Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் விஷயங்களை இணையத்தில் காட்டக் கூடாது'

Posted: 04 Dec 2014 01:28 PM PST

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதைத் தடுக்கும் இந்தியச் சட்டத்தை மீறும் வகையிலான விஷயங்களை கூகுள், யாஹு உள்ளிட்ட இணையதளங்கள் காட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பயனற்ற சட்டங்கள் ரத்துக்கான மசோதா: வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

Posted: 04 Dec 2014 01:27 PM PST

மக்களவை நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், பயன்பாடற்ற 90 திருத்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மீதான வாக்கெடுப்பை மத்திய அரசு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

பெங்களூரு

Posted: 04 Dec 2014 01:11 PM PST

மதுரை

Posted: 04 Dec 2014 01:11 PM PST

திருநெல்வேலி

Posted: 04 Dec 2014 01:10 PM PST

ஈரோடு

Posted: 04 Dec 2014 01:10 PM PST

கோவை

Posted: 04 Dec 2014 01:10 PM PST

தஞ்சாவூர்

Posted: 04 Dec 2014 01:10 PM PST

ஐபிடிஎல்: இந்தியன் ஏசஸ் தோல்வி

Posted: 04 Dec 2014 01:06 PM PST

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஐபிடிஎல் டென்னிஸ் தொடரின் லீக் ஆட்டத்தில், இந்தியன் ஏசஸ் அணியை 20-25 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது மணிலா மேவ்ரிக்ஸ் அணி.

இந்த நாளில் அன்று (5.12.2000 ); பஞ்சாப் ரயில் விபத்து எதிரொலி; மம்தா ராஜிநாமா: பிரதமர் நிராகரிப்பு

Posted: 04 Dec 2014 01:00 PM PST

புதுதில்லி, டிச.4- ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை பதவி விலகினார். பஞ்சாபில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் அறிவித்தார்.

தொழிலாளர் இயக்க முன்னோடி

Posted: 04 Dec 2014 12:32 PM PST

பிறவியின் பயன் அடுத்தவர்களின் அல்லல்களை அகற்றுவதே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் சுப்புசாமி குருசாமி.

காவல் துறையா? ஏவல் துறையா?

Posted: 04 Dec 2014 12:31 PM PST

இந்தியாவின் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டங்கள் நடத்தும் உரிமை ஆகியவை தமிழகத்தில் துச்சமாக மதிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக காவல் துறை மாறி சனநாயக உரிமைகளைப் பறிக்கிறது.

ஏழை படும் பாடு!

Posted: 04 Dec 2014 12:30 PM PST

வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை நேரடியாக, வங்கியில் செலுத்தும் நடைமுறையைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பாஜக அரசுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான்.

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

Posted: 04 Dec 2014 12:22 PM PST

முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை மீதைல் ஐசோ சயனேட் வாயுவால் தாக்கப்பட்டால் அதற்குச் சரியான மாற்று மருத்துவம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவு

Posted: 04 Dec 2014 12:16 PM PST

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் (100), உடல்நலக் குறைவு காரணமாக, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: நடுக்கடலில் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 04 Dec 2014 12:14 PM PST

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க புதன்கிழமை சென்ற மீனவர்களை, நடுக்கடலில் இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பினர்.

பாரதியார் பிறந்த நாளில் நிகழ்ச்சிகள் நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

Posted: 04 Dec 2014 12:13 PM PST

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி, பெண்கள் கல்வி மையங்கள் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் "பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற தலைப்பிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரியில் புதிய அணை: கர்நாடகத்தின் முயற்சியைத் தடுக்க வேண்டும்: உமா பாரதியிடம் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Posted: 04 Dec 2014 12:11 PM PST

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியிடம் மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் வலியுறுத்தினார்.

கீழமை நீதிமன்ற காலிப் பணியிடங்களை நிரப்புவது மாநில அரசின் பொறுப்பாகும்: மக்களவையில் சட்ட அமைச்சர் விளக்கம்

Posted: 04 Dec 2014 12:09 PM PST

கீழமை நீதிமன்றங்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களின் வரம்புக்குள்பட்டதாகும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினரின் கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் டி.வி. சதானந்த கௌடா விளக்கம் அளித்தார்.

மதிமுக நிர்வாகிகள் நியமனம்

Posted: 04 Dec 2014 11:57 AM PST

மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக சென்னை மாதவரத்தைச் சேர்ந்த வி.ஜி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவதூறு வழக்கு: விஜயகாந்த் நேரில் ஆஜராக சம்மன்

Posted: 04 Dec 2014 11:56 AM PST

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜனவரி 21-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்ப சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30,000 போலி மருத்துவர்கள்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 04 Dec 2014 11:55 AM PST

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்களைத் தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்டவற்றுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து ஒரு மாதத்துக்குள் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

Posted: 04 Dec 2014 11:54 AM PST

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் காலமானார்

Posted: 04 Dec 2014 11:53 AM PST

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான வி.கார்த்திகேயன் (90), சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை (டிச.5) பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் தடுப்பணைகள் கட்ட எதிர்ப்பு: சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

Posted: 04 Dec 2014 11:52 AM PST

திருவாரூர்/நாகப்பட்டினம்/தஞ்சாவூர்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Posted: 04 Dec 2014 11:50 AM PST

நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குழப்பங்கள் களையப்படும் வரை சமையல் எரிவாயுக்கு நேரடி மானியம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

பேரவையில் விவாதிக்க வேண்டிய 26 முக்கிய பிரச்னைகள்: கருணாநிதி பட்டியல்

Posted: 04 Dec 2014 11:49 AM PST

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது ஏன்? முதல்வர் விளக்கம்

Posted: 04 Dec 2014 11:46 AM PST

பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?

Posted: 04 Dec 2014 11:45 AM PST

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பேரவை விதி 110-இன் கீழ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

கர்நாடகம் தடுப்பணை: பேரவையில் இன்று விவாதம்

Posted: 04 Dec 2014 11:42 AM PST

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (டிச.5) விவாதம் நடைபெறுகிறது. இதுகுறித்த தீர்மானமும் பேரவையில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1751 கோடி: துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

Posted: 04 Dec 2014 11:42 AM PST

அரசுத் திட்டங்களுக்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.1,751.18 கோடி நிதியை ஒதுக்குவதற்கான இரண்டாம் துணை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டத் தொடரை நீட்டிக்க பேரவைத் தலைவர் மறுத்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Posted: 04 Dec 2014 11:40 AM PST

சட்டப்பேரவை கூட்டத் தொடரை மேலும் சில நாள்கள் நீட்டிக்க வேண்டும் என்று தேமுதிக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்க மறுத்தார். இதனால், பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

"விதிகளை நிறைவு செய்தால் மட்டுமே சூரிய எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி'

Posted: 04 Dec 2014 11:33 AM PST

வழிகாட்டு நெறிமுறைகளின்படி விதிகளை நிறைவு செய்தால் மட்டுமே சூரிய எரிசக்தித் திட்டங்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்படுகின்றன என்று மத்திய ஆற்றல், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பிகாரில் மோடிக்கு எதிராக லாலு கட்சி பிரசார இயக்கம்

Posted: 04 Dec 2014 11:32 AM PST

பிகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி, பிரசார இயக்கம் தொடங்கியுள்ளது.

மரபணு மாற்றப் பயிர்களால் மண் வளத்துக்கு பாதிப்பில்லை: பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 04 Dec 2014 11:32 AM PST

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

குப்பையில் சிஆர்பிஎஃப் வீரர்களின் சீருடைகள்: விசாரணைக்கு உத்தரவு

Posted: 04 Dec 2014 11:31 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் சீருடைகள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

Posted: 04 Dec 2014 11:30 AM PST

பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெளடா மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சீனா வெளியிட்ட வரைபடம்: பாஜக கண்டனம்

Posted: 04 Dec 2014 11:29 AM PST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் நாட்டின் நிலப் பகுதியாக குறிப்பிட்டு சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்ட வரைபடத்துக்கு பாஜக உறுப்பினர் எஸ்.எஸ்.அலுவாலியா மக்களவையில் கண்டனம் தெரிவித்தார்.

அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்ட மோடி: ஒபாமா பாராட்டு

Posted: 04 Dec 2014 11:28 AM PST

மந்தநிலையில் இருந்த இந்திய அரசு இயந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பாலியல் துன்புறுத்தல்: ஹரியாணா சகோதரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விருது நிறுத்திவைப்பு

Posted: 04 Dec 2014 11:27 AM PST

ஓடும் பேருந்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மூன்று இளைஞர்களை அடித்து விரட்டிய ஹரியாணாவைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கு விருது வழங்கப்படுவதை நிறுத்தி வைத்துள்ளதாக அந்த மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம்: கேரள அரசு முடிவு

Posted: 04 Dec 2014 11:26 AM PST

கேரள மாநிலத்தில் பேய் ஓட்டுதல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்குச் சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

Posted: 04 Dec 2014 11:26 AM PST

ஓய்வூதியம் பெறும் மத்திய அரசுப் பணியாளர்களின் ஆதார் எண், கைப்பேசி எண்களைப் பதிவு செய்து கொள்ளும்படி அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம்: கேரள அரசு முடிவு

Posted: 04 Dec 2014 11:25 AM PST

கேரள மாநிலத்தில் பேய் ஓட்டுதல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்குச் சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்கங்களை தனியார்மயமாக்க மோடி முயற்சி: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

Posted: 04 Dec 2014 11:24 AM PST

"நிலக்கரிச் சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவார்கள்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

2ஜி: அமலாக்கத் துறை வழக்கில் ஆசிர்வாதம் ஆச்சாரி இன்று சாட்சியம்

Posted: 04 Dec 2014 11:23 AM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலராகப் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சியாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்.

நதிகளை இணைக்கும் திட்டம்: கேரளம் கடும் எதிர்ப்பு

Posted: 04 Dec 2014 11:17 AM PST

கேரளத்தில் பாயும் பம்பை, அச்சன்கோவில் நதிகளை, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைப்பாறுடன் இணைக்கும் திட்டத்துக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிரஞ்சன் ஜோதி விவகாரம்: மக்களவையில் 3-ஆவது நாளாக அமளி

Posted: 04 Dec 2014 11:15 AM PST

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன.

ரூ.1.74 கோடியில் திட்டப் பணிகள்: போளூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 04 Dec 2014 11:14 AM PST

போளூரில் ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதிகளில் ரூ.1 கோடியே 74 லட்சத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திட்டப் பணிகளை செய்யாவிட்டால் மறியல்

Posted: 04 Dec 2014 11:14 AM PST

சேவூரில் திட்டப் பணிகளை செய்யாவிட்டால் சாலை மறியல் செய்வேன் என்று ஆரணி நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர் கூறினார்.

ஆரணியில் காவலர் குடியிருப்பு

Posted: 04 Dec 2014 11:14 AM PST

ஆரணியில் ரூ.4.5 கோடி மதிப்பிலான அடுக்குமாடி காவலர் குடியிருப்பினை ஆரணி டிஎஸ்பி என்.மணி குத்துவிளக்கு ஏற்றி வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

செய்யாறு பட்சீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் மீண்டும் திருட்டு

Posted: 04 Dec 2014 11:13 AM PST

செய்யாறு பட்சீஸ்வரர் கோயிலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக இரண்டு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து

மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2014 11:13 AM PST

மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மதிமுக சார்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி மாணவிகளுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி

Posted: 04 Dec 2014 11:13 AM PST

செய்யாறு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெற்றியாளராகவே இரு என்ற ஊக்குவிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கற்பூரம் விற்க, ஏற்றத் தடை

Posted: 04 Dec 2014 11:12 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று கற்பூரம் விற்கவும், கற்பூரம் ஏற்றவும் காவல் துறை தடை விதித்துள்ளது.

தீபத் திருவிழா டிக்கெட், பாஸ் பிரச்னை: இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை

Posted: 04 Dec 2014 11:12 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை பரணி தீபம், மகா தீபத்துக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

மகாராஷ்டிர அமைச்சரவை: சிவசேனைக்கு 12 இடங்கள்: முதல்வர் பட்னவீஸ் அறிவிப்பு

Posted: 04 Dec 2014 11:12 AM PST

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், சிவசேனைக் கட்சிக்கு அமைச்சரவையில் 12 இடங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Posted: 04 Dec 2014 11:12 AM PST

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 04 Dec 2014 11:12 AM PST

கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொது தரிசனத்துக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதி

Posted: 04 Dec 2014 11:11 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மகா தீபத்தை இலவசமாக காண வரும் பக்தர்கள், ராஜகோபுரம் வழியாகவும், கட்டண அனுமதி அட்டை வைத்துள்ள

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

Posted: 04 Dec 2014 11:11 AM PST

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலஞ்சியில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 04 Dec 2014 11:11 AM PST

கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படையினர் வியாழக்கிழமை கைப்பற்றினர்.

மதுவிலக்கு கோரி நாகர்கோவில் உள்பட 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2014 11:11 AM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 213 வழக்குகள் தள்ளுபடி

Posted: 04 Dec 2014 11:11 AM PST

 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான 213 வழக்குகளை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தள்ளுபடி செய்துள்ளதாக வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி தெரிவித்தார்.

டிச. 6 : குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரம்

Posted: 04 Dec 2014 11:10 AM PST

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச. 6ஆம் தேதியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் சாவு

Posted: 04 Dec 2014 11:10 AM PST

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த வடமேற்கு பழங்குடியினப் பகுதியில் அந்த நாட்டு ராணுவ விமானங்கள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொலம்பிய விமான விபத்து: 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி

Posted: 04 Dec 2014 11:10 AM PST

கொலம்பியாவில் புதன்கிழமை நேரிட்ட விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ரத்த தானம் பெற்ற 10 சிறுவர்களுக்கு எய்ட்ஸ்

Posted: 04 Dec 2014 11:09 AM PST

பாகிஸ்தானில் ரத்த அழிவுச் சோகை நோய் சிகிச்சைக்காக, பாதுகாப்பற்ற முறையில் ரத்த தானம் வழங்கப்பட்ட 10 சிறுவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க பிணைக் கைதியை கொல்வோம்: அல்-காய்தா மிரட்டல்

Posted: 04 Dec 2014 11:08 AM PST

அல்-காய்தா அமைப்பின் யேமன் நாட்டுப் பிரிவு அண்மையில் வெளியிட்ட விடியோவில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள அமெரிக்க செய்தியாளரைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளது.

இந்தியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் விளக்கம்

Posted: 04 Dec 2014 11:08 AM PST

இந்தியா - பாகிஸ்தான் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கை இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வியாழக்கிழமை கூறியுள்ளது.

கருப்பினத்தவர் மரணம்: மேலும் ஒரு தீர்ப்பால் அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்

Posted: 04 Dec 2014 11:07 AM PST

ரூ.6,999-க்கு புதிய ஸ்மார்ட் போன்:  ஸ்பைஸ் அறிமுகப்படுத்துகிறது

Posted: 04 Dec 2014 11:05 AM PST

இந்திய கைப்பேசிகள் தயாரிப்பாளரான ஸ்பைஸ் மொபைல்ஸ், ரூ.6,999 விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

கைப்பேசி வங்கிச் சேவை: விதிமுறைகளை எளிமையாக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

Posted: 04 Dec 2014 11:05 AM PST

கைப்பேசி மூலம் வங்கிச் சேவை வழங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்கும்படி வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பழைய சுற்றுச்சூழல் "பாவங்களுக்கு' தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் பரிகாரம் தேட வேண்டும்: இந்தியா

Posted: 04 Dec 2014 11:04 AM PST

தற்போதைய உலக வெப்பமயமாதல் பிரச்னைக்குக் காரணமான தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள், அந்தப் "பாவத்தைப்' போக்கும் வகையில் வளரும் நாடுகளின் தொழிற்சாலை மாசு வெளியேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தக் கூடாது என இந்தியா தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து ஊர் திரும்பிய குமரி மீனவர் விமானத்தில் மரணம்

Posted: 04 Dec 2014 11:01 AM PST

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர் கத்தார் நாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் வழியில் விமானத்திலேயே மரணமடைந்தார். இதனால், அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்குச் சென்ற உறவினர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தனித்தனியே போராட்டம்

Posted: 04 Dec 2014 11:00 AM PST

மார்த்தாண்டம் அருகே பயிற்சி ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மாணவர்களும், ஆசிரியரை தாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆசிரியர்களும் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைக்கோடு பேரூராட்சியில் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 04 Dec 2014 11:00 AM PST

குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 6 உறுப்பினர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறப்பு விழா இல்லாமல் செயல்படத் தொடங்கிய கோட்டாறு, வடசேரி புதிய காவல் நிலையக் கட்டடங்கள்

Posted: 04 Dec 2014 11:00 AM PST

கோட்டாறு, வடசேரி ஆகிய காவல் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் எந்தவித ஆடம்பர திறப்பு விழாவின்றி வியாழக்கிழமை செயல்பட தொடங்கின.

கடல் வளத்தை பாதுகாப்பது மீனவர்களின் கைகளில் உள்ளது

Posted: 04 Dec 2014 10:59 AM PST

தமிழகத்தில் அழிந்து வரும் கடல் வளத்தை பாதுகாப்பது மீனவர்களின் கைகளில் தான் உள்ளது என கடலோர பாதுகாப்புக்குழும ஐ.ஜி. ஜி.சொக்கலிங்கம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கவுன்சிலரிடம் பணம் பறித்த திருச்சி இளைஞர் கைது

Posted: 04 Dec 2014 10:59 AM PST

கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலரிடம் பணம் பறித்ததாக திருச்சி இளைஞரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

இன்று திருக்கார்த்திகை தீபம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 04 Dec 2014 10:59 AM PST

தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இன்று தூய அலங்கார உபகார மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 04 Dec 2014 10:58 AM PST

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 32 மாடுகள் மீட்பு

Posted: 04 Dec 2014 10:58 AM PST

கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற 32 மாடுகள் மீட்கப்பட்டு சுசீந்திரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

கவுன்சிலரிடம் பணம் பறித்த திருச்சி இளைஞர் கைது

Posted: 04 Dec 2014 10:58 AM PST

கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலரிடம் பணம் பறித்ததாக திருச்சி இளைஞரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

பணப்பலன்களை வழங்கக் கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2014 10:58 AM PST

பணப் பலன்களை உடனே வழங்கக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நாகர்கோவிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரியப் புயல் பூமியைத் தாக்குமா?

Posted: 04 Dec 2014 10:58 AM PST

2012ஆம் ஆண்டில் அதிதீவிரமான சூரியப் புயல் பூமியைத் தாக்கப்போகிறது என்றும், அத்துடன் உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

பாபர் மசூதி இடிப்பு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Posted: 04 Dec 2014 10:57 AM PST

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இடலாக்குடி அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

Posted: 04 Dec 2014 10:57 AM PST

நாகர்கோவில் இடலாக்குடி சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2014 10:56 AM PST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த 16 மீனவர்கள் மீட்பு

Posted: 04 Dec 2014 10:56 AM PST

தூத்துக்குடி அருகே என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த நாட்டுப்படகு மீனவர்கள் 16 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.

நிறுத்தப்பட்ட சிற்றுந்துகள்: மீண்டும் இயக்க நடவடிக்கை

Posted: 04 Dec 2014 10:56 AM PST

கோவில்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்ட அனைத்து சிற்றுந்துகளும் மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தலுக்குப் பின்னர் வியாழக்கிழமை மீண்டும் இயங்கின.

கோவில்பட்டியில் நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ்

Posted: 04 Dec 2014 10:55 AM PST

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்தவும், இருபுறமும் அணுகுசாலை அமைக்கவும் வலியுறுத்தி சனிக்கிழமை (டிச.6) நடைபெறுவதாக இருந்த சாலை மறிய

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள்

Posted: 04 Dec 2014 10:55 AM PST

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட தனுஷ்கோடியாபுரம் புது தெருவில் சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

"குவைத்தில் பணிபுரிய ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்'

Posted: 04 Dec 2014 10:55 AM PST

குவைத் நாட்டில் ஓட்டுநராக பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறும் இடங்கள்

Posted: 04 Dec 2014 10:54 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.5) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு 9-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்'

Posted: 04 Dec 2014 10:54 AM PST

பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணிக்கு நடைபெற உள்ள தேர்வில் கலந்துகொள்ள விரும்புவோர் டிச. 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலித் தொழிலாளி தற்கொலை

Posted: 04 Dec 2014 10:54 AM PST

விளாத்திகுளம் அருகே புளியங்குளத்தில் குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார்.

பரமன்குறிச்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 04 Dec 2014 10:54 AM PST

 தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் பரமன்குறிச்சியில் சனிக்கிழமை (டிச.6) நடைபெறுகிறது.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 04 Dec 2014 10:53 AM PST

தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு கை கோர்ப்போம் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாலைமறியல்

Posted: 04 Dec 2014 10:53 AM PST

விளாத்திகுளத்தில் வைப்பாறு வழித்தட பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, வைப்பாறு கரையோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 04 Dec 2014 10:53 AM PST

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™