Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதா கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு: அப்பீல் மனுவை முன்கூட்டியே விசாரிக்க மறுப்பு

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனுவை, முன்கூட்டியே விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, ஜெ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நேற்று கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், கர்நாடக ஐகோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, சுப்பிரமணியன் சாமிக்கு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, அவர் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ...

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவு: பலாத்கார பட்டியலில் ம.பி., - டில்லி முன்னிலை

Posted:

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பலாத்கார சம்பவங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணப் பிரிவு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மொத்தம், 53 நகரங்களில் நடந்த, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பலாத்கார சம்பவங்கள் பற்றிய பட்டியல் வெ ளியிடப்பட்டுள்ளது. இதில் தலைநகர் டில்லி முன்னிலை வகிக்கிறது.இதுகுறித்து, மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் முக்கிய, 53 நகரங்களில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தான், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் ...

நோக்கியாவை தொடர்ந்து 'பாக்ஸ்கான்' மூடல்: 1,500 தொழிலாளர்கள் வேலை இழப்பு

Posted:

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், நோக்கியா மொபைல் போன் ஆலையைத் தொடர்ந்து, 'பாக்ஸ்கான்' என்ற ஆலையும் மூடப்படுகிறது. இதனால், இந்நிறுவனத்தின், 1,500 நேரடி தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.தொழிற்சங்கங்கள், வேலைவாய்ப்பு நலத் துறையுடன் நடத்திய பல கட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து, ஆலையை மூடப் போவதாக, 'பாக்ஸ்கான்' நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்டம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையருக்கு, எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. நோக்கியா நிறுவனத்துக்கு, அக்டோபர் மாதம் வரை, 'பாக்ஸ்கான்' பொருட்கள் சப்ளை ...

மத்திய அரசை குறை கூறி ஜெ., நாடகம்: விஜயகாந்த்

Posted:

''இலங்கையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, ஐந்து மீனவர்கள் விடுதலை பிரச்னையில், அரசியல் ஆதாயத்திற்காக, மத்திய அரசை குறை கூறி, ஜெயலலிதா நாடகமாடுகிறார்," என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இரட்டை வேடம்: இது தொடர்பான, அவரது அறிக்கை: இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, ஐந்து தமிழக மீனவர்களை மீட்டு வந்தது குறித்து, பார்லிமென்டில், அ.தி.மு.க.,வை சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும், துணை போய் உள்ளதாக, கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த கருத்தை, அவருடைய ...

வங்கதேச உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடி கொடுக்கவே கார்கில் போர்

Posted:

கராச்சி: வங்கதேசம் உருவாக்கத்தில், இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கார்கில் போர் நடைபெற்றது. அனைத்து முனைகளிலும், பழிக்கு பழி கொள்கையில் தான் உறுதியாக இருந்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப் கொக்கரித்துள்ளார்.தேச துரோக குற்றம்: கடந்த 1999ல், இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. இதற்கு, முக்கிய மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தானின் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த முஷாரப். பாகிஸ்தானை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர், தற்போது, தேசத்துரோக குற்றத்திற்கான வழக்கை எதிர்கொண்டு ...

'ஆட்சி நடத்துவது ஜெ.,வா? ஓ.பி.எஸ்.,சா?': கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: 'தமிழகத்தில், ஆட்சியை நடத்துவது ஜெயலலிதாவா? பன்னீர்செல்வமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை: சட்டசபையில், கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கை விவாதத்தில், சவுந்தரராசன் எம்.எல்.ஏ., பேசும் போது, சட்டம் - ஒழுங்கை பற்றி குறிப்பிட்டார். அதற்கு முதல்வர் பன்னீர்செல்வம், 'சட்டம் என்பது ஒழுங்கை கடைப்பிடிக்கிற ஆட்சியாளர்களின் பணி, முன்னேற்றம், நிர்வாக திறன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான், ஜெயலலிதா இன்றைக்கு, நல்லாட்சி நடத்தி கொண்டிருக்கிறார்' என, பதிலளித்துள்ளார். ...

இரவோடு இரவாக மின் கட்டணம் 15 சதவீதம் உயர்வு

Posted:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தி, நேற்று இரவு, அறிவிப்பு வெளியிட்டது. புதிய கட்டணம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, தொழிற்சாலை, வணிகம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தனியாரிடம், அதிக விலைக்கு மின் கொள்முதல், நிர்வாக செலவு அதிகரிப்பு போன்ற, நிர்வாக சீர்கேடுகளால், மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. எனினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து, கடந்த செப்., 23ல், உத்தேச பட்டியலை வெளியிட்டது. மின் கட்டணம் உயர்வு ...

கூடங்குளத்தில் 3, 4வது அணு உலை அமைக்க ரஷ்யா உதவி: மோடி - புடின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted:

புதுடில்லி: தமிழகத்தின் கூடங்குளத்தில், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பது உட்பட, இன்னும், 20 ஆண்டுகளில், 12 அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது உட்பட, 20 முக்கிய ஒப்பந்தங்கள், ரஷ்யாவுடன் நேற்று மேற்கொள்ளப்பட்டன.ஆலோசனை: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டில்லியில் உள்ள, 'ஐதராபாத் ஹவுசில்' நேற்று காலை, மூன்றரை மணி நேரம், புடினுடனான சந்திப்பில், பிரதமர் மோடி, பல விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். அதன் பின் இரு தலைவர்களும், கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ...

ஆண்டுக்கு 34 மினி சிலிண்டர்கள்: மானிய விலையில் கிடைக்கும்

Posted:

ஐந்து கிலோ காஸ் சிலிண்டருக்கும், மத்திய அரசு மானியம் வழங்க இருப்பதால், அதன் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ); வணிகம் (19 கிலோ) என, இரண்டு, வகை காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சிரமம்: கல்லூரி மாணவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளிகள், விடுதியில் தங்கியுள்ள இளைஞர்கள், புதிதாக காஸ் இணைப்பு பெற, சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, 2013, அக்., மாதம், சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை, பெங்களூரு நகரங்களில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™