மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்: கிராம தலைவர் சுட்டுக் கொலை
- ஜார்க்கண்ட்டில் தேர்தலில் மோதல்: பா.ஜனதா தொண்டர்களை தாக்கியதாக ஹேமந்த்சோரன் மீது வழக்கு
- மோடி மந்திரி சபையில் தெலுங்கானா கட்சி: சந்திரசேகர ராவ் விருப்பம்
- கேரளாவில் மீண்டும் பீர் விற்க அனுமதி: உம்மன்சாண்டி மீது காங்கிரஸ் தலைவர் தாக்கு
- காஷ்மீர், ஜார்கண்டில் 36 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- கேரள வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் ரூ.23 கோடி ஹெராயின் பறிமுதல்
- கேரளாவில் ஆட்சி அமைக்கும் இலக்குடன் பணியாற்ற வேண்டும்: அமித்ஷா பேச்சு
- சபரிமலை மாளிகைபுரத்தம்மனுக்கு 300 பவுனில் தங்க அங்கி: அமெரிக்காவில் வசிக்கும் கேரள பக்தை வழங்கினார்
- பள்ளிக்கூடங்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள்: மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை
- நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டி: மத்திய அரசு ஒப்புதல்
- காஷ்மீர், ஜார்கண்ட் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு-23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
- பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
- பெங்களூரு மாநகராட்சிக்கு மார்ச் மாத இறுதியில் தேர்தல்
- சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார்: மருத்துவர்கள் தகவல்
- பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
- பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம், ரஷிய குழந்தைக்கு பொருத்தப்பட்டது
- பெங்களூரு தனியார் நிறுவனத்தில் ரூ.14 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: ஒருவர் கைது
- டெல்லி கோர்ட்டுக்குள் பொதுக் கூட்டத்தில் பேச வந்த கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்டார்
- தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு
- 16700 கி.மீ. சாலை அமைக்க 92 ஆயிரம் கோடி ரூபாய் தேவை: மத்திய அரசு தகவல்
| காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்: கிராம தலைவர் சுட்டுக் கொலை Posted: 19 Dec 2014 11:23 PM PST காஷ்மீர் மாநிலத்தில் இன்று 5–வது இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் ஏற்கனவே தேர்தல் முடிந்த பகுதியான சோபூர் அருகே போமாய் என்ற இடத்தில் கிராம தலைவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். |
| ஜார்க்கண்ட்டில் தேர்தலில் மோதல்: பா.ஜனதா தொண்டர்களை தாக்கியதாக ஹேமந்த்சோரன் மீது வழக்கு Posted: 19 Dec 2014 10:44 PM PST ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. முதல் – மந்திரி ஹேமந்த் சோரன் போட்டியிடும் தும்கா தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதையொட்டி நேற்று மாலை தும்காவில் பா.ஜனதா தொண்டர்களும், நிர்வாகிகளும் கூடி தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டு |
| மோடி மந்திரி சபையில் தெலுங்கானா கட்சி: சந்திரசேகர ராவ் விருப்பம் Posted: 19 Dec 2014 10:01 PM PST ஆந்திரா பிரிவினையை தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்–மந்திரியாக சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார். ஆந்திர முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி வகிக்கிறார். இந்த இரு முதல்–மந்திரிகளுக்கு இடையே இணக்கமான நட்பு இல்லை. தெலுங்கானா பகுதியில் பணிபுரியும் ஆந்திர அரசு ஊழியர்களை வெளியேற்றியதால் அதிருப்தி நிலவுகிறது. |
| கேரளாவில் மீண்டும் பீர் விற்க அனுமதி: உம்மன்சாண்டி மீது காங்கிரஸ் தலைவர் தாக்கு Posted: 19 Dec 2014 09:46 PM PST கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சுதீரன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும், மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். |
| காஷ்மீர், ஜார்கண்டில் 36 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 19 Dec 2014 09:39 PM PST 87 தொகுதிகள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கும், 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்ட சபைக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக 5 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. 5–வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் 20 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 16 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு |
| கேரள வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் ரூ.23 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 19 Dec 2014 08:53 PM PST கேரள மாநிலம் கொச்சி மாவட்ட போதைப்பொருட் தடுப்பு குற்றப்பிரிவு யூனிட் தலைவர் கமிஷனர் வேணுகோபாலுக்கு நேற்று காலை சிலர் ஹெராயின் என்ற போதைப்பொருட் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. |
| கேரளாவில் ஆட்சி அமைக்கும் இலக்குடன் பணியாற்ற வேண்டும்: அமித்ஷா பேச்சு Posted: 19 Dec 2014 08:49 PM PST கேரள மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தவும், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும் தேசிய தலைமை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பாலக்காட்டில் நேற்று உறுப்பினர் சேர்க்கை மாநாடு தொடங்கியது. இதில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:– |
| சபரிமலை மாளிகைபுரத்தம்மனுக்கு 300 பவுனில் தங்க அங்கி: அமெரிக்காவில் வசிக்கும் கேரள பக்தை வழங்கினார் Posted: 19 Dec 2014 08:42 PM PST சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்தம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது ஆகும். அய்யப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மாளிகை புரத்தம்மனையும் வணங்கி செல்வார்கள். புராதன சிறப்பு மிக்க இந்த கோவிலு |
| பள்ளிக்கூடங்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள்: மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை Posted: 19 Dec 2014 07:09 PM PST பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை தலிபான் தீவிரவாதிகள் புகுந்து 132 மாணவர்கள் உள்பட 148 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிக்கூடங்களில் |
| நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டி: மத்திய அரசு ஒப்புதல் Posted: 19 Dec 2014 06:59 PM PST இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது சேமிப்புக்கான வட்டியை ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியம் முடிவு செய்கிறது. அதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கும். அதன்பின்னர் அது அமல்படுத்தப்படும். |
| காஷ்மீர், ஜார்கண்ட் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு-23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை Posted: 19 Dec 2014 06:20 PM PST காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அட்டூழியமும் ஜார்கண்டில் நக்சலைட்டுகள் வெறியாட்டமும் இருப்பதால், 2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் 5 கட்டங்களாக தேர்தல் |
| பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை Posted: 19 Dec 2014 03:25 PM PST விஜயாப்புரா (மாவட்டம்) அருகே உள்ள அலகினல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண் பானுதாஸ் போஸ்லே. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை புதர் மறைவுக்கு தூக்கிச்சென்று கைகள் இரண்டையும் கட்டி வைத்து கற்பழித்தார். பின்னர் இது குறித்து |
| பெங்களூரு மாநகராட்சிக்கு மார்ச் மாத இறுதியில் தேர்தல் Posted: 19 Dec 2014 03:06 PM PST பெங்களூரு மாநகராட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி தேர்தல் நடைபெற்று 5 ஆண்டுகள் முடிய உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயர், கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க |
| சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார்: மருத்துவர்கள் தகவல் Posted: 19 Dec 2014 02:45 PM PST காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுவாசக்குழாய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். |
| பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது Posted: 19 Dec 2014 01:14 PM PST பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் மிக உயரிய விருது என்ற அங்கீகாரம், சாகித்ய அகாடமி விருதுக்கு உண்டு. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த விருது, படைப்பாளிகளின் |
| பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம், ரஷிய குழந்தைக்கு பொருத்தப்பட்டது Posted: 19 Dec 2014 12:34 PM PST பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம், தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ரஷிய குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பெங்களூரு மகாதேவபுராவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமீத் உபாத்யாயா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது எதார்த் என்ற |
| பெங்களூரு தனியார் நிறுவனத்தில் ரூ.14 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 19 Dec 2014 10:12 AM PST பெங்களூரு, நியூ தரகுபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து அதிரடி சோதனை |
| டெல்லி கோர்ட்டுக்குள் பொதுக் கூட்டத்தில் பேச வந்த கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்டார் Posted: 19 Dec 2014 08:33 AM PST டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீல்கள் இடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் பொதுக் கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த துவாரகா மாவட்ட வக்கீல்கள் சங்கம் இதற்காக கோர்ட் வளாகத்தினுள் மேடை அமைத்து, ஒலிப்பெருக்கிகளை கட்டி மிகப் பெரிய ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த ஏற்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட நீதிபதி ரவிந்தர் கவுர், |
| தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு Posted: 19 Dec 2014 08:30 AM PST மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். |
| 16700 கி.மீ. சாலை அமைக்க 92 ஆயிரம் கோடி ரூபாய் தேவை: மத்திய அரசு தகவல் Posted: 19 Dec 2014 08:15 AM PST பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 16700 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.92 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி சவுத்ரி பிரேந்தர் சிங் பேசியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |