Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்

Posted:

சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம் மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ...

அமெரிக்காவில் உத்தமவில்லன் பாடல் வௌியீடா...?

Posted:

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தின் பாடல்கள் அமெரிக்காவில் வௌியிடப்பட இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்களில் நடித்து வந்தார். இதில் மூன்று படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. ...

பாலிவுட் ஹீரோக்கள் அசுத்தமானவர்கள் - கத்ரீனா தாக்கு!

Posted:

இரவு முழுக்க குடித்துவிட்டு காலையில் குளிக்காமல் கூட சில ஹீரோக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள், அவர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது குமட்டல் வருகிறது என்று கூறியுள்ளார் நடிகை கத்ரீனா கைப். பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி ...

2014 - செஞ்சுரி அடித்த ஹீரோயின்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவுக்கு 2014ம் ஆண்டு முக்கியமான ஆண்டு. பிலிம் தொழில்நுட்பத்திலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு வந்த பிறகு, முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்ப சினிமாவைக் கொண்ட ஆண்டாக அமைந்து விட்டது. அதனால்தான் 2014ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி அரசடித்துவிட்டது. அதேபோல அறிமுகமான ஹீரோயின்களின் எண்ணிக்கை 100 ...

மீண்டும் மேரி கோம் இயக்குநருடன், ப்ரியங்கா சோப்ரா கூட்டணி!

Posted:

குத்துச்சண்டை வீராங்கனை மேரி மோமின் வாழ்க்கையை மையமாக வைத்து வௌிவந்த படம் மேரி கோம். ஓமங் குமார் இயக்கத்தில் வௌிவந்த இப்படத்தில் மேரி கோமாக, நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. மேரி கோம் ஹிட்டை தொடர்ந்து தற்போது நிறைய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படங்கள் உருவாகி வருகின்றன. ...

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்க்கு 3 வேடங்களா?

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 30 ஆம் தேதியோடு இந்த செட்டில் படப்பிடிப்பு நிறைவடைகிறது. எனவே படப்பிடிப்பு தற்போது வேகம் பிடித்துள்ளது. இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய ...

முந்தியது ஆம்பள...ஆதிக்கு முதல் படமானது

Posted:

பொங்கல் அன்று எத்தனை படங்கள் வெளிவந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆம்பள படத்தை வெளியிட்டே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஷால். காரணம் ஆம்பள படத்தை ஆரம்பிக்கும்போதே பொங்கலுக்கு என வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டார்.
அரண்மனை வெற்றிப் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கியுள்ள படம், பூஜை வெற்றி ...

பிசாசு வெற்றிக்கு நன்றி சொன்ன மிஷ்கின்

Posted:

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் மீடியாக்களை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்தார் இயக்குநர் மிஷ்கின். அதாவது பத்திரிகையாளர்களுக்கு விமர்சனம் செய்யத் தெரியவில்லை என்று குற்றமும் சாட்டினார். இதே மிஷ்கின், பிசாசு படத்தின் பிரஸ்மீட்டில் மீடியாக்களை புகழ்ந்து தள்ளினார். அவர் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குடியும்' ...

காதல் எதிர்ப்பு கூட்டத்தின் தலைவன் கனகா - கருணாகரன்

Posted:

ஒரு காட்சியின் போக்கில் தனக்கான இடத்தை தக்கவைப்பதும், தன்னை திரும்பி பார்க்க வைப்பதும் வெகு சிலநடிகர்களே. அத்தந்திரத்தை அறிந்த நடிகர்களில் ஒருவர் கருணாகரன். இந்த வருடத்தில் ஜிகர்தண்டா, யாமிருக்கபயமே, ஆடாம ஜெயிச்சோமடா, லிங்கா என வெற்றி படங்களை தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் 'கப்பல்'படத்தை எதிர்பார்த்து இருகிறார் ...

இணையத்தில் ஹிட்டடித்த ஆண்ட்ரியா பிறந்த நாள் ஆல்பம்

Posted:

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கடந்த 21ந் தேதி பிறந்த நாள். இதையொட்டி தனது ரசிகர்களுக்கு தனது பிறந்த நாள் பரிசாக ஒரு தமிழ் பாடலைக் கொண்ட ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

"நான் எங்கே போகிறேன்..." என்ற அந்த பாடல் குடும்பத்தை பிரிந்து வாழும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதனை குடும்பத்தை ...

மேனேஜருக்கு கார் பரிசளித்த ஷங்கர்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஐ படத்தின் அத்தனை பணிகளும் திருப்திகரமாக முடிந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். படத்தின் டிரைலருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும், படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பும் அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஐ பட உருவாக்கத்தில் தன்னோடு பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்க ஷங்கர் முடிவு ...

நடனப்பள்ளி தொடங்குகிறார் வனிதா மோகன்

Posted:

புதுயுகம் தொலைக்காட்சியில் ஸ்டார் ஐங்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் வனிதா மோகன். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு டான்சர். பல மேடைகளில் ஆடியிருக்கிறார். கடந்த 5 வருடங்களாக பல சேனல்களில் இசை, நடனம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

வனிதா தற்போதும் தனது வீட்டில் 15 ...

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய இமான், ஆண்ட்ரியா

Posted:

சென்னையில் உள்ள ரெயின்டிராப்ஸ் என்ற அமைப்பு குழந்தைகள் நலனுக்காக பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பு சிவாலயா சீயர்ஸ் கேர்ள்ஸ் ஹோம் உள்ளிட்ட சில ஹோம்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை அழைத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியது.

இதில் இசை அமைப்பாளாகள் டி.இமான், ஏ.ஆர்.ரெஹானா, நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டு ...

அமலாபால் தான் எங்கள் விளம்பர தூதர்: நகை நிறுவனம் விளக்கம்!

Posted:

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மில்லினியம் கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அமலாபால் இருந்தார். இதற்கிடையில் அந்த நிறுவனத்திடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு விளம்பர தூதராக இருந்த அமலாபால் ஒப்பந்தத்தை மீறி மற்ற நகை விளம்பரங்களில் நடித்தால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மில்லினியம் ...

பாம்பு சட்டை: பணவெறி பிடித்தவர்களின் கதை!

Posted:

பாபி சிம்ஹா சோலோ ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் பாம்பு சட்டை. ஷங்கர் உதவியாளர் ஆடம் தாசன் இயக்குகிறார். அஜீஸ் அசோக் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து, மதன்கார்க்கி, விவேகா பாடல்களை எழுதுகிறார்கள். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் இல்லாமலேயே முதல்கட்ட ...

சி.சி.எல்.லிருந்து விலகல் ஏன்? : விஷால் விளக்கம்

Posted:

திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரடி கிரிக்கெட் லீக் தொடரின் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நடிகர் விஷால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் விஷால் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான பூஜை படம், வெற்றிப்படமாக அமைந்தது. ...

உமேஷ் சுக்லாவுக்கு ரூ.8 கோடி தர முன்வந்த பிகே படக்குழு!

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான படம் பி.கே., இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வௌியான முதல் நாளில் சுமார் ரூ.26 கோடி வசூல் செய்ததாக தகவல் வௌியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதையும், அக்ஷ்ய் குமார் நடிப்பில் வௌிவந்த ஓ மை காட் படத்தின் கதையும் ஒரே மாதிரி ...

பாக் மில்கா பாக்-2 - இயக்குநர் மறுப்பு!

Posted:

ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில், பர்கான் அக்தர் நடிப்பில், தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வௌிவந்த படம் ''பாக் மில்கா பாக்''. இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, பர்கானுக்கு ஒரு நடிகருக்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் உருவாக இருப்பதாக பாலிவுட்டில் பரவலாக ஒரு செய்தி ...

பிறந்தநாளை முன்னிட்டு புது கார் வாங்குகிறார் சல்மான்!

Posted:

சமீபத்தில் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் திருமணம் நடந்தது. இதில் தனது தங்கைக்கு விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்தார் சல்மான். பொதுவாக சல்மான் கான், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதுபோன்று காரோ அல்லது வேறு சிலவற்றை அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் உடையவர். இந்நிலையில் தனக்கு புதிதாக ஒரு கார் ...

ஹீரோவாகிறார் மல்லையாவின் மகன் சித்தார்த்!

Posted:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. ஐபிஎல்., கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணியின் உரிமையாளர். இவர், அப்போது நடிகை தீபிகா படுகோனேவுடன் நெருக்கமாக இருந்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். காமெடி படமாக உருவாகும் இப்படத்தை கோல்கட்டாவை சேர்ந்த இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™