Tamil News | Online Tamil News |
- டில்லி போலீசாருக்கு நெருக்கடி: அஜீத் தோவல் பாய்ச்சல்
- தமிழக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்...?தயாராகிறது பா.ஜ., தொலைநோக்குத் திட்டம்
- இந்தியாவில் சுகாதார பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் மோசம்: நோய் பாதிப்பு அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்பு
- ஆழ்கடலில் மீன்பிடிக்க ஏற்பாடு: சுஷ்மா வாக்குறுதி
- வரி சலுகைகள் வழங்கியதால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு
- கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்? லோக்சபாவில் பா.ஜ., எம்.பி., ஆவேசம்
- கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலை?
- காங்கிரசுடன் இணக்கம் காட்டும் தி.மு.க.,: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கூட்டணி?
- கிரானைட் குவாரி முறைகேடு: பிடி இறுகுகிறது
- காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது ஐ.நா.,: உதவி செய்ய தயார் என்கிறார் பான் கீ மூன்
| டில்லி போலீசாருக்கு நெருக்கடி: அஜீத் தோவல் பாய்ச்சல் Posted: புதுடில்லி: டில்லியில், 'கால் டாக்சி'யில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இது தொடர்பாக டில்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.தலைநகர் டில்லியில், சமீபத்தில், 'உபெர்' நிறுவனத்தின் கால் டாக்சியில் சென்ற இளம்பெண், அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதையடுத்து, பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட டிரைவர் கைது ... |
| தமிழக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமன்...?தயாராகிறது பா.ஜ., தொலைநோக்குத் திட்டம் Posted: தமிழகத்தில், 2016ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., தலைமை, கட்சியின் முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, களம் இறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக, பிரதமர் மோடியின் ஒப்புதலுடன், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பேசி, கருத்துக்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த, திட்டமிட்டு செயல்பட்டு ... |
| Posted: புதுடில்லி: இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் அமோகமாக இருக்கிறது. வறுமையிலிருந்து லட்சக்கணக்கானோரை மீட்டிருக்கிறது. ஆனால், பொது சுகாதார வளர்ச்சியில், அது பின்தங்கி இருக்கிறது. வளரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் சுகாதார ஆரோக்கியம், மிகவும் குறைவாகவே உள்ளது. சுகாதாரப் பணிகளுக்கு, போதுமான நிதி ஒதுக்கப்படாததால், நோய் தாக்குதல் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓ.இ.சி.டி.,) என்ற சர்வதேச அமைப்பு, 2012ல், ... |
| ஆழ்கடலில் மீன்பிடிக்க ஏற்பாடு: சுஷ்மா வாக்குறுதி Posted: ''தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ச்சியாக, தாக்குதலுக்கு உள்ளாகி வருவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், கச்சத்தீவை மீட்பது மட்டும் தான், ஒரே வழி என்று, பார்லிமென்ட்டில், அ.தி.மு.க., கூறியுள்ளது.லோக்சபாவில் நேற்று, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து, அ.தி.மு.க., சார்பில், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய, அ.தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சித் தலைவர், வேணுகோபால், ''தி.மு.க., ஆட்சியில்தான், கச்சத்தீவு, இலங்கைக்கு, தாரை வார்க்கப்பட்டது. தவிர, கச்சத்தீவை சுற்றி உள்ள கடல்பகுதியில், சீன ராணுவத்தினர் வலம் ... |
| வரி சலுகைகள் வழங்கியதால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு Posted: புதுடில்லி: வர்த்தக நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் வழங்கியதன் காரணமாக, கடந்த, 2013 - 14ம் நிதியாண்டில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, 10 சதவீதம் அதிகரித்து, 1.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இந்த இழப்பு, கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 92,636 கோடியாகவும், 2011 - 12ல், 81,214 கோடியாகவும், 2010-11ல், 83,328 கோடியாகவும், 2009 - 10ல், 72,881 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதுபோன்ற வரிச் சலுகைகளை நடப்பு நிதியாண்டிலும், நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.நேரடி வரிகளை பொறுத்தமட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதி களை உருவாக்குதல், சீரான பிராந்திய ... |
| கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்? லோக்சபாவில் பா.ஜ., எம்.பி., ஆவேசம் Posted: புதுடில்லி : ''கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற கிராமப்புற விளையாட்டுகளுக்கு கொடுக்க மறுப்பது ஏன்?'' என, பா.ஜ., எம்.பி., வீரேந்திர சிங் எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.உ.பி., மாநிலம் பதோகி லோக்சபா தொகுதியிலிருந்து பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்ட, வீரேந்திர சிங் நேற்று பேசியதாவது:நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் தான், அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது; மற்ற விளையாட்டுகளுக்கு குறிப்பாக, கிராமப்புற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமோ, போதிய நிதி உதவியோ தரப்படுவது இல்லை. ... |
| கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலை? Posted: புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக டில்லி வருகிறார். நாளை, பிரதமர் நரேந்திர மோடியுடன், அணுசக்தி, ராணுவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.கையெழுத்து: அப்போது, கூடங்குளத்தில், மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா புறப்படுவதற்கு முன், மாஸ்கோவில், புடின் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக திறமைமிக்க தலைவரான மோடியின் ... |
| காங்கிரசுடன் இணக்கம் காட்டும் தி.மு.க.,: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கூட்டணி? Posted: காங்கிரசுடன் இணக்கமான போக்கை சமீப காலமாக தி.மு.க., கடைபிடிப்பதால், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு முன்பே, அவ்விரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை பெற்றதை அடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.அதனால், அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. அதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.அப்படி விரைவில், தேர்தல் நடைபெறவுள்ளதால் அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என, மும்முனை போட்டி நிலவும் ... |
| கிரானைட் குவாரி முறைகேடு: பிடி இறுகுகிறது Posted: மதுரை: மதுரை மாவட்டத்தில் முறைகேடு கிரானைட் குவாரி நிறுவனங்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முயற்சிகளை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.கிரானைட் முறைகேடு குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் மதுரையில் கடந்த வாரம் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டார். குவாரி முறைகேடுகள் குறித்து 109 மனுக்களை அவர் பெற்றார். மேலும் முறைகேடுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய், கால்நடை, கனிம வளம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். விளக்கங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் சகாயம் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ... |
| காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது ஐ.நா.,: உதவி செய்ய தயார் என்கிறார் பான் கீ மூன் Posted: நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ''இந்தியா பாக்., நாடுகள் கேட்டு கொண்டால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயார்,'' என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.'ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட வேண்டிய அவசியமில்லை' என, இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன், இந்த விவகாரத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |