Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் சட்டசபை தேர்தல்: அதிக ஓட்டுக்கள் பெற்று பா.ஜ.க. முதலிடம்

Posted: 24 Dec 2014 11:12 PM PST

காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி–28, பா.ஜ.க.–25, தேசிய மாநாடு–15, காங்கிரஸ்–12, மற்றவர்கள்–7 இடங்களில் வெற்றி பெற்றனர். 87 எம்.எல்.ஏ.க்களில் 56 பேர் புதுமுகங்களாவார்கள். அவர்கள் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆகி சட்டசபைக்கு செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது

திருவனந்தபுரத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 24 Dec 2014 11:09 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு பகுதிகளில் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ஸ்ரீகாந்த் பிரபாகரன் (வயது 24), அருண் பாலன் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாலக்காடு கோர்ட்டில்

வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள்: நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

Posted: 24 Dec 2014 10:45 PM PST

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் 90வது பிறந்து நாளை முன்னிட்டு, இன்று அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக அவரது பிறந்த நாளை 'நல்லாட்சி நாளாக' கொண்டாடுவது தான், நாம் அவருக்கு தரும் மிகப்பெரிய மரியாதையாகும் என்று மோடி தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த நாளில் நல்லாட்சி தர நாம்

திருப்பதி வனப்பகுதியில் தீ விபத்து தடுப்பு, பாதுகாப்பு பணிக்கு 145 ஊழியர்கள் நியமனம்

Posted: 24 Dec 2014 10:00 PM PST

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வனப்பகுதியில் தொடர்ந்து 10 நாட்கள் காட்டுத்தீ எரிந்து கொண்டே இருந்தது. வனப்பகுதியில் வளர்ந்திருந்த விலை மதிப்பில்லா செடி, கொடிகள், மரங்கள்

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு

Posted: 24 Dec 2014 09:47 PM PST

நாட்டில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதால் அந்நிறுவனங்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றன. வாடிக்கையாளர் 59 செகண்டுகள் மட்டும் பேசிய நிலையில் 61

தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு?

Posted: 24 Dec 2014 09:44 PM PST

பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இந்த இரு மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ், அந்த

சபரிமலையில் நாளை மறுநாள் மண்டல பூஜை வழிபாடு: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Posted: 24 Dec 2014 09:39 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மறுநாள் (27–ந்தேதி) மண்டல பூஜை வழிபாடு நடக்கிறது. இந்த நாளில் அய்யப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்படும். இதற்காக ஆரான் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தொடங்கிய தங்க அங்கி ஊர்வலம் நாளை மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைகிறது. அங்கு மாலை 3 மணி

திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 82 லட்சம்

Posted: 24 Dec 2014 09:36 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2–ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அன்றைய தினம் பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்லைன் மூலம் நேற்றிலிருந்து 300 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்வது தொடங்கியது.

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்-4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

Posted: 24 Dec 2014 08:42 PM PST

அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பாவி மக்கள்

வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

Posted: 24 Dec 2014 08:40 PM PST

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சரவணப்பா சஜ்ஜன். ஹீல்சூரில் உள்ள ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வந்தார். இந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்த காசிநாத் என்பவரை பதவி காலம் முடிவதற்குள் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக காசிநாத் புகார் கூறினார்.

இந்து மடங்களை கட்டுப்படுத்த சட்டம்: மசோதாவை வாபஸ் பெற சித்தராமையா முடிவு

Posted: 24 Dec 2014 08:39 PM PST

மடங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்து மத மடங்கள் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு வழங்கி வருகிறது. இதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து முறையிடவும் மடாதிபதிகள் முடிவு செய்து இருந்தனர். பா.ஜனதா தலைவர் பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர் ஜெ

டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி-30 பேர் படுகாயம்

Posted: 24 Dec 2014 07:36 PM PST

நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது.

பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு

Posted: 24 Dec 2014 07:11 PM PST

வாஜ்பாய் வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர்,

தொண்டர்களை சந்தித்து பேசுங்கள்: காங். பொதுச்செயலாளர்களுக்கு ராகுல் காந்தி கட்டளை

Posted: 24 Dec 2014 06:53 PM PST

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற மராட்டியம் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்தது. இதனால் காங்கிரசை பலப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின்

காஷ்மீரில் ஆட்சி அமைக்க அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்போம்: பா.ஜனதா அறிவிப்பு

Posted: 24 Dec 2014 06:49 PM PST

அண்மையில் காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி 42 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதேநேரம் 87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டசபையில் யாருக்கும்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்தியா பதிலடி

Posted: 24 Dec 2014 02:27 PM PST

காஷ்மீரில் சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கதுயா மாவட்டம் ஹடிரநகர் சப்-செக்டார் பன்சாரில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான்

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 10 பேர் பலி

Posted: 24 Dec 2014 08:24 AM PST

வட இந்தியாவில் கடும் குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. தலைநகர்

மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி 3 வாலிபர்கள் பலி

Posted: 24 Dec 2014 07:21 AM PST

மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் இன்று மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். கோயில் விழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் சாகர்-குராய் சாலை

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா: சிவசேனா கோரிக்கை

Posted: 24 Dec 2014 06:35 AM PST

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி மதன் மோகன் மாளவியாவுக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவ சேனா தலைவரான மறைந்த பால் தாக்கரேவுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என சிவ சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

அசாமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பழங்குடியினரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் கருணைத் தொகை

Posted: 24 Dec 2014 06:24 AM PST

அசாமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பழங்குடியினரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் கருணைத் தொகை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™