Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதாவின் அப்பீல் மனு விசாரணையில் சிக்கல்: கர்நாடகா ஐகோர்ட்டில் தி.மு.க., புது மனு தாக்கல்

Posted:

பெங்களூரு: ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்த, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது,'' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், வழக்கு விசாரணையில், திடீர் சிக்கல் உருவாகி உள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றுள்ளனர். இவர்களை, உச்ச நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ளது. தண்டனையை நிறுத்தி வைப்பதுடன், விசாரணையை ரத்து செய்யக் ...

டில்லியிலும் வெற்றி பெறுவோம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சூளுரை

Posted:

புதுடில்லி: 'டில்லியிலும் பா.ஜ., அலை வீசுவதால், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.பார்வாலா பகுதியில், விவசாயிகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. டில்லியும் வெகுதூரத்தில் இல்லை; அடுத்த அரசை பா.ஜ., அமைக்கும். மத்தியில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், டில்லியில் ஆட்சியை பிடிப்பதன் மூலம், மத்திய, மாநில அரசுகளிடையே நல்ல இணக்கமான உறவு ஏற்படும். இது, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். கிராமங்கள் முன்னேறாமல், நாடு முன்னேறாது. நம் நாட்டில், ...

மின் கட்டணம் குறையும்: அருண் ஜெட்லி

Posted:

புதுடில்லி : ''மின் வினியோகத் துறையில் போட்டி அதிகரித்தால், மின் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும்,'' என, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியுள்ளார்.டில்லியில் நேற்று நடந்த விழாவில், இரண்டு புதிய மின் திட்டங்களுக்கு, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அடிக்கல் நாட்டினார்.அப்போது, அவர் பேசியதாவது:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தான், மின் கட்டணத்தை கட்டுப்படுத்துவதற்கான முதல் நடவடிக்கை. குறைவான தொகைக்கு சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், குறைவான கட்டணத்துக்கு மின்சாரத்தை தயாரித்து வழங்க முடியும்.மின் வினியோக ...

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து

Posted:

நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய ...

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்

Posted:

சென்னை ஸ்ரீபெரும்புதுார் - பெங்களூர் சாலையில் இருமருங்கிலும் காணப்பட்ட பெருமளவு தொழிற்சாலைகள், ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.அதன்படி, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த, மோட்டோரோலா, பீ.ஒய்.டி., ஜபில் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் ஏற்கனவே மூடுவிழா கண்டுள்ள நிலையில், தற்போது, பாக்ஸ்கான் நிறுவனமும் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும், 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்; ...

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடுதேவையில்லை: கருணாநிதி கண்டனம்

Posted:

சென்னை: 'இன்சூரன்ஸ் துறை யில், அன்னிய முதலீடு தேவை இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:உலக அளவில் இந்தியா தான், அதிகமான தனிநபர் சேமிப்புகளை கொண்ட நாடு. நம் மக்களின் சேமிப்பு, பன்னாட்டு முதலாளிகளுக்கு மூலதனமாக மாறிவிடும். அவர்களுக்கு நெருக்கடிவந்தால், இந்தப் பணத்தை எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்பதற்கு, எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. குறிப்பாக, இன்சூரன்ஸ் துறைக்கு அன்னிய முதலீடு தேவை இல்லை. 1.04 லட்சம் கோடி ரூபாயை, மின் துறைக்கு முதலீட்டுத் தொகையாக எல்.ஐ.சி., தான் அளித்துள்ளது. தங்களது, 10 ...

காவிரி- வைகை- குண்டாறு இணையுமா? பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் கோரிக்கை

Posted:

'காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளைஇணைக்கும் திட்டத்திற்கு, கொள்கை ஒப்புதலை, எதிர்வரும் பட்ஜெட்டில் அளிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியுதவியும், வழங்கிட வேண்டும்' என்று மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.வழக்கமான அறையில்:மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம், டில்லிக்கு சென்றார். அவரை, விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், நேராக, புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். புதிய தமிழ்நாடு இல்லத்தில், ...

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகிறார் பட்நாவிஸ்

Posted:

மும்பை: மகாராஷ்டிர மாநில நிர்வாகத்தை சீர்படுத்தவும், திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., உயர்கல்வி மையங்களில் படித்த, 10 பட்டதாரிகளை, மாநில அரசின் பணியில் அமர்த்த, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முடிவு செய்துஉள்ளார்.சீர்திருத்தங்கள்:மகாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த பட்நாவிஸ், 44, முதல்வராக உள்ளார். கடந்த அக்டோபரில் முதல்வராக பொறுப்பேற்ற அவர், அரசு நிர்வாகத்தில், பல சீர்திருத்தங்களை புகுத்தி வருகிறார்.அதன் ஒரு கட்டமாக, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., படித்து முடித்து, அதிக பட்சம், 25 வயதுக்குள் உள்ள ...

வைரம் பட்டை தீட்டும் தொழில்: சீனாவை சமாளிக்குமா இந்தியா?

Posted:

புதுடில்லி: உலகளவில், வைரம் பட்டை தீட்டும் தொழிலில், முதலிடத்தில் உள்ள இந்தியாவிற்கு, கடும் போட்டியை சீனா ஏற்படுத்தி உள்ளது.இந்தியா, கச்சா வைரங்களை நேரடியாக பெறாமல், ஆன்ட்வெர்ப், டெல் அவிவ் மற்றும் துபாய் நகரங்களில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக தான் பெற்று வருகிறது.ஏற்றுமதி:இந்தியா இந்த கச்சா வைரங்களை வாங்கித் தான், பட்டை தீட்டி, ஏற்றுமதி செய்து வருகிறது.உலகளவில், வைரம் பட்டை தீட்டும் தொழிலில், புகழ் பெற்ற நகரமாக, குஜராத்தின் சூரத் விளங்குகிறது. ஆனால், இப்பெருமையை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் ...

வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றுபவர்கள் மீது பிடி இறுகுகிறது

Posted:

மும்பை:வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல், நீதிமன்றத்தை நாடி, ஆண்டு கணக்கில் இழுத்தடித்து, கடைசியில், கடன்களை தள்ளுபடி பெற்றுக் கொள்ளும் மோசடி பேர்வழிகள் மீதான பிடியை இறுக்க, வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, மத்திய அரசுக்கு, வங்கிகள் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கையில், 'சர்பேசி' மற்றும் கடன் மீட்பு நடுவர் மன்ற சட்டங்களை திருத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்ட காலத்திலிருந்து தான், வாராக்கடன் என்ற விவகாரம் அதிகரித்தது. துவக்கத்தில் சில நுாறு கோடிகளாக இருந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™