Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சட்டசபையில் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கை வெற்றிடம்: மந்திரிகள் வரிசையில் உட்கார்ந்தார் முதல்வர் ஓ.பி.எஸ்.,

Posted:

சென்னை: சட்டசபையில், ஜெயலலிதா ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கை வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர் செல்வம் அந்த இடத்தில் அமராமல், தான் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.மூன்று நாட்கள் மட்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு, நேற்றிலிருந்து சட்டசபை கூட்டத் தொடர் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, சட்டசபை நிகழ்ச்சிகள் துவங்கியதும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்ரமணியன், கந்தசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம், ராஜேந்திரன், ரங்கநாதன், சுப்பராஜா ...

கருணாநிதிக்கு மானியம் வழங்க வேண்டுமா? முதல்வர் பன்னீர்செல்வம் கேள்வி

Posted:

சென்னை: பால் விலை உயர்வுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த, முதல்வர் பன்னீர்செல்வம், வசதி படைத்தோருக்கெல்லாம், அரசு மானியம் வழங்க வேண்டுமா என, கேள்வி எழுப்பினார்.பால் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.அதற்கு பதிலளித்து, முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பால் கொள்முதல் விலை, தனியார் பால் பண்ணைகளின் கொள்முதல் விலையை விட குறைவாக இருந்ததால், ஆவின் பால் கொள்முதல் குறைந்தது. இதை சரி செய்ய, பால் கொள்முதல் ...

தேவையான வசதிகள் செய்யவில்லை: சட்டசபை வளாகத்தில் கருணாநிதி வருத்தம்

Posted:

சென்னை: ''சட்டசபையில் எனக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படாததால், வருத்தத்துடன் செல்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.தமிழக சட்டபையின் குளிர்கால கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று சட்டசபைக்கு, காலை 10:13 மணிக்கு வந்தார். சட்டசபை வளாகத்திற்குள் சென்று, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், 10:22 மணிக்கு, வெளியில் வந்தார்.அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வம், என் நீண்டகால நண்பர். அவர் அழைத்ததன் பேரில், நான் ஆசையுடன் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்தேன். உடல் ...

சில்லரையில் சிகரெட் விற்பனை: மத்திய அரசு திடீர் 'பல்டி'

Posted:

புதுடில்லி: சில்லரையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கைவிடும் என தெரிகிறது. இந்த மாற்றத்திற்கு, சில மத்திய அமைச்சர் கள், எம்.பி.,க்கள், புகையிலை, பாக்கு விவசாயி கள் உள்ளிட்டோர் கொடுத்த நெருக்கடி தான் காரணம்.அதிர்ச்சி: மத்திய சுகாதார அமைச்சகம், அண்மை யில், சில்லரையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால், சிகரெட் நிறுவனங்கள், புகையிலை விவசாயிகள் உள்ளிட்ட இத்தொழில் சார்ந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சில மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், விவசாய சங்கங்கள், அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு ...

சமையல் காஸ் மானிய விண்ணப்பம்: படிக்காதவர்கள் அல்லல்படும் அவலம்

Posted:

சமையல் காஸ் நேரடி மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய தெரியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழங்கி வரும் மானிய தொகையை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த 2013ல் துவக்கியது.காங்., ஆளும் மாநிலங்கள்: இத்திட்டத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்., ஆளும் மாநிலங்களில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்தியில், புதிதாக அமைந்த பா.ஜ., அரசு, நேரடி மானிய திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த மாதம் 15ம் ...

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதள மையம்: பிரதமரிடம் பேச சாமி மும்முரம்

Posted:

''நாட்டின் இரண்டாவது ஏவுகணை மையத்தை, தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் ஏற்படுத்த, மத்திய அரசை வலியுறுத்துவேன்,'' என, தமிழக விஞ்ஞானிகளிடம், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உறுதி தெரிவித்தார்.இதுகுறித்து, சுப்பிரமணியன் சாமி கூறியதாவது: இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதள மையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது. அந்த மையத்துக்கு மாற்றாக, இந்தியாவில் புதிய ஏவுதள மையத்தை அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் செலவிடவும் முடிவெடுத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, பி.எஸ்.எல்.வி., மற்றும் ...

பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை முடக்கியதாக உம்மன் சாண்டி தம்பட்டம்

Posted:

திருவனந்தபுரம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து, செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம் நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான, உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.துவக்கத்திலிருந்தே...: தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி ...

கிரானைட் குவாரிகளால் விவசாயம் அழிந்து விட்டது: சகாயத்திடம் பாதிக்கப்பட்டோர் குமுறல்

Posted:

மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளால் நீர் ஆதாரங்கள், வரத்து கால்வாய்கள் சேதமுற்று விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரி சகாயத்திடம் பாதிக்கப்பட்டோர் குமுறினர்.மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சகாயம் மதுரையில் நேற்று முன் தினம் விசாரணையை துவக்கினார். நேற்று பாதிக்கப்பட்டோரிடம் மனுக்களை பெற்றார். பல்வேறு பகுதி விவசாயிகள் காத்திருந்து அவரிடம் மனு அளித்தனர்.விவசாயிகள் கூறியதாவது...அமராவதி, 60, கீழையூர்: கீழையூர் அருகே ரங்கசாமிபுரத்தில் எனக்கு மூன்றரை ஏக்கர் புன்செய், ஒன்றரை ...

எண்ணெய் வள நாடுகளை அதிர வைத்தது அமெரிக்கா

Posted:

அமெரிக்கா அதிக அளவில் 'ஷேல் காஸ்' உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது தான் உலக அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரம் இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் அவ்வாறு குறைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் பாறைகளில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயுக்கு 'ஷேல் காஸ்' என பெயர். மேலும் இந்த துளைகளில் இருந்து கச்சா எண்ணெய்யும் அதிக செலவில் எடுக்கப்படுகிறது. கடந்த 2008ல் கச்சா எண்ணெய் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™