Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜிஎஸ்டி மசோதாவில் உடன்பாடு: நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல்

Posted:

புதுடில்லி: 'சரக்குகள் மற்றும் சேவை வரி மசோதா' என, அழைக்கப்படும், ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் இடையே நிலவிய பிரச்னை முடிவுக்கு வந்து, உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால், 'இது தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படலாம்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வரி சீர்திருத்தங்களை அமல்படுத்தும் வகை யில், நாடு முழுவதும், சரக்குகள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சட்ட வரைவுகள் குறித்து, மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தியது. ...

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து?

Posted:

புதுடில்லி: காஷ்மீரில், 1990களில் பயங்கரவாத செயல்கள் தலை தூக்கிய போது, அங்கிருந்த, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாநிலத்திலிருந்து குடி பெயர்ந்து, வேறு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், இடம் பெயர்ந்த அகதிகளாக, தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அரசு காப்பகங்களில் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தாலும், தற்போது, இந்த கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஹரிபாய் ...

ரசிகர்களை தூண்டுகிறார் 'லிங்கா' தயாரிப்பாளர்?

Posted:

'லிங்கா' படத்தின் திருட்டு 'சிடி'யை ஒழிக்க, ரசிகர்களே, சட்டத்தை கையில் எடுத்து கொள்வது போல், நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என, நடிகர் ரஜினி பட தயாரிப்பாளர் அறிவித்துள்ளது, காவல் துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.'நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற பெயரில், செய்தித் தாள்களில், அதிரடியாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், 'உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும், நடிகர் ரஜினி நடித்த, 'லிங்கா' திரைப்படத்தின் உரிமம் பெறாத, திருட்டு, 'சிடி'க்கள், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு ...

கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் சகாயத்திற்கு கொலை மிரட்டல்

Posted:

மதுரை: மதுரையில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து, விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, கொலை செய்யப் போவதாக வந்த மிரட்டல் கடிதம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகள் குறித்து, மதுரையில் இரண்டாவது கட்ட விசாரணையை, சகாயம் நடத்தி வருகிறார். அவருக்கு, ஒரு மிரட்டல் கடிதம் நேற்று வந்தது. குமார் என்ற பெயரில், அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள்: என் உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் கிரானைட் குவாரி நடத்தி வருகின்றனர்; அவர்களிடம், எவ்வித விசாரணையும் நடத்தக் கூடாது; ...

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம்: சிதம்பரத்திடம் சி.பி.ஐ., விசாரணை

Posted:

புதுடில்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.ஒப்புதல்: ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பது தொடர்பான ஒப்பந்தம், 2006ல் ஏற்பட்டது. 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு, அப்போதைய நிதியமைச்சரான சிதம்பரம், ஒப்புதல் அளித்து உள்ளார். பொதுவாக, 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே, மத்திய நிதியமைச்சராக இருப்பவர் அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேலான தொகைக்கான ஒப்பந்தம் எனில், ...

மன்மோகனிடம் விசாரணை நடத்துங்க! சி.பி.ஐ.,க்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Posted:

புதுடில்லி: 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இழப்பு: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஊழல் நடந்துள்ளதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...

பயங்கரவாதி மெஹ்தியுடன் பெங்களூரு பெண்ணுக்கு தொடர்பு? சாப்ட்வேர் நிறுவன விசாரணையில் 'பகீர்' தகவல்

Posted:

பெங்களூரு: பயங்கரவாதி மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டதால், ஆஸ்திரேலியா சிட்னி நகரை போன்று, பெங்களூரில், பொது மக்களை பிணை கைதிகளாக வைக்கப் போவதாக வந்த அச்சுறுத்தலால், பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர், மெஹ்தியுடன் மிக அதிகமாக, 'டுவிட்' செய்திருப்பது, விசாரணை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது.பெங்களூரில், தாக்குதல் நடத்தப் போவதாக, 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற மீடியா விடுத்திருந்த மிரட்டலால், முக்கிய இடங்களில், பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பெங்களூரு, கெம்பே ...

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் கண்டனம்

Posted:

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்திய பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் கோர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 132 அப்பாவி பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 9 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் பழிவாங்கவே இந்த தாக்குதலை நடத்தியதாக, தலிபான் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு பிரதமர் மோடி, அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் ...

பாக்.,கில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை

Posted:

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் அங்கு நடத்திய கோர தாண்டவத்தில் 132க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்; மேலும் ஒன்பது ஆசிரியர் அலுவலர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் ஆறு பேரை பாகிஸ்தான் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதல் அங்குள்ள 'ஆர்மி பப்ளிக்' பள்ளியில் நேற்று காலை 11:00 மணியளவில் ...

அரசியலில் வாரிசுகளை வளர்க்கும் தலைவர்கள் மீது மோடி பாய்ச்சல்: ஜனநாயகத்தை அரிக்கும் கறையான்கள் என கடும் தாக்கு

Posted:

பில்லாவர் (ஜம்மு - காஷ்மீர்): அரசியலில் வாரிசுகளை வளர்க்கும் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். 'அவர்கள், ஜனநாயகத்தை அரிக்கும் கறையான்கள்' என்றும் தாக்கி உள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பில்லாவர் சட்டசபை தொகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஊழல், மோசமான நிர்வாகம், உறவினர்களுக்கு சலுகை காட்டியது போன்றவையே, ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு காரணம். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் மூல காரணம் வாரிசு அரசியல். மக்கள் ...

"வலி அவர்களுக்கும் தெரியணும்": தலிபான்கள் கொக்கரிப்பு

Posted:

பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வஜிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு பதுங்கியிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள் மீதான வேட்டைக்கு 'ஜார்ப் இ-அஸப்' என பெயரிடப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் தாக்குதல் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களில் 1700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையிலேயே பெஷாவர் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளன் ...

பெண்கள் பாதுகாப்பிற்காக 'ஷீ டாக்சி'

Posted:

திருவனந்தபுரம்: 'பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், கேரளாவில் செயல்படும், 'ஷீ டாக்சி'யை நாடு முழுவதும் செயல்படுத்த தயார்' என, 'ஜென்டர் பார்க்' அமைப்பின் தலைவர் சுனிஷ் தெரிவித்துள்ளார்.டில்லியில், உபெர் கால் டாக்சியில் பயணித்த பெண்ணை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைத்து கால் டாக்சி டிரைவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களின் விவரங்களை சேகரிக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக, கேரளாவில், கடந்த ஆண்டு நவம்பரில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™