Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இரத்த அழுத்தமா? பேஷன் ஃபுருட் சாப்பிடுங்க!

Posted: 01 Dec 2014 03:39 AM PST

passion_fruit

passion_fruitதாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் என்ற பழம் மலைப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. தென் அமெரிக்காவை தாயமாக கொண்ட இந்த பழம் பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம் வைட்டமின் ஏ,பி மற்றும் சி என அனைத்தும் நிரம்பிய இந்த பழம் கண்களையும், சர்மத்தையும் பாதுகாக்க உதவும் இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுகின்றது. இந்த பழத்தை ஜூஸ் அல்லது சாலடை போல் செய்து சாப்பிடுவதால், உடல் சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி சுவாச கோளாறுகளில் இருந்து விடுபட இந்த பழம் ஒரு சிறந்த மருந்து. இப்பழத்தின் மூலம் தயாரிக்கப்படும் பேசியோ என்ற மதுபானத்தை அளவாக அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது. இந்த பழத்தை சாப்பிடுவதால், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, உணவை ஜீரணமடைய செய்வதிலும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் தினமும் இப்பழத்தை எடுத்து கொள்ளலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தீயணைப்பு படைவீரர்களின் அட்டகாசமான நடனம்….

Posted: 01 Dec 2014 03:27 AM PST

VIDEO DE LA PRIMERA COMPAÑIA DE BOMBEROS DE ACHAO

VIDEO DE LA PRIMERA COMPAÑIA DE BOMBEROS DE ACHAO

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன் பிடிக்கச் சென்றவர்களை பறந்து பறந்து தாக்கும் மீன்கள்!

Posted: 01 Dec 2014 03:16 AM PST

maxresdefault

maxresdefault

This posting includes an audio/video/photo media file: Download Now

புற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்காய்: ஆய்வில் தகவல்

Posted: 01 Dec 2014 03:02 AM PST

cancer_treatment

cancer_treatmentபுற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் காய்கறிகளான பூசணிக்காய், வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளதாக மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர். வெள்ளரி வகையை சேர்ந்த இந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அவற்றின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள் மருந்துகளில் இந்தியர்களும், சீனர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் இவர்கள் வெள்ளரி வகை காய்கறிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்காய்களில் பி.ஐ.பி.டி என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகள் சிறப்பு தன்மையுடன் உள்ளன. இவை "டி.என்.ஏ"வுடன் தொடர்பு கொண்டவை. இவைகள், புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் படைத்தவைகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Firefox பாவனையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

Posted: 01 Dec 2014 03:00 AM PST

firefox_search

firefox_searchஉலகில் அதிகளவான பயனர்களால் பாவனை செய்யப்படுகின்ற முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் தேடுதல் வேகத்தை அதிகரிக்க Mozilla நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக புதிய தேடுதல் இடைமுகம் Firefox உலாவில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் பயன்படுத்தப்படும் இணையத்தளங்கள் உட்பட பிரபல்யமான சொற்களை உட்புகுத்தும்போது அத்தளங்கள் வரிசைப்படுத்தப்படும். இதில் தேட வேண்டிய சொல்லின் மீது ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் தேடுதலை விரைவுபடுத்தலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பின்னியெடுத்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே: புகழ்ந்து தள்ளும் மேத்யூஸ்

Posted: 01 Dec 2014 02:55 AM PST

srilanka_2nd_odi

srilanka_2nd_odiஇளம் வீரர்கள் சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் அளித்த பேட்டியில், இந்திய தொடரின் போது நாங்கள் முழுவது நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம் இழந்த நம்பிக்கை மீண்டும் கிடைத்துள்ளது. முக்கியமாக களத்தடுப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தது. டில்ஷான் நல்ல தொடக்கம் கொடுத்தார். இதன் காரணமாக விக்கெட்டுகள் விழாமல் பார்த்து கொள்ள முடிந்தது. அனுபவ வீரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா நல்ல ஒரு இன்னிங்ஸை விளையாடினர். அணியில் இருக்கும் இளம் வீரர்கள் இவர்களிடம் இருந்து அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் 5 போட்டிகள் இருக்கின்றன. இதில் அதிகமான கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா- அவுஸ்திரேலியா டெஸ்ட்: போட்டிக்கான திகதிகள் அறிவிப்பு

Posted: 01 Dec 2014 02:53 AM PST

dhoni_clark_001

dhoni_clark_001இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான திகதிகளை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அமைப்பு அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் 4ம் திகதி நடக்கவிருந்தது. அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து முதல் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 9ம் திகதி அடிலெய்ட்டில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்: டிசம்பர் 9-13, அடிலெய்ட். இரண்டாவது டெஸ்ட்: டிசம்பர் 17-21, பிரிஸ்பேன். மூன்றாவது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன். நான்காவது டெஸ்ட்: ஜனவரி 6-10, சிட்னி

This posting includes an audio/video/photo media file: Download Now

இஸ்லாமியர்களுடன் பிரார்த்தனை செய்த போப் ஆண்டவர் !

Posted: 01 Dec 2014 02:49 AM PST

pope_mosque

pope_mosqueதுருக்கியின் பிரபல மசூதி ஒன்றில் இஸ்லாமியர்களுடன் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்துள்ளார். துருக்கியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தோலிக மதத் தலைவர் போப் பிரான்சிஸ்(Pope Francis), தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான கடந்த 29ம் திகதி அன்று இஸ்தான்புல்(Istanbul) நகரில் இருக்கும் மிகப்பெரிய ப்ளூ மசூதிக்கு(Blue Mosque) சென்றுள்ளார். மசூதியின் வெளியே தனது காலணிகளை கழற்றிவிட்டு சென்ற அவர், இஸ்தான்புலின் இஸ்லாமிய தலைவர் முப்தி ரஹ்மி யாரன்(Mufti Rahmi Yaran) அருகில் நின்று தலையை குனிந்து சில நிமிடங்கள் மவுனமாக பிரார்த்தனை செய்துள்ளார். இதனையடுத்து அருங்காட்சியகத்திற்கு சென்ற அவரை வழியில் நின்ற பள்ளிக் குழந்தைகள் துருக்கிய மற்றும் வாட்டிகன் கொடிகளை அசைத்து வரவேற்றுள்ளனர். இதேபோல் கடந்த 2006ம் ஆண்டு போப் பெனடிக்ட்(Pope Bentick) மசூதிக்கு சென்றதை பல கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சில இஸ்லாமியர்களும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்கவர் இயற்கை அதிசயமாக விளங்கும் டான்சியா!

Posted: 01 Dec 2014 02:45 AM PST

danxia_001

danxia_001வானவில்லை போன்ற பல வண்ணங்களில் கண்ணைக் கவரும் நிலப்பரப்பாக விளங்குகிறது "டான்சியா". சீனாவின் தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் காணப்படும் டான்சியா என்றழைக்கப்படும் நிலபரப்பு வானவில்லை போல பல வண்ணங்களில் காணப்படுகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் முக்கிய இடமாக இந்த டான்சியா நிலப்பரப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள வண்டல் மண் படுகையில் ஏற்படும் உள்புற பெயர்வு, மழை மற்றும் மண் அரிப்பு போன்ற காரணங்களால், பல வண்ணங்களில் காணப்படுகிறது. கண்கவர் இயற்கை அதிசயமாக விளங்கும் இந்த நிலப்பரப்பில் சிவப்பு பாறைகள், வியத்தகு தூண்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும், இந்த கரடுமுரடான இயற்கை நிலப்பரப்பு, பரந்த துணை வெப்பமண்டல காடுகளையும், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ

Posted: 01 Dec 2014 02:24 AM PST

wimal_w_b

wimal_w_bஅமைச்சர் விமல் வீரவன்ஸ வழிநடத்தி வரும் இனவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பிற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வீரவன்ஸ சார்பில் தமது அமைப்பை மகிந்தவுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாதென தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெரும்பான்மையான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வமைப்பு சார்பாக மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தமது தரப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளனர். ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ஸ, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களிடம் கெஞ்சியதாக தேசியப்பற்றுள்ள தேசிய அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பெயரில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் வீரவன்ஸ உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், கலாநிதி குணதாச அமரசேகரவுடன் இணைந்து வேறு ஒரு அமைப்பை தொடங்கிய அமைச்சர் வீரவன்ஸ, மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறி ஊடக கண்காட்சியை ஒன்றை நடத்திய போதிலும் வெறும் 5 பேர் மட்டுமே அந்த கண்காட்சியை பார்வையிட சென்றிருந்தனர். இதனால், புதிய அமைப்பின் செயற்பாடுகள் ஆரம்பித்திலேயே முடங்கி போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி

Posted: 01 Dec 2014 02:19 AM PST

agreement

agreementமைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேன, எதிரான கொள்கைகளை கொண்டவர்களை வீதியில் கொலை செய்யாதவர். ஏனைய நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் கேட்கக்கூடிய பொறுமை காக்கக் கூடிய தலைவர். இந்த போராட்டத்தில் பிரதான கட்சிகள் இணைந்துள்ளன. அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதிகளவில் உள்ளனர். மேலும் பலர் வரவுள்ளனர். மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் பயணத்தை இன்று தொடங்கியுள்ளோம். என்றும் இல்லாத வகையில் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இந்த பயணத்தில் இணைந்துள்ளன. பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் இப்படியான கொடூர, ஊழல், மோசடி நிறைந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. நாங்கள் ஒன்பது வருடங்கள் பொறுத்தோம். பொறுத்தது போதும் என்று மக்கள் எண்ணி விட்டனர். மைத்திரிபால சிறிசேன என்பவர் ஊழல், மோசடிகளை செய்யும் நபர் கிடையாது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நபர். விமர்சிப்பவர்களை பட்டப்பகலில் நடுவீதியில் கொலை செய்ய மாட்டார். கொள்கையை மதிக்கும் தலைவர் எனவும் சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேற்று இரவுடன் விடை பெற்றார் ரொப் போர்ட்! புதிய மேயராக ஜோன் ரொறி

Posted: 01 Dec 2014 02:08 AM PST

ROBFORD-last-day

ROBFORD-last-dayகனடாவின் ரொறன்ரோ மேயராக கடந்த நான்கு வருடங்களாக பதவி வகித்து வந்த ரொப் போர்ட்டின் பதவிக்காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. அண்மையில் நடைபெற்று முடிந்த நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோன் ரொறி ரொரன்ரோவின் புதிய மேயராக பதவியேற்கவுள்ள நிலையில், தேர்தல் தொகுதி இரண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரொப் ஃபோர்ட் அந்த தொகுதிக்கான நகரசபை உறுப்பினராக நகரமன்றில் அமரவுள்ளார். ரொப் ஃபோர்ட்டின் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதி போதைப் பொருட்கள், மது, விமர்சனத்துக்குரிய நடத்தை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுடனேயே பயணித்த போதிலும், ரொரன்ரோ நகரமன்றின் செலவீனங்களை குறைத்த பெருமையும் இவருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மக்களுக்கான வரிச்சுமையாக காணப்பட்ட வாகன பதிவு வரியினை இல்லாமல் செய்தமை, சொத்துக்களுக்கான வரியினை குறைத்தமை உள்ளிட்ட பல திட்டங்களையும் அவர் தனது ஆட்சிக் காலத்தின் போது செயற்படுத்தியுள்ளார். இதேவேளை தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரொப் ஃபோர்ட், தனது இறுதிக் கட்ட கீமோ தெரபியினை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கனேடியப் பிரதமர்!

Posted: 01 Dec 2014 02:05 AM PST

senegal

senegalகட்டாயத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு la Francophonie நாடுகள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வலியுறுத்தியுள்ளார். Senegal இல் சனிக்கிழமை நடைபெற்ற பிரஞ்சு மொழி பேசும் நாடுகளின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்விலேயே கனேடியப் பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். சிறுவர்கள் கட்டாயத்திருமணத்திற்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2004 அம் ஆண்டிற்கும் 2014 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் உரிய வயதை எட்டாத 100 மில்லியன் வரையான பெண்கள் கட்டாயத் திருமணத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உரிய பருவத்தை அடையும் முன்னர் பெண்களை கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்துவதனால், அவர்களும், அவர்களின் குழந்தைகள், சமூகம், நாடு என அனைத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூகத்தின் அடித்தளம் குடும்பம் என்று விபரித்த கனேடியப் பிரதமர், அது நிபந்தனைகளையும் சமத்துவமின்மையையும் கொண்டிருக்குமானால் தழைத்தோங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த மாநாட்டில் la Francophonie யின் புதிய தலைவராக Michaelle Jean தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உச்சிமாநாட்டில் கனேடியப் பிரதமருடன் கியூபெக் மற்றும் பிரஸ்விக் ஆகிய மாகாணங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™