Tamil Star |
- என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
- திருப்பதி செல்லும் ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி: வைகோ அறிவிப்பு
- போலீஸார் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க செய்த அதிரடி வியூகம்?
- TTC பேரூந்திற்கடியில் அகப்பட்ட பெண் தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்டார்!
| என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த Posted: 06 Dec 2014 04:13 AM PST
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இதனைச் செய்ய முடியாது என்பதால் தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக்கொடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு அபயமளித்ததற்கு எனக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ள பிரதிபலன் இதுதானா என நான் சம்பந்தப்பட்ட சூழ்ச்சியாளர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்றுக்க' சங்க உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த கருத்து வெளியிடுகையில், அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு போவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னைத் தோல்வியுறச் செய்து யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் மின்சாரக் கதிரைக்கு அனுப்புவதே அதன் நோக்கம். ஜனாதிபதியாக நான் பதவி வகிக்கும் வரை என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் இத்தகைய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. "தோல்வியுறச் செய்துதாருங்கள் நாம் அவரைக் கொண்டு சென்று சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் நிறுத்துவோம்" என்றே சம்பந்தப்பட்டவர்கள் கோருகின்றனர். இதற்கு மறைமுகமாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஹர்சவும் விஜேசிங்கவும் செயற்படுகின்றனர். இதுவே தற்போதைய நிலமை. எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நாம் உயிர்தானம் வழங்கியதற்கு எமக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதான். நாடு பற்றி சிந்திக்காத மக்கள் பற்றி சிந்திக்காதவர்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தாய் நாடு மீது நம்பிக்கைகொண்டு தாய் நாட்டின் மீதான உணர்வைக் கொண்டிருப்பதே எம் ஒவ்வொருவரதும் கடமையாக வேண்டும். நாம் எதிர்கால சந்ததி மட்டுமன்றி பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காகவுமே இந்த நாட்டை கட்டியெழுப்பி வருகிறோம். இது முக்கியமாகும். இல்லாவிட்டால் இன்று உள்ளதை சாப்பிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகள் போல் செயற்படுவதல்ல. அவ்வாறு சிந்திக்கும் சமூகம் எமக்குத் தேவையில்லை. நாம் மக்களின் மேம்பாடு தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகையில் எமக்கெதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பயந்து நாம் செயற்படாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்றது பெருமளவு நிதி செலவானது பெறுமதியான மனித உயிர்கள் இழக்கப்பட்டன. எனினும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாவிட்டால் தொடர்ந்து அரசு மாறி மாறி வந்தால் அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருப்பதி செல்லும் ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி: வைகோ அறிவிப்பு Posted: 06 Dec 2014 04:11 AM PST
வரும் 9ம் தேதி திருப்பதி செல்லும் இலங்கை அதிபர் ராஜபக்வுக்கு எதிராக கறுப்புக் கொடி அறப்போர் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடியின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்ச வந்த போது, தமிழகத்தில் இருந்து 1200 பேருடன் சென்று பட்சி சோலையில் பகலிலும் இரவிலும் நெடுஞ்சாலையில் அறப்போர் நடத்திக் கைதானோம். அதன் பின்னர் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வரப் போவதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் டெல்லிக்குச் சென்று பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். எனவே டெல்லிக்கு வராமல் பீகாரில் இருந்தே திரும்பிப் போனான். முன்பு திருப்பதிக்கு வந்தபோது ம.தி.மு.க.வினர் காவல்துறையின் கெடுபிடிகள் தடைகளைக் கடந்து மகிந்தனுக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள். 1750 இந்துக் கோயில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்சே. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற ராஜபக்ச, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறான். ஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறான். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறான். ராஜபக்ச வருகையை மத்திய அரசு .ரகசியமாக வைத்து இருக்கின்றது. இந்தியாவிற்குள் ராஜபக்ச என்றைக்கு வந்தாலும், ம.தி.மு.க. அவனது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தும் என அறிவித்து இருக்கிறோம். எனவே, 9ம் தேதி அன்று திருப்பதிக்கு வரும் ராஜபக்சவை எதிர்த்து, ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலையில் கறுப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கட்சித் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போலீஸார் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க செய்த அதிரடி வியூகம்? Posted: 06 Dec 2014 04:06 AM PST
டொரண்டோவில் நேற்று போலீஸார் திடீரென வாகன ஓட்டுனர்கள் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுகிறார்களா? என்பது குறித்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்ற தகவல் சரியாக தெரியவில்லை எனினும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பலர் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்று டொரண்டோவின் முக்கிய சாலையில் திடீரென குவிந்த போலீஸார், அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டுனர்களை ( மது குடித்தவர்களை) விசாரணை செய்தனர். மேலும் திடீரென வாகன ஓட்டிகளை சோதனை செய்த மாதிரி காட்டிக்கொள்ளாமல் அந்த பகுதியில் ஒரு கார் விபத்துக்குள்ளானதுபோல் போலீஸாரே ஒரு தோற்றத்தை ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே விபத்துக்குள்ளான ஒரு காரை அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிதாக விபத்து ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த விபத்தை விசாரணை செய்ய வந்ததுபோல ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் பின்னர் அந்த பகுதி வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது குறித்த தகவலை போலீஸார் இது வரையில் வெளியிடவில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| TTC பேரூந்திற்கடியில் அகப்பட்ட பெண் தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்டார்! Posted: 06 Dec 2014 04:04 AM PST
கனடா- ரொறொன்ரோ யோர்க் பல்கலைக்கழக வளாகத்தில் 27-வயதுடைய பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் TTC பேரூந்து ஒன்றின் அடியில் அகப்பட்டு கொண்டுள்ளார். பேரூந்தினால் தரிப்பிடத்தில் மோதப்பட்டு பின்னர் பேரூந்திற்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளார். அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவசர சேவைப்பிரிவினர் கட்டைகளை உபயோகித்து பேரூந்தை நிலத்தில் இருந்து மேலே உயர்த்தி பெண்ணை வெளியே எடுத்தனர். கடுமையான காயங்களுடன் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிராபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இதனைச் செய்ய முடியாது என்பதால் தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக்கொடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு அபயமளித்ததற்கு எனக்குப் பெற்றுக்கொடுக்கவுள்ள பிரதிபலன் இதுதானா என நான் சம்பந்தப்பட்ட சூழ்ச்சியாளர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்றுக்க' சங்க உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த கருத்து வெளியிடுகையில், அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு போவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னைத் தோல்வியுறச் செய்து யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் மின்சாரக் கதிரைக்கு அனுப்புவதே அதன் நோக்கம். ஜனாதிபதியாக நான் பதவி வகிக்கும் வரை என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாத காரணத்தால் இத்தகைய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. "தோல்வியுறச் செய்துதாருங்கள் நாம் அவரைக் கொண்டு சென்று சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் நிறுத்துவோம்" என்றே சம்பந்தப்பட்டவர்கள் கோருகின்றனர். இதற்கு மறைமுகமாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஹர்சவும் விஜேசிங்கவும் செயற்படுகின்றனர். இதுவே தற்போதைய நிலமை. எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நாம் உயிர்தானம் வழங்கியதற்கு எமக்குக் கிடைக்கும் பிரதிபலன் இதுதான். நாடு பற்றி சிந்திக்காத மக்கள் பற்றி சிந்திக்காதவர்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தாய் நாடு மீது நம்பிக்கைகொண்டு தாய் நாட்டின் மீதான உணர்வைக் கொண்டிருப்பதே எம் ஒவ்வொருவரதும் கடமையாக வேண்டும். நாம் எதிர்கால சந்ததி மட்டுமன்றி பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காகவுமே இந்த நாட்டை கட்டியெழுப்பி வருகிறோம். இது முக்கியமாகும். இல்லாவிட்டால் இன்று உள்ளதை சாப்பிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகள் போல் செயற்படுவதல்ல. அவ்வாறு சிந்திக்கும் சமூகம் எமக்குத் தேவையில்லை. நாம் மக்களின் மேம்பாடு தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகையில் எமக்கெதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பயந்து நாம் செயற்படாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்றது பெருமளவு நிதி செலவானது பெறுமதியான மனித உயிர்கள் இழக்கப்பட்டன. எனினும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாவிட்டால் தொடர்ந்து அரசு மாறி மாறி வந்தால் அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வரும் 9ம் தேதி திருப்பதி செல்லும் இலங்கை அதிபர் ராஜபக்வுக்கு எதிராக கறுப்புக் கொடி அறப்போர் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடியின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான். மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்ச வந்த போது, தமிழகத்தில் இருந்து 1200 பேருடன் சென்று பட்சி சோலையில் பகலிலும் இரவிலும் நெடுஞ்சாலையில் அறப்போர் நடத்திக் கைதானோம். அதன் பின்னர் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வரப் போவதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் டெல்லிக்குச் சென்று பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். எனவே டெல்லிக்கு வராமல் பீகாரில் இருந்தே திரும்பிப் போனான். முன்பு திருப்பதிக்கு வந்தபோது ம.தி.மு.க.வினர் காவல்துறையின் கெடுபிடிகள் தடைகளைக் கடந்து மகிந்தனுக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள். 1750 இந்துக் கோயில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்சே. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற ராஜபக்ச, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறான். ஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறான். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறான். ராஜபக்ச வருகையை மத்திய அரசு .ரகசியமாக வைத்து இருக்கின்றது. இந்தியாவிற்குள் ராஜபக்ச என்றைக்கு வந்தாலும், ம.தி.மு.க. அவனது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தும் என அறிவித்து இருக்கிறோம். எனவே, 9ம் தேதி அன்று திருப்பதிக்கு வரும் ராஜபக்சவை எதிர்த்து, ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலையில் கறுப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கட்சித் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
டொரண்டோவில் நேற்று போலீஸார் திடீரென வாகன ஓட்டுனர்கள் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுகிறார்களா? என்பது குறித்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்ற தகவல் சரியாக தெரியவில்லை எனினும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பலர் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்று டொரண்டோவின் முக்கிய சாலையில் திடீரென குவிந்த போலீஸார், அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டுனர்களை ( மது குடித்தவர்களை) விசாரணை செய்தனர். மேலும் திடீரென வாகன ஓட்டிகளை சோதனை செய்த மாதிரி காட்டிக்கொள்ளாமல் அந்த பகுதியில் ஒரு கார் விபத்துக்குள்ளானதுபோல் போலீஸாரே ஒரு தோற்றத்தை ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே விபத்துக்குள்ளான ஒரு காரை அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிதாக விபத்து ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த விபத்தை விசாரணை செய்ய வந்ததுபோல ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அதன் பின்னர் அந்த பகுதி வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது குறித்த தகவலை போலீஸார் இது வரையில் வெளியிடவில்லை.
கனடா- ரொறொன்ரோ யோர்க் பல்கலைக்கழக வளாகத்தில் 27-வயதுடைய பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் TTC பேரூந்து ஒன்றின் அடியில் அகப்பட்டு கொண்டுள்ளார். பேரூந்தினால் தரிப்பிடத்தில் மோதப்பட்டு பின்னர் பேரூந்திற்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளார். அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவசர சேவைப்பிரிவினர் கட்டைகளை உபயோகித்து பேரூந்தை நிலத்தில் இருந்து மேலே உயர்த்தி பெண்ணை வெளியே எடுத்தனர். கடுமையான காயங்களுடன் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிராபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.