Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Posted: 09 Dec 2014 03:52 PM PST

தமிழகம், புதுவையின் சில இடங்களில் (இன்று)புதன்கிழமை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமையும் அதே இடத்தில் நீடித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம், புதுவையின் சில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர். - ------------------------------------------

பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பா.ம.கவும் விலக வேண்டும்: சுப்ரமணியசாமி

Posted: 09 Dec 2014 03:50 PM PST

- பா.ம.க நிறுவனர் ராமதாஸை , பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். - பா.ஜனதா கூட்டணியில் இருந்து தானாக வெளியேறாவிட்டால் , வெளியே தூக்கி வீசப்படுவார் என்று வைகோவை கடந்த சில தினங்களுக்கு முன் சுப்ரமணியசாமி விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து மோடி தொடர்ச்சியாக விமர்சித்து வந்த வைகோ, பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து பா.ம.கவும் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என சுப்ரமணிசாமி கூறியுள்ளார். இது ...

பட்டறிவு - ஒரு பக்க கதை

Posted: 09 Dec 2014 03:48 PM PST

அண்ணல் அம்பேத்கர் மனைவி வேடத்தில் நடிக்கும் ராக்கி சாவந்த்

Posted: 09 Dec 2014 03:47 PM PST

- டாக்டர் அம்பேத்கரின் மனைவி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இந்தியாவின் மாபெரும் ஒப்பற்ற தலைவரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையை தி காட்ஃபாதர் ஆப் இந்தியா என்ற தலைப்பில் படமாகத் தயாரிக்கின்றனர்.l - இந்தப் படத்தில் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவீதா வேடத்தில் நடிக்கிறார் ராக்கி. சவீதா பாய் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேடத்தில்தான் ராக்கி நடிக்கிறார். சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் ...

உண்மை காதல் அழிவதில்லை.

Posted: 09 Dec 2014 03:25 PM PST

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார். நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றார் மருத்துவர்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார். ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டார்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா ...

வருமா அரசியல்நாகரீகம் ,தமிழகத்தில் ?

Posted: 09 Dec 2014 03:13 PM PST

வருமா அரசியல் நாகரீகம் ,தமிழகத்தில் ?

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

நன்றி : தினமலர்

ரமணியன்

லிங்கா திரைப்படம்

Posted: 09 Dec 2014 03:04 PM PST

- ரஜினி நடித்துள்ள லிங்கா திரைப்படம் அமெரிக்காவில் 200க்கும் மேறபட்ட தியேட்டர்களில்வெளியாக உள்ளது. - இந்திய திரைப்படம் ஒன்று, அமெரிக்காவில் அதிக தியேண்டடர்களிங் வெளியாக உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 310 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது - --------------------------------- --தினமலர்

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Posted: 09 Dec 2014 09:23 AM PST

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் பட டீஸர் ரித்திக் ரோஷனின் பேங் பேங் பட டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. டீஸர் வெளியான 32 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக டிரெண்ட் ஆனது. என்னை அறிந்தால் டீஸரை இதுவரை 62 ஆயிரம் பேர் யூடியூப்பில் லைக் செய்துள்ளனர். இது ரித்திக் ரோஷனின் பேங் பேங் ...

ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை

Posted: 09 Dec 2014 08:52 AM PST

ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்ப்பரேட் உலகில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்பட்டது. இதையொட்டி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ மற்றும் இயக்குனர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 34 மாத சிறைவாசத்துக்கு பிறகு ராமலிங்கராஜூம், அவரது சகோதரர் ராமராஜூ, தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஜாமீனில் விடுதலையானார்கள். இவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு ...

சி ரி... சி ரி...

Posted: 09 Dec 2014 08:51 AM PST

- "உங்க கணவருக்கு எங்காவது ஓடிப் போகணும்னு போல தோணிக்கிட்டே இருந்தால் கவலைப்படாதீங்க... குணப்படுத்திடலாம்'' ""சரி பண்ண முடியாமான்னு பாருங்க டாக்டர். இல்லேன்னா என்னையும் இழுத்துட்டு ஓடற மாதிரி மருந்து குடுங்க'' ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. - ----------------------------------------- - ""வேலைக்காரிக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்புக்கு உங்க மனைவிதான் காரணமா?'' ""என்னால் முடியலை... வேலைக்காரியை வெச்சுக்குவோம்னு அவதான் சொன்னா'' எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. - -------------------------------------- - "அந்தப் ...

புது வரவில் கலப்படம்

Posted: 09 Dec 2014 08:49 AM PST

இரு உள்ளங்கள் இனங்கியதால் பல உள்ளங்கள் முரண்பட்டு கண்ட தீர்வின் பயனாய் சொர்க்கத்து முடிவு அங்கீகாரப்பட்டு இணைந்து இயற்கையின் நியதியாகி இன்று புது வரவுக்காய் பரவசப் பயத்துடன் பல உள்ளங்கள் அந்தப் புது உயிரை எதிர் பார்த்திருக்கின்றன!! தாய்மையாகிப் போன அந்த இளம் மங்கையவள் உள்ளத்தில் பல எண்ணங்கள் என் பிள்ளை ஆணா? ​பெண்ணா? அழகு காட்டுமா? சிரிக்குமா ?அழுமா? பேர் என்ன சூட்டலாம் பயம் கலந்த எதிர்பார்ப்புக்கள்!! தந்தை இவன் எண்ணம்!! அவள் மேல் காதலினால் அச்சம் பதற்றம் சுகப் ...

இப்படியும் திருடும் இந்திய பெண்கள்,

Posted: 09 Dec 2014 08:44 AM PST

இப்படியும் திருடும் இந்திய பெண்கள்,

This posting includes an audio/video/photo media file: Download Now

'டைம்' பத்திரிகையின் சிறந்த நபர் மோடி!

Posted: 09 Dec 2014 08:40 AM PST

நியூயார்க்: அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகையின், இந்த ஆண்டின் சிறந்த நபராக, பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து, 50 பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்றதில், 50 லட்சம் பேர் ஓட்டளித்த நிலையில், அதிகபட்சமாக, 16 சதவீத ஓட்டுகளைப் பெற்று, இந்த ஆண்டின் சிறந்த நபராக மோடி தேர்வாகியுள்ளார். இந்தப் போட்டியில், அமெரிக்காவின் பெர்குஷன் நகரில், கருப்பின இளைஞனை போலீஸ் அதிகாரி சுட்டுக் கொன்றதற்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, ஆப்பிள் நிறுவனத்தின் ...

பொட்டு - ஒரு பக்க கதை

Posted: 09 Dec 2014 08:39 AM PST

இப்படியும் ஒரு மனைவி

Posted: 09 Dec 2014 08:29 AM PST

குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் வாகினி. - "கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!'' அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள். - "கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!'' யதார்த்தமாய் சொன்னாள் ...

வரலாற்றில் இன்று - டிசம்பர்

Posted: 09 Dec 2014 08:28 AM PST

வரலாற்றில் இன்று - டிசம்பர்' 1 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான். 1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான். 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. 1918 - சேர்பிய, குரொவேசிய, ...

நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது..

Posted: 09 Dec 2014 08:27 AM PST


-

-
இதிகாச கதைகளில் வரும் ரதத்தில் நான்கு
குதிரைகள் பூட்டி ஓட்டி வருகின்றனர்
-
இதில் ஏதும் அருமையான கருத்து இருக்கிறதா..?

நீச்சல் குளத்தில் குதிக்கணுமா...தண்ணீயே இல்லியே...! -

Posted: 09 Dec 2014 06:31 AM PST


-

-

பூதம் தந்த வரம்

Posted: 09 Dec 2014 06:01 AM PST

பூதம் தந்த வரம் ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?" என்றது. "என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்." "அப்புறம்..?" "அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது." "அப்புறம்?" "அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது." "அப்புறம்..?" "அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்." "அப்புறம்..?" " அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது." "அப்புறம்..?" "எம்மேல ...

விடுகதை

Posted: 09 Dec 2014 05:52 AM PST

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

தவறாகத் தொடங்கி சரியாக நிறைவு செய்த இந்தியா: ஆஸ்திரேலியா 354/6

Posted: 09 Dec 2014 05:20 AM PST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 354 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும்…

Posted: 09 Dec 2014 04:36 AM PST

- "தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்' என்பார்கள். அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும். பொறியியல் படித்துவிட்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி ஒருபக்கம், பாடலாசிரியர் பணி மறுபக்கம் என மதன் கார்க்கி ஜொலித்துக் கொண்டிருக்க, கவிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பா பாடலாசிரியர் என கபிலன் வைரமுத்துவும் பிஸியாக இருக்கிறார். "ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்கக் கூடாது' என்பார்கள். ஆனால், ...

கொடைவள்ளல்.

Posted: 09 Dec 2014 02:49 AM PST

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான். கண்ணன் உடனே தங்கமலை ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்த மலை முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,'' என்றார். அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க ...

மரங்கள், பூக்கள் - புகைப்படம் - இணையத்தில்ரசித்தவை

Posted: 09 Dec 2014 02:49 AM PST


-

இணையத்தில் ரசித்த புகைப்படங்கள்

Posted: 09 Dec 2014 02:47 AM PST


-

-

பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Posted: 09 Dec 2014 02:38 AM PST

கொய்யா பழம்...!! - Mano Red

Posted: 09 Dec 2014 01:55 AM PST

கண்ணு காது மூக்கு வச்சு காதல் கொண்டேனே, கண்டதுமே காதல் சொல்லி பறந்து வந்தேனே, கடைசி வர நகத்த கடிச்சே நாசமாப் போனேனே..!! அவ போறபோக்குல பொறம்போக்கா நான் நின்னேனே, ஆறு முறை மொறச்சுட்டு அப்புறம் பாத்தேனே, மீதி கொஞ்சம் இருந்துச்சு அதிசயமுன்னு வியந்தேனே...!! யாரும் கொய்யா பழம் அவள கொய்ய வந்தேனே, தும்மலுக்கு நூறு வயசுன்னு பொய்யா சொன்னேனே, இங்கனயே இளிச்சுகிட்டு என்னயே தொலச்சேனே..!! திடீருன்னு என்னாச்சோ நெஞ்சுக்குள்ள வேலி செஞ்சு தள்ளி வச்சாளே, நாக்கு மேல பல்ல போட்டு ...

அமெரிக்கா சென்றுள்ள இளவரசர் வில்லியம் : டயானாவுக்கு பிடித்த ஹோட்டலில் ஓய்வு

Posted: 09 Dec 2014 01:35 AM PST

- 3 நாள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி இளவரசி கேதேவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கியுள்னர். லண்டனில் இருந்து நியூயார்க் சென்ற இருவரும் மன்ஹாட்டன் நகருக்குச் சென்று அங்கு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பிறகு தங்களது பணிகளை கவனிக்கத் துவங்கினர். ஹோட்டலில் இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஹோட்டல் மறைந்த இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்தமான ஹோட்டல். 1990ஆம் ஆண்டுகளில் ...

ரயில்வேயில் மகளிர் பாதுகாப்பு படை: பெண்களுக்கு தொல்லை இனி இல்லை

Posted: 09 Dec 2014 01:33 AM PST

புதுடில்லி: ''ரயில்வே பாதுகாப்பு படையில், மகளிர் சிறப்பு படைப் பிரிவு ஏற்படுத்தப்படும்; இப்பிரிவினர் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். அவர் லோக்சபாவில் மேலும் கூறியதாவது: ரயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அத்துமீறல் பேர்வழிகள் குறித்து பெண்கள், உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக, தனி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வே பட்ஜெட்டில் தெரிவித்த அம்மன் மற்றும் சிவ ...

உயர உயர ஏறினாலும் ஆடு குரங்காகாது.

Posted: 09 Dec 2014 01:17 AM PST

உயர உயர ஏறினாலும் ஆடு குரங்காகாது.

வள்ளிக் குகைக் கோயில்

Posted: 09 Dec 2014 01:14 AM PST

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....

Posted: 09 Dec 2014 01:10 AM PST

》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம் 》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம் 》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம் 》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம் 》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம் 》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம் 》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம் 》நண்பர் ...

பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்க இந்தியா வலியுறுத்தல்

Posted: 09 Dec 2014 01:08 AM PST

வளரும் நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 10,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.2 லட்சம் கோடி) பசுமைச் சூழல் நிதியை விரைந்து வழங்குமாறு வளர்ச்சியடைந்த நாடுகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது. பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக, 190 ஐ.நா. உறுப்பு நாடுகள் பங்கேற்கும் மாநாடு பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லீமா நகருக்கு வந்துள்ள இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ...

டிச.18-இல் சென்னையில் திருவையாறு இசை விழா தொடக்கம்

Posted: 08 Dec 2014 11:58 PM PST

சென்னையில் திருவையாறு இசை விழா வரும் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் லஸ்மணன் கூறியது: லஸ்மன் ஸ்ருதி அமைப்பின் சார்பில் 10-ஆம் ஆண்டு சென்னையில் திருவையாறு இசை விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 18-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நாதஸ்வர இசைக் கலைஞர் திருவிழா ஜெய்சங்கரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு கார்நாடக இசைக் கலைஞர் பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன ...

நடிகை பிந்து மாதவி

Posted: 08 Dec 2014 09:11 PM PST

- - - - - தனது பெயரை பிந்து சாகர் என மாற்றியுள்ளார். இறந்துபோன அவரது சகோதரர் நினைவாக சாகர் என்ற பெயரை சேர்த்துக் கொடுள்ளாராம். - பிந்து பேட்டி (செய்திகள்) தொடரும்

படகு கவிழ்ந்து 70 எத்தியோப்பிய அகதிகள் சாவு

Posted: 08 Dec 2014 06:49 PM PST

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து யேமன் நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 70 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து யேமன் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: எத்தியோப்பியாவிலிருந்து சட்ட விரோதமாக 70 அதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று, மோசமான வானிலை காரணமாக அல்-மக்கா துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் க விழ்ந்தது. இந்த விபத்தில், படகிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. "ஆப்பிரிக்காவின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™