஜனாதிபதிதான்! – மனோ கணேசன்

Posted: 08 Dec 2014 08:09 AM PST

BIO-MANDELA-RALLY

BIO-MANDELA-RALLYநெல்சன் மண்டேலா ஒரு மாமனிதர் என்பதற்கு ஏனையவற்றை விட இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சுதந்திர போரில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், தோல்வியுற்ற வெள்ளையர்களை அவர் பழிவாங்கவில்லை. இரண்டு, ஒருமுறைக்கு மேல் ஜனாதிபதி பதவியில் இருக்கும்படி நாட்டு மக்களும் , கட்சியும் எதிர்பார்த்தும் கூட அவர் அதை மறுத்து ஓய்வு பெற்றார். இங்கே போரில் புலிகளுக்கு எதிராக பெற்ற வெற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக பெற்ற வெற்றியாக கணிக்கப்படுகிறது. அதைவிட அது இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது, ஆயுட்காலம் முழுக்க ஜனாதிபதி பதவியில், ஒருவரையும் அவரை தொடர்ந்து அவர் குடும்பத்தையும் வைத்திருக்க முயற்சி நடக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ் சங்கத்தில் மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் ஏற்பாட்டில் ஜனநாயக இளைஞர் இணையம் நடத்திய நெல்சன் மண்டேலா முதலாம் ஆண்டு நினைவுரை நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, மண்டேலாவின் வாழ்வை மூன்று பிரதான பாகங்களாக பார்க்கலாம். ஒன்று, சாத்வீக போராளியாக அடிமைபட்டு கிடந்த தென்னாபிரிக்க கறுப்பு இனத்தவரை ஊர் ஊராக சென்று, உரையாடி, தட்டி எழுப்பியது. அடுத்தது, சாத்வீக மொழியை காது கொடுத்து கேட்க மறுத்த வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி கைதாகி, 26 வருடங்கள் சிறையில் வாழ்வை கழித்தது. அப்போதும்கூட தான் ஆயுதம் தூக்கியது தவறு என ஏற்றுக்கொண்டு அவர் சிறையில் இருந்து விடுதலை பெரும் சந்தர்ப்பத்தை வெள்ளை அரசு தந்த போது அவர் அதை மறுத்துவிட்டார். ஆயுதம் தூக்க தாம் மனநோயாளிகள் அல்ல. ஆயுதம் தூக்கும் நிலைமையை, ஒடுக்குமுறையாளன் தான் உருவாக்குகின்றான் என அவர் திடமாக நம்பினார். மூன்றாவது, சிறையில் இருந்து வெளிவந்து, வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பை ஏற்று, பதவிக்கு வந்ததும், தன்னை துன்புறுத்திய வெள்ளை இனத்தவரை பழிவாங்க மறுத்தது. நிறவெறி அரசு தலைவரையே தனது உப ஜனாதிபதியாக நியமித்து, ஒரு உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு அடிகோலியது. அதுமட்டுமல்ல, அவர் விரும்பியிருந்தால், அவரது ஆயுட்காலம் பூராகவும் அவர் தனது ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கலாம் என்ற சூழல் நிலவிய போதும், அதை மறுத்து, ஒரேமுறையுடன் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று தன் சொந்த கிராமத்துக்கு திரும்பியது. ஆகவேதான் சொல்கிறேன். நாம் இங்கே நெல்சன் மண்டேலாவின் நினைவு தினம் அனுஷ்டிக்கின்றோம். அவர் விட்டு சென்ற படிப்பினைகளை கவனத்தில் கொள்கிறோம். ஆனால், அவை எங்களை விட இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துக்கு தான் கட்டாயமாக தேவைப்படுகிறது. இன்று நமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், தனது முதல் உரையில் மண்டேலா பற்றியும், மகாத்மா காந்தி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மைத்திரி ஒரு மண்டேலா அல்ல. மகாத்மா காந்தியும் அல்ல. உண்மையில் இந்த மாமனிதர்களின் வாழ்க்கை கற்று தந்த பாடங்களை இவர் எந்த அளவு கடைபிடிக்கப் போகின்றார் என்பதை எதிர்காலம் தான் காட்ட வேண்டும். இவரது இத்தகைய பேச்சை கேட்டு, நம்பி நாம் இவரை ஆதரிக்கவில்லை. இன்று இருக்கும் சூழலில் இருந்து கொஞ்சம் முன்னோக்கி நகரவே நாம் இந்த இராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறோம். அதைவிட இந்த பொது எதிரணி முன்னெடுப்பில் வேறு விஷேசம் இல்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: மூன்றாமிடத்தை பிடிக்குமா இந்தியா?

Posted: 08 Dec 2014 02:24 AM PST

TEST_1_941307f

TEST_1_941307fஐ.சி.சி. டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடைசியாக வெளியிட்ட சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இந்திய அணி 96 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் தென் ஆப்ரிக்கா (124 புள்ளி), அவுஸ்திரேலியா (117), இங்கிலாந்து (104), பாகிஸ்தான் (103), இலங்கை (101) அணிகள் உள்ளன. இப்பட்டியலில் இந்திய அணி மூன்றாமிடத்தை கைப்பற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி 4–0 அல்லது 3–0 என தொடரை கைப்பற்றும் பட்சத்தில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ஒருவேளை 2–0 என வென்றால் 4வது இடத்துக்கும், 1–0 என வென்றால் 5வது இடத்துக்கும் முன்னேறும். தொடர் சமனில் (0–0, 1–1, 2–2) முடியும் பட்சத்தில் இரு அணிகளும் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இந்திய அணி 3–1 என தொடரை கைப்பற்றினால் 104 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொள்ளும். இருப்பினும் தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைக்கும் ஒருவேளை 2–1 என வென்றால் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைக்கும். அதேவேளையில் 0–4, 0–3 என தொடரை இழந்தால் இந்திய அணி 7வது இடத்துக்கு தள்ளப்படும். அவுஸ்திரேலிய அணி முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. தொடரை 4–0 என வென்றால் 120 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறும். ஒருவேளை 3–0 என வென்றால் 119 புள்ளிகளுடன் தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை முந்தி முதலிடத்தை பிடிக்கும். மற்றபடி 2–0, 1–0, 3–1, 2–1 என தொடரை வென்றால் அவுஸ்திரேலிய அணி 2வது இடத்தில் நீடிக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டோனி `அவுட்’: அணித்தலைவராக களமிறங்கும் கோஹ்லி

Posted: 08 Dec 2014 02:17 AM PST

dhoni_kohli_001

dhoni_kohli_001அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி விளையாடமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா–அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (9ம் திகதி) தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி விளையாடவில்லை. கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட மாட்டார். இதனால் இந்திய அணிக்கு விராட் கோஹ்லி அணித்தலைவராக பணியாற்றுவார். அவர் முதல் முறையாக டெஸ்ட் அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். விர்த்திமான் சகா விக்கெட் கீப்பராக இடம் பெறுவார். பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய், ஹிகர் தவான், தற்காலிக அணித்தலைவர் விராட் கோஹ்லி, புஜாரா முத்திரை பதித்தார்கள். வேகப்பந்தில் வருண் ஆரோன், இஷாந்த் சர்மா, முகமதுஷமி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், கரண்சர்மா ஆகிய இருவர் இடம்பெறலாம். அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் உடல் தகுதி பெற்றதால் நாளைய டெஸ்டில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. வார்னர், வாட்சன், ரோஜர்ஜ், சுமித், ஹாடின் போன்ற சிறந்த துடுப்பாட்டக்காரகளும், மிச்சேல் ஜான்சன், பீட்டர்சிடில், ரியான் ஹாரிஸ், ஹாஸ் லேவுட் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். மேலும் ஹியூக்ஸ் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியால் நாளைய டெஸ்ட்டில் முழு திறமையை வெளிப்படுத்த இயலுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அவுஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும். கடந்த முறை (2011–12) அவுஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்று 'ஒயிட்வாஷ்' ஆனது. அது மாதிரியான மோசமான நிலை மீண்டும் அமையாமல் இருக்க இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிரம் காட்டும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ல் எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி,கனடிய முன்னணி வங்கிகளின் லாபத்தில் பெரும் பாதிப்பு!

Posted: 08 Dec 2014 02:11 AM PST

IMG_1920-1024x681

IMG_1920-1024x681கனடாவில் ஐந்து வருடங்களில் என்றும் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி கண்டமை கனடிய முன்னணி வங்கிகளின் லாபத்தைப் பாதித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி கடனாக வழங்குவது மற்றும் சேவைகள் மூலம் கனடிய வங்கிகள் அவற்றின் வருவாயில் 20 சதவீதமானவற்றைப் பெற்று வருகின்றன. ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை 70 டொலரிலும் பார்க்க குறைந்துள்ளதாலும் எண்ணெய் தேவை குறைந்து செல்வதாலும் எண்ணெய் துறை மூலம் பெறப்படும் வருவாய் குறைந்துள்ளது. அதனால் முதலீட்டுக்கு வேறு மார்க்கங்களை நாட வேண்டியுள்ளது என TD வங்கி அறிவித்துள்ளது. எண்ணெய் விலை குறைந்து செல்வதால் எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன்களை உரிய வேளையில் செலுத்தத் தவறும் பட்சத்தில் வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாதிக்கப்பட்ட பிலிப்பின்ஸ் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அந்நாட்டுக்கு உதவ கனடா தயார் – ஜோ ஒலிவர்

Posted: 08 Dec 2014 02:06 AM PST

joe-oliver

joe-oliverசூறாவளியினால் பாதிக்கப்பட்டிருக்கும் பிலிப்பின்ஸ் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அந்நாட்டுக்கு உதவ கனடா ஆயத்தமாக இருப்பதாக நிதி அமைச்சர் ஜோ ஒலிவர் (Joe Oliver) அறிவித்தார். பிலிப்பின்ஸ் நாட்டுக்கு எவ்வகையில் உதவுவது என்பது குறித்து கனடா ஆராந்து வருகிறது. அதேவேளை, பிலிப்பின்ஸ்சில் உள்ள கனடியர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்கனவே குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் கூறினார். சேதம் குறித்த விபரங்களை அறிவதற்காக பிலிப்பின்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டர் தாபனங்களுடன் சமஷ்டி அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர் எனவும் அமைச்சர் ஜோ ஒலிவர் தெரிவித்தார். கடந்த வருடம்; நவம்பர் மாதம் பிலிப்பின்ஸ்சில் வீசிய சூறாவளியில் 7300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்களும் தாபனங்களும் வழங்கிய நிதிக்கு சமமாக கனடிய அரசும் நிதி உதவி செய்தது. சுமார் 90 மில்லியன் டொலர்கள் பிலிப்பின்ஸ்க்கு கடந்த வருடம் வழங்கப்பட்டது எனவும் நிதி அமைசர் ஒலிவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™