மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஒபாமா வருகைக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம்
- பாராளுமன்றத்தில் வாயில் கறுப்பு துணி கட்டி ராகுல் காந்தி நூதன போராட்டம்
- விமானத்தில் உயர் வகுப்பில் கெஜ்ரிவால் வெளிநாடு பயணம்: பா.ஜனதா, காங். கண்டனம்
- ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 ராணுவத்தினர், 2 காவல்துறையினர் பலி
- கொலம்பியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
- ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணை மானியம் அடியோடு ரத்தாகிறது
- சந்திரபாபு நாயுடு அரசை கண்டித்து ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜா ஆர்ப்பாட்டம்
- இளங்குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் திட்டத்துக்கு ஆதரவு கிடையாது: மத்திய அரசு
- பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க கேரளா எதிர்ப்பு
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் உடல் நலனுக்கு தீங்கு என்பதற்கு ஆதாரமில்லை: மத்திய மந்திரி
- ஜார்க்கண்டில் சுரங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மாவோயிஸ்டுகளால் கடத்தல்
- தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
- பஞ்சாபில் கண் பார்வை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற 60 பேருக்கு பார்வை பறிபோனது
- சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மரணம்: மோடி இரங்கல்
- ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
- உத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு
- டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரிகளை களம் இறக்க காங்கிரஸ் திட்டம்?
- ஜம்மு, ரஜவுரியில் ராஜ்நாத் சிங் நாளை தேர்தல் பிரச்சாரம்
- சர்ச்சையில் சிக்கிய மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதியின் பொதுக்கூட்டம் இன்றும் ரத்து
- கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து
| ஒபாமா வருகைக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் Posted: 04 Dec 2014 11:18 PM PST ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26–ந்தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு வெளிநாட்டு தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். இந்த முறை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமாவுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்த போதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். |
| பாராளுமன்றத்தில் வாயில் கறுப்பு துணி கட்டி ராகுல் காந்தி நூதன போராட்டம் Posted: 04 Dec 2014 11:13 PM PST மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, சிறுபான்மையினரை புண்படுத்தும் விதமாக தவறான கருத்துகளை தெரிவித்த மந்திரி நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கோரியுள்ளதாகவும், கிராமப்புற பின்புலம் கொண்ட அவர் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், எனவே |
| விமானத்தில் உயர் வகுப்பில் கெஜ்ரிவால் வெளிநாடு பயணம்: பா.ஜனதா, காங். கண்டனம் Posted: 04 Dec 2014 10:07 PM PST ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எளிமையை கடைபிடிப்பதாக கூறி வந்தார். டெல்லியில் முதல்–மந்திரியாக பதவி ஏற்க மெட்ரோ ரெயிலில் வந்தார். அவரது கட்சியினர் எளிமையை கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். முதல்–அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஆடம்பர வீட்டில் தங்க மாட்டேன் என்று கூறினார். என்றாலும், அவர் ஆடம்பரமாக வாழ்கிறார். கட்சிக்கு அதிக அளவில் |
| ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 ராணுவத்தினர், 2 காவல்துறையினர் பலி Posted: 04 Dec 2014 09:43 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சர்வதேச எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள உரி நகரத்திலுள்ள, இராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவத்தினர் மற்றும் 2 காவலர்கள் பலியாகினர். தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலை 3.30 மணியளவில், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி |
| கொலம்பியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 04 Dec 2014 09:19 PM PST ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழ் பெற்ற கொலம்பிய பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாட இருப்பதாக, நேற்று அமெரிக்காவில் உள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் காரணமாக, 24 மணி நேரம் மட்டுமே நியுயார்க் நகரில் அவர் தங்கி இருப்பார் என்று சிகாகோவைச் |
| ரேஷனில் வழங்கப்படும் மண்எண்ணை மானியம் அடியோடு ரத்தாகிறது Posted: 04 Dec 2014 09:16 PM PST தற்போது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மண்எண்ணைக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் குறைந்த விலையில் மண்எண்ணை கிடைக்கிறது. மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. மேலும் நாடு முழுவதும் சமையல் கியாஸ் விநியோகத்தை அதிகரித்தும் மின்சார |
| சந்திரபாபு நாயுடு அரசை கண்டித்து ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜா ஆர்ப்பாட்டம் Posted: 04 Dec 2014 09:14 PM PST சந்திரபாபு நாயுடு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிபடி விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது உதவித் தொகை வழங்க வேண்டும், மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. 13 மாவட்டத்திலும் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் |
| இளங்குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் திட்டத்துக்கு ஆதரவு கிடையாது: மத்திய அரசு Posted: 04 Dec 2014 08:47 PM PST இளம் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. தொடர்ந்து சர்ச்சை நீடித்து வரும் இந்த விவகாரம் தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி டெல்லி மேல்-சபையில் நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் |
| பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க கேரளா எதிர்ப்பு Posted: 04 Dec 2014 08:30 PM PST நதிநீர் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரளாவின் பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்கும் திட்ட யோசனையை தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. |
| மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் உடல் நலனுக்கு தீங்கு என்பதற்கு ஆதாரமில்லை: மத்திய மந்திரி Posted: 04 Dec 2014 08:25 PM PST நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தனது எழுத்துப் பூர்வமான பதிலில் "உலகின் பல நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயாபீன் மற்றும் பருத்தி போன்றவை சாகுபடி |
| ஜார்க்கண்டில் சுரங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மாவோயிஸ்டுகளால் கடத்தல் Posted: 04 Dec 2014 08:10 PM PST ஜார்க்கண்டில் சுரங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டம், சைபாசா அருகே உள்ள சுரங்கங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நால்வரும் சென்றனர். அவர்களை நேற்று மாலை 4 மணியளவில் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றதாக |
| தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை: மத்திய நிதி அமைச்சகம் தகவல் Posted: 04 Dec 2014 08:03 PM PST 2015-16-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இப்போது 10 சதவீதம் வரி |
| பஞ்சாபில் கண் பார்வை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற 60 பேருக்கு பார்வை பறிபோனது Posted: 04 Dec 2014 08:01 PM PST பஞ்சாப், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 60 பேருக்கு கண் பார்வை பறிபோனது. அரசு சாரா நிறுவனம் நடத்திய இந்த கண் சிகிச்சை முகாமில், அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும், குர்தாஸ்பூர் அருகே உள்ள |
| சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மரணம்: மோடி இரங்கல் Posted: 04 Dec 2014 06:45 PM PST சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி, மனித உரிமை போராளி, கேரள மாநிலத்தின் முன்னாள் சட்ட மந்திரி, 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என பல வகைகளில் நாடு முழுவதும் அறிமுகமாகி, பிரபலமாக விளங்கி வந்தவர் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர். |
| ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு Posted: 04 Dec 2014 04:01 PM PST தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே வாக்குறுதி அளித்தார். அதன்படி வேளாண்மை கடன் தள்ளுபடி அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டார். ஒரு விவசாயி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தால் அந்த தொகை ஒரே |
| உத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு Posted: 04 Dec 2014 10:00 AM PST சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மதியம் மும்பையில் கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரே, மகன்கள் ஆதித்ய தாக்கரே மற்றும் தேஜாஸ் ஆகியோர் உடனிருந்தனர். கவர்னரின் மனைவி வினோதா ராவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். |
| டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரிகளை களம் இறக்க காங்கிரஸ் திட்டம்? Posted: 04 Dec 2014 09:12 AM PST டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இழந்த ஆட்சியை பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஏற்கனவே 35 வேட்பாளர் பெயரை வெளியிட்டுள்ளார். நூலிழையில் வாய்ப்பை இழந்த பா.ஜனதா, மத்தியில் ஆட்சியை பிடித்ததுபோல் டெல்லியிலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் |
| ஜம்மு, ரஜவுரியில் ராஜ்நாத் சிங் நாளை தேர்தல் பிரச்சாரம் Posted: 04 Dec 2014 08:12 AM PST ஜம்மு- காஷ்மீரில் ஐந்து கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் நாளை ஜம்மு, ரஜவுரி மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 இடங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். |
| சர்ச்சையில் சிக்கிய மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதியின் பொதுக்கூட்டம் இன்றும் ரத்து Posted: 04 Dec 2014 07:52 AM PST பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதியை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி வரும் சூழ்நிலையில், இரண்டாவது நாளாக அவரது பொதுக்கூட்டத்தை பா.ஜனதா ரத்து செய்துள்ளது. விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள டெல்லியில் பா.ஜனதா |
| கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து Posted: 04 Dec 2014 07:25 AM PST 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்ட பஞ்சாயத்து, அரசமரத்து பஞ்சாயத்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த பஞ்சாயத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில், 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |