Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டாக்டர்கள் 'கவனிப்பு'க்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: வெளிநாட்டு சுற்றுலா; விதவிதமான பரிசு தர தடை

Posted:

சென்னை: விற்பனையை மேம்படுத்தும் நோக்கில், மருந்து நிறுவனங்கள், டாக்டர்களுக்கு விலையில்லாத மருந்து தருதல், பரிசுப் பொருட்கள் தருதல், வெளிநாட்டு சுற்றுலா அனுப்ப, மத்திய அரசு தடை விதிக்க உள்ளது.நாடு முழுவதும், ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து விற்பனை நடக்கிறது. இதில், 500 கோடி ரூபாய் அளவுக்கு தான், 'ஜெனரிக்' மருந்துகள் விற்பனை நடக்கிறது. மருந்து விற்பனையில், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். இந்த நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்க, விளம்பர யுக்திகளை விட, டாக்டர்களையே பெரிதும் நம்புகின்றன. மக்களிடம், ...

சுகாதார காப்பீடு விஷயத்தில் தமிழகம் சபாஷ்: அதிக பிரீமியம் வசூலாகி சாதனை

Posted:

புதுடில்லி: சுகாதார காப்பீடு தொடர்பாக, தமிழகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே, சுகாதார காப்பீட்டுக்காக அதிக பிரீமியம் வசூலான மாநிலங்களின் பட்டியலில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது. ஏழை, பணக்காரர்கள் என்ற பேதமில்லாமல், அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைப்பதில், நோய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு சில நோய்களின் சிகிச்சைக்கான செலவு, பணம் படைத்தவர்களின் விழிகளையே பிதுங்க வைக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து காத்து கொள்வதற்காகவே, சுகாதார காப்பீடு திட்டங்கள் உள்ளன. பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ...

அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டங்களால் நன்மையில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளிப்படை

Posted:

உதய்பூர்: ''அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டங்களால், யாருக்கும் நன்மையில்லை; அந்த திட்டம், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சென்று சேர்வதில்லை. அதனால் அத்திட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கடன் தள்ளுபடியால், கடன் வழங்குவது குறைந்து விடுகிறது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்தார்.இந்திய பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது: மாநில அரசுகள், ஒரு சில சந்தர்ப்பங்களில் கடன்களை தள்ளுபடி செய்கின்றன. இது, எந்த அளவிற்கு பலன் தந்துள்ளது என கூற முடியுமா... ஏதுமில்லை என்று தான் பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கடன் ...

போதை பைலட்டுகளுக்கு சிக்கல்: விமானங்களை இயக்க 18 பேருக்கு தடை

Posted:

புதுடில்லி: மது குடித்த, 18 பைலட்டுகளுக்கு விமானங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விமான பைலட்டுகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பைலட்டுகள், விமானத்தை இயக்குவதற்கு, 12 மணி நேரத்துக்கு முன்வரை, மது குடித்திருக்கக் கூடாது. இதற்காக, பைலட்டுகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும், 18 பைலட்டுகள் மது குடித்து விட்டு, விமானம் இயக்குவதற்கு வந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் ஒருவர் பெண். இவர்கள் அனைவருமே, கேப்டன் ...

போனில் சிக்கினான் தாவூத் இப்ராகிம்: அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிரடி

Posted:

புதுடில்லி: மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி விட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் பதுங்கி வாழும், மும்பையின் முன்னாள் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கிஇருப்பதையும், துபாயில் ஒருவருடன், நில பேரம் குறித்து போனில் பேசியதையும், அமெரிக்க உளவு அமைப்பு பதிவு செய்துள்ளது.நூற்றுக்கணக்கில் பலி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தூண்டுதலால், 1993ல் மார்ச்சில், தாவூத் இப்ராகிம் தூண்டி விட்ட நபர்கள் நடத்திய ஏராளமான, பயங்கர வெடிகுண்டு தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் ...

ரயிலில் சிங்கங்கள் அடிபடாமல் இருக்க வன பகுதியில் காவலர்கள் கண்காணிப்பு

Posted:

அம்ரேலி: குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளில் செல்லும் ரயில்வே தண்டவாளங்களில், ரயில்களில் சிங்கங்கள் அடிபட்டு விடாமல் இருக்க, பல கி.மீ.,க்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இரவு, பகலாக ரயில் பாதையை கண்காணித்து, சிங்கங்கள் வந்தால், ரயிலை நிறுத்த சமிஞ்சை கொடுக்கின்றனர்.அரிதான சிங்கங்கள்: பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான குஜராத்தில், கிர் தேசிய பூங்கா மற்றும் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு, மிகவும் அரிதான ஆசிய சிங்கங்கள், சில நூறு மட்டுமே உள்ளன. இந்த சரணாலயத்தை ஒட்டிய ...

ஓட்டை சட்டங்களால் லக்விக்கு ஜாமின்: பாகிஸ்தான் நீதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: 'சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் பலவீனமான சாட்சி ஆகியவை தான், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி லக்விக்கு ஜாமின் கிடைத்ததற்கான முக்கிய காரணம்' என, பாகிஸ்தான் நீதிபதி செய்யது கவுசர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த, 2008ல், மும்பையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்ட, அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி அளித்த வாக்குமூலத்தின்படி, லஷ்கர் அமைப்பின் கமாண்டராக செயல்படும், ஷாகிர் ரகுமான் லக்வி தான், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2009ல், ...

சுதேசிக்கு திரும்புக: மத்திய அரசு

Posted:

புதுடில்லி: 'உள்நாட்டில் தயாரிக்கப்படும் (சுதேசி) எலக்ட்ரானிக் பொருட்களையே வாங்க வேண் டும்' என, அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; அதற்காக இந்தியாவில் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று, பிரதமர் மோடி அரசின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், இந்த முடிவை, மத்திய அரசின் செயலர்களைக் கொண்ட கமிட்டி எடுத்துள்ளது. அதன் படி, துறைகளின் செயல்பாட்டிற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் எவ்வளவு தேவை... எந்தெந்த விதங்களில் தேவை என்பதை, டெண்டர் ...

சக்கரை பீர் மலையை மீண்டும் உருவாக்க முடியுமா? கனிமவள துறையினரிடம் சகாயம் கேள்வி

Posted:

மேலுார்: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, மதுரை கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நேற்று, கீழவளவு சக்கரை பீர் மலை, குவாரி உரிமையாளர்களால் பாதியாக வெட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்றார். மீண்டும் மலையை உருவாக்க முடியுமா என, கனிமவளத் துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.மதுரையில் மூன்றாவது கட்ட விசாரணையை துவக்கிய சகாயம், நேற்று, கீழவளவு பகுதி குவாரிகளை ஆய்வு செய்தார்.கடலை முளைத்ததா? கீழவளவு சர்வே எண் 235 முதல் 239 மற்றும் 30ல் உள்ள இடங்களில், பி.ஆர்.பி., நிறுவனத்தினர் கற்களை வெட்டி எடுக்காமல் அடுக்கி ...

திராவிட கட்சிகள் மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்: தமிழக வளர்ச்சி பாதிப்புக்கு காரணம் என புகார்

Posted:

''எந்த சபையிலும், அன்னிய பாஷையான ஆங்கிலத்தில் பயமின்றி பேச முடிகிற என்னால், இந்திய மொழியான இந்தியில் பேச பயமும், தயக்கமும் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்; என்ன காரணம்?'' என, ஆவேசமாக கேள்வி எழுப்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இந்தி படிப்பது அவசியம்,'' என்றும் வலியுறுத்தினார்.கோவையில் தொழில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த, நிர்மலா சீதாராமன், 'தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி: ஒவ்வொரு ...

இன்னொரு அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டம்

Posted:

புதுடில்லி : காப்பீடு, நிலக்கரி ஆகிய துறைகளை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் நிறைவேறிய காப்பீட்டு மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய முடியாத வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது; நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.இதற்கு ஜனாதிபதி ...

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை தோல்வி நாளை 'ஸ்டிரைக்' உறுதி: பயணிகளுக்கு சிக்கல்

Posted:

அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்ட படி நாளை (29ம் தேதி) முதல், வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பெரும்பாலான பஸ்கள் இயங்காத சூழல் ஏற்படும் என்பதால், பயணிகளுக்கு சிக்கல் ஏற்படும்.ஊதிய ஒப்பந்தம்:தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். ஊழியர்களுக்காக போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. ஓராண்டு முடிந்தும், பேச்சுவார்த்தை துவங்கவில்லை.வரும், 29ம் தேதி முதல், காலவரையற்ற ...

பா.ஜ.,வுக்கு பி.டி.பி., திடீர் நிபந்தனை: ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

Posted:

ஸ்ரீநகர்: 'கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு வேண்டுமானால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறக்கூடாது,'' என, பா.ஜ.,வுக்கு, மக்கள் ஜனநாயக கட்சியான, பி.டி.பி., திடீர் நிபந்தனை விதித்துள்ளது. இதனால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.கூட்டணி ஆட்சி: ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக, பி.டி.பி.,க்கு, 28 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு, 25 தொகுதிகளும் கிடைத்தன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களும், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு நடத்தி ...

கடற்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தவில்லை: அருண் ஜெட்லி மறுப்பு

Posted:

புதுடில்லி: கடந்த 23-ல் கோவா பயணத்தின்போது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மனைவி மற்றும் மகள், இந்திய கடற்படை ஹெலிகாப்டரில் சென்றதாக எழுந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அருண் ஜெட்லி .சமூக ஊழியரும் வழக்கறிஞருமான ரோட்ரிக்ஸ் இது குறி்த்து பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில் அருண் ஜெட்லி தனது அறிக்கையில் கூறுகையில்,இந்த செய்தி, முற்றிலும் பொய்யானது. முதலில், கோவாவுக்கு சென்றது, எனது மனைவியும், மகனும்தான். மகள் அல்ல. இரண்டாவது, அவர்கள் கடற்படை ஹெலிகாப்டர் உள்பட எந்த அரசு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™