Tamil Star |
- இனவாத பிரசாரத்தின் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சி
- கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க
- கனடாவுக்கு அனுப்புவதாக பருத்தித்துறை பெண் பல இலட்சம் மோசடி
- அமெரிக்காவில் நடுவானில் பிறந்த ஆண் குழந்தை. கேப்டன் உள்பட பயணிகள் வாழ்த்து!
| இனவாத பிரசாரத்தின் மூலம் அரசியல் இலாபம் தேடும் முயற்சி Posted: 11 Dec 2014 04:39 AM PST
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிரணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 28 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஆளும் கட்சியும் பொது எதிரணியும் ஈடுபட உள்ளன. இந்த நிலையில் இனவாத ரீதியான பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கூட்டமைப்பானது தமிழ் மக்களின் நலன் கருதிய முடிவினையே தாம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இதுவரை எந்தவித உதவியினையும் செய்யவில்லை. இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையை நாம் உடனடியாக நிராகரிக்கப் போவதில்லை. மாறாக அவரது கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இரண்டு தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இன்னமும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தனது தீர்மானத்தை அறிவிக்காதநிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன் எதிரணியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் நாடு மீண்டும் பிரிவினைக்கு செல்லவுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. கடந்த வாரம் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இன்னமும் கட்சி தீர்மானிக்கவில்லை. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியினருடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே தெரிகின்றது என்று கூறியிருந்தார். பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஜனாதிபதி இவ்வாறு தெரிவிப்பதற்கு முதல் நாள் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. செனவிரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளனர். இந்த உடன்படிக்கை குறித்து தெற்கு மக்கள் தெரிந்துகொண்டால் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் அதனை இரகசியமாக வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திரிகாவும் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளமையின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும். குறிப்பாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் சாத்தியமும் உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் பல அமைச்சர்களும் இத்தகைய குற்றச்சாட்டுக்ளை சுமத்திவருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு ஒருபடி மேல் போய் ஆளும் தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஐ.தே.க. தலைமையிலான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இது நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்துக்கு தள்ளிவிடும் என்று அவர் கூறியிருக்கின்றார். இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த போது திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறான ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கவேயில்லை. தற்போது ஆளும் தரப்புக்கு மாறியவுடன் ஒப்பந்தம் குறித்து அவர் கூறிவருகின்றார். ஆளும் தரப்பில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவோ மறைமுக ஆதரவினை பெறவேண்டிய அவசியமோ எமக்கு இல்லை. பொய்யான கருத்துக்களைக் கூறி எதிரணியினர் மீது சேறுபூசவே ஆளும் கட்சியினர் முனைந்து வருகின்றனர். எமது கூட்டணிக்கு அனைவரது ஆதரவும் உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார். இவ்வாறு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஆனால் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. கூட்டமைப்பு இன்னமும் எவருடனும் ஒப்பந்தம் செய்ததாக தெரியவில்லை. அப்படித்தான் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது அரசியல் இலாபத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர யதார்த்தபூர்வமாக நோக்குகையில் அது தவறான நடைமுறையாகும். இதனை சகல தரப்பினரும் கருத்தில் கொள்வது நல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கம்மன்பில விலகியமை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!– சம்பிக்க ரணவக்க Posted: 11 Dec 2014 04:37 AM PST
முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில கட்சியை விட்டு விலகியமை கட்சியை பாதிக்காது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில ஆளும் கட்சியுடன் மீள இணைந்து கொண்டமை குறித்து ஊடகங்களுக்கு சற்று முன்னர் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உதய கம்மன்பில என்பவர் மற்றுமொரு அரசியல் வாதி மட்டுமே. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கம்மன்பில மீள இணைந்து கொள்வதனால் ஜாதிக ஹெல உறுமயவிற்கோ எனக்கோ பிரச்சினை கிடையாது. கம்மன்பில என்பவர் ஓர் சிறந்த அரசியல்வாதி. அவருக்கு எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தாம் நம்பும் கொள்கையின் அடிப்படையில் அவர் தீர்மானம் எடுத்திருக்கின்றார். கம்மன்பிலவின் தீர்மானம் தொடர்பில் எமக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனினும், கம்மன்பில தொடர்பில் இறுதியில் மக்களே தீர்மானிப்பார்கள் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவுக்கு அனுப்புவதாக பருத்தித்துறை பெண் பல இலட்சம் மோசடி Posted: 11 Dec 2014 04:31 AM PST
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறை மணல் வீதியை சேர்ந்தவரிடம் 24 இலட்சம் ரூபாய் பணமோசடி செய்த வியாபாரிமூலையைச் சேர்ந்த 49 வயது பெண்ணொருவர், புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார் என காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கனடாவுக்கு அனுப்புவதாக சந்தேகநபரான பெண் கூறியதை நம்பி, வங்கியில் 20 இலட்சம் ரூபாயை வைப்பிலிட்டதுடன், 4 இலட்சம் ரூபாயை நேரடியாக கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மூன்று தடவைகள் கொழும்புக்கு அழைத்து சென்றும், வெளிநாட்டுக்கு தன்னை அனுப்பாததையடுத்து, சந்தேகநபரான பெண்ணுக்கு எதிராக காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரான பெண்ணை, கைது செய்ததாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் நடுவானில் பிறந்த ஆண் குழந்தை. கேப்டன் உள்பட பயணிகள் வாழ்த்து! Posted: 11 Dec 2014 04:29 AM PST
அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஃபீனிக்ஸ் நகரம் நோக்கி நேற்று முன் தினம் ஒரு விமானம் புறப்பட்டது. சான்பிராசிஸ்கோ நகரில் விமானத்தில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கையை விட ஃபீனிக்ஸ் நகரில் அதே விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் எண்ணிக்கை ஒன்று அதிகமாக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் விமானத்திலேயே குழந்தை பெற்றதுதான் இதற்கு காரணம். நேற்று முன் தினம் மாலை Southwest Airlines flight 623 என்ற விமானம் சான்பிராசின்ஸ்கோ நகரில் இருந்து கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி வந்தது. விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோர்களின் உதவியால் அந்த பயணிக்கு சுகப்பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. விமானத்தின் கேப்டன் உள்பட பயணிகள் அனைவரும் குழந்தை மற்றும் அதன் தாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிரணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 28 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஆளும் கட்சியும் பொது எதிரணியும் ஈடுபட உள்ளன. இந்த நிலையில் இனவாத ரீதியான பிரசாரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. கூட்டமைப்பானது தமிழ் மக்களின் நலன் கருதிய முடிவினையே தாம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இதுவரை எந்தவித உதவியினையும் செய்யவில்லை. இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதியை ஆதரிப்பதன் மூலம் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையை நாம் உடனடியாக நிராகரிக்கப் போவதில்லை. மாறாக அவரது கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இரண்டு தடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இன்னமும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் தனது தீர்மானத்தை அறிவிக்காதநிலையில் அரசாங்கத் தரப்பிலிருந்து கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதுடன் எதிரணியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் நாடு மீண்டும் பிரிவினைக்கு செல்லவுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. கடந்த வாரம் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருவது தொடர்பில் இன்னமும் கட்சி தீர்மானிக்கவில்லை. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியினருடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாகவே தெரிகின்றது என்று கூறியிருந்தார். பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஜனாதிபதி இவ்வாறு தெரிவிப்பதற்கு முதல் நாள் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.ஜே. செனவிரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளனர். இந்த உடன்படிக்கை குறித்து தெற்கு மக்கள் தெரிந்துகொண்டால் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் அதனை இரகசியமாக வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சந்திரிகாவும் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளமையின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும். குறிப்பாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் சாத்தியமும் உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் பல அமைச்சர்களும் இத்தகைய குற்றச்சாட்டுக்ளை சுமத்திவருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு ஒருபடி மேல் போய் ஆளும் தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஐ.தே.க. தலைமையிலான மைத்திரிபால சிறிசேன, கூட்டணி இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இது நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்துக்கு தள்ளிவிடும் என்று அவர் கூறியிருக்கின்றார். இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக இருந்த போது திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறான ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கவேயில்லை. தற்போது ஆளும் தரப்புக்கு மாறியவுடன் ஒப்பந்தம் குறித்து அவர் கூறிவருகின்றார். ஆளும் தரப்பில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவோ மறைமுக ஆதரவினை பெறவேண்டிய அவசியமோ எமக்கு இல்லை. பொய்யான கருத்துக்களைக் கூறி எதிரணியினர் மீது சேறுபூசவே ஆளும் கட்சியினர் முனைந்து வருகின்றனர். எமது கூட்டணிக்கு அனைவரது ஆதரவும் உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார். இவ்வாறு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஆனால் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. கூட்டமைப்பு இன்னமும் எவருடனும் ஒப்பந்தம் செய்ததாக தெரியவில்லை. அப்படித்தான் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவது அரசியல் இலாபத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர யதார்த்தபூர்வமாக நோக்குகையில் அது தவறான நடைமுறையாகும். இதனை சகல தரப்பினரும் கருத்தில் கொள்வது நல்லது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறை மணல் வீதியை சேர்ந்தவரிடம் 24 இலட்சம் ரூபாய் பணமோசடி செய்த வியாபாரிமூலையைச் சேர்ந்த 49 வயது பெண்ணொருவர், புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார் என காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கனடாவுக்கு அனுப்புவதாக சந்தேகநபரான பெண் கூறியதை நம்பி, வங்கியில் 20 இலட்சம் ரூபாயை வைப்பிலிட்டதுடன், 4 இலட்சம் ரூபாயை நேரடியாக கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மூன்று தடவைகள் கொழும்புக்கு அழைத்து சென்றும், வெளிநாட்டுக்கு தன்னை அனுப்பாததையடுத்து, சந்தேகநபரான பெண்ணுக்கு எதிராக காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவில் கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரான பெண்ணை, கைது செய்ததாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஃபீனிக்ஸ் நகரம் நோக்கி நேற்று முன் தினம் ஒரு விமானம் புறப்பட்டது. சான்பிராசிஸ்கோ நகரில் விமானத்தில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கையை விட ஃபீனிக்ஸ் நகரில் அதே விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் எண்ணிக்கை ஒன்று அதிகமாக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் விமானத்திலேயே குழந்தை பெற்றதுதான் இதற்கு காரணம். நேற்று முன் தினம் மாலை Southwest Airlines flight 623 என்ற விமானம் சான்பிராசின்ஸ்கோ நகரில் இருந்து கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி வந்தது. விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோர்களின் உதவியால் அந்த பயணிக்கு சுகப்பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. விமானத்தின் கேப்டன் உள்பட பயணிகள் அனைவரும் குழந்தை மற்றும் அதன் தாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.