மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்துவாக மதம் மாறினால் 5 லட்சம் ரூபாய் அன்பளிப்பு: இந்து அமைப்பு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு
- திருப்பதி: ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி
- மலைப்பாதையில் வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக பீதி: திருப்பதியில் போலீஸ் குவிப்பு
- ஒபாமா வரும்போது தீவிரவாதிகள் தாக்க சதி: போலீஸ் கட்டுப்பாட்டில் டெல்லி ராஜபாதை
- தென் மாநிலங்களில் நாசவேலைக்கு சிமி தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
- ஐ.என்.எஸ். கோதாவரி போர்க்கப்பலில் 24 வயது கப்பற்படை பொறியாளர் தற்கொலை
- இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை
- மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி அறிவிப்பு
- நாடு முழுவதும் மத நல்லிணக்கம் பேணப்படும்: மத்திய அரசு உறுதி
- நெருக்கடி நிலையை கொண்டு வர இந்திரா காந்திக்கு யோசனை கூறியது யார்?: பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக தகவலால் பரபரப்பு
- குலசேகரப்பட்டினத்தில் விண்கல ஏவுதளத்தை உடனே அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
- மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை தேச பக்தர் என்பதா?: பாஜக எம்.பி. பேச்சால் மேல்-சபையில் அமளி
- மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு
- மது பார் உரிமத்துக்கு லஞ்சம்: கேரள நிதி மந்திரி மீது வழக்கு பதிவு
- உமர் அப்துல்லா பிரசாரம் செய்த மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு
- சிட்பண்ட் மோசடி வழக்கில் பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. உள்பட 16 பேருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஜம்மு-காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளுக்கு பணியவில்லை என்பதை அதிக வாக்குப்பதிவு காட்டுகிறது: பாரிக்கர்
- கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
- ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள்: மோடி
- உ.பி.யில் கட்டாமணக்கு பழம் சாப்பிட்ட 29 குழந்தைகள் பாதிப்பு
| இந்துவாக மதம் மாறினால் 5 லட்சம் ரூபாய் அன்பளிப்பு: இந்து அமைப்பு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு Posted: 11 Dec 2014 11:27 PM PST உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் 'தரம் ஜக்ரன் சமிதி' என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களில் வினியோகிக்கப்பட்டது. அதில் இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லிம்க்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் |
| Posted: 11 Dec 2014 10:37 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், 2–ந் தேதி வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவும் நடக்க உள்ளன. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| மலைப்பாதையில் வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக பீதி: திருப்பதியில் போலீஸ் குவிப்பு Posted: 11 Dec 2014 10:32 PM PST ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேற்று 4 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசியபோது, கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், திருப்பதி மலைப்பாதையில் சாலை ஓரம் |
| ஒபாமா வரும்போது தீவிரவாதிகள் தாக்க சதி: போலீஸ் கட்டுப்பாட்டில் டெல்லி ராஜபாதை Posted: 11 Dec 2014 09:49 PM PST ஒபாமா வரும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி ராஜபாதை இப்போதே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. வருகிற ஜனவரி மாதம் 26–ந்தேதி டெல்லியில் நடை பெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லி குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒருவர் |
| தென் மாநிலங்களில் நாசவேலைக்கு சிமி தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை Posted: 11 Dec 2014 09:47 PM PST தடை செய்யப்பட்ட சிமி தீவிரவாதி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மத்திய பிரதேச சிறையில் இருந்து கடந்த ஆண்டு தப்பினார்கள். தப்பிச் சென்ற சிமி தீவிரவாதிகள் அயிஜுதீன், ஆசாந்த் கான், அஸ்லாம், ஜாகீர் உசேன், மொகபூப்குட்டு, சாலிக் என்ற சல்லு ஆகிய 6 பேர் தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடித்து உள்ளனர். |
| ஐ.என்.எஸ். கோதாவரி போர்க்கப்பலில் 24 வயது கப்பற்படை பொறியாளர் தற்கொலை Posted: 11 Dec 2014 09:14 PM PST ஐ.என்.எஸ். கோதாவரி போர்கப்பலில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றும் 24 வயதான கப்பற்படை அதிகாரி நரோட்டம் சிங் டோமர் நேற்று அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். |
| இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை Posted: 11 Dec 2014 09:09 PM PST சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள ராமசமுத்திரம் செல்லும் சாலை ஓரம் ஒரு கிணற்றில் பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புங்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் அஞ்சனப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று |
| மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி அறிவிப்பு Posted: 11 Dec 2014 08:48 PM PST மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது. அதை 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்று டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், |
| நாடு முழுவதும் மத நல்லிணக்கம் பேணப்படும்: மத்திய அரசு உறுதி Posted: 11 Dec 2014 07:17 PM PST உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்த ஒரு பிரிவினருக்கு கவர்ச்சி வாக்குறுதிகள் அளித்து மற்றொரு மதத்துக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் |
| Posted: 11 Dec 2014 03:52 PM PST நெருக்கடி நிலையை கொண்டு வர இந்திரா காந்திக்கு யோசனை கூறியது யார்? என்ற தகவலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அரசியலில் 45 ஆண்டு காலம் பழுத்த அனுபவமிக்கவர். மத்திய மந்திரிசபையில் நிதி, ராணுவம், வெளியுறவு என முக்கிய துறைகளில் மந்திரி பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பை பெற்றிருந்தவர். |
| குலசேகரப்பட்டினத்தில் விண்கல ஏவுதளத்தை உடனே அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. Posted: 11 Dec 2014 03:36 PM PST குலசேகரப்பட்டினத்தில் விண்கல ஏவுதளத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்ற மாநிலங்களவையில் (மேல்-சபை) தி.மு.க. குழு தலைவர் கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 2-வது ஏவுதளத்தை தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று |
| மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை தேச பக்தர் என்பதா?: பாஜக எம்.பி. பேச்சால் மேல்-சபையில் அமளி Posted: 11 Dec 2014 03:14 PM PST மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை தேச பக்தர் என பாரதீய ஜனதா எம்.பி. புகழ்ந்து பேசிய சர்ச்சையால், டெல்லி மேல்-சபையில் அமளி ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி., சாக்ஷி மகாராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "கோட்சே வேதனைக்குள்ளான ஒரு மனிதர். அவர் தவறுதலாக சில காரியங்களை செய்திருக்கலாம். ஆனால் அவர் தேச |
| மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு Posted: 11 Dec 2014 02:50 PM PST சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பை அமல்படுத்த கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது. இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த வரிவிதிப்பு முறையை 2016 ஏப்ரல் மாதம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை இதன் கீழ் கொண்டுவரவும் முடிவு செய்தது. |
| மது பார் உரிமத்துக்கு லஞ்சம்: கேரள நிதி மந்திரி மீது வழக்கு பதிவு Posted: 11 Dec 2014 01:14 PM PST கேரளாவில் மது பார் உரிமத்துக்கு லஞ்சம் பெற்றதாக மாநில நிதி மந்திரி மாணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவில் மது பார்களை மூட மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு கேரள பார் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாநிலம் முழுவதும் மீண்டும் மதுபார்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். |
| உமர் அப்துல்லா பிரசாரம் செய்த மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு Posted: 11 Dec 2014 08:13 AM PST ஜம்மு- காஷ்மீரில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வருகிற 14-ந்தேதி 4-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் அனைத்துக் கட்சி தலைவர்களும் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு- காஷ்மீர் முதல் மந்திரியாக இருக்கும் உமர் அப்துல்லா ஷோபியான் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய இருந்தார். அந்த மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு |
| Posted: 11 Dec 2014 07:00 AM PST ஒடிசாவின் சிட்பண்ட் நிறுவனமான அர்த்த தத்வா நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. பிரவாத் திரிபாதி, முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் மொகந்தி உள்பட 16 பேர் மற்றும் அர்த்த தத்வா உள்ளிட்ட 7 கம்பெனிகளுக்கு எதிராக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி, பரிசு சீட்டு மற்றும் பண சுழற்சி தடைச்சட்டத்தை மீறுதல் மற்றும் |
| ஜம்மு-காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளுக்கு பணியவில்லை என்பதை அதிக வாக்குப்பதிவு காட்டுகிறது: பாரிக்கர் Posted: 11 Dec 2014 06:49 AM PST ஜம்மு- காஷ்மீரில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. 4-ம் கட்ட தேர்தல் வருகிற 14-ந்தேதி நடைபெற இருக்கிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஜம்மு-காஷ்மீர் மக்களை பணிய வைக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் அதிக அளவில் வாக்குககளை பதிவு செய்ததன் மூலம் தீவிரவாதிகளுக்கு அடிபணியவில்லை என்பதை காட்டுகிறது என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் Posted: 11 Dec 2014 04:30 AM PST சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், கடந்த 7-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (வயது 32) கைது செய்யப்பட்டார். பின்னர் கார் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி |
| ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள்: மோடி Posted: 11 Dec 2014 04:19 AM PST ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மோடி கூறுகையில், "பாதுகாப்புதுறையில் இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக ரஷ்யா தொடரும். இந்திய அணுசக்தி மின் உற்பத்தியில் கூடங்குளத்தின் பங்கு 20 விழுக்காடு. கூடங்குளத்தில் |
| உ.பி.யில் கட்டாமணக்கு பழம் சாப்பிட்ட 29 குழந்தைகள் பாதிப்பு Posted: 11 Dec 2014 02:44 AM PST உத்தர பிரதேசத்தில் விஷத்தன்மை கொண்ட காட்டாமணக்கின் பழங்களை சாப்பிட்ட 29 குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆட்ராலியா பகுதியில் உள்ள ஐஸ்வர்பூர் பாவ்னி கிராமத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. 5 வயது முதல் 16 வயதுள்ள இவர்கள் காட்டாமணக்கின் பழங்களை சாப்பிட்டுள்ளனர். இதனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு அசாதாரண நிலையை அடைந்தனர். உடனே அவர்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |