Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வேன் என்கிறார் மகிந்த

Posted: 23 Dec 2014 03:05 AM PST

Rajabaksa

rajapaksaதனது மூன்றாவது பதவிக் காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதி செய்வதுடன், புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச உறுதியளித்துள்ளார். இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனைவரினதும் ஆதரவுடன் நான் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவேன். ஏனைய கட்சிகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. மஹிந்த சிந்தனை என்ற ஒன்று மாத்திரமே எனது நிலைப்பாடு. இது தேர்தலுடன் மறக்கப்படும் வாககுறுதியல்ல எனவும் குறிப்பிட்டார். நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே.- எனவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள்: சம்பிக்க

Posted: 23 Dec 2014 03:02 AM PST

sambikka

sampikkaவடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கின் இராணுவ முகாம்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்படும் என அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் பிழையானது. அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது பிழையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ உடன்படிக்கையிலோ 50 வீதம் இராணுவ முகாம்கள் வடக்கில் குறைக்கப்படும் என உறுதியளிக்கப்படவில்லை. அரசாங்கம் பிழையானதும் பொய்யானதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிட்டகோட்டே பொலிஸ் அரங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட உடன்படிக்கையில் வடக்கில் 50 வீத இராணுவ முகாம்கள் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்:ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசிப்பிடங்கள் பாரிய சேதம்!

Posted: 23 Dec 2014 02:35 AM PST

crab1-600x336

crab1-600x336ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது 16 முறை வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈராக்கின் வடக்கு பகுதியில் சின்ஜார் அருகே 4 முறை போர் விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசிப்பிடங்கள், வாகனங்கள், போர் தளவாடங்கள் அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. தால்அப்கார், ரமாடி, மொசூல், பாய்ஜி ஆகிய நகரங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் துர்கிஷ் எல்லைப்பகுதியில் உள்ள கோபானி நகர் அருகே 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேருந்து ஓட்டுனர்களுக்கான பயிற்சி தொடர்பாக முழுமையான மீளாய்வு மேற்கொள்ளப்படும் -தலைவர் அன்டி பைஃபோர்ட்

Posted: 23 Dec 2014 02:33 AM PST

c

cகனடா டொராண்டோ ரி.ரி.சி பொதுப் போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுனர்களுக்கான பயிற்சி தொடர்பாக முழுமையான மீளாய்வு மேற்கொள்ளப்படுமென ரி.ரி.சி அறிவித்துள்ளது. ஸ்காபுறோவில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுமி, பேருந்தால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை ரி.ரி.சியின் தலைவர் அன்டி பைஃபோர்ட் (Andy Byford) இன்று வெளியிட்டார். பேருந்துகள் மற்றும் Street Car ஓட்டுனர்கள் பணிக்கு சேர்க்கப்படுவது, அவர்களுக்கான பயிற்சி, மற்றும் கண்காணிப்பு போன்றவை தொடர்பாக மீளாய்வு செய்யுமாறு ரி.ரி.சி நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் கவலைக்குரிய இந்த விபத்து தொடர்பாக அனைவருமே அதிர்ச்சி அடைந்திருப்பதாக, அன்டி பைஃபோர்ட் இன்று கூறினார். ரி.ரி.சி நிறுவனம் ஏற்கனவே மிகவும் நுணுக்கமான பயிற்சி முறையைக் கொண்டிருந்தாலும், இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு மீளாய்வு மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 அளவில் Neilson & Finch சந்திப்பிற்கு அருகில் 14 வயதுடைய Amaria Diljohn என்ற சிறுமி வீதியைக் கடந்த சமயம் பேருந்தினால் மோதப்பட்டு உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™