Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லதா ரஜினிகாந்த்தின் சொத்துக்களை மீட்போம் - மீடியா ஒன்!

Posted:

ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கத்தில், ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் 3டி அனிமேஷன் படமாக வௌிவந்த படம் கோச்சடையான். இப்படத்திற்காக, மீடியாஒன் நிறுவனத்திற்கு வங்கிக்கடனுக்காக, திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ரூ.22.21 கோடியை உத்தரவாத தொகையாக, லதா ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். கடனை இதுவரை திரும்ப கட்டாததால், திருமுடிவாக்கம் சொத்தை, ...

கே.பாலச்சந்தருக்கு சிலை வைக்க அரசிடம் கோரிக்கை!

Posted:

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிலை வைக்க, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் திறன் கொண்டவர் கே.பாலசந்தர். இவர் டிச., 23ம் தேதி காலமானார். இந்நிலையில், இயக்குனர் சங்கம் சார்பில், பாலச்சந்தரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனி ஆர்.கே.வி. ...

பிகே படத்திற்கு எதிரான போராட்டம் : இயக்குநர் ஹிரானி வருத்தம்

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படத்திற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், பிகே படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிகே படத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ...

மும்பையில் ஐ படத்தின் பிரஸ்மீட்

Posted:

தமிழ், ஹிந்தி மட்டுமல்லாது சர்வதேச அளவில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ள இயக்குனர் ஷங்கரின் ஐ படம், தமிழில், ஜனவரி 9ம் தேதியிலும், ஹிந்தி வெர்சன், ஜனவரி 14ம் தேதியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஐ படத்தின் இந்தி பதி்ப்பிற்கும், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓநாய் முகத்துடன் விக்ரம் மற்றும் கூன் மனிதன் வேடத்தில் ...

ஷங்கர் இயக்கும் பீகே தமிழ் ரீமேக்கில் விஜய்?

Posted:

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் அமீர்கானின் சமீபத்திய படம் - பீகே. சமீபத்தில் வெளியான பீகே ஹிந்தி திரைப்படம் உலகமெங்கும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பீகே படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், அந்தப் படத்தை ட்விட்டரில் பாராட்டித்தள்ளி இருக்கிறார். பீகே ...

அனேகன் படத்துக்கு யு சான்றிதழ்

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அனேகன். இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம்... அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா மாரி.... ஊதாரி.... என்ற பாடல். இந்த பாடல்தான் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வானொலிகளிலும் தொடர்ந்து ஒலிபரப்பி வருகின்றனர். எனவே டங்கா மாரி.... ...

ராம்கோபால் வர்மா வாக்கை உண்மையாக்கிய ஐ சாதனை

Posted:

ரஜினி, ஜெயலலிதாவைவிட இயக்குநர் ஷங்கர்தான் சிறந்தவர் என்று தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதற்கு ரஜினி ரசிகர்கள் காச்மூச் என்று கத்தி கண்டனம் தெரிவித்தனர். இணையத்தில் புழங்கும் சில ரஜினி ரசிகர்களும் புலம்பித்தள்ளி இருந்தனர். ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் ...

புத்தாண்டு தினத்தில் தோல்விப்படங்கள்!

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் - அஞ்சான். இப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால் கடந்த தீபாவளி அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்தது. இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக என்ற அறைகூவலுடன் அஞ்சான் படம் குறிப்பிட்ட அந்த சேனலில் ...

பிகே : டிவியில் தற்போதைக்கு இல்லை

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகே, படம் தற்போதைக்கு டிவியில் ஒளிபரப்ப வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விற்கும் பொருட்டு, சாட்டிலைட் டிவி நிறுவனங்களுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த ...

நடனம் கற்று தருகிறார் மலைக்கா

Posted:

தன் நடனத்தின் மூலம் பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த மலைக்கா அரோரா, ராஜ்குமார் ராவிற்கு, நடனம் கற்றுத்தர உள்ளார். டாலி கி டோலி படத்தில் இடம்பெற்ற பாடலில், மலைக்கா அரோராவின் நடனத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. ராஜ்குமார் - சோனமின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும், மலைக்கா நடனமாடி ...

பிகே படத்திற்கு தடை கோருகிறார் பாபா ராம்தேவ்

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடித்து வெளியாகியுள்ள பிகே படத்தில், இந்து மதத்தை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அமீர் கானை கைது செய்வதோடு மட்டுமல்லாது, படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். வெளியான சில நாட்களிலேயே, 200 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை பிகே படம் ...

மீண்டும் இணையும் சிர்கார் - ஆபி்ரகாம்

Posted:

சூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் கபே படத்தில் நடித்த ஜான் ஆபிரகாம், 1911 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம், மீண்டும் சிர்கார் இயக்கத்தில் நடிக்கிறார். 2015ம் ஆண்டின் இறுதியில், இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும், 2016ம் ஆண்டு ஜூன் மாதத்தில் படம் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூஜித் இயக்கத்தில், பிகு படம் ...

எவ்வித கட்டும் இல்லாமல் வெளியாகிறது டர்ட்டி பாலிடிக்ஸ்

Posted:

மல்லிகா ஷெராவத் நடிப்பில் உருவாகியுள்ள டர்ட்டி பாலிடிக்ஸ்படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டிருந்தபோதிலும், படம், எவ்வித "கட்"களும் இல்லாமல் வெளிவர உள்ளது. ஏழை குடும்பத்தில் பிறந்த அனோகி, நடன மங்கையாக மாறி, பின் இறுதியில் அரசியலில் சேருவதே படத்தின் கதை என்று இயக்குநர் பொகாடியோ கூறியுள்ளார். ...

நியூமராலஜிப்படி பெயரை மாற்றிய கோவிந்தா மகள்

Posted:

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா அஹூஜா, சில மாதங்களுக்கு முன், தன் பெயரை, டினா அஹூஜா என்று மாற்றி்க்கொண்டார். தன் செல்லப்பெயர் டினா என்பதும், அதை கேட்பதற்கு, மனதிற்கு இதமாக இருப்பதாலேயே, தன் பெயரை டினா அஹூஜா என்று மாற்றிக்கொண்டதாக அப்போது தெரிவித்திருந்தார். ஆனால், நியூமராலஜிப்படியே, அவர் பெயரை மாற்றியுள்ளதாக தற்போது ...

அசாரின் முதல் மனைவி வேடத்தில் பிரச்சி

Posted:

ஏக் வில்லன் படத்தில் இடம்பெற்ற அவாரி என்ற ஐயிட்டம் பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரச்சி தேசாய், அசாருதீன் முதல் மனைவி வேடத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், அசாரூதீனின் முதல் மனைவி நவ்ரீன் ...

கேரக்டருக்காக ஆக்ரா செல்லும் டாப்ஸி

Posted:

நடிகை டாப்ஸி பண்ணு, ஆக்ரா கா டாப்ரா படத்தின் முன்னணி வேடங்களில், ஆயுஷ்மான் குரானாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில், டாப்ஸி, இஸ்லாமியப் பெண்ணாக நடிக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெற உள்ளது. இதுகுறித்து டாப்ஸி கூறியதாவது, ஆக்ரா கா டாப்ரா படத்தில் தான் ...

2014ல் பேசப்பட்ட டிரைலர் சாதனைகள்...

Posted:

ஒரு திரைப்படத்தின் டிரைலரை வைத்தே படத்திற்கு விளம்பரம் தேடும் வழக்கம் 2014ம் ஆண்டில் ஆரம்பமாகியது. 2013ம் ஆண்டில் 'யூடியூப்' வீடியோ இணைய தளம் மூலம் டிரைலர்களை ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்க்கும் முறை மெதுவாக வேகமெடுக்க ஆரம்பித்து, அது 2014ம் ஆண்டில் உச்சத்தைத் தொட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் கூட "ஜில்லா, வீரம்" என இரண்டு ...

'ஐ' டிரைலர்...ராம் கோபால் வர்மாவின் 'கமெண்ட்டுக்கு' ஷங்கர் பதில்...

Posted:

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஐ' படத்தின் சமீபத்திய டிரைலர் இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த டிரைலரை பலரும் பாராட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா 'ஐ' பட டிரைலரைப் பாராட்டிப் பல விஷயங்களைக் கூறி கடைசியாக "தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை விட ...

கிறிஸ்துமஸுக்கு வெளியான படங்களுக்குள் அதிசய 'ஒற்றுமை'...

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடக் கடைசி வாரத்தில் அவ்வளவாக பெரிய படங்கள் வெளியாகாது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொங்கல் வருவதால் அன்றைய தினத்தில் படங்களை வெளியிடுவார்கள் அல்லது நவம்பர் மாதத்திற்குள்ளாகவே படத்தை வெளியிட்டு முடித்து விடுவார்கள். ஆனால், 2015ம் ஆண்டு பொங்கலுக்கு இரு பெரும் படங்களான "ஐ, என்னை ...

பிரிவுக்கு நடுவில் 'நந்தி' விருதுகள்...

Posted:

ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசால், தெலுங்குத் திரையுலகினருக்காக 1964ம் ஆண்டு வழங்கப்பட்டு வந்த உயரிய விருதான 'நந்தி' விருதுகளின் எதிர்காலம், மாநிலப் பிரிவினைக்குப் பின் கேள்விக்குறியாக உள்ளது. 'நந்தி' விருதுகளின் பெயரை விரைவில் மாற்றப் போவதாக தெலுங்கானா மாநில திரைப்படவியல் மற்றும் வணிகவரி அமைச்சரான ஸ்ரீனிவாஸ் யாதவ் நேற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™