Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அநாகரிகமாக நடந்து கொண்ட பாக். வீரர்கள்: விசாரணை நடத்த இந்திய ஹாக்கி கூட்டமைப்பு வலியுறுத்தல்

Posted:

புவனேஸ்வர்: ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய அணி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.ஒடிசாவின் தலைநகர் புவேஸ்வரில் 35-வது ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடந்தன. இதில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இந்திய அணி வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்து ...

மின் வாரியம் தெளிவுபடுத்தாததால் பொதுமக்கள் குழப்பம்: மின் கட்டண உயர்வு கணக்கிடப்படுவது எப்படி?

Posted:

தமிழகத்தில், மின் கட்டணம், திடீரென உயர்த்தப்பட்டதால், வீடுகளுக்கு, மின் பயன்பாடு, பதிவு செய்ய வரும் போது, ஏற்கனவே உபயோகப்படுத்திய மின்சாரத்திற்கு, புதிய கட்டணம் கணக்கிட வாய்ப்புள்ளது. இதை, மின் வாரியம், தெளிவுபடுத்தாமல் இருப்பதால், பொதுமக்கள், குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.72 கோடி; விவசாயம், 20.47 லட்சம்; வணிகம், 32.87 லட்சம்; தொழிற்சாலை, 5.98 லட்சம்; இதர பிரிவு, 20.77 லட்சம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். வீட்டு மின் இணைப்புக்கு, மின் வாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, மின் ...

ஆதார் அட்டை நகல், 'பான்' எண் சமர்ப்பிப்பது கட்டாயம்: ரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்கினால்

Posted:

புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், நிரந்தர கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.கறுப்பு பண விவகாரங்களை கையாளவும், அன்னிய நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவு படி, தற்போதைய மத்திய அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமித்துள்ளது.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இந்தக் ...

ரூ.6 லட்சம் கோடி: ரஷ்யா உதவியுடன் பல திட்டங்களை நிறைவேற்ற முடிவு: புடினின் வருகை மூலம் சாதனை படைத்த மத்திய அரசு

Posted:

புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய விஜயத்தின் மூலம், ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த, 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இது, மிகப்பெரிய சாதனையாகக்கருதப்படுகிறது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக, கடந்த புதனன்று இந்தியா வந்தார். அவர் நேற்று முன்தினம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.அதைத்தொடர்ந்து, இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய பேச்சுக்குப் பின், எண்ணெய் துரப்பன பணி, உட்கட்டமைப்பு, அணுசக்தி, ராணுவம் மற்றும் வைரங்கள் பட்டை தீட்டுதல் உட்பட, பல துறைகளில், இரு ...

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்த பொறியியல் பட்டதாரி பெங்களூரில் கைது

Posted:

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, 'டுவிட்டர்' சமூக வலைத்தளம் மூலம் ஆள் சேர்க்கவும், அந்த அமைப்பின் தகவல்களை பரப்பவும் உதவிய, பொறியியல் பட்டதாரி மெஹதியை, பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர்.ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை அமைக்கும் நோக்கத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.சேனல் - 4 டிவி: இந்த அமைப்புக்காக, 'ஷமி விட்னஸ்' என்ற பெயரில், சமூக வலைத்தளமான, 'டுவிட்டர்'ல் கணக்கு துவங்கி, ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளில், பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டனின், ...

தாவூத்தை கொல்ல போட்ட ரகசிய திட்டம் அம்பலம்: கடைசி நேர தொலைபேசி தகவலால் தாக்குதல் நிறுத்தம்

Posted:

புதுடில்லி : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும், மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிமை, பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரு ஆண்டுக்கு முன் தீர்த்துக் கட்ட, உளவு நிறுவனம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கை, கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக, மத்திய அரசின் உளவு நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமை, இந்தியாவுக்கு பிடித்துக் கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. அதனால், பாகிஸ்தானிலேயே ...

மண்ணெண்ணெய் மானியம் 'கட்' : மத்திய அரசின் கனவு பலிக்குமா?

Posted:

சென்னை : மண்ணெண்ணெய்க்கான மானியத்தை நிறுத்துவதால், மானியச்சுமை குறையும் என்ற போதிலும், அதனால், மத்திய அரசு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மானிய செலவை குறைக்கும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், மண்ணெண்ணெய்க்கான மானியத்தை நிறுத்த மத்திய அரசு, திட்டமிட்டுள்ளது.இதன்படி, வீடுகளில் மின் இணைப்பு இருந்தால், மண்ணெண்ணெய் கிடையாது. மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும், மண்ணெண்ணெய் வழங்கப்படும்.தற்போது, ஒரு காஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு, இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய், ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. இரண்டு காஸ் ...

கருணாநிதி 'ஹிட் லிஸ்ட்'டில் 12 பேர்: ஸ்டாலினுடனான மோதலில் வெற்றி யாருக்கு?

Posted:

தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சித் தேர்தலில், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை, துரைமுருகன் ராஜினாமா விவகாரம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, பதவி விலகல் கடிதம் எழுதியதை, துரைமுருகன் மறுத்துள்ள போதிலும், இதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மையை, தி.மு.க., வட்டாரம் உறுதிபடுத்துகிறது.வேலூர் கிழக்கு மாவட்ட செயலர் பதவியை, தன் மகன் கதிர் ஆனந்துக்கு கிடைக்க செய்ய, முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலருமான துரைமுருகன் முயற்சி எடுத்தார். அதற்கு, கட்சி பொருளாளர் ...

அமைச்சர்களை விளாசிய ஜெ.,: கட்சியினர் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

Posted:

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், மீண்டும் ஜெயலலிதா, கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில், ஆர்வம் காட்ட துவங்கி இருப்பது, கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா, ஜாமினில் வெளி வந்த பிறகும், யாரையும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை. அவரது முடிவு தெரியாததால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். அரசு செயல்பாடுகள் முடங்கின; எதிர்க்கட்சிகள் விமர்சிக்க துவங்கின. கட்சியினரும் சோர்வடைந்தனர். இந்நிலையில், உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ...

பா.ஜ.,வுக்கு இடம் பெயரும் திராவிட தலைகள்: அமித் ஷா முன்னிலையில் இணைப்பு படலம்

Posted:

தமிழகம் வரும் அமித் ஷா முன்பாக, திராவிட இயக்கங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களையும், தொண்டர்களையும் கட்சியில் இணைக்க, பா.ஜ., தலைவர்கள் சிலர், தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.வரும் 2016ல், தமிழ கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக, கட்சியை பல விதங்களிலும், பலப்படுத்தும் தீவிரத்தில், பா.ஜ.,வினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். திட்டம்: இதற்காக, டில்லியில் பா.ஜ., உத்திகள் வகுக்கும் குழு, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பலவற்றை, வகுத்துக் கொடுத்துள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™