Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


டுவிட்டர் தளம் தரும் அதிரடி வசதி

Posted: 04 Dec 2014 05:31 AM PST

twitter_repoter

twitter_repoterமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது பயனர்களின் நலன் கருதி புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சமூக வலைத்தளங்களின் ஊடாக இன்று பல்வேறு அத்துமீறல்கள் நிகழ்கின்றன. இவ்வாறான டுவீட்களை செய்பவர்களை தடை செய்யும் முகமாக அல்லது அவர்கள் தொடர்பாக ரிப்போட் செய்யும் முகமாக Block or Report எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்லைன் மூலமான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கும் டுவிட்டர் சேவை எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியினை தரவுள்ளது. தற்போது இச்சேவை சிறிய குழுவாக உள்ள பயனர்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாப்பிட்ட உடன் வயிறு வீங்கிக் கொள்கிறதா? இதோ அருமையான மருந்து!

Posted: 04 Dec 2014 05:27 AM PST

seeragam_001

seeragam_001சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறதே என்று பலர் அதிகமாக கவலை கொள்வார்கள். இப்படி வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரணக் கோளாறு நீங்கும் அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். பஞ்ச தீபாக்கினி சூரணம் வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த 'பஞ்ச தீபாக்கினி சூரணம்'. அல்சர் நோய் தீரும் சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். பித்த தலைவலி போக்கும் சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரட்டை சாதனை படைத்த சங்கக்காரா!

Posted: 04 Dec 2014 05:12 AM PST

sangakkara

sangakkaraஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டங்கள் எடுத்தது. இதில் சங்கக்காரா 63 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக இவர் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13,050 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (18,426 ஓட்டங்கள்), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (13,704), இலங்கையின் ஜெயசூரியா (13,430) உள்ளனர். பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 21 ஓவர் முடிந்திருந்த போது 2 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதில் குக்கை (34 ஓட்டங்கள்) விக்கெட் கீப்பர் சங்கக்காரா கேட்ச் செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்க செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்தார். இவர் இதுவரை 473 பேரை (386 ஆட்டம்) வெளியேற்றி இருக்கிறார். அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 472 பேரை (287 ஆட்டம்) ஆட்டமிழக்கச் செய்ததே இதற்கு முன்பு விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!

Posted: 04 Dec 2014 05:08 AM PST

srilanka_england

srilanka_englandஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் மூன்றாவது போட்டி ஹம்பாந்தோட்ட சூரியவெவ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் தொடக்கத்திலேயே மழை குறுக்கிட்டதால், 35 ஓவர்களை கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறாத பட்சத்தில் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. எனினும் பின்னணி துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். 35 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக சங்கக்காரா 63 ஓட்டங்களையும் லஹிரு திரிமன்னே 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 35 ஓவர்களில் 236 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக் 34 ஓட்டங்களும், மொயீன் அலி 58 ஓட்டங்களும் எடுத்து, வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். மத்தியதர துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். பின்னர், ஜோஸ் பட்லரும், ஜோ ரூட்டும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இங்கிலாந்து அணி 33.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 48 ஓட்டங்களுடனும், பட்லர் 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலெங்கும் தோலுரிந்த நிலை! மருந்தின் பக்கவிளைவால் அழகிழந்த பெண்

Posted: 04 Dec 2014 05:03 AM PST

epilipsy_girl_002

epilipsy_girl_002அவுஸ்ரேலியாவில் வலிப்பு நோயிற்காக இளம்பெண் ஒருவர் சாப்பிட்டு வந்த மருந்து, அவருக்கு பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் (Sydney) வசிக்கும் டானிகா ஹெரோன் (Danika Heron Age-19) என்ற இளம்பெண்ணுக்கு, தனது 18 வயது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது. எனவே அவர் மருத்துவரை நாடி மருந்துங்கள் உட்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், திடீரென இவருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலிப்புக்கான மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நாங்கள் சரியான மருந்தை தான் இப்பெண்ணுக்கு கொடுத்தோம் என்றும் கோடியில் ஒருவருக்கு இந்த மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் ஹெரோனின் உடல் மற்றும் முகம் முழுவதும் தோல் உரிந்த நிலையில் உள்ளது. மேலும் அவர் எந்த நோரத்திலும் இறக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாட்சி சொல்ல வந்த சிறுமிக்கு ஆதரவாக வந்த சேவை நாய்!

Posted: 04 Dec 2014 05:00 AM PST

dog

dogகனடாவில் பயிற்றப்பட்ட சேவை நாய் ஒன்று பாலியல் குற்ற வழக்கில் சாட்சிசொல்ல வந்த சிறுமிக்கு உதவுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. கனடாவில் 7-வயது பெண் ஒருத்தியின் தந்தை தனது பிள்ளையையும் மனைவியையும் ஆயுதம் பாவித்தும் கட்டாயமாக அடைத்து வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்தததாக குற்றம் சாட்டப்பட்டார். தனது தந்தைக்கு எதிராக சாட்சியம் சொல்ல வந்த இச்சிறுமிக்கு Hawkஎன்ற இந்த நாய் உதவியுள்ளது. கல்கரி நீதிமன்றத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் சாட்சி சொல்ல வந்த சிறுமிக்கு அருகில் 4-வயது நாய் அமர்ந்திருந்தது. சிறுமி சாட்சி சொல்லும் போது தனது ஆதரவை வழங்குவதற்காக அங்கு வந்ததென அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய சாட்சியங்களிற்கு ஆதரவு வழங்க மக்களை நீதிமன்றத்தில் அனுமதிக்க அல்பேர்ட்டா மாகாணத்தின் சட்டம் இடமளிக்கின்றது. ஆனால் இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி Hawk ஐ அனுமதித்துள்ளது. குழந்தைக்கு இது ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துமாதலால் அனுமதிப்பதில் தவறில்லை என நீதிபதி கூறினார். கனடாவில் மொத்தம் நான்கு பயிற்றப்பட்ட சேவை நாய்கள் உள்ளன எனவும் ஆனால் இதுவரை நீதிமன்ற அறைக்குள் உபயோகிக்கப்பட்வில்லை என்றும் தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு!

Posted: 04 Dec 2014 04:52 AM PST

Basil Rajapaksa

Basil Rajapaksaசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூவ் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட கட்சியின் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்துக்கு இன்னும் வராத நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதன் தொடராகவே நாளைய சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசரினால் நிராகரிப்பு!

Posted: 04 Dec 2014 04:45 AM PST

Rajabaksa

Rajabaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுமென்றே நாட்டின் அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவர் ரதன பண்டார உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 18ம் திருத்தச் சட்டம் வெகுசன வாக்கெடுப்புக்கு எடுக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் எனவும், உடனடியாக அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். அந்தப் பதவிக்கு பிரதமர், சபாநாயகர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதிலும், சபாநயகரும், பிரதமரும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாவும், எதிர்கசித் தலைவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரும் காரணத்தினால் ஜனாதிபதிப் பதவியை தம்மிடம் வழங்குமாறு மனுவில் ரதன பண்டார கோரியுள்ளார். இந்த மனு சுயலாப நோக்கில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பொதுநல நோக்கில் தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு இவ்வாறு மனு தாக்கல் செய்வது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். எனினும், வழக்கு விசாரணை செய்வதற்கு போதிய சட்ட ஏதுக்கள் குறிப்பிடப்படாத காரணத்தினால் வழக்கை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவுடன் கருத்து வேறுபாடு! புதிய இராணுவ அமைச்சர் விரைவில் நியமனம்?

Posted: 04 Dec 2014 04:31 AM PST

obama-mil

obama-milஅமெரிக்க அதிபர், ஜனநாயக கட்சியை சேர்ந்த, பாரக் ஒபாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராணுவ அமைச்சர் பதவியிலிருந்து, சுக் ஹேஜெல், கடந்த மாதம் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அமைச்சராக, ஆஷ்டன் கார்ட்டர், 60, விரைவில் நியமிக்கப்படுவார் என, அமெரிக்க பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஒபாமா நிர்வாகத்தில், பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ள கார்ட்டர், நியமனம் குறித்து, CNN செய்திகள் கூறும் போது, 'கடைசி கட்டத்தில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் இருந்தால், அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சராக, ஆஷ்டன் கார்ட்டர் தான் நியமிக்கப்படுவார்' என, தெரிவித்து உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேட்டாவின் முதல்வர்கள் எண்ணைக் குழாய்ப் பாதை குறித்துப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்!

Posted: 04 Dec 2014 04:27 AM PST

Kathleen Wynne, Jim Prentice

Kathleen Wynne, Jim Prenticeஅல்பேட்டாவில் இருந்து கனடாவின் கிழக்கு மாகாணங்களுக்கு எண்ணையைக் கொண்டுசெல்வதற்கு அமைக்கத் திட்டமிடப்படும் Energy East குழாய்ப் பாதை குறித்து அல்பேட்டா, மற்றும் ஒன்றாரியோவின் முதல்வர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். அந்தக் குழாய்ப் பாதையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஆராயப்படவேண்டிய ஏழு விடயங்களை ஒன்றாரியோவும், குபெக்கும் முன்வைத்தன. நேற்று முன்தினம் குபெக் முதல்வரைச் சந்தித்த அல்பேட்டாவின் முதல்வர் ஜிம் பிறென்டிஸ், நேற்று ஒன்றாரியோவின் முதல்வரைச் சந்தித்தார். அந்தக் குழாய் பாதையின் மூலம் ஒன்றாரியோவிலும், குபெக்கிலும் வெளிவிடப்படும் புவி வெப்பமாவதை ஊக்குவிக்கும் வாயுக்களின் வெளியேற்றம் குறித்து மட்டும் அக்கறை கொண்டிருப்பதாக ஒன்றாரியோவின் முதல்வர் கத்லின் வின் கூறினார். அல்பேட்டாவில் மசகு எண்ணையை நிலத்தில் இருந்து அகழ்வது, சுத்திகரிப்பது, மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றின் காரணமாக வெளியாகும் புவி வெப்பமாவதை ஊக்குவிக்கும் வாயுக்களைக் கருத்தில் எடுக்கப்போவதில்லையென அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™